மீண்டும் மோடி, வேண்டும் மோடி-ன்னு ஒரு வழியா மோடிக்கு ரெண்டாவது இன்னிங்ஸ் கொடுத்துட்டாய்ங்க நம் நார்த் இந்திய சகோக்கள் மற்றும் டிடிக்கள். என்ன பிரச்னைன்னா... மோடி ஆட்சிக்கு வந்த உடனேயே (இன்னும் பதவி கூட எத்துக்கல) "போலோ ஜெய் ஸ்ரீராம்... போல் சாலே ஜெய் ஸ்ரீ ராம்"-ன்னு ஒரு அப்பாவி இஸ்லாமிய இளைஞனை விரட்டு விரட்டுன்னு விரட்டி இருக்காய்ங்க.
அந்த 25 வயது முகம்மது பர்கத் முடிஞ்ச அளவுக்கு ஓடி இருக்காரு. ஆனா சிக்கிட்டாரு. அடிச்சு துவச்சிட்டாய்ங்க மோடி ஜி கீ சேனா எனப்படுகிற ராம் பக்தாஸ்.
சில ஆண்டுகளுக்கு முன் உத்திரப் பிரதேசத்துல Beef சாப்டவங்கள கொன்னுட்டாய்ங்க நம் பக்தாஸ். ஆனா கேஸ் கூட பதிவாகல அது வெற விஷயம். இப்ப அடி தான பரவாயில்ல விடுங்க. சரி நம் காஸ்ட்லி Beef-க்கு வருவோம்.
துபாய்
உங்களுக்கு ஏதாவது காஸ்ட்லியா, டேஸ்டா, எலைட்டா சாப்பிடணும்-ன்னு தோணுதா..? அப்ப துபாய்ல இருக்குற Salt Bae's Nusr-Et restaurant உணவகத்துக்கு போங்கப்பு. உங்களுக்கான தங்க Beef ரெடியா இருக்கு. ஆனா ஒரு கண்டிஷன் ஒரு ப்ளேட் Beef ஜஸ்ட் 23,999 ரூபீஸ் ஒன்லி..! இந்த தங்க Beef-ஐ ஆங்கிலத்துல Gold Plated Beef Steak என்கிறார்கள்.
தங்க இழைகள்
இது பிரத்யேகமா Beef மேல 24 கேரட் தங்க இழைகளைப் போட்டு சமைக்கிறாய்ங்களாம். இந்த உணவ Nusret Gökçe-ங்குற துருக்கி நாட்டு பாய் தான் சமைக்கிறாராம். நம்ம துருக்கி பாய் சமைக்கிறப்ப உப்பு போடுற ஸ்டைலுக்கே பல நாட்டு அழகிகள் வரிசையில நிக்கிறாய்ங்கப்பு. இப்ப ஆம்பளங்களும் வரிசையில நிக்கிறாய்ங்க. நம்ம உன் குழாய்ல (youtube) பாருங்க, துருக்கி பாயோடு புகழ ஒத்துப்பீங்க. இந்த பாய் தான் நம்ம தங்க Beef வோட மாஸ்டர் செஃப்.
துருக்கி பாய்
நீங்க ஒரு ப்ளேட் தங்க Beef ஆர்டர் பண்ணப் பிறகு தங்க இழைகள்ள வெச்சி சமைச்சி எடுத்த பெரிய Beef துண்டோட நம்ம டேபுளுக்கே வந்துருவாரு நம்ம துருக்கி பாய். நம்ம கண்ணு முன்னாடி தான் எல்லா பீஸையும் கட் பண்ணி, ரம்மியமா தங்க வாசனையோட அடுக்கி வெச்சி, அவர் ஸ்டைல்ல உப்பத் தூவி விடுவாப்புல. வீடியோவைக் காண
மொன்ன டேஸ்டு
இந்த தங்க Beef-ல இருக்குற ஒரு பெரிய நன்மை என்னான்னா... சாப்பிட்டு முடிச்சிட்டு ஒன்ஸ் மோர் கேட்கவே மாட்டீங்க. அந்த அளவுக்கு சாப்பிட்ட உடனேயே வயிறு நெறஞ்சிடுமாம். இந்த தங்க Beef-ஐ, தன்னோட பூர்வீகச் சொத்து பத்தை எல்லாம் வித்து வந்த காசுல சாப்பிட்ட நம்ம பத்திரிகைத் தோழர் ஒருவர் "யாம் உண்ட Beef-லேயே சிறந்த Beef இது தான்"-ன்னு உச்சி முகர்ந்திருக்கார். ஆனா தங்கத்தாலத் தான் இவ்வளவு டேஸ்ட் Beef-ல இறங்குதான்னு தெரியலன்னு நம்மிடம் கேள்வி கேட்டிருக்கார்.
தங்கம் சாப்பிடலாம்
இந்த தங்க Beef-ஐ சாப்பிட்டவர்கள் மற்றும் சப்பிட முடியாத அறிவியல் விஞ்ஞானிகள் என எல்லோருமே Salt Bae's Nusr-Et restaurant-ல் கிடைக்கும் தங்க Beef-ஐ சாப்பிடலாம். அது உடலுக்கு எந்த கேடும் விளைவிக்காது எனச் சொல்லி இருக்கிறார்கள். எப்படி எனக் கேட்டால், "நம்மள தங்க பஸ்பம் சாப்பிடச் சொன்ன முன்னோர்களைக் கேளுங்கள்" என்கிறார்கள் அறிவியலாளர்கள். பொதுவாகவே தங்க உலோகத்தில் இருக்கும் ரசாயனங்களை மனித உடல் ஏற்றுக் கொள்ளுமாம். ஆகையால் சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது எனச் சொல்கிறார்கள்.
6000 ரூபாய்
ஒருவேளை நீங்க துபாய் போய்ட்டீங்க. இந்த துருக்கி பாய் சமைக்கிற தங்க Beef-ஐ சாப்பிட முடியலன்னாக் கூட, மத்த Beef-ஐ ஒரு டேஸ்ட் பாத்துட்டு வாங்கப்பு. நம்ம துருக்கி பாயொட Salt Bae's Nusr-Et restaurant-ல தண்ணி பாட்டில் தவிர, விலைப் பட்டியல்ல கடைசியா இருக்குற Beef-ல ஒரு க்வாட்டர் ப்ளேட் வாங்கணும்னாக் கூட 3 ரெண்டாயிரம் ரூவா நோட்டு வேணுமுங்கோ (6000 ரூபாய்).
உலக ஃபேமஸ்
நம்ம துருக்கி பாயோட Salt Bae's Nusr-Et restaurant, ஏதோ நம்மூர் புளிய மரத்துக் கடை மாதிரி கிடையாதுங்கண்ணா. நம்ம Nusr-Et பாயோட கைப் பக்குவம், புறங்கைய நக்குவோம்-ன்னு... டைட்டானிக் புகழ் லியொனார்டோ டி காப்ரியோ, Free kick மற்றும் Bend it like beckham kick புகழ் டேவிட் பெகம், கச்சா எண்ணெய்யிலேயே கண் விழித்து முகம் கழுவும் துபாய் ராஜ வம்சத்தினர்கள், பிசினஸ் மேன்கள்-ன்னு பலரும் சொல்றாய்ங்கப்பு. அதை விட துபாய் ராஜா Sheikh Mohammed bin Rashid al Maktoum நம்ம துருக்கி பாய் கடை பக்கம் வந்தா "என்ன மாப்ள, போன வாரம் வந்தப்ப கோவில் கொடக்கி ஊர் பக்கம் போய் இருந்த போல" என நலம் விசாரிக்கும் அளவுக்கு தோஸ்துகள்னா பாத்துக்குங்க.
இன்ஸ்டாகிராம்
நம் துருக்கி பாயின் இன்ஸ்டாகிராமுக்கு இந்த தங்க Beef-னால் வேறு எக்ஸ்ட்ரா ஃபோளோயர்கள் வந்து கொண்டிருக்கிறார்களாம். இதுவரை சுமார் 2.19 கோடி பேர் பின் தொடர்கிறார்களாம். அவர் அடித்துக் கொண்டிருக்கும் மேற்படி லூட்டிகளைக் காண இதோ அவரின் இன்ஸ்டாகிராம் பக்கம்...
More From GoodReturns

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!



Click it and Unblock the Notifications