பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் அபாயகரமான பொருளாதார சூழல்கள் ஏற்படும் போதெல்லாம் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக தங்கத்தை வாங்கி இருப்பு வைக்கின்றன. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக இந்த போக்கு அதிகரித்துள்ளது.
டாலரின் மதிப்பு சரிந்து வருவதும் அமெரிக்க பல்வேறு நாடுகளுடன் வர்த்தக மோதலில் ஈடுபடுவதும், புவி சார் பதட்டங்களும் உலக நாடுகளை அதிக தங்கம் வாங்க செய்கின்றன. அதாவது கரன்சிகளின் மதிப்பு குறையலாம் அல்லது முடக்கப்படலாம், ஆனால் நம் கைவசம் இருக்கும் தங்கத்தின் மதிப்பை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. இந்த ஒரு லாஜிக் தான் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளையும் அதிக தங்கம் வாங்க வைக்கிறது.

2025 ஆம் ஆண்டில் போலந்து நாடுதான் அதிக அளவு தங்கம் வாங்கிய நாடாக இருந்தது. உலக தங்க கவுன்சில் அறிக்கையின் படி 2025ஆம் ஆண்டில் மட்டும் போலந்து நாட்டு மத்திய வங்கி 100 டன்களுக்கும் அதிகமாக தங்க வாங்கி இருப்பு வைத்துள்ளது. நடப்பாண்டிலும் இதனை விட அதிகமாக தங்கம் வாங்க அந்த நாடு முடிவு செய்திருக்கிறது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்று தான் போலந்து. இந்த நாட்டின் தேசிய வங்கியிடம் தற்போது 550 டன்கள் தங்கம் கையிருப்பு இருக்கிறது. இது ஐரோப்பிய மத்திய வங்கியை விட அதிகம். ஐரோப்பிய மத்திய வங்கியே 500 டன்கள் தங்கம் தான் கையிருப்பாக வைத்துள்ளது. ஆனால் அதனை கூட கூடுதலாக 50 டன்கள் தங்கத்தை வைத்திருக்கும் போலந்து இந்த ஆண்டுக்குள் அதனை 700 டன்கள் என உயர்த்த முடிவு செய்துள்ளது.

2024 ஆம் ஆண்டில் போலந்து நாட்டின் கையிருப்பில் 16.86 சதவீதமாக இருந்த தங்கம் 2025 ஆம் ஆண்டு இறுதியில் 28.22% என உயர்வு கண்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில் அதிகளவு தங்கம் வாங்கியதே இதற்கு முக்கிய காரணம். இந்த ஆண்டில் 150 டன்கள் தங்கம் வாங்க முடிவு செய்துள்ளதாக போலந்து நாட்டு மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
உலக அளவில் அதிகரித்து வரக்கூடிய வர்த்தக மோதல்கள் மற்றும் பொருளாதார சூழல்களுக்கு மத்தியில் தங்கம் தான் பாதுகாப்பான ஒரு விஷயமாக இருக்கிறது என்பதால் அதிகளவு தங்கம் வாங்குவதாக தெரிவித்திருக்கிறார் போலந்து மத்திய வங்கியின் தலைவர். போலந்து இந்த ஆண்டு தங்க இருப்பை 700 டாலர்கள் என உயர்த்தினால் உலக அளவில் அதிக தங்கம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் 12ஆவது இடத்தில் இருந்து 10ஆவது இடத்திற்கு வந்துவிடும்.
போலந்தின் இந்த நடவடிக்கையை மற்ற நாடுகளும் பின்பற்ற தொடங்கினால் 2025ஐ போலவே 2026ஆம் ஆண்டிலும் தங்கத்திற்கான டிமாண்ட் அதிகமாகி அதன் விலை உயர வாய்ப்பு ஏற்படும். இப்படி உலக நாடுகள் தங்க கட்டிகளை அதிகமாக வாங்கி வைப்பது இறுதியில் டாலரை மதிப்பை குறைக்க செய்து, யார் வசம் அதிக தங்கம் உள்ளதோ உலக அரசியலில் அவர்களின் கைதான் ஓங்கியதாக இருக்கும், என்ற நிலையை உண்டாக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

வீட்டில் 100 கிராமுக்கு மேல் தங்கமா? உஷார்! வருமான வரித்துறை நோட்டீஸ் வரலாம்!



Click it and Unblock the Notifications