சீனா: உலக அளவில் தங்கத்தின் விலை வரலாற காணாத உச்சங்களை எட்டி வருகிறது . நாள்தோறும் இந்திய சந்தையிலும் சரி உலக சந்தையிலும் சரி தங்கத்தின் விலை உயர்ந்துவிட்டது என தொடர்ச்சியாக நாம் செய்திகளில் பார்க்கிறோம்.
தங்கம் விலை உயர்வு: இந்தியாவை பொறுத்தவரை தங்கத்தின் விலை உயர்வு நேரடியாக சாமானிய மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில் தங்க நகைகள் என்பது நம்முடைய கலாச்சாரத்தோடும் பாரம்பரியத்தோடும் ஒன்று கலந்ததாக இருக்கிறது. தங்கத்தின் விலை உயர்ந்ததால் சாமானிய மக்களால் வாங்க முடியாத பொருளாக தங்கம் படிப்படியாக மாறி வருகிறது .

வெளிவராத உண்மை: தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்ன என கேட்டால் அமெரிக்க பொருளாதார மந்த நிலையில் இருப்பது, அதிபர் டிரம்ப் வரிவிதிப்பு நடவடிக்கைகள் , புவி சார் மோதல்கள் என பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த விலை உயர்வுக்கு பின்னால் இருப்பது சீனா என்பது தான் வெளிவராத ஒரு உண்மை.
சீனா அரசு: சீனா அரசு தொடர்ச்சியாக தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சீனா 60 ஆயிரம் அவுன்ஸ் தங்கத்தை வாங்கி இருக்கிறதாம். அந்த நாட்டில் இருக்கக்கூடிய தங்கத்தின் மொத்த மதிப்பு 254 பில்லியன் டாலர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் தங்கம் வாங்க உத்தரவு: சீன அரசு தன்னுடைய கஜானாவை மட்டும் தங்கம் வாங்கி நிரப்பவில்லை பொதுமக்களும் அதிகம் தங்கம் வாங்க வேண்டும் என தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகிறது.2023 ஆம் ஆண்டு இறுதியில் சீன அரசாங்கத்தின் கைவசம் இருந்த தங்கத்தின் மதிப்பு 2,300 டன் இது 2024 ஆம் ஆண்டு பாதியிலேயே 2,664 டன்னாக மாறிவிட்டது. அப்படி என்றால் தற்போது எத்தனை டன்கள் வாங்கி இருக்கும் என கணக்கிட்டு பார்த்துக் கொள்ளுங்கள். இது அறிவிக்கப்பட்ட அளவு தான், சீனா கள்ளச்சந்தையிலும் அதிகமாக தங்கம் வாங்குகிறதாம்.

சர்வதேச அரசியல்: சீனா இப்படி அதிகமாக தங்கம் வாங்குவதற்கு பின்னால் மிகப்பெரிய ஒரு சர்வதேச அரசியல் இருக்கிறது. உலக அளவில் மதிப்பு மிக்க ஒரு நாணயமாக அமெரிக்க டாலர் இருக்கிறது. சர்வதேச சந்தையில் நாம் எந்த பொருளை வாங்கினாலும் அதற்கு டாலரை பயன்படுத்துகிறோம். 1 அமெரிக்க டாலரை வாங்க நாம் 88 ரூபாயை கொடுக்க வேண்டும்.
மதிப்புமிக்க டாலர்: இதனால் தான் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஏதேனும் ஒரு நாட்டை பழிவாங்க வேண்டும் என நினைத்தால் முதலில் டாலரில் தான் கையை வைக்கும் . அதாவது அந்த நாட்டில் டாலர்களில் இருக்கும் பணத்தை முடக்கிவிடும். இது அந்த நாடுகளை பொருளாதார ரீதியாக மிகப்பெரிய அளவில் பாதிக்கும். ரஷ்யா உக்ரைன் போரின் போது ரஷ்யா டாலர்களில் பணத்தை அமெரிக்காவும் மற்றும் மேற்கத்திய நாடுகளும் முடக்கி விட்டன .இதனால் பொருளாதார ரீதியாக ரஷ்யா சற்றே தடுமாறியது . இதிலிருந்து தான் சீனா பாடம் கற்றுக் கொண்டது.
தங்கத்தை தொட கூட முடியாது: அதாவது டாலராக நாம் கையிருப்பு வைத்திருந்தால் அமெரிக்கா போன்ற நாடுகள் அதனை முடக்கும்போது நம்மால் ஒன்றும் செய்ய முடியாது ஆனால் தங்கமாக வாங்கி வைத்துக் கொண்டால் நம்மை யாராலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது என்பதுதான் சீனா கற்றுக் கொண்ட பாடம். சீனா இப்படி அதிக அளவில் தங்கத்தை வாங்கி தங்கத்திற்கான டிமாண்ட் அதிகரிக்க செய்து உலக சந்தையில் டாலரின் மதிப்பை சரி செய்து வருகிறது.
தங்கம் பயன்படுத்தி வர்த்தகம்: சீனாவை போல மற்ற நாடுகளும் கூட தற்போது தங்கத்தை வாங்கி வைக்க தொடங்கி விட்டன. உலக அளவில் இனி தங்கம் தான் எதிர்காலமாக இருக்கப் போகிறது என்பதே சீனாவின் இந்த செயலுக்கு காரணம். எதிர்காலத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளோடு ஏதேனும் வர்த்தக மோதலோ அல்லது வேறு விதமான மோதல்களோ ஏற்படும் போது தங்களுக்கு பொருளாதார ரீதியில் எந்த ஒரு சிக்கலும் வரக்கூடாது என்பதற்காகவே அதிகமாக தங்கத்தை வாங்கி வைக்கிறது.
தங்கம் விலை குறையாதா: இவ்வாறு இருக்கும் போது மற்ற நாடுகளுடனான வர்த்தகத்தில் டாலருக்கு பதிலாக தங்கத்தை பயன்படுத்தி வர்த்தகம் செய்து கொள்ள முடியும். எனவே தங்கம் விலை உயர்வு என்பது சர்வதேச அரசியல். சீனா தங்கம் வாங்குவதை நிறுத்தினால் தான் தங்கம் விலை குறையும். ஆனால் தற்போதைக்கு அதற்கான அறிகுறிகள் கூட தென்படவில்லை.
More From GoodReturns

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

டிரம்ப் கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்! ஈரானுக்கு 48 மணிநேர கெடு- நாளைக்கு தங்கம் பங்குச்சந்தை என்னவாகுமோ?

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?



Click it and Unblock the Notifications