சவுதி அரேபியா-விற்கு ஒத்துழைக்கும் 'ரஷ்யா'.. கச்சா எண்ணெய் விவகராத்தில் பரஸ்பரம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாஸ்கோ: உலகிலேயே அதிகக் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முதல் மூன்று இடத்தில் இருப்பது சவுதி அரேபியா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா.

 

அமரிக்காவிற்குப் போட்டியாகச் சவுதி மற்றும் OPEC அமைப்பில் இருக்கும் பிற நாடுகள், அதிகளவிலான கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து, சர்வதேச சந்தையில் இதன் விலையை 65 சதவீதம் வரை குறைக்க வழி செய்தது.

இந்தப் போட்டியில் சவுதி மற்றும் OPEC அமைப்பில் இருக்கும் நாடுகள் அதிகளவிலான நிதிப் பற்றாக்குறையைச் சந்தித்தது. இதனால் இந்த நாட்டிற்குப் பட்ஜெட் போடுவதில் கூடப் பிரச்சனை ஏற்பட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் எந்த அளவில் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் என்று.

OPEC நாடுகள் இந்தப் பிரச்சனையில் இருந்து விடுபடக் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க ஒரு மனதாக முடிவு செய்தது. இதனால் வியாழக்கிழமை வர்த்தகத்தில் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் இதன் விலை 15 மாத சரிவை ஈடு செய்தது.

 OPEC அமைப்பின் கோரிக்கை

OPEC அமைப்பின் கோரிக்கை

கடந்த 10 வருடங்களாகக் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்காத சவுதி அரேபியா, முதல் முறையாக OPEC அமைப்பு நடத்திய மாநாட்டில் தனது உற்பத்தியைக் குறைக்க ஒப்புக்கொண்டது. தங்களது முடிவிற்கு ரஷ்யாவும் ஒத்துழைக்க வேண்டும் எனக் கோரிக்கையும் OPEC அமைப்புக் கோரிக்கை வைத்தது.

ரஷ்யா

ரஷ்யா

இந்நிலையில் ரஷ்யாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் நிறுவனமான ரோஸ்நெப்ட் நிறுவனத்தின் தலைவர் Igor Sechin, ரஷ்யாவிற்குக் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க அனைத்து விதமான வாய்ப்புகளும் வளங்கும் உள்ளது எனக் கூறியுள்ளார்.

செப்டம்பர் மாதம்
 

செப்டம்பர் மாதம்

ரஷ்யா செப்டம்பர் மாதத்தில் ஒரு நாளுக்கு 11.2 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்-ஐ உற்பத்தி செய்துள்ளது.

ஆனால் எங்களால் ஒரு நாளுக்கு 4 மில்லியன் பேரல் அதாவது, வருடத்திற்கு 200 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்-ஐ உற்பத்தி செய்ய முடியும்.

கை வைக்காத இடங்கள்

கை வைக்காத இடங்கள்

இதுவரை ரஷ்யா கச்சா எண்ணெய் வளங்கள் உள்ளது எனத் தெரிந்தும் ஆர்டிக் பகுதிகள்ஷ பாஸ்ஹெனோவ் உற்பத்தி பகுதி, மேற்கு சைபீரியா வில் டூயுமென் குழுமம், அலெக்சாண்டர் க்ரோநிலோவ் ஆகியவற்றில் இதுவரை உற்பத்திக்காகக் கைவைக்கவில்லை என அட்டன் எல்எல்சி தெரிவித்துள்ளது.

கச்சா எண்ணெய் சந்தை

கச்சா எண்ணெய் சந்தை

அடுத்தச் சில வாரங்களில் கச்சா எண்ணெய் சந்தையில் உள்ள பிரச்சனைகள் களையப்பட்டுச் சீரடையும் எனவும் Igor Sechin கூறினார்.

புடின்

புடின்

OPEC அமைப்பின் கோரிக்கைக்கும் ரஷ்யா ஒத்துழைப்பதாக இந்நாட்டின் பிரதமர் புடின் அக்டோபர் 10ஆம் தேதியே அறிவித்துள்ளார்.

மேலும் அவர் உற்பத்தைக் குறைப்பது மட்டும் அல்ல, வேண்டும் என்றால் சில நாட்களுக்கு உற்பத்தி பணிகளை முடக்கவும் முடியும் எனப் புடின் வழக்கம் போல் தனது பாணியில் OPEC அமைப்பிற்குப் பதில் அளித்தார்.

கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை

இதன் காரணமாகத்தான் கச்சா எண்ணெய் விலை கடந்த 2 நாட்களாக உயர்ந்து வருகிறது.

அமெரிக்கா

அமெரிக்கா

இந்நிலையில் கச்சா எண்ணெய் உற்பத்தி குறித்தும் அதன் வர்த்தகம் குறித்தும் இதுவரை அமெரிக்கா எவ்விதமான அறிக்கையும் வெளியிடவில்லை.

இந்தியா-ரஷ்யா டீல்

இந்தியா-ரஷ்யா டீல்

இதன் மத்தியில் தான் இந்தியாவின் எஸ்ஸார் நிறுவனத்தில் 49% பங்குகளை ரஷ்யா ரோஸ்நெப்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் ரோஸ்நெட் நிறுவனம் அடுத்த 10 வருடத்தில் 10 பில்லியன் டன் கச்சா எண்ணெய்-ஐ இந்தியாவில் வர்த்தகத்திற்காகக் கொண்டு வர உள்ளது.

இந்தியாவிடம் கச்சா எண்ணெய் வளம் அதிகளவில் இல்லாத போது, இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடையும் இத்தருணத்தில் கச்சா எண்ணெய்க்காக வளைகுடா நாடுகளை மட்டும் நம்பி இருக்க முடியும்.

மேலும் படிக்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Russia could raise oil output, but like to support OPEC

Russia could raise oil output, but like to support OPEC - tamil goodreturns
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X