நியூ யார்க்: சென்ற வெள்ளிக்கிழமை முதல் அமெரிக்க அரசு அலுவலகங்களின் பனிகள் நிதி சிக்கலால் தடைப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான நிதியளிக்கும் இடைக்கால மசோதாவிற்குக் குடியரசு கட்சியும், ஜனநாயக கட்ச்சியும் வாக்களித்துள்ள நிலையில் தாற்காலிகமாக முடிவுக்கு வந்து பணிகள் துவங்கியுள்ளன.
முன்னதாக அரசு துறைகளுக்கான நிதிகளை ஒதுக்கும் இடைக்கால மசோதாவிற்குத் தேவையான வாக்குகளை விடக் குறைவான வாக்குகளை மட்டும் பெற்றதால் வெள்ளிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை அமெரிக்க அரசு பணிகள் தடைபட்டு இருந்தது.
கோரிக்கை
அமெரிக்காவில் குடியேறியவர்களின் மனைவி மற்றும் குழந்தைகளை அமெரிக்கக் கூட்டி வருவதற்கான மசோதாவிற்கு விதிக்க இருக்கும் தடையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் முதலில் வாக்கு அளிக்க மறுத்துவிட்டனர். தற்போது அதில் திருத்தம் கொண்டு வர டிரம்ப் அரசு உறுதி அளித்ததால் தேவையான வாக்குகளைப் பெற்று இடைக்கால மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இடைக்கால நிதி எத்தனை நாட்களுக்கு?
இந்த மசோதா தற்போது அமெரிக்க அதிபர் டிரம்பின் ஒப்புதலுக்குக்காக்க அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிதி இரண்டரை வாரங்களுக்கு மட்டுமே உள்ளது.
நீண்ட கால வரவு செலவு திட்டம்
பிப்ரவரி 8-ம் தேதி வரை அமெரிக்க அரசு எவ்வித நிதித் தடையும் இல்லாமல் இயங்கும். இதற்கிடையில் நீண்ட கால வரவு செலவு திட்டத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊழியர்களுக்கு விடுமுறை
நேற்று வரை இந்த மசோதா நிறைவேராதாதால் பல்வேறு அரசுத் துறை ஊழியர்களுக்குத் திங்கட்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. வேலை செய்தாலும் சம்பளம் கிடையாது, அதனால் அலுவலகத்தினை மூடிவிட்டு வீட்டிற்குச் சென்றுவிட்டனர்.
ராணுவ செயல்பாடுகள்
இந்த ஒற்றை மசோதாவால் அமெரிக்காவில் உள்ள அரசு துறைகள் மற்றும் அலுவலகங்கள் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதிலும் உள்ள அமெரிக்க அரசு அலுவலகங்களும் திங்கட்கிழமை இயங்கவில்லை. ஏன் பிற நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவம் கூடு நேற்று விடுமுறையில் தான் இருந்தது.
பாஸ்போர்ட் மற்றும் விசா சேவைகள்
பாஸ்போர்ட் மற்றும் விசா சேவைகளுக்குக் கட்டணம் பெறப்படுவதால் அதனை வைத்து இந்த அலுவலகங்கள் எப்போது போலத் திங்கட்கிழமையும் இயங்கும் எனச் சனிக்கிழமை அறிவித்தபடி இயங்கின.
முதன் முறை அல்ல
1974-ம் ஆண்டு முதல் தற்போது வரை அமெரிக்க அரசு நிர்வாகமானது இதுவரை 18 முறை முடங்கியுள்ளது. பராக் ஒபாமா ஆட்சிக் காலத்திலும் 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அரசு நிர்வாகம் முடங்கி இருந்தது.
விப்ரோ
100% லாபம்
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications