பெய்ஜிங்: 251 மில்லியனுக்கும் அதிகமான டவுன்லோட்களுடன் உலக அளவில் மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்படும் ஷாப்பிங் ஆப்களில் "Shein" ஆப்பும் ஒன்றாகும். இது உலகில் ஒட்டுமொத்தமாக அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட இரண்டாவது ஆப். ஒரு அறிக்கையின் படி இந்த ஆப்பை பயன்படுத்தி சீனா ஹேக்கர்கள் தவறான தகவல்களை வைத்து வாடிக்கையாளர்களின் டேட்டாக்களை திருடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் விவரங்களை பற்றி விளக்குகிறது இந்தப் பதிவு.
ஹார்மனி மெயில் ஆராய்ச்சியாளர்கள், கடந்த மாதத்தில் 1,000 போலி மின்னஞ்சல்களைக் கண்டுபிடித்துள்ளனர் என்று செக் பாயிண்ட் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வாடிக்கையாளர்களிடமிருந்து விவரங்களை பெறும் நோக்கில் ஹேக்கர்கள் Shein ஆப்பில் இருந்து மெயில் அனுப்பி பல மோசடி செயல்களில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மக்களை ஏமாற்ற ஹேக்கர்கள் என்ன முறையைப் பயன்படுத்துகிறார்கள்?: ஹேக்கர்கள் Shein வெப்சைட்டில் இருந்து மெயில் அனுப்புவது போல சில வாடிக்கையாளர்களை குறி வைத்து அனுப்புகின்றனர். அந்த மெயில் சப்ஜெக்டில் "Order Verification SHEIN" என்று குறிப்பிடப்பட்டு வருகிறது. கஸ்டமர் சப்போர்ட்டில் இருந்து அனுப்புவது போல காட்டிக் கொள்கின்றனர்.
அந்த மெயிலில் ஒரு ஃபிஷிங் லிங்கையும் வைத்து அனுப்புகின்றனர். அதைப் பயன்படுத்தி அதில் மிஸ்டரி பாக்ஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், அதில் உள்ள பரிசை பெற லிங்க்-ஐ கிளிக் செய்யும் படி கூறப்படுகிறது. அந்த லிங்க் கிளிக் செய்யப்பட்டால் வேறு ஒரு இணையதளத்திற்கு செல்கிறது. உடனே வாடிக்கையாளர்களுடைய அனைத்து தகவல்களும் திருடப்படுகிறது. இது போன்ற மெயில் உங்களுக்கு வந்தால், அது Shein ஆப்பின் அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்து அனுப்பப்படும் மின்னஞ்சல் முகவரியா.. என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
முன்பு பயன்படுத்தப்பட்ட அதே டெக்னிக்கை வைத்து தற்போதும் தகவல்களைத் திருட முயற்சிக்கின்றனர். நன்கு அறியப்பட்ட பிராண்டுகள் மற்றும் இதர பொருட்களை பயன்படுத்தி வாடிக்கையாளர்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனர். முன்பு வெவ்வேறு ஐடியாக்களை வைத்து மோசடி செய்த கும்பல், தற்போது Shein ஆப்பை பயன்படுத்தி திருட்டில் இறங்கியுள்ளது.
போலி மின்னஞ்சல்களை எவ்வாறு கண்டுபிடிப்பது?: உங்களுக்கு மெயில் அனுப்பப்படும் போது, அதன் மெயில் ஐடியை சரி பார்க்கவும். இதை வைத்து போலியான மெயில் ஐடிகளை கண்டுபிடித்துவிடலாம். தற்போது வரும் மோசடி செயல்களில் மிஸ்டரி பாக்ஸ் என பொய்யாகக் கூறி மெசேஜ்களை அனுப்பி விவரங்களைத் திருடுவது அதிக அளவில் பயன்படுத்தப்படும் யுக்தியாக உள்ளது.
அதேபோல போலியான மின்னஞ்சல் முகவரி என கண்டுபிடித்து விட்டால் அதில் உள்ள லிங்கை கிளிக் செய்யாமல் இருங்கள். நீங்கள் பார்த்திருக்கலாம், தற்போது பல தயாரிப்புகளிலும் இன்னொரு பிராண்டின் பெயர் பயன்படுத்தப்படுகிறது. பார்க்கும் போது எந்தவித சந்தேகமும் இல்லாமல் இருப்பது போன்று டூப்ளிகேட் பொருட்களை தயாரிக்கின்றனர். இது வெப்சைட்டுக்கும் பொருந்தும். போலியான மின்னஞ்சல் முகவரி மற்றும் இணையதள முகவரி ஆகியவை பயன்படுத்தப்படுகிறதா என்பதை பற்றி ஆராயுங்கள். இந்த சிறு விஷயமே பல மோசடி சம்பவங்கள் நடக்காமல் இருக்க உதவியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications