சென்னை: வெள்ளிக்கிழமை ஆசியச் சந்தையில் தங்க விலை 2,450 டாலருக்கு அருகில் உயர்ந்துள்ளது. அமெரிக்க வேலைவாய்ப்பு தரவுகள் வெளியாக உள்ளதைத் தொடர்ந்து தங்க முதலீட்டாளர்கள் அதிகப்படியான எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். அமெரிக்க உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு தரவுகள் அந்நாட்டுப் பொருளாதாரம் குறித்த கவலைகளை அதிகரித்துள்ளதால், பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரித்துக் காணப்படுகிறது.
அமெரிக்க உற்பத்தி மேலாளர் குறியீடு (ISM) ஜூலை மாதத்தில் எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு 46.8 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. இது முந்தைய ஜூன் மாதத்தில் 48.5 புள்ளிகளிலிருந்து குறைந்துள்ளது கவனிக்க வேண்டிய விஷயமாகும். மேலும், அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை தொடர்பாக அரசின் நிதியுதவியைக் கோரும் நபர்களின் எண்ணிக்கை ஜூலை 26-ம் தேதியில் முடிவடைந்த வாரத்தில் 249,000 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் அரசியல் மற்றும் போர் பதற்றத்தால், இப்பகுதி முதலீட்டாளர்கள் தங்கத்தைப் பாதுகாப்பான முதலீடாகக் கருதும் நிலை உருவாகியுள்ளது. இதன் வாயிலாகத் தங்கம் மீது அதிகப்படியான முதலீடுகள் குவியத் துவங்கியுள்ளது, மத்திய கிழக்கு நாடுகள் பிரச்சனை மற்றும் அமெரிக்கத் தேர்தல் முடியும் வரையில் தங்கம் விலை உயர்ப்புடன் இருக்கும் என்பதில் எவ்விதமான ஐயமும் இல்லை.
ஈரான் நாட்டில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. நியூயார்க் டைம்ஸ் செய்தியின்படி, ஈரான் நாட்டின் புதிய அதிபர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் ஈரானின் தலைநகரில் ஹனியே கொல்லப்பட்டு உள்ளார். ஈரான் அதிகாரிகள் மற்றும் ஹமாஸ் இயக்கம் இரண்டும் இஸ்ரேல் நாட்டின் ரகசிய படை தான் இந்த தாக்குதலுக்குப் பின்னால் இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளன.
மறுமுனையில் அமெரிக்க பொது தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடக்க உள்ள வேளையில், பைடனை எதிர்த்து போட்டியிட்ட போது டொனால்டு டிரம்ப் ஆட்சியை பிடிப்பார் என கணிப்புகள் அதிகமாக இருந்தது. ஆனால் பைடன் உடலநல குறைவால் அதிபர் தேர்தலில் இருந்து விலகிய நிலையில் துணை அதிபரான கமலா ஹாரீஸ் தற்போது போட்டியில் இறங்கியுள்ளார். இதனால் டிரம்ப் மற்றும் கமலா ஹாரீஸ் இருவருக்குமான வெற்றி வாய்ப்பு சமமாக உள்ளது. இதுவும் தங்கம் மீதான முதலீட்டை பாதிக்கும்.
இதற்கிடையில் அமெரிக்க மத்திய வங்கி செப்டம்பர் மாதம் இரு நாள் நாணய கொள்கை கூட்டத்தில் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை குறைக்க முடிவு செய்துள்ளது. இதனால் பத்திர சந்தையில் முதலீடுகள் தொடர்ந்து வெளியேற உள்ளது, இப்படி வெளியேறும் முதலீடுகளில் கணிசமான பங்கு தங்கம் மீது குவியும் காரணத்தால் தங்கம் விலை தொடர்ந்து உயரும் என கணிக்கப்பட்டு உள்ளது.
இந்த சூழ்நிலையில் இன்று சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை சிறிய ஏற்ற இறக்கத்தைப் பதிவு செய்து இன்று 2459 டாலராக உயர்ந்துள்ளது. இதன் எதிரொலியாக எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை சர்வதேச சந்தை சூழ்நிலை மற்றும் உள்நாட்டு டிமாண்ட் அடிப்படையில் 0.72 சதவீதம் அதிகரித்து 70,460 ரூபாயாக உள்ளது. இதேபோல் ஒரு கிலோ வெள்ளி விலை 1.38 சதவீதம் என தடாலடியாக உயர்ந்து 83,735 ரூபாயாக உள்ளது.
இந்திய ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 300 ரூபாய் உயர்ந்து 64,600 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 320 ரூபாய் உயர்ந்து 70,470 ரூபாயாக உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு 700 ரூபாய் குறைந்து 91000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 200 ரூபாய் குறைந்து 25,950 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலையில் திடீர் மாற்றம்! சென்னை & கோவையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை என்ன? நகை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை

இந்தியாவில் இன்று தங்கம், வெள்ளி விலை உயர்ந்ததா? குறைந்ததா?: லைவ் அப்டேட்ஸ்

சர்ரென சரிந்த தங்கம், வெள்ளி விலை..!! ரூட்டு மாறுது.. இது தான் நல்ல சான்ஸ் மக்களே!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

தங்கம் விலை உயர்வால் மதுரை மக்கள் சோகம். ஒரு பவுன் தங்கம் எவ்வளவு தெரியுமா..?

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

தங்க குழந்தையாக மாறிய சஞ்சு சாம்சன் – இது தான் 'கன்வெக்ஸ்' வெற்றியா? காத்திருந்து கிடைத்த பெரும் லாபம்!

தங்கம் விலை மதுரை: இன்று அதிரடி உயர்வு! நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்த சர்வதேச காரணங்கள்..!



Click it and Unblock the Notifications