உலக அளவில் தங்கமும் வெள்ளியும் போட்டி போட்டுக்கொண்டு விலை உயர்ந்த வண்ணம் இருக்கின்றன .இந்திய சந்தையில் இந்த ஒன்றரை மாத காலத்திலேயே தங்கத்தின் விலை பல வரலாறு காணாத உச்சங்களை தொட்டுவிட்டது . கிட்டத்தட்ட இந்தியாவில் 24 கேரட் தங்கம் 10 கிராமின் விலை 1.3 லட்சம் ரூபாயை அடைந்து விட்டது. வெள்ளி பொறுத்தவரை 1 கிலோவின் விலை இரண்டு லட்சம் ரூபாயை கடந்து விட்டது.
சர்வதேச காரணிகள், உள்ளூரில் தேவை அதிகரித்திருப்பது என பல்வேறு காரணங்கள் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வுக்கு காரணமாக சொல்லப்படுகின்றன. உலக அளவில் பல்வேறு முதலீட்டாளர்களுக்கும் தங்கம் மற்றும் வெள்ளி சிறந்த லாபத்தை பெற்று தந்து ரியல் எஸ்டேட் ,பங்குச்சந்தை உள்ளிட்டவற்றையெல்லாம் பின்னுக்கு தள்ளி விட்டன .

தங்கம் விலை உயர்வுக்கு பின்னால் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன .ஒருபுறம் அமெரிக்கா தான் இதை செய்கிறது என ஒரு சிலரும், மறுபுறம் சீனாதான இதை செய்கிறது என ஒரு தரப்பினரும் தொடர்ந்து தங்களுடைய வாதங்களை முன்வைத்து வருகின்றனர் . ஆனால் எது எப்படி இருந்தாலும் நாள்தோறும் தங்கத்தின் விலை ஏறிக்கொண்டு தான் இருக்கிறதே தவிர இறங்கிய பாடில்லை.
இந்த சூழலில் தான் Kobeissi Letter எனப்படும் அமைப்பு ஒரு பகிரங்கமான பதிவினை வெளியிட்டு உலக முதலீட்டாளர்களை கலங்கடிக்க செய்துள்ளது. உலக பங்கு சந்தைகளை பகுப்பாய்வு செய்யக்கூடிய இந்த நிறுவனம் வெளியிட்டு இருக்கக்கூடிய எக்ஸ் பதிவின்படி 2025 ஆம் ஆண்டில் அமெரிக்க பங்குச் சந்தையை விட தங்கமும் வெள்ளியும் நான்கு மடங்கு அதிக லாபம் தந்து விட்டன என கூறியிருக்கிறது.
அமெரிக்க பங்குச்சந்தை கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவு வேகமான வளர்ச்சி அடைந்த போதிலும் தங்கம் வெள்ளிக்கு நிகரான வளர்ச்சியை அடைய முடியவில்லை என அதில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது . இந்த தங்கம் வெள்ளி விலை உயர்வு நமக்கு என்ன உணர்த்துகிறது என்பதை அதில் விரிவாக பதிவு செய்திருக்கின்றனஎ. அதாவது நாம் பாரம்பரியமாக பயன்படுத்தக்கூடிய கரன்சிகளின் மீதான நம்பிக்கை வேகமாக குறைந்து வருகிறது என்பதுதான் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இப்படி வரலாறு காணாத உச்சங்களை எட்டுவதற்கு காரணம் என்ற உண்மையை போட்டு உடைத்து இருக்கிறது.

தங்கம் விலை உயர்வுக்கு பல்வேறு நாடுகளின் பொருளாதார பற்றாக்குறை , வங்கிகள் வட்டிகளை குறைத்தது உள்ளிட்டவற்றை காரணமாக நாம் கூறுகிறோம். ஆனால் இதில் இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கிறது , அதாவது கூடிய விரைவில் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஏஐ போர் ஏற்படப்போகிறது என கூறியுள்ளது. அதாவது ஏஐ தொழில்நுட்பத்திற்கான மூலதன செலவினம் பல மடங்கு உயர்ந்திருக்கிறது என்ற ஒரு விஷயத்தையும் நாம் கவனிக்க தவறுகிறோம் என கூறியிருக்கிறது.
ஒரே சமயத்தில் அனைத்து சொத்துக்களும் வரலாறு காணாத உச்சத்தை எட்டுகிறது என்றால் அது வளர்ச்சி அடையக்கூடிய சந்தை கிடையாது அது ஒரு சிஸ்டமேட்டிக் மாற்றம் என குறிப்பிட்டு இருக்கிறது. வரும் காலத்தில் தங்களுடைய நிதி பற்றாக்குறையை தீர்க்கவு, ஏஐ தொழில்நுட்பத்திற்கான மூலதன செலவினத்தை அதிகரிக்கவும் அமெரிக்க அரசாங்கம் அதிக அளவிலான பணத்தை அச்சிடும் என குறிப்பிட்டு இருக்கிறது. அமெரிக்காவும் சீனாவும் ஏஐ தொழில்நுட்பத்தில் பல மடங்கு முதலீடு செய்துள்ளன.
ஒரு புறம் தங்கம் , வெள்ளி விலை உயர்வு, மறுபுறம் கரன்சிகள் மீதான நம்பிக்கை குறைவு, ஏஐ தொழில்நுட்பத்தில் மோதல் அடுத்தடுத்த நிகழ்வுகள் அதிரடியாக இருக்க போகின்றன என்பதே இந்நிறுவனம் கூற வரும் தகவல். ஏற்கனவே அமெரிக்க நிறுவனங்களுக்கும் சீனாவை சேர்ந்த நிறுவனங்களுக்கும் ஏஐ துறையில் பெரிய அளவிலான போட்டி என்பது உருவாகி இருக்கிறது.


Click it and Unblock the Notifications