தங்கத்தை விற்று தள்ளும் ரஷ்யா.. வாங்கி குவிக்கும் சீனா.. ஆனா இவங்க டார்கெட் ஒன்னு தான்..!!

சர்வதேச தங்க சந்தையில் தற்போது முக்கியமான ஒரு மாற்றம் நடந்துள்ளது. வழக்கமாக உலக நாடுகளின் மத்திய வங்கிகள் அதிகமாக தங்கத்தை வாங்கி வைப்பதை தான் பார்த்திருக்கிறோம். ஆனால் இப்போது குறிப்பிட்ட இரண்டு நாடுகள் அதிகமாக தங்கத்தை விற்பதும் குறிப்பிட்ட இரண்டு நாடுகள் அதிகமாக தங்கத்தை வாங்குவதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ரஷ்யா இந்த ஆண்டு தொடக்கம் முதலே தன் கைவசம் உள்ள தங்கத்தை விற்று வருகிறது. குறிப்பாக செப்டம்பர் மாதத்தில் மட்டும் ரஷ்யாவின் தங்க கையிருப்பு சுமார் 6.2 டன்கள் குறைந்துள்ளது. இதன் மூலம், கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இதுவரை ரஷ்யா விற்ற தங்கத்தின் அளவு தோராயமாக 62 டன்களை எட்டியுள்ளது.

தங்கத்தை விற்று தள்ளும் ரஷ்யா.. வாங்கி குவிக்கும் சீனா.. ஆனா இவங்க டார்கெட் ஒன்னு தான்..!!

ரஷ்ய வரலாற்றில் இவ்வளவு குறுகிய காலத்தில், இவ்வளவு தீவிரமாக தங்கம் விற்கப்படுவது இது இரண்டாவது முறை மட்டுமே. இதற்கு முன்பு கடந்த 1998 ஆம் ஆண்டு, வெறும் மூன்று மாதங்களில் தனது கையிருப்பிலிருந்து 118 டன்கள் தங்கத்தை ரஷ்யா விற்பனை செய்திருந்தது.

உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா கடுமையான நிதிப்பற்றாக்குறையை சந்தித்து வருகிறது, நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்தவும் அமெரிக்காவின் பொருளாதார தடைகளை எதிர்கொள்ளவும் தங்கத்தை விற்பனை செய்கிறது. லண்டன் புல்லியன் சந்தைக்கு வெளியே இந்த தங்க விற்பனை நடைபெறுகிறது. ரஷ்ய தங்கத்தின் பெரும்பகுதி ஹங்காங் வழியாக சீனாவுக்கு தான் விற்கப்படுகிறது. ஜனவரி முதல் ஜூலை வரை சுமார் 100 டன் ரஷ்ய தங்கம் ஹங்காங்கை சென்றடைந்துள்ளது என ஒரு தரவு கூறுகிறது.

Also Read

ரஷ்யாவுக்கு அடுத்ததாக கஜகஸ்தான் அதிக தங்கம் விற்கிறது. முதல் எட்டு மாதங்களில் அதிகமாக தங்கம் வாங்கும் நாடுகளில் ஒன்றாக இருந்த கஜகஸ்தான், இந்த ஆண்டின் இறுதிக்குள் தனது தங்க கையிருப்பை குறைத்து, மொத்த அந்நிய செலாவணி கையிருப்பில் தங்கம் 70% அல்லது 75% என்ற இலக்கை எட்ட திட்டமிட்டுள்ளது. பல ஆண்டுகளாக தங்கத்தை தீவிரமாக வாங்கி வந்த ஒரு நாடு திடீரென அதை விற்கிறது. நாட்டின் நிதி பற்றாக்குறையை சரிசெய்வது அல்லது பல ஆண்டுகளாக தங்கம் வாங்கியதன் மூலம் கிடைத்த லாபத்தை எடுத்துக்கொள்வது இதன் முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

உலகளவில் அதிகம் தங்கம் வாங்கும் நாடாக போலந்து மாறியுள்ளது. போலந்தின் தேசிய வங்கி கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக தங்கம் வாங்கி வருகிறது. அந்நாட்டின் தற்போதைய தங்க கையிருப்பு 700 டன்கள் என்ற இலக்கை நெருங்கிவிட்டது. உலகளவில் தங்கத்தை அமெரிக்க டாலருக்கு எதிரான ஒரு ஆயுதமாக மாற்ற சீனா திட்டமிடுகிறது. இதற்காக தங்கத்தை வாங்கி குவிக்கிறது.

Recommended For You

எதிர்காலத்தில் எந்த நாட்டிடம் அதிக தங்கம் இருக்கிறதோ அந்த நாட்டின் கை தான் உலக பொருளாதார அரங்கில் ஓங்கி இருக்கும் என்பது தான் சீனாவின் திட்டம். அமெரிக்க டாலரின் மதிப்பை வலுவிழக்க செய்ய வேண்டும் என்பதை நீண்ட கால இலக்காக கொண்டு சீனா தங்கம் வாங்கி வருகிறது.

ரஷ்யா தங்கத்தை விற்பதும் சீனா தங்கத்தை வாங்குவதும் என இரண்டுமே அமெரிக்காவிற்கு எதிரான ஒரு அரசியல் தான் என்கின்றனர் நிபுணர்கள். எனவே உலக அளவில் தற்போது தங்கம் விலை குறைந்திருந்தாலும் மத்திய வங்கிகள் போட்டி போட்டு தங்கம் வாங்குவதால் நீண்ட கால அடிப்படையில் இதன் மதிப்பி உயரவே செய்யும் என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+