அடேங்கப்பா.. பேஸ்புக் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 200 பில்லியன் டாலராம்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நியூயார்க்: சமூக வலைத்தள துறையை ஆட்டிப்படைக்கும் பேஸ்புக் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 200 பில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது. இதனால் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் 22ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது (பேசி பெரியாளாவறது கேள்விபட்டிருப்போம், இப்படி பேசவைச்சி பெரியாளாவறது இப்பதான் பாக்கறோம்.. பலே பேஸ்புக் பலே..)

இந்நிறுவனத்தின் பங்கு நேற்று 77.6 டாலராக அதன் வரலாற்று உயர்வை தொட்டது. அதன் அடிப்படையில் அதன் மதிப்பு 200.26 பில்லியன் டாலர்கள் என்ற மதிப்பை எட்டுயுள்ளதாக வர்த்தக செய்திகள் தெரிவித்தன.

லாபம் பிச்சிக்கும்...

லாபம் பிச்சிக்கும்...

நியூயார்க் மாகாணத்தில் வெளிவரும் செய்திகளின் அடிப்படையில் அந்த நிறுவனத்தின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது எனத் தெரிகிறது. ஏனெனில் தான் வாங்கியுள்ள இன்ஸ்டாக்ராம் என்னும் படங்களைப் பகிர்ந்துகொள்ளும் சேவையையும் உடனடி செய்தி பகிரும் வாட்சாப் போன்றவற்றை இன்னும் அதிகாரபூர்வமாக பயன்படுத்தத் துவங்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

வீடியோ

வீடியோ

தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் செய்திகளுக்கு மத்தியில் விலை மதிப்புள்ள விளம்பர வீடியோக்களை வெளியிடும் சேவையையும் துவங்கி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது.

விர்ச்சுவல் ரியாலிட்டி

விர்ச்சுவல் ரியாலிட்டி

தலையில் மாட்டிகொண்டு பார்க்கவும் கேட்கவும் கூடிய விர்ச்சுவல் ரியாலிட்டி வகை உபகரணங்களை உற்பத்தி செய்யும் ஆக்குலஸ் வி ஆர் நிறுவனத்தையும் பேஸ்புக் சுமார் 2 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளது.

10 நிறுவனங்கள்
 

10 நிறுவனங்கள்

வாட்ஸ்அப், இண்ஸ்டாகிராம் போன்று பேஸ்புக் நிறுவனம் சுமார் 10க்கும் மேற்பட்ட நிறுவனங்களை கைபற்றியுள்ளது. இதை பற்றி தெரிந்துகொள்ள ஒரு கிளிக் போது.

ஆப்பிரிக்காவில் பேஸ்புக்

ஆப்பிரிக்காவில் பேஸ்புக்

இதுமட்டும் இல்லாமல் இண்டர்நெட் கூட முழுமையாக இல்லாத ஆப்ரிக்காவில் தற்போது சில இலவச திட்டங்கள் மூலம் சுமார் 10 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

பட்டியல்

பட்டியல்

உலக பெரு நிறுவனங்களின் பட்டியலில் வெரிசோன் கம்யூனிகஷ்ன்ஸ் இனக் நிறுவனத்திருக்கு பின்னும் டொயோட்டா மோட்டார் நிறுவனத்திற்கு முன்பும் பேஸ்புக் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்பா மார்க் உன் சம்பளம் எவ்ளோ??

ஏப்பா மார்க் உன் சம்பளம் எவ்ளோ??

பேஸ்புக் நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க் அவர்களின் சம்பளம் எவ்வளவும் தெரியுமா??? தெரியலையா அப்ப இதை கிளிக் பண்ணுங்கோ..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Facebook's market value tops $200 billion

The market value of the social networking site Facebook has crossed the $200 billion mark, making it the 22nd largest company in the world.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X