Freddie Mack-ஐ மதிய உணவாக உண்ட 18 நாய்கள்! குழந்தை போல் வளர்த்த நாய்களே வினையாகிவிட்டதே..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீனஸ், டெக்ஸாஸ், அமெரிக்கா: அமெரிக்காவின் முக்கியமான நகரங்களில் டெக்ஸாஸ் ஒன்று. ஆனால் வீனஸ் நகரம் குறைந்த மக்கள் தொகை கொண்ட ஒதுக்குப் புற நகரமாம்.

இந்த மொத்த வீனஸ் நகரத்திலேயே 10,000 பேருக்கு மேல் இருந்தாலேயே பெரிய விஷயம் என்கிறார்கள். 57 வயது ஃப்ரெட்டி மேக் (Freddie Mack) இந்த வீனஸ் நகரத்தில், ஒரு ஒதுக்குபுறத்தில் தான் வசித்து வந்திருக்கிறார்.

ஏற்கனவே ஃப்ரெட்டி மேக் (Freddie Mack)-க்கு நிறைய கடுமையான உடல் உபாதைகள் இருந்திருக்கின்றன.

Guddan Choudhary: கல்விபுரட்சி செய்யும் பெண் போலீஸ்! சம்பளத்தில் 50% ஏழை குழந்தைகள் கல்விக்கு..! Guddan Choudhary: கல்விபுரட்சி செய்யும் பெண் போலீஸ்! சம்பளத்தில் 50% ஏழை குழந்தைகள் கல்விக்கு..!

உறவினர்கள்

உறவினர்கள்

ஃப்ரெட்டி மேக் (Freddie Mack) ஒரு தனிமை விரும்பியாம். எப்போதுமே தன் செல்ல நாய்களுடன் தான் இருப்பாராம். அவரைப் பார்க்க வரும் மனித உறவுகள் என்றால் அவரை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கடைக்கு அழைத்துச் செல்ல வருபவர்கள் தானாம். வழக்கம் போல ஏப்ரல் 19-ம் தேதி வந்து பார்த்துப் பேசி பிரிந்திருக்கிறார்கள். அதன் பின் ஃப்ரெட்டி மேக் (Freddie Mack)-கைப் பார்க்க முடியவில்லை. இந்த விஷயத்தை காவலர்களுக்குச் சொல்லி இருக்கிறார்கள்.

காவல் துறை விசாரணை

காவல் துறை விசாரணை

விஷயம் தெரிந்த உடன் கடந்த மே 06, 2019 அன்று, காவலர்கள் ஃப்ரெட்டி மேக் (Freddie Mack) வீட்டைப் பார்வையிடச் சென்றிருக்கிறார்கள். அந்த தனி வீட்டில் யாருமே இல்லை. அங்கே ஏகப்பட்ட நாய்கள் முரட்டுத் தனமாக குரைத்துக் கொண்டிருந்ததால் காவலர்களால் உள்ளே செல்ல முடியவில்லை. எனவே காவலர்களும் திரும்பி விட்டார்களாம். மீண்டும் மே 09, 2019 அன்று நாய்களை எல்லாம் சமாளிக்க முடியாமல் ட்ரோன் வசதியோடு பல இடங்களைச் சளித்திருக்கிறார்கள். எதுவும் கிடைக்கவில்லை எனவே ஆளைக் காணவில்லை என வழக்கு பதிவு செய்து விசாரிக்கத் தொடங்குகிறார்கள்.

எலும்புத் துண்டுகள்

எலும்புத் துண்டுகள்

அப்போது ஃப்ரெட்டி மேக் (Freddie Mack)-கை எங்கும் பார்க்க முடியவில்லை. மீண்டும் நாய்களை எல்லாம் ஒருவழியாக சமாளித்துவிட்டு, நேரடியாக காவல்துறை அதிகாரிகள், ஃப்ரெட்டி மேக் (Freddie Mack)-க்கின் வீட்டில் இறங்கி தேடத் தொடங்குகிறார்கள். ஆச்சர்யம் ஒரு மனித எலும்புத் துண்டு கிடைக்கிறது. அதன் பின் மேலும் விசாரணையைத் தீவிரப் படுத்துகிறார்கள். மே 17, 2019 அன்று மேலும் பல எலும்புத் துண்டுகள் கிடைக்கின்றன.

நாய்களை பறிமுதல்

நாய்களை பறிமுதல்

மே 19, 2019 அன்று 16 நாய்களை காவல் துறை பறிமுதல் செய்கிறார்கள். இரண்டு நாய்களை, நாய்கள் கூட்டமே கடித்துக் குதறி கொன்று விட்டிருந்ததாம். அதன் பின் மீண்டும் வீட்டை அங்குளம் அங்குளமாக சளித்திருக்கிறார்கள். பல மனித எலும்புத் துண்டுகள், மனித எலும்புத் துண்டுகளுடனான நாயின் கழிவுகள், ஃப்ரெட்டி மேக் (Freddie Mack)-க்கின் கடித்துக் குதறிய துணிமணிகள், தலைமுடி என எல்லாம் கிடைத்ததாம்.

நாய் தான் கொலையாளி

நாய் தான் கொலையாளி

கிடைத்த அனைத்து ஆதாரங்களையும் வடக்கு டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி அது மனித உடல் பாகங்கள் தானா என சோதனை செய்திருக்கிறார்களாம். மீண்டும் ஆச்சர்யம். கிடைத்திருக்கும் மனித எலும்புகள், உடைகள், தலைமுடி என எல்லாமே ஃப்ரெட்டி மேக் (Freddie Mack)-க்குடையது தான் என உறுதி செய்திருக்கிறார்கள். அந்த 16 நாய்களில் 13 நாய்கள் அதிக வன்மத்தோடு, வெறியோடும் இருந்ததால், கருணைக் கொலை செய்துவிட்டார்களாம். 3 நாய்கள் சமாதானமாக இருப்பதால் அதை பாதுகாத்து வைத்திருக்கிறார்களாம்.

ஆச்சர்யம்

ஆச்சர்யம்

பொதுவாக நாய்கள் இறந்த மனித உடல்களை உண்பது வழக்கம். ஆனால் ஒரு முழு மனித உடலையும் நாய்கள் திண்றதாக நாங்கள் கேள்விப்பட்டது இல்லை எனச் சொல்கிறார்கள் காவல் துறை அதிகாரிகள். அதோடு ஃப்ரெட்டி மேக் (Freddie Mack-க்கை உயிருடன் படுத்த படுக்கையாக இருக்கும் போதே இந்த நாய்கள் அவரை கொன்றுவிட்டதா..? அல்லது ஃப்ரெட்டி மேக் (Freddie Mack) இறந்த பின் அவரை தின்றுவிட்டதா எனத் தெரியவில்லை எனவும் சொல்லி இருக்கிறார்கள் டெக்ஸாஸ் காவல் துறையினர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: food உணவு
English summary

Freddie Mack became a meal to his own dog

Freddie Mack became a meal to his own dog
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X