உலகின் முன்னணி மொபைல் போன் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு மத்தியில் பல வருடங்களாக நடக்கும் பேட்டன் திருட்டு வழக்கிற்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பை அளித்துள்ளது.
திருட்டு வழக்கு
ஆப்பிள் நிறுவனத்தின் வெற்றிகரமான பிராண்டான ஐபோன் டிசைனை காப்பி அடித்ததற்காகச் சாம்சங் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர் மேல்முறையீட்டின் மூலம் தற்போது முடிவிற்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.
தீர்ப்பு
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் டிசைனை காப்பி அடித்துச் சாம்சங் நிறுவனம் இதற்குப் போட்டியாகப் பல மொபைல் போன்களைத் தயாரித்துச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளதாகவும், இதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் வர்த்தகம் அதிகளவில் பாதிக்கப்பட்டதாகவும் ஆப்பிள் நிறுவனம் சாம்சங் மீது வழக்குத் தொடுத்தது.
இந்த வழக்குச் செவ்வாய்க்கிழமை அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்தது.
அபராதம்..!
இவ்வழக்கின் விசாரணையில் ஆப்பிள் வெற்றிப்பெற் நிலையில், பேட்டன்களைக் காப்பி அடித்ததற்காக ஆப்பிள் சந்தித்த வர்த்தகப் பாதிப்புக்கு 399 மில்லியன் டாலர் அபராதம் விதித்து அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
8 முறை தோல்வி
இந்த வழக்குக் கீழ் நீதிமன்றங்களில் 8 முறை மேல்முறையீடு செய்யும் சாம்சங் தோற்றுப்போனது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications