எடுத்த எடுப்பிலேயே யாரும் பெரிய தொழிலதிபர்களாக ஆகி விட முடியாது. இன்றைய மெகா கோடீஸ்வரர்களில் பலர் அடி மட்ட வேலைகளை செய்து படிப்படியாகத் தான் முன்னேறி இருப்பார்கள். ஜப்பானின் முன்னணி ஆடை நிறுவனமான யுனிக்லோவின் தலைவரும், அந்நாட்டின் மெகா கோடீஸ்வரருமான தடாஷி யானாயும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒரு காலத்தில் நிறுவனத்தின் கிளீனராக பணியாற்றிய தடாஷி இன்று ஜப்பானின் நம்பர் 1 பணக்காரராக உயர்ந்துள்ளார்.
தென்மேற்கு ஜப்பானின் யமசூச்சி மாகாணத்தில் உள்ள உபே என்ற சிறிய நகரத்தில் ஒரு ஜவுளிக்கடை உரிமையாளரின் மகனாக பிறந்தவர் தடாஷி யானாய். சிறு வயது முதலே தந்தையின் ஆண்களுக்கான துணிக்கடையில் வேலை பார்த்ததால் சில்லரை விற்பனையின் நுணுக்கத்தை கற்றுக் கொண்டார். முதலில், கடை பராமரிப்பு முதல் சோர்சிங் வரையிலான பணிகளில் அவர் ஈடுபட்டார்.

1971ல் வசேடா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியலில் பட்டம பெற்றார். இதனையடுத்து ஒரு சங்கிலித்தொடர் பல்பொருள் அங்காடியில் வேலை பார்த்தார். பின்னர் சர்வதேச பயண நிறுவனத்தில் பணியாற்றினார்.
இருப்பினும் இறுதியில் மீண்டும் தனது தந்தையின் நிறுவனமான ஓகோரி ஷோஜிக்கு திரும்பினார். 1984ல் ஜப்பானின் ஹிரோஷிமாவில் ஆயத்த ஆடைகள் நிறுவனமான யுனிக்லோவின் முதல் கடையை தொடங்கினார்.
பெனட்டன், கேப் மற்றும் எஸ்பிரிட் போன்ற ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பிராண்டுகளிடம் இருந்து உத்வேகத்தை பெற்ற அவர், ஜப்பானிய சந்தையில் வெகுஜன உற்பத்தி செய்யப்பட்ட சாதாரண ஆடை சங்கிலிகளின் மாடலை ஏற்றுக் கொண்டார்.
1991ல் மேம்படுத்தப்பட்ட உலகளாவிய அங்கீகாரத்திற்காக நிறுவனத்தின் பெயரான ஒகோரி ஷோஜியை பாஸ்ட் ரீடெய்ல் என்று மறுபெயரிட்டார். 7,300 கோடி டாலர் மதிப்பிலான ஆயத்த ஆடை சாம்ராஜ்யமான யூனிக்லோ நிறுவனத்தின் தாய் நிறுவனம்தான் பாஸ்ட் ரீடெய்ல்.
1998க்குள் ஜப்பானில் யூனிக்லோவுக்கு 300க்கு மேற்பட்ட கடைகள் உருவாகின, கணிசமான லாபம் மற்றும் பரவலான பிரபலத்தை அந்நிறுவனம் அடைந்தது. தனது ஆயத்த ஆடை வர்த்தகத்தை பிறநாடுகளிலும் விரிவுப்படுத்தும் நோக்கில், 2004ல் அந்நிறுவனம் அதன் உலகளாவிய தர வாக்குறுதியை அறிவித்தது.
குறைந்த விலை, குறைந்த தரமான ஆடைகளின் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்தது. 2019ல் இந்தியாவில் டெல்லியில் தனது முதல் கடையை யூனிக்லோ திறந்தது. திறந்த 2 நாளில் ரூ.2 கோடி வருவாய் ஈட்டியது. இந்த பிராண்ட் தனது இந்திய பிராண்ட் தூதராக கத்ரீனா கைப்பை நியமித்தது.
2021-22ம் நிதியாண்டு முதல் யூனிக்லோ நிறுவனத்தின் விற்பனை 69 சதவீதம் அதிகரித்து ரூ.500 கோடியாக உயர்ந்துள்ளது. அண்மையில் மும்பையில் தனது முதல் கடையை அந்நிறுவனம் திறந்தது. இதனையடுத்து இந்தியாவில் அந்நிறுவனத்தின் மொத்த கடைகளின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.
போர்ப்ஸ் அறிக்கையின்படி, தடாஷி யானாயின் சொத்து மதிப்பு சுமார் ரூ.3.06 லட்சம் கோடியாகும் (3,690 கோடி டாலர்). ஜப்பானின் மிகப்பெரிய பணக்காரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஜாரா போன்றவர்களை விஞ்சி உலகின் மிகப்பெரிய சில்லரை விற்பனையாளர் என்ற நிலையிலிருந்து யுனிக்லோ உயர வேண்டும் என்று 74 வயதிலும் அவர் ஆசைப்படுகிறார்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications