பெண்களுக்காக ஷோக்கான ஹோட்டல்... உள்ள போனா ஏகப்பட்ட ஷாக்கான மேட்டர்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிகாகோ: பெண்களுகாக சிறப்பு பஸ், சிறப்பு ஆட்டோ, சிறப்பு ரயில் பெட்டி என பலவற்றை நாம் கேட்டிருப்போம். ஆனால் பெண்களுக்கான ஹோட்டல் பற்றி யாரேனும் கேட்டதுண்டா??

 

எப்போதும் வித்தியாசமாக சிந்திக்கும் வெர்ஜின் குழுமம், தனது கிளை நிறுவனமான வெர்ஜின் ஹோட்டல்ஸ் நிறுவனம் சிகாகோவில் தனது முதல் விடுதியை துவங்கியுள்ளது. இந்த ஹோட்டல் முற்றிலும் பெண்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்தது.

வெர்ஜின் ஹோட்டல்

வெர்ஜின் ஹோட்டல்

சிகாகோவில் திறக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டல் பெண்களுக்காகவும், வேலைக்கு செல்லும் பெண்களுக்காகவும் உருவாக்கப்பட்டது. இங்கு பிற விடுதிகளை விட சில விஷேசங்கள் உள்ளது. (எல்லாம் அந்த மாதிரியான விஷேசம் தான்..)

காதலர் பெட்டி

காதலர் பெட்டி

இங்கு வரும் பெண்கள் பெரும்பாலும் தங்களின் காதலர்களுடன் தான் வருவார்கள், அவர்களை மகிழ்விக்கும் வகையில் இந்த காதலர் பெட்டியில் 2 டின் பீர், 2 ஆணுறை, மசகு எண்ணெய் மற்றும் வைப்ரேட்டர் இதில் இருக்கும். இந்த பெட்டியின் மதிப்பு 20 டாலர் தான். சேல்ஸ் பிச்சிக்கும் போங்க...

குளியல் அறை

குளியல் அறை

இரு நபர்களுக்கும் மட்டும் போதுமான இடத்தில் (நெருக்கமான இடத்தில்) குளியல் அறை வடிவமைக்கப்பட்டுள்ளது. (இந்த அறிவு உங்கள எங்கையோ கொண்டு போய்டும் பாஸ்)

எட்டிப்பார்க்க..
 

எட்டிப்பார்க்க..

பெட்ரூமிற்கும் ஆடை மாற்றும் அறைக்கு மத்தியில் ஒரு மர கதவு உள்ளது இதில் இரண்டு துளைகள் இருக்கு.. எதுக்கு தெரியுமா?? வாடிக்கையாளர் எந்த நிலையில் இருந்தாலும் (state of undress) இக்கதவிற்கு பின்னால் மறைந்துக்கொண்டு, அறையை சுத்தம் செய்ய வரும் பணிப்பெண்களை கண்காணிக்கலாம்.

அலமாரியில் கூடவா...

அலமாரியில் கூடவா...

பெண்கள் தங்களது உள்ளாடைகளை வைக்க அதிகப்படியான ஹேங்கர்ஸ் , செருப்புகளை வைக்க அலமாரி போன்றவையும் இந்த அறைகளில் இருக்கும்..

கண்ணாடி கண்ணாடி...

கண்ணாடி கண்ணாடி...

விடுதி அறைகள் பெண்களுக்கு மிகவும் பயன்படும் வகையில் பொரும்பாலான பகுதிகளில் கண்ணாடிகளை பொருத்தியுள்ளனர். குறிப்பாக கண்ணாடி டைனிங் டேபிள், கண்ணாடி டீபாய் போன்றவை உள்ளது.

இசை

இசை

விடுதியில் வாடிக்கையாளர் பிடித்தமான இசையை ரசிக்க USB போர்ட் வசதிக் கொண்ட சரோண்டு சவுண்டு சிஸ்டம், மற்றும் டிவி போன்றவை இந்த அறையில் இருக்கும்.

வை-பை

வை-பை

இன்றைய நிலையில் உணவு இல்லாமல் கூட இருந்து விடலாம் இண்டர்நெட் இல்லாமல் இருக்க முடியாது. இதை உணர்ந்த வெர்ஜின் ஹோட்டல்ஸ் அனைத்து அறைகளிலும் அதிவேக இண்டர்நெட் இணைப்பு கொண்ட வை-பை அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Richard Branson launches first Virgin Hotel in Chicago, woos working women with vibrators

Richard Branson launched his first Virgin Hotel in Chicago — which has been dubbed a female-friendly hotel aimed at working women. Besides, checking all the usual boxes expected from a luxury hotel, it also offers features designed to meet some special needs of its customers.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X