ரோம்: இந்தியாவில் நிலவி வரும் மந்த நிலை காரணமாக உணவு பணவீக்கமானது நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது எனில், இதே நிலை தான் சர்வதேச அளவிலும் நிகழ்ந்து வருகிறது என்றும் எஃப்ஏஓ அறிக்கைகள் கூறுகின்றன.
அதிலும் காய்கறிகள், எண்ணெய்கள், சர்க்கரை மற்றும் பால் ஆகியவற்றின் வலுவான உயர்வு, தானியங்களின் விலை உயர்வு உள்ளிட்ட விலைகள் அதிகரிப்பதன் மூலம் உலக உணவு விலைகள் தொடர்ந்து மூன்றாவது மாதமாக டிசம்பர் மாதத்தில் ஐந்தாண்டு உச்சத்தை எட்டியுள்ளன என்று ஐக்கிய சபையின் உணவு நிறுவனம் வியாழக்கிழமையன்று தெரிவித்துள்ளது.
உணவு பொருட்கள் விலை அதிகரிப்பு
தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பால் பொருட்கள், இறைச்சி மற்றும் சர்க்கரை ஆகியவற்றின் மாதாந்திர மாற்றங்களை அளவிடும் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு உணவு விலைக் குறியீடு டிசம்பர் முதல் அதன் மிக உயர்ந்த இடத்திற்கு உயர்ந்துள்ளது. 2014லிருந்து சராசரியாக இது 181.7 புள்ளிகளாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. குறிப்பாக முந்தைய மாதத்தினை விட 2.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
தானியங்களின் விலை அதிகரிப்பு
இதே ஒட்டுமொத்த ஆண்டில் மொத்த விலை குறியீட்டு சராசரி 171.5 புள்ளிகளாகவும், இது கடந்த 2018ஐ விட 1.8 சதவிகிதமாகவும் அதிகமானது. இது கடந்த 2011ல் எட்டபட்ட 230 புள்ளிகளின் உச்சத்திற்குக் கீழே உள்ளது. இந்த நிலையில் தானியங்களின் விலைக் குறியீடு 1.4 சதவிகிதமாக உயர்ந்து சராசரியாக 164.3 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.
தாவர எண்ணெய் விலை அதிகரிப்பு
சீனாவிலிருந்து வலுவான தேவை மற்றும் பிரான்சில் வேலை நிறுத்தங்களைத் தொடர்ந்து, கோதுமைக்கு அதிக விலையும் அதிகரித்துள்ளது. அரிசி விலைகளும் கொஞ்சம் மாறியுள்ளது. இதே தாவர எண்ணெய் விலையும் வலுவாக உயர்ந்தது. இந்த நிலையில் டிசம்பர் மாதத்தில் தாவர எண்ணெய் விலை குறியீட்டு எண் 9.4 சதவிகிதம் உயர்ந்து 164.7 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.
எண்ணெய் விலைகள் அதிகரிப்பு
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் பாமாயில் விலை தொடர்ச்சியாக ஐந்தாவது மாதமாக உயர்ந்தது. இது பயோடீசல் தேவையால் உயர்ந்ததாகவும் கூறப்படுகிறது. அதே நேரம் சோயாபீன்ஸ், சூரிய காந்தி மற்றும் கடுகு எண்ணெய் விலை மதிப்புகளும் அதிகரித்துள்ளன.
பால் விலைக் குறியீடு அதிகரிப்பு
இதே பால் விலைக் குறியீடும் டிசம்பரில் 3.3 சதவிகிதம் அதிகரித்து 198.9 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. இதே போல் சர்க்கரை விலைக் குறியீடும் 4.8 சதவிகிதம் அதிகரித்து 190.3 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. எனினும் நவம்பர் முதல் இறைச்சி விலைகள் மட்டும் மாறாமல் இருந்தன. குறிப்பாக இறைச்சி விலை குறியீடு 191.6 புள்ளிகளாக இருந்தது. இது அதிக பன்றி மற்றும் செம்மறி இறைச்சி விலைகள் மாட்டிறைச்சி விலை வீழ்ச்சியால் சமன்படுத்தப்பட்டன என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications