கலிபோர்னியா, அமெரிக்கா: ஓபன் ஏஐ நிறுவனத்திற்கு சொந்தமான சாட் ஜிபிடி எனப்படும் ஏஐ சாட்பாட் உலகம் முழுவதும் பிரபலமாக பலராலும் பயன்படுத்தக்கூடிய ஒரு செயலியாக தொடர்ந்து தன்னை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
பல்வேறு ஏஐ செயலிகள் வந்தாலும் ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்பத்தை பெருமளவில் மக்களிடம் கொண்டு சேர்த்த பெருமையும் புகழும் சாட் ஜிபிடிக்கு தான் உண்டு. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பதின்ம வயதினர் அதிக அளவில் இந்த சாட் ஜிபிடி செயலியை பயன்படுத்துவதாக தொடர்ந்து தரவுகள் வெளியான வண்ணம் இருக்கின்றன. இவ்வாறு ஏஐ பயன்படுத்தக்கூடிய பதின்ம வயதினர் மத்தியில் மனரீதியிலான தாக்கம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. பலரும் தங்களுடைய பெற்றோர் நண்பர்கள் மற்றும் உறவினர்களை விடுத்து தங்களின் அனைத்து தகவல்களையும் சாட் ஜிபிடி போன்ற செயலிகளிடம் தான் அதிகம் பகிர்கிறார்கள் என மனநலம் சார்ந்த நிபுணர்கள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில் அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெற்றோர் தங்களுடைய 16 வயது மகனின் தற்கொலைக்கு சார்ஜ் ஜிபிடி தான் காரணம் எனக்கூறி வழக்கு தொடர்ந்திருக்கின்றனர். ஆடம் ரைனிங் என்ற 16 வயது மாணவர் கடந்த ஏப்ரல் மாதம் தன்னுடைய படுக்கை அறையில் தற்கொலை செய்து கொண்டார். 16 வயது மாணவனின் இந்த திடீர் இறப்பு பெற்றோருக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்திய. இதனை அடுத்து அந்த மாணவனின் செல்போன் மற்றும் பிற கருவிகளை ஆய்வு செய்ததில் அவர் தினமும் சாட் ஜிபிடியிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
பெற்றோரிடம் கூட கூறாத பல்வேறு விஷயங்களை பல மாதங்களாக அந்த மாணவர் சாட் ஜிபிடியிடம் கலந்துரையாடி இருக்கிறாராம். அப்படி ஒரு கலந்துரையாடலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வது குறித்து அவர் கேட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. இதனை அடுத்து அந்த மாணவனின் பெற்றோர் கலிபோர்னிய மாநில நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கின்றனர். அதில் சாட் ஜிபிடிடம் ஒரு நாளைக்கு அந்த மாணவர் 650 மெசேஜ்களை பகிர்ந்து இருக்கிறார் அதில் தற்கொலை சம்பந்தப்பட்ட விஷயங்களும் அடங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது .

அந்த மாணவனின் பெற்றோர் சாட்ஜிபிடி தற்கொலை செய்து கொள்வது, தற்கொலை முயற்சியை மறைப்பது என பல யோசனைகளை என் மகனுக்கு அளித்துள்ளது தற்கொலை செய்து கொள்வது தவறு என கூற வில்லை என குற்றம் சாட்டியிருக்கின்றனர். பள்ளி பாடம் சம்பந்தப்பட்ட தேவைகளுக்காக அந்த மாணவர் முதலில் சாட் ஜிபிடியை பயன்படுத்த தொடங்கினார் என்றும் இதனை அடுத்து உணர்வு ரீதியாக அத்துடன் தொடர்பு கொண்டு தினமும் அதனுடன் கலந்துரையாடி நம் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமே இல்லை நாம் ஏன் வாழ வேண்டும் என்ற மனநிலைக்கு சென்று விட்டதாகவும் கூறி இருக்கின்றனர்.
ஜனவரி மாதத்தில் இருந்தே அந்த மாணவர் தற்கொலை செய்து கொள்வதற்கான வழிமுறைகளை கேட்டதாகவும் அதற்கு சாட் ஜிபிடியும் அந்த விவரங்களை வழங்கி இருப்பதாகவும் பெற்றோர் குற்றம் சாட்டியிருக்கின்றனர். இதுபோன்ற செயலிகள் பதின்ம வயதினர் மற்றும் இளைஞர்களின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்க கூடியவை என அந்த பெற்றோர் கூறியுள்ளனர்.
இதனிடையே ஓபன் ஏஐ நிறுவனம் அந்த மாணவனின் இறப்புக்கு வருந்துவதாகவும் தங்களுடைய பாதுகாப்பு தர நிர்ணயங்களை மிகத் தீவிரமாக மாற்றியமைத்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறது . குறிப்பாக பதின்ம வயதினர் பயன்படுத்தும் போதும் பெற்றோருக்கு அந்த கலந்துரையாடலில் ஒரு குறிப்பிட்ட கட்டுப்பாடுகளை வழங்கும் வகையிலும் மாற்றங்களை கொண்டு வர இருப்பதாக கூறி இருக்கிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications