அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் 30 பில்லியன் டாலர் மதிப்பிலான பத்திர கொள்முதலை நிறுத்தவும், 2022ஆம் ஆண்டில் மூன்று முறை வட்டி விகிதத்தை உயர்த்தும் திட்டத்தை அறிவித்த நாளில் இருந்தும் தங்கம் விலையில் அதிகப்படியான மாற்றங்கள் எதிர்கொண்டு வருகிறது.
தங்கம் விலை
தங்கம் விலை இந்திய சந்தையை விடவும் வெளிநாட்டுச் சந்தை அடிப்படையில் தான் அதிகப்படியான மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது இதற்கு முக்கியக் காரணம் இந்தியாவில் தங்கத்தின் தேவைக்காக மொத்தமாக வெளிநாட்டில் இருந்து தான் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
40 டாலர் உயர்வு
அந்த வகையில் தங்கம் விலை அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் அறிவிப்பு வெளியான பின்பு ஒரு அவுன்ஸ் தங்கம் விலை புதன்கிழமையில் இருந்து சுமார் 40 டாலர் வரையில் அதிகரித்து 1800 டாலர் வரையில் கடந்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில் தங்கத்தின் போக்கும் முதலீடும் இனி வரும் காலத்தில் எப்படி இருக்கப் போகிறது என்பது தான் தற்போது அனைவரின் கேள்வியாக உள்ளது.
அதிக விற்பனை
சர்வதேச சந்தையில் தங்கம் விலை 1750 டாலருக்கு வரும் போது அதிகப்படியாக விற்பனை செய்யப்பட்டது, இப்போது தான் இந்தியாவில் தங்கம் விலை குறைந்து அதிகப்படியான மக்கள் தங்கத்தை வாங்கினர்.
பெடர்ல் ரிசர்வ்
தற்போது பெடர்ல் ரிசர்வ் பத்திர கொள்முதலை நிறுத்த திட்டமிட்டு உள்ளதால் அதிகப்படியான முதலீடுகள் தங்கம் மீது திரும்பும், இதனால் தங்கம் அடுத்த சில காலாண்டுகளுக்கு 1800 டாலர் அளவீட்டில் வர்த்தகம் செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. பொதுவாகவே டிசம்பர் மாதம் வர்த்தகம் செய்யக் கடுமையான காலமாக இருக்கும்.
தொடர் வளர்ச்சி
அந்த வகையில் விலையில் உருவாகும் ஏற்றதாழ்வுகள் அல்லது நிலையற்ற தன்மை அதிகளவில் குறைந்து தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் தங்கம் இருக்கப் போகிறது எனச் சர்வதேசச் சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர். அமெரிக்க மற்றும் ஆசிய சந்தையில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால் பல நாடுகள் வட்டி உயர்வு மட்டும் அல்லாமல் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தப் பல முடிவுகளை அடுத்தடுத்து அறிவிக்க உள்ளனர்.
தங்கம் தான் சரியான இடம்
இந்தக் காலக்கட்டத்தில் முதலீட்டுச் சந்தையில் பெரிய அளவிலான மாற்றங்களை எதிர்பார்க்க முடியும் என்பதால் முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை பாதுகாக்கத் தங்கத்தின் மீது அதிகளவில் முதலீடு செய்வார்கள், இதன் வாயிலாகத் தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
இந்திய சந்தை
இந்த மாற்றம் இந்திய சந்தையிலும் பெரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையிலும், அன்னிய முதலீடுகளும் தொடர்ந்து வெளியேறி வரும் நிலையிலும் தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
உங்கள் பதில் என்ன..?!
இது அனைத்தையும் தாண்டி தங்கம் விலையில் ஏற்படும் இந்த மாற்றங்கள் குறுகிய காலத்திற்கு மட்டுமே என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர், அடுத்த 3 முதல் 6 மாதத்தில் தங்கம் விலை மீண்டும் 1750 டாலருக்கு குறையவும் வாய்ப்பு உள்ளதாகவும் கணித்துள்ளனர். இதனால் தங்கம் 1800 டாலர் என்ற அளவீட்டை தாக்குப்பிடிக்குமா..? உங்கள் பதில் என்ன..?!
More From GoodReturns

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications