உலகில் நிலையான சொத்துக்களில் ஒன்றாக தங்கத்தைப் பார்க்கிறோம். குழந்தைகளைக் கொஞ்சும் போது கூட "தங்க குட்டி" எனக் கொஞ்சுவதைப் பார்த்து இருப்போம்.
தனி மனிதர்கள் மற்றும் கம்பெனிகள் மட்டுமே தங்கத்தை ஒரு நல்ல சொத்தாகப் பார்ப்பதில்லை. பல நாட்டு அரசாங்கங்களும் தங்கத்தை ஒரு நம்பகமான, நல்ல சொத்தாக வாங்கி வைத்திருக்கிறார்கள்.
அப்படி உலகின் டாப் நாடுகள், தங்கத்தில் எவ்வளவு முதலீடு செய்து, கைவசம் வைத்து இருக்கிறார்கள் என்பதைத் தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
ஸ்பெயின் தங்க இருப்பு
கால்பந்து விளையாட்டு, லா டொமடீனா திருவிழா, Paella என்கிற பிரமாதமான உணவு, ப்ளூ வொயின், அந்த ஊர் ஜல்லிக்கட்டு... என பல விஷயங்களுக்கு பெயர் பெற்ற ஸ்பெயின் நாடு, கடந்த ஜூன் 2020 நிலவரப்படி 282 டன் தங்கத்தை தன் வசம் வைத்து இருக்கிறது.
லெபனான் வைத்திருக்கும் தங்கம்
பழங்கால மசூதிகள், பழமையான தேவாலயங்கள், சுண்ணாம்புக் கல் குகைகள் (Limestone Caves), உலகமே போற்றும் லெபனீஸ் உணவு வகைகள், குறிப்பாக Kanafeh என்கிற இனிப்பு உணவு... போன்றவைகளைக் கொண்ட லெபனான் தேசம், 287 டன் தங்கத்தை, தன் கைவசம் வைத்து இருக்கிறது.
யுனைடெட் கிங்டம் (இங்கிலாந்து)
ஒரு காலத்தில், சூரியன் மறையாத அளவுக்கு, மிகப் பெரிய அளவில் நிலபரப்புகளை தன் ஆட்சிக்குக் கீழ் வைத்திருந்த இங்கிலாந்து நாட்டு அரசிடம் அத்தனை அதிகமாக தங்கம் கையிருப்பு இல்லை. உலகின் முன்னணி பொருளாதாரங்களில் ஒன்றான இவர்களிடமே 310 டன் தங்கம் தான் கையிருப்பு வைத்து இருக்கிறார்களாம்.
சவுதி அரேபியா
இயற்கை அன்னை, கச்சா எண்ணெய் என்கிற கருப்புத் தங்கத்தால் ஆசிவதித்து இருக்கும் நாடு சவுதி அரேபியா. மெக்கா என்கிற இஸ்லாமியர்களின் புனித தலத்தை தன்னுள் கொண்ட நாடு. இஸ்லாமிய நாடுகளை எல்லாம் ஒருங்கிணைத்து வழிநடத்திக் கொண்டு இருக்கும் இந்த நாட்டிடம் 323 டன் தங்கம் கையிருப்பு இருக்கிறதாம்.
உஸ்பெகிஸ்தான்
உலகின் சில பிரமாதமான மசூதிகள், தாஜ் மகால் போன்ற கட்டடங்களைக் (mausoleums) கொண்டு இருக்கிறது இந்த நாடு உஸ்பெகிஸ்தான். இந்த குட்டி நாட்டில் தயாரிக்கப்படும் வோட்காவுக்கும் பெயர் எடுத்து இருக்கிறது. இந்த குட்டி நாடு, கடந்த ஜூன் 2020 நிலவரப்படி 343 டன் தங்கத்தை வைத்து இருக்கிறார்களாம்.
கஜகஸ்தான்
உலகிலேயே செயல்பாட்டில் இருக்கும், மிகப் பெரிய விண்வெளி ஏவுதளம் (Space Launch Facility) இந்த நாட்டின் பைகோனொர் (Baikonur) என்கிற பகுதியில் இருக்கும் Baikonur Cosmodrome தான் என்கிறது வலைதளச் செய்திகள். இந்த நாட்டிடம் கடந்த ஜூன் 2020 நிலவரப்படி 378 டன் தங்கம் இருப்பதாகச் சொல்கிறது டிரேடிங் எகனாமிக்ஸ் தரவுகள்.
போர்ச்சுகல்
கால்பந்து விளையாட்டுக்கும், அட்டகாசமான கடற்கரைகளுக்கும் சொந்தமான இந்த நாட்டில் தான் கால் பந்து விளையாட்டின் சூப்பர் ஸ்டார் கிரிஸ்டியானோ ரொனால்டோ பிறந்தார். Cataplana de marisco என்கிற உணவுக்கு, போர்ச்சுகள் ரொம்ப பிரபலமாம். இந்த நாடு ஜூன் 2020 நிலவரப்படி 382 டன் தங்கத்தை கைவசம் வைத்து இருக்கிறது.
தைவான்கிட்டயே இத்தனை டன் இருக்கா
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களைத் தயாரிக்கும் பெகட்ரான், விஸ்ட்ரான் போன்ற கம்பெனிகளைக் கொண்ட நாடு இது. Oyster ஆம்ளேட், பால் மீன் போன்ற உணவுகளுக்கும் தைவான் படு ஃபேமஸாம். தைவான் நாட்டிடம், 423 டன் தங்கம் கையிருப்பு இருக்கிறது என்கிறது டிரேடிங் எகனாமிக்ஸ் தரவுகள்.
துருக்கியிடம் இவ்வளவு தங்கமா
நீண்ட வரலாறுகளைக் கொண்ட நாடுகள் பட்டியலில், துருக்கிக்கும் ஒரு இடம் உண்டு. இந்த நாட்டில் Baklava என ஒரு இனிப்பைத் தயாரிக்கிறார்கள். இனிப்பு பிரியர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவு இது. இந்த நாட்டிடம் 583 டன் தங்கம், கடந்த ஜூன் 2020 நிலவரப்படி கையிருப்பாக இருக்கிறதாம்.
நெதர்லாந்தின் தங்க ஹோல்டிங்ஸ் எவ்வளவு
பல மில்லியன் யூரோக்களுக்கு பூக்களை ஏற்றுமதி செய்யும் பூங்கா நாடு நெதர்லாந்து. நெதர்லாந்து டுலிப் பூக்களுக்கு இந்த உலகமே ரசிகன் தான். உலகின் மிகப் பிரமாதமான பூந்தோட்டங்களில் ஒன்றான Keukenhof Gardens இருப்பதும் ஹாலந்தில் தான். கடந்த ஜூன் 2020 நிலவரப்படி, இந்த நாடு 612 டன் தங்கத்தை கைவசம் வைத்திருக்கிறார்களாம்
இந்தியாவிடம் எவ்வளவு இருக்கு
பல மொழி, பல கலாச்சாரம், பல நம்பிக்கைகள், பல சுவைகளைக் கொண்ட பிரமாதமான உணவுகள்... என இந்தியாவை விவரித்துக் கொண்டே போகலாம். அப்பேற்பட்ட இந்திய துணை கண்டத்திடம், ஜூன் 2020 நிலவரப் படி, 658 டன் தங்கம் கையிருப்பு இருப்பதாகச் சொல்கிறது டிரேடிங் எகனாமிக்ஸ் தரவுகள்.
ஜப்பானின் தங்க கையிருப்பு
பூகம்ப நாடு. இரண்டாம் உலகப் போரில் இரண்டு அணுகுண்டுகளை மார்பில் வாங்கிய நாடு. ஆனால் இன்று உலகின் டாப் 3 பொருளாதாரங்களில் ஒன்று. Sony, Mitsubishi, Toyota, Suzuki, Honda... என பல முன்னணி கம்பெனிகளைக் கொண்ட நாட்டிடம், 765 டன் தங்கம் கையிருப்பு இருக்கிறதாம்.
சுவிட்சர்லாந்து
சுவிஸ் என்று சொன்ன உடனேயே நமக்கு நினைவுக்கு வருவது, அவர்களின் வங்கிகளும், உலக தரத்திலான சாக்லேட்களும் தான். அது போக சுவிஸ் சீஸ்களுக்கும் (Cheese) உலக அரங்கில் தனி மரியாதை இருக்கிறது. இந்த நாடு, 1,040 டன் தங்கத்தை தன் வசம் வைத்திருக்கிறது.
சீனாவின் தங்க கையிருப்பு என்ன
கம்யூனிஸ்ட் தேசமான சீனா தன்னை உலக வல்லரசாக மாற்றிக் கொள்ள அனைத்து வேலைகளையும் செய்து வருகிறது. ஹவாய், சியாமி என பல கம்பெனிகளுக்கு சீனா தான் தாயகம். உலகின் உற்பத்தி ஆலை போல செயல்பட்டுக் கொண்டு இருக்கும் சீனாவிடம், ஜூன் 2020 நிலவரப்படி 1,948 டன் தங்கம் கையிருப்பாக இருக்கிறதாம்.
ரஷ்யா
கச்சா எண்ணெய், வோட்கா, Pelmeni என்கிற உணவு... என பல விஷயங்களுக்கு பிரபலமாக இருக்கிறது ரஷ்யா. ஒரு காலத்தில், அமெரிக்காவுக்கே சிம்ம சொப்பனமாக இருந்தது ரஷ்யா. தற்போது ஜூன் 2020 நிலவரப்படி, ரஷ்யாவிடம் 2,300 டன் தங்கம் கைவசம் இருப்பதாகச் சொல்கிறது டிரேடிங் எகனாமிக்ஸ் வலைதளம்.
பிரான்ஸ் தங்க கையிருப்பு
Eiffel Tower என்கிற ஒற்றை கோபுரத்தாலேயே, பிரான்ஸ் நாட்டை அடையாளம் கண்டு விடலாம். அது போக பல்வேறு மியூசியங்கள், தேவாலயங்கள் என உலகின் அற்புதமான படைப்புகள் நிறைந்து இருக்கும் நாடு. அதிகம் சுற்றுலா பயணிகளால் சூழப்படும் நாடு பிரான்ஸ். இந்த நாட்டிடம், ஜூன் 2020 நிலவரப்படி 2,436 டன் தங்கம் கையிருப்பு இருக்கிறது.
இத்தாலி
பாஸ்டா, பீட்சா போன்ற உணவுகளின் தாயகம் இத்தாலி. சாய்ந்த கோபுரம், Colosseum, என பல்வேறு உலக புகழ் பெற்ற சுற்றுலா தளங்களும், இத்தாலியில் தான் இருக்கின்றன. உலக சுற்றுலா பயணிகளை சுண்டி இழுக்கும் நாடுகளில் இத்தாலியும் ஒன்று. இந்த நாட்டிடம், ஜூன் 2020 நிலவரப்படி 2,452 டன் தங்கம் கையிருப்பு இருப்பதாக டிரேடிங் எகனாமிக்ஸ் வலைதளம் சொல்கிறது.
ஜெர்மனியின் கைவசம் எவ்வளவு தங்கம் இருக்கு
பிரெட், பீர், கார், கோட்டைகள்... என எந்த பக்கம் பார்த்தாலும், ஜெர்மனி நம்மை சுண்டி இழுக்கிறது. SAP, BMW, Daimler, Siemes, Adidas போன்ற பல உலக பிராண்டுகளின் தாயகம் ஜெர்மனி. அப்பேற்பட்ட ஜெர்மனியிடம், ஜூன் 2020 நிலவரப்படி 3,364 டன் தங்கம் இருக்கிறதாம்.
அமெரிக்கா
Apple, Nike, Facebook, Dominos, Pizza hut... என பல்வேறு உலக கம்பெனிகளுக்கு தாய் நாடாகவும், தலைமை இடமாகவும் இருக்கும் அமெரிக்கா தான் உலகிலேயே அதிக அளவில் தங்கத்தை தன் கைவசம் வைத்திருக்கிறது. அமெரிக்காவிடம், கடந்த ஜூன் 2020 நிலவரப்படி, 8,134 டன் தங்கம் வைத்திருக்கிறார்களாம்.
குறிப்பு: இந்த தரவுகள் ஜூன் 2020 நிலவரப் படி, டிரேடிங் எகனாமிக்ஸ் என்கிற வலைதளத்தில் பிரசூரிக்கப்பட்டவை.
More From GoodReturns

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?

சூப்பர்பவர் ஆக மாறிய தங்கம்.. ஈரான் போருக்கு மத்தியில் பூகம்பம்..!!

தங்க குழந்தையாக மாறிய சஞ்சு சாம்சன் – இது தான் 'கன்வெக்ஸ்' வெற்றியா? காத்திருந்து கிடைத்த பெரும் லாபம்!

கோயம்புத்தூர் தங்கம் விலை: தொழில் நகரத்தில் இன்று தங்கம் விலை உயர்ந்ததா ? குறைந்ததா?

தங்கம் விலை எங்கோ போகப்போகுது!16,000 கிலோ தங்கத்தை சொந்தமாக வைத்திருக்கும் ஜாம்பவானின் கணிப்பு!

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று என்ன நிலவரம்? நிபுணர்கள் சொல்வது என்ன? இது தான் நல்ல சான்ஸ்..!!



Click it and Unblock the Notifications