உலக அளவில் தங்கத்தின் மீதான மோகம் குறைந்தபாடில்லை. சாதாரண மக்கள் தொடங்கி பல்வேறு அரசாங்கங்கள் வரை பாதுகாப்பான முதலீட்டாக கருதி தங்கத்தை வாங்கி குவித்து வைக்கின்றனர். இவ்வளவு தங்கமும் எங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. எந்த நாடுகளிடம் அதிக தங்க வளம் இருக்கிறது என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
உலகிலேயே அதிக அளவு தங்கத்தை உற்பத்தி செய்யக்கூடிய அல்லது தங்கத்தை வெட்டி எடுக்க கூடிய முதல் 10 நாடுகளில் சீனா தான் முதலிடத்தில் இருக்கிறது. மிகவும் ஆடம்பரமான ஒரு உலோகமாக தங்கம் பார்க்கப்படுகிறது. இந்த மஞ்சள் உலோகத்தின் மீது மக்களுக்கு இருக்கும் காதல் ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணம் தான் இருக்கிறது. தங்கத்தை வைத்திருப்பது ஒரு நாடு மற்றும் இல்லாமல் ஒரு குடும்பத்திற்கு பெரிய ஸ்டேட்டஸாக கருதப்படுகிறது. தங்கத்தை நாம் நகைகளாகவும் கட்டிகளாகவும் நாணயங்களாகவும் மட்டுமில்லாமல் பல்வேறு கலைப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. எலக்ட்ரிசிட்டி கண்டக்டராகவும் பயன்படுத்தப்படுகிறது .
லேண்ட் ஆஃப் கோல்டு (Land of gold): உலகிலேயே லேண்ட் ஆஃப் கோல்டு என அழைக்கப்படுவது ஒரு நாடு தான். மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவிற்கு அரேபிய நாடுகளை சேர்ந்த வர்த்தகர்கள் தான் லேண்ட் ஆஃப் கோல்டு என்ற பெயரை வழங்கினார்கள். அதாவது கானாவில் அதிகளவு தங்க வளம் இருக்கிறது. இதனை நம்பி தான் அந்த நாட்டின் பொருளாதாரமும் இருக்கிறது. உலகிலேயே அதிக அளவு பூமிக்கு அடியில் தங்கம் கொண்ட நாடாக கானா பார்க்கப்படுவதாலேயே இந்த பெயர் வழங்கப்பட்டது.

ஜப்பானை சேர்ந்த சாடோ என்ற தீவும் உலக அளவில் லேண்ட் ஆஃப் கோல்ட் என அறியப்படுகிறது. ஈடோ காலகட்டத்தில் ஜப்பானிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட 50 சதவீதத்திற்கும் மேலான தங்கம் இந்த ஒரு தீவில் இருந்து தான் எடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல இந்தோனேஷியாவின் ஸ்ரீவிஜயா என்ற அழிந்து போன நகரம் ஒரு காலத்தில் தங்கத்தீவு என அறியப்பட்டது. ஏனெனில் அந்த தீவில் அளவுக்கு அதிகமான தங்கம் மூலப் பொருளாக இருந்தது.
உலகிலேயே எந்த நாடு அதிக அளவு தங்கத்தை வெட்டி எடுக்கிறது என்பது குறித்து தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம் . தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள தரவுகளின் படி சீனா உலகிலேயே அதிக அளவு தங்கத்தை உற்பத்தி செய்யும் ஒரு நாடாக பார்க்கப்படுகிறது. சீனா 380 மெட்ரிக் டன்கள் தங்கத்தை உற்பத்தி செய்து இருக்கிறது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது ரஷ்யா. மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியா , நான்காவது இடத்தில் கனடா , ஐந்தாவது இடத்தில் அமெரிக்கா ஆகிய நாடுகளும் இருக்கின்றன.இந்த பட்டியலில் கானா ஆறாவது இடத்தை பிடித்திருக்கிறது . இந்தோனேஷியா ஏழாவது இடத்தையும் பெரு எட்டாவது இடத்தையும், மெக்சிகோ ஒன்பதாவது இடத்தையும் உஸ்பெகிஸ்தான் பத்தாவது இடத்தையும் பிடித்திருக்கின்றன.
சீனா: 2024 ஆம் ஆண்டு வெட்டி எடுக்கப்பட்ட தங்கத்தின் அடிப்படையில் சீனா தான் முதலிடத்தில் உள்ளது. இங்கே விஜி மைனிங் மற்றும் சீனா கோல்ட் ரிசோர்சஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இன்னர் மங்கோலியா மற்றும் ஜியான்ஸி ஆகிய பகுதிகளில் சுரங்கங்களை அமைத்து பெருமளவு தங்கத்தை வெட்டி எடுக்கின்றன இந்த இரண்டுமே சீன அரசுக்கு சொந்தமான நிறுவன ங்கள். சீனா தான் உலகிலேயே அதிகளவு தங்கத்தை நுகரும் ஒரு நாடாகவும் இருக்கிறது அதிக கையிருப்பு வைத்திருக்கும் நாடாகவும் இருக்கிறது.
ரஷ்யா: 2024 ஆம் ஆண்டில் ரஷ்யாவை பொறுத்தவரை 321.8 மெட்ரிக் டன் தங்கத்தை வெட்டி எடுத்திருக்கிறது. 2017 ஆம் ஆண்டிலிருந்து ரஷ்யாவில் தங்க உற்பத்தி அதிகரித்து இருக்கிறது. பல்வேறு நாடுகளுடன் மோதலில் இருந்தாலும் உலக அளவில் தங்கம் உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. சுமார் 12,000 மெட்ரிக் டன்கள் தங்கத்தை ரஷ்யா வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. சைபீரியா ஒலிம்பியாடா பகுதியில் தான் ரஷ்யா அதிகளவு தங்கத்தை எடுக்கிறது.
ஆஸ்திரேலியா: கடந்த 2024 ஆம் ஆண்டில் 290 மெட்ரிக் டன்கள் தங்கத்தை தோண்டி எடுத்து இருக்கிறது. இது 2023 ஆம் ஆண்டுஅன் ஒப்பிடும் போது சற்றே அதிகமாகும். இந்த நாடு 12,000 மெட்ரிக் டன் தங்கத்தை கொண்டிருக்கிறது.
கனடா: நீண்ட காலமாகவே தங்கம் உற்பத்தியில் வரலாறு கொண்ட நாடாக கனடா இருக்கிறது . 2024ஆம் ஆண்டில் 200 மெட்ரிக் டன் தங்கத்தை உற்பத்தி செய்துள்ளது.
அமெரிக்கா: 2023 ஆம் ஆண்டில் 167 மெட்ரிக் டன் தங்கத்தை உற்பத்தி செய்து இருக்கிறது. அதிகபட்சமாக நெவாடா மாநிலத்தின் தான் 73 சதவீத தங்கம் உற்பத்தி செய்யப்பட்டு இருக்கிறது. பல்வேறு நிறுவனங்களும் அமெரிக்காவில் தங்கத்தை தோண்டி எடுத்து உலோகமாக மாற்றும் பணிகளில் ஈடுபட்டிருக்கின்றன.

கானா: லேண்ட் ஆஃப் கோல்டு என ஒரு காலத்தில் அறியப்பட்ட கானா 2024 ஆம் ஆண்டு 130 மெட்ரிக் டன்கள் தங்கத்தை உற்பத்தி செய்து இருக்கிறது. இது ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணம் தான் இருக்கிறது. கானா நாட்டு பொருளாதாரத்தில் இந்த தங்கம் உற்பத்தி தான் மிகப்பெரிய அங்கம் வகிக்கிறது. ஏனெனில் கானாவின் பெரும்பாலான பொருளாதாரம் தங்கத்தை வெட்டி எடுத்து உலோகமாக மாற்றி ஏற்றுமதி செய்வதன் மூலம் தான் கிடைக்கிறது. ஆப்பிரிக்க நாடுகளிலேயே அதிக அளவு தங்கம் கொண்ட நாடு என்ற பெருமை கானாவுக்கு உண்டு.
இந்தோனேசியா: உலக அளவில் தங்கச் சுரங்க துறையில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு நாடாக இந்தோனேசியா இருக்கிறது. இங்கே 2024 ஆம் ஆண்டில் 132.5 மெட்ரிக் டன்கள் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டிருக்கிறது.
பெரு: தென் அமெரிக்கா நாடுகளில் அதிக தங்கம் கொண்ட ஒரு நாடாக பெரு இருக்கிறது. நாட்டின் நிறைய இடங்களில் சுரங்கங்கள் அமைப்பு தங்கம் வெட்டி எடுக்கப்படுகிறது.
மெக்சிகோ: தங்கம் உற்பத்தியில் முன்னிலையில் இருக்கக்கூடிய ஒரு நாடு. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அங்கே தங்கம் வெட்டி எடுக்கப்படுவது குறைந்திருக்கிறது .2024 ஆம் ஆண்டில் இங்கே 126.6 மெட்ரிக் டன் தங்கம் எடுக்கப்பட்டுள்ளது.
உஸ்பெகிஸ்தான்: இந்த பட்டியலில் பத்தாவது இடத்தில் இருப்பது உஸ்பெகிஸ்தான். 2024 ஆம் ஆண்டில் இந்த நாட்டில் 120 மெட்ரிக் டன்கள் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டிருக்கிறது. 2023 ஆம் ஆண்டு இது 100 மெட்ரிக் டன்னாக இருந்தது.
More From GoodReturns

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

தங்க நகை அடகு வச்சி கடன் வாங்க போறீங்களா? முதல்ல இத படிங்க!! இல்லனா அதிக வட்டி செலுத்தனும்!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்! சென்னை & கோவையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

கோயம்புத்தூர்: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. இனி தொடர்ந்து உயருமா..?

தங்கம் விலை மதுரை: இன்று அதிரடி உயர்வு! நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்த சர்வதேச காரணங்கள்..!

தங்கம், வெள்ளி விலை 3-8% சரியும் அபாயம்.. ஈரான் - அமெரிக்கா போருக்கு மத்தியில் திடீர் திருப்பம்..!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!



Click it and Unblock the Notifications