பஞ்சாப் மற்றும் ஹரியானா இடையேயான ஷம்பு மற்றும் கானௌரி எல்லைப் பகுதியில் "டெல்லி சலோ" போராட்டத்தின் ஒரு பகுதியாக ஆயிரக்கணக்கான இந்திய விவசாயிகள் முகாமிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இது ஆளும் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மட்டுமின்றி ஐரோப்பிய யூனியன் நாடுகளிலும் விவசாயிகள் இதுபோல் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏன்..? எதற்காக..?

பல மாதங்களாக, தங்கள் நிலைமையில் எந்த மாற்றமும் இல்லாததால் ஏமாற்றத்தில் விவசாயிகளின் எதிர்ப்பு அலைகளை ஐரோப்பா கண்டுள்ளது. அவர்கள் தெருக்களில் இறங்கி, சாலைகளை அடைத்து, டிராக்டர்களுடன் பிரான்சின் தலைநகரை கூட சுற்றி வளைத்துள்ளனர்.
இந்தியாவில் விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் சட்டப்பூர்வ உத்தரவாதத்தை கோரிக்கை உடன் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனுடன் பல்வேறு கோரிக்கைகளை இந்திய விவசாயிங்கள் முன்வைத்துள்ளனர்.
சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துதல், ஓய்வூதியம், மின் கட்டண உயர்வை ரத்து செய்தல், போலீஸ் வழக்குகளை வாபஸ் பெறுதல், உத்தரப் பிரதேசத்தில் 2021 லக்கிம்பூர் கெரி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு "நீதி", நிலம் கையகப்படுத்துதல் சட்டம் அமல்படுத்துதல், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு போன்ற கோரிக்கைகளை முன்வைத்தும், 2020-21ல் மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் போது இறந்த விவசாயிகளின் மற்ற கோரிக்கைகளை நிறைவேற்றக் கோருவதும் இந்திய விவசாயிகளின் கோரிக்கைகள் ஆகும். இது இந்திய விவசாயிகளின் நிலைமை.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் பிப்ரவரி 29 வரை தங்கள் 'டெல்லி சலோ' பேரணியை நிறுத்துவதாக அறிவித்தனர், அதுவரையில் பஞ்சாப்-ஹரியானா எல்லையிலேயே இருக்கவும் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
சம்யுக்தா கிசான் மோர்ச்சா (அரசியல் சாராதது) மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா (கேஎம்எம்) ஆகிய இரண்டு விவசாயிகளின் அமைப்புகளும் ஷம்பு மற்றும் கானுவாரி எல்லையில் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வருகின்றது. அடுத்த நடவடிக்கை குறித்து பிப்ரவரி 29 அன்று முடிவு செய்யப்படும் என்றும் அறிவித்தனர்.
ஐரோப்பாவில் உள்ள விவசாயிகளின் நிலைமை இதைவிட மோசமாக உள்ளது. அங்கு விவசாயிகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று, அவர்கள் செலவழிப்பதற்கும் அவர்கள் சம்பாதிப்பதற்கும் உள்ள இடைவெளி.
குறிப்பாக 2022ல் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த பிறகு, எரிசக்தி, உரம் மற்றும் போக்குவரத்து செலவீனங்கள் அதிகரித்துள்ளதால் அவர்களின் பல செலவுகள் அதிகரித்துள்ளன. இதற்கிடையில், அரசுகளும் சில்லறை விற்பனையாளர்களும் நுகர்வோருக்கு மலிவு விலையில் உணவை வைக்க முயற்சிப்பதால், விளைபொருள் விலைகள் குறைந்துள்ளன.
யூரோஸ்டாட்டின் கருத்துப்படி, சராசரி பண்ணை விலை என்பது அந்நாட்டு விவசாயிகள் தங்கள் தயாரிப்புகளுக்குக் கிடைக்கும் விலையாகும். 2022 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுக்கும் 2021 ஆம் ஆண்டின் அதே காலகட்டத்துக்கும் இடையில் கிட்டத்தட்ட 9% குறைந்துள்ளது. ஆலிவ் எண்ணெய் போன்ற சில பொருட்கள் மட்டுமே விலை அதிகரித்தன.
மலிவான இறக்குமதி அச்சுறுத்தல் விவசாயிகளுக்கு விரக்தி அளிக்கிறது. இது நியாயமற்றது. விவசாயிகளின் நலனுக்குத் தீங்கு விளைவிக்கும்.
போலந்து, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா போன்ற ஐரோப்பாவின் சில நாடுகளில், ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக சலுகைகளால் பயனடைந்த உக்ரைனில் இருந்து மலிவான விளைபொருட்களின் வருகைக்கு விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேனிய ஏற்றுமதியில் சில வரம்புகளை விதித்தது. ஆனால் அவை விவசாயிகளை திருப்திப்படுத்த போதுமானதாக இல்லை.
பிரான்ஸ் போன்ற ஐரோப்பாவின் பிற பகுதிகளில், தென் அமெரிக்க கூட்டான மெர்கோசூர் போன்ற பிற பகுதிகளுடனான வர்த்தக ஒப்பந்தங்களின் தாக்கம் குறித்து விவசாயிகள் கவலைப்படுகின்றனர்.
இந்த ஒப்பந்தங்கள், சர்க்கரை, தானியம் மற்றும் இறைச்சி போன்ற ஐரோப்பிய ஒன்றிய தயாரிப்புகளின் அதே தரத்தை பூர்த்தி செய்யாத தயாரிப்புகள் தங்களை பாதிக்கும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.
காலநிலை மாற்றத்தின் விளைவுகளை விவசாயிகளும் உணர்கிறார்கள். இது அவர்களின் தொழிலை மிகவும் கடினமாகவும் கணிக்க முடியாததாகவும் ஆக்குகிறது.
வறட்சி, வெள்ளம் மற்றும் காட்டுத்தீ போன்ற தீவிர நிகழ்வுகள் பல நாடுகளில் பயிர்கள் மற்றும் கால்நடைகளை சேதப்படுத்தியுள்ளன. எடுத்துக்காட்டாக, ஸ்பெயினில், சில நீர்த்தேக்கங்கள் 4% மட்டுமே நிரம்பியுள்ளன., கிரேக்கத்தில், 2023 இல் ஆண்டு விவசாய வருமானம் சுமார் 20% தீயினால் அழித்தது.
தெற்கு ஐரோப்பாவில் விவசாயிகள் இதுவரை அதிகம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, ஆனால் அவர்களின் அரசுகள் தண்ணீர் கட்டுப்பாடுகளை அல்லது நெருக்கடியை சமாளிக்க மற்ற நடவடிக்கைகளை அமல்படுத்தினால் அது மாறக்கூடும்.
விவசாயிகள் ஐரோப்பிய ஒன்றியத்தால் அதிக ஒழுங்குபடுத்தப்படுவதாகவும் புகார் கூறுகின்றனர். இது தங்களுக்கு சுமையாகவும் போலியான விதிகள் மற்றும் தரங்களை விதிக்கிறது.
மலிவான உணவை வழங்குதல் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது போன்ற முரண்பாடான கோரிக்கைகளுக்கு இடையில் தாங்கள் சிக்கியிருப்பதாக அவர்கள் உணர்கிறார்கள்.
ஐரோப்பிய யூனியனின் பொதுவான விவசாயக் கொள்கை, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு €55bn மானியமாக வழங்குகிறது, பாரம்பரியமாக பெரிய அளவிலான மற்றும் தீவிர விவசாயத்தை ஆதரிக்கிறது. 2005 ஆம் ஆண்டிலிருந்து பண்ணைகளின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமாகக் குறைந்துள்ளது.
பல சிறிய மற்றும் நடுத்தரப் பண்ணைகள் குறைந்த லாபம் கொண்ட சந்தையில் உயிர்பிழைக்கப் போராடுகின்றன. அதே சமயம் பல பெரிய பண்ணைகள் அதிகக் கடனில் சிக்கித் தவிக்கின்றன. ஐரோப்பிய யூனியன் சமீபத்தில் "ஃபார்ம் டு ஃபோர்க்" எனப்படும் புதிய உத்தியை கையாண்டது.
இது 2050 ஆம் ஆண்டுக்குள் யூனியனை கார்பன்-நியூட்ரல் ஆக்குவதற்கான அதன் லட்சிய பசுமை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். இந்த உத்தி விவசாயத்தை இன்னும் நிலையானதாகவும் ஆரோக்கியமானதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பூச்சிக்கொல்லிகளை 50%, உரங்களை 20% குறைத்து, இயற்கை விவசாயத்தை 2030-க்குள் 25% நிலத்தில் அதிகரிக்க வேண்டும். இதுதான் அதன் நோக்கமாகும்.
இருந்தாலும், பல விவசாயிகள் தங்கள் உற்பத்தித்திறன் மற்றும் போட்டித்திறன் மீது இந்த இலக்குகளின் தாக்கம் குறித்து சந்தேகம் மற்றும் கவலையுடன் உள்ளனர். மாற்றத்தை ஏற்படுத்த தங்களுக்கு அதிக ஆதரவும் ஊக்கமும் தேவை என்றும், உணவுப் பாதுகாப்பு மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான அவர்களின் பங்களிப்புக்காக தாங்கள் தண்டிக்கப்படக் கூடாது என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.
Story Written by : I. Jayachandran
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications