உலக அளவில் தங்கம் விலை உயர்வு என்பது கோடிக்கணக்கான மக்களுக்கு கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவில் சாமானிய மக்கள் தினமும் தங்கம் விலையை கேட்டு கண்ணீர் விடுகின்றனர்.
இன்று தங்கம் விலை: இந்தியாவில் தங்கம் என்பது நம்முடைய கலாச்சாரத்தோடு தொடர்புடையதாகவும் ஒரு குடும்பத்தின் அந்தஸ்தோடு தொடர்புடையதாகவும் பார்க்கப்படுகிறது . பலரும் இனி தங்கத்தை நம்மால் நினைத்து கூட பார்க்க முடியாது என்ற மனநிலைக்கு சென்று விட்டனர் .அந்த அளவிற்கு தங்கத்தின் விலை என்பது உச்சம் தொட்டிருக்கிறது. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் பதினோராயிரம் ரூபாயை கடந்துவிட்டது ஒரு சவரன் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாயையும் நெருங்கி வருகிறது. திருமண நிகழ்வுகளுக்காக தங்கம் வாங்குபவர்கள் இதன் மூலம் பெரிய நெருக்கடிக்கு ஆளாகி இருக்கின்றனர்.

திடீர் உயர்வின் பின்னணி என்ன: இந்தியாவில் மட்டும் தங்கம் விலை உயர்வில்லை உலகம் முழுவதுமே தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை தான் எட்டி இருக்கிறது. குறிப்பாக குறுகிய காலத்திலேயே தங்கத்தின் விலை பல மடங்கு உயர்வு கண்டிருக்கிறது இதுதான் உலக அளவில் பல்வேறு சந்தேகங்களையும் எழுப்புகிறது. பொருளாதார நிலையற்ற தன்மை ஏற்படும் போது தங்கம் விலை உயர்வு வாடிக்கைதான் ஆனால் இந்த முறை வழக்கத்துக்கு மாறாக ஜெட் வேகத்தில் தங்கம் விலை உயர்ந்தது.
சீனாவா? அமெரிக்காவா?: இதன் பின்னணியில் யாரேனும் சதி செய்கிறார்களா என ஆய்வு செய்து பார்த்தால் ஒருபுறம் சீனா இஷ்டத்துக்கு தங்கத்தை வாங்கி குவிக்கிறது . இது தங்கத்தின் விலை உயர்வுக்கு ஒரு முக்கிய காரணம் ஆனால் இதை விட ஒரு பெரிய காரணத்தை நிபுணர்கள் முன்வைக்கின்றனர் அதுதான் அமெரிக்காவின் மறைமுக நாடகம்.
1970களில் இருந்து: தங்கத்தின் விலை உயர்வு குறித்து லிங்குடின் பக்கத்தில் ஆசிஷ் சென்குப்தா என்ற மூத்த நிதி ஆலோசகர் வெளியிட்டுள்ள பதிவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு உண்மையான காரணத்தை நாம் இன்னும் உணரவே இல்லை என குறிப்பிட்டு இருக்கிறார் . அதாவது 1970 களில் இருந்து தற்போது வரை தங்கத்தின் மதிப்பு 649 மடங்கு உயர்ந்திருக்கிறது அதுவும் இந்த குறுகிய காலத்தில் பல மடங்கு அதிகரித்து இருக்கிறது இதன் உண்மை என்ன தெரியுமா என கேள்வி எழுப்பி இருக்கிறார்.

அமெரிக்கா நாடகம்: அமெரிக்கா தான் இதன் பின்னால் இருக்கிறது என சுட்டிக்காட்டி விரிவான பதிவை வெளியிட்டு இருக்கும் அமெரிக்கா தன்னுடைய பெருகிவரும் கடனை ஈடுகட்ட தன் வசம் இருக்கக்கூடிய தங்கத்தின் இருப்புகளை மறுமதிப்பீடு செய்ய தயாராகி வருகிறது என சுட்டிக்காட்டி இருக்கிறார் . அமெரிக்க அரசுக்கு தற்போது பெரும் பிரச்சினையாக இருப்பது கடன்.
உயரும் கடன்களால் தவிக்கும் டிரம்ப்: அமெரிக்க அரசின் கடன் மதிப்பு உயர்ந்து வருகிறது. பொருளாதாரம் மந்த நிலையை நோக்கி சென்று வருகிறது, பணவீக்கம் உயர்கிறது, மக்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை, மறுபுறம் டிரம்பின் வர்த்தக மோதல்கள் என பொருளாதார நெருக்கடி சூழந்திருக்கிறது. இதனை சரி செய்ய தங்கத்தை ஒரு கேடயமாக பயன்படுத்த அமெரிக்கா திட்டமிடுவதாக கூறுகின்றனர்.
பெடரல் ரிசர்வில் மதிப்பை மாற்ற திட்டம்: அதாவது தங்கம் விலை உயர்வுக்கு பின்னால் அமெரிக்காவின் மறைமுக நாடகம் இருக்கிறது என கூறுகிறார் சென்குப்தா. அமெரிக்கா தன் வசம் இருக்கும் தங்கத்தை பெடரல் ரிசர்வ் புத்தகங்களில் ஒரு அவுன்ஸ் வெறும் 42.22 டாலர் என பட்டியலிடுவதை சுட்டிக்காட்டி இருக்கிறார். 1970 களின் முற்பகுதியில் அமைக்கப்பட்ட மதிப்பீடு தான் இது எனக் கூறுகிறார் . சந்தையில் 3000 டாலருக்கும் அதிகமாக விற்கப்படும் தங்கம் அமெரிக்க பெடரல் ரிசர்வில் 42 டாலர் மதிப்பு கொண்டதாகவே இருக்கிறது.
தற்போது சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப அமெரிக்க தன் வசம் இருப்பு வைத்திருக்கும் தங்கத்தின் மதிப்பையும் சரி செய்ய இருக்கிறதாம். அப்படி சரி செய்தால் அமெரிக்க அரசின் வசம் இருக்கும் தங்கத்தின் மதிப்பு பல மடங்கு பெருகும். இது அந்த நாட்டின் கடன்களை எல்லாம் நிமிடத்தில் அடைத்துவிடும் என்கிறார்.
மிகப்பெரிய லாபம் கிடைக்கும்: தங்கம் விலை வலுப்பெறுவதன் மூலம் டாலரை பலவீனப்படுத்தலாம் என கூறுகிறார்கள் ஆனால் டாலரின் இயக்கவியல் என்பது முற்றிலும் வேறுபட்டது என்கிறார் தங்கம் வலுப்பெற்றால் டாலரும் வலுவாகவே இருக்கும் என சுட்டிக்காட்டுகிறார் . 2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 3 ஆயிரம் டாலருக்கு மேல் வர்த்தகம் ஆகிறது ஆனால் அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ் மதிப்பீடு வெறும் 42.22 டாலர்களாகவே வைக்கப்பட்டு இருக்கிறது இந்த மதிப்பினை சந்தைக்கு நிகரான மதிப்புக்கு மாற்றும் போது 11 பில்லியன் டாலராக இருக்கக்கூடிய தங்க கையிருப்பின் மதிப்பு 1 டிரில்லியன் டாலராக உயரும் .இதன் மூலம் அமெரிக்க அரசுக்கு எந்த ஒரு விற்பனையோ கடனோ இல்லாமல் மிகப் பெரிய லாபம் கிடைக்கும் என்கிறார்.
அமெரிக்க அரசு தன்னுடைய பற்றாக்குறை மற்றும் கடன்களை தீர்க்கவும் இந்த தங்கம் விலை உயர்வை பயன்படுத்திக் கொள்ளும் என அவர் கூறுகிறார். எது எப்படியோ தங்கம் விலை உயர்வுக்கு பின்னால் அமெரிக்காவும் சீனாவும் பெரிய சதி செய்கிறது என்பது அம்பலமாகிறது. ஆனால் இதனால் பாதிக்கப்படுவது எனவோ நம்மை போன்ற சாமானியர்கள்.


Click it and Unblock the Notifications