டெல்லி: அமெரிக்க பொருளாதாரத் தடை பற்றி நிறைய செய்திகளைப் படித்திருக்கலாம். அமெரிக்கா சொன்னவைகளை ஈரான் கேட்கவில்லை என்கிற ஓரே காரணத்துக்காக, ஈரான் (Iran) மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை கடந்த நவம்பர் 04, 2018-ல் விதித்தது அமெரிக்கா.
எந்த நாடாவது ஈரான் உடன் வர்த்தக ரீதியாக தொடர்பு வைத்துக் கொண்டால், அந்த நாட்டின் மீதும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என மிரட்டிக் கொண்டிருக்கிறது.
நவம்பர் 04, 2018 அன்று ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடை நடைமுறைக்கு வந்த உடன், 6 மாத காலம் பொருளாதாரத் தடையை ஒத்திப் போட, நீட்டிப்பு கேட்டு இந்தியா உட்பட எட்டு நாடுகள் அமெரிக்காவிடம் பேசின. பேச்சு வார்த்தை பலன் கொடுத்தது. மே 02, 2019 வரை ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்க அனுமதி கொடுத்தது அமெரிக்கா.
மே 02, 2019 முதல்
அமெரிக்கா கொடுத்த நீட்டிப்பு கடந்த மே 02, 2019 உடன் முடிவடைந்த நிலையில் இந்தியா மேலும் ஆறு மாதம் நீட்டிப்பு கேட்டது. அமெரிக்கா கொடுக்கவில்லை. அதோடு 17-வது மக்களவைத் தேர்தல் வேறு நடந்து கொண்டிருந்த காரணத்தால் இந்திய அரசும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. ஆனால் இப்போது புதிதாக பொறுப்பேற்க இருக்கும் மோடி அரசு ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்க படு ஆர்வமாக இருக்கிறது.
பேச்சு வார்த்தை
மோடி தலைமையிலான அரசு மீண்டும் முறையாக பொறுப்பேற்ற உடன், முதல் வேலையாக ஈரான் உடன் அமர்ந்து இந்த கச்சா எண்ணெய்ப் பிரச்னை தொடர்பாக பேச இருக்கிறார்களாம். ஈரான் உடன் பேச்சு வார்த்தை நடத்த இருக்கும் அதே வேளையில், ஈரானிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய் அளவைக் குறைத்துக் கொள்ளப் போவதாக, உறுதியான செய்திகள், மத்திய அரசு வட்டாரங்களில் இருந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
ஈரான் வங்கிக் கிளை
ஈரான் உடன் வர்த்தக ரீதியாக தொடர்பு வைத்துக் கொண்டால், ஈரானிடம் வாங்கும் பொருட்களுக்கான தொகையை ஈரானின் பசர்கத் வங்கி (Pasargad Bank)-ல் இந்தியா டெபாசிட் செய்ய இருக்கிறதாம். அதற்காக, மும்பையில் பசர்கத் வங்கி, தன் கிளையைத் தொடங்கிக் கொள்ள, மத்திய ரிசர்வ் வங்கி அனுமதி கொடுத்திருக்கிறதாம். ஈரானிய வங்கியில் கச்சா எண்ணெய்க்கான இந்திய ரூபாயை டெபாசிட் செய்த பின் ஈரான் அரசு அதை எப்படி பயன்படுத்தப் போகிறது என முடிவு செய்து கொள்ளுமாம். ஏற்கனவே "ட்ரம்பு, உங்க டாலர் இல்லாம ஈரான் டீல முடிக்கிறேன்" எனக் கங்கணம் கட்டிக் கொண்டிருந்த மோடி இந்த முறை ஆட்சிக்கு வந்த உடனேயே அதைச் செய்தும் விட்டார்.
பண்டமாற்று முறை
கடந்த 2013 பொருளாதாரத் தடை சமயங்களிலும் சரி, கடந்த 2018 நவம்பர் 04-க்குப் பிறகான கச்சா எண்ணெய் வர்த்தகத்திலும் சரி... ஈரானுக்கு, கூடுமான வரை இந்திய ரூபாயிலேயே கச்சா எண்ணெய்க்கான பணத்தைக் கொடுத்திருக்கிறது இந்திய அரசு. அதற்கு மேல் பண்டமாற்று முறையில், கச்சா எண்ணெய்யைக்குத் தர வேண்டிய பணத்துக்கு பதிலாக ஈரான் அரசுக்குத் தேவையான உணவுப் பொருட்கள், இறைச்சி போன்றவைகளையும் கொடுத்திருக்கிறது இந்திய அரசு.
இன்ஷூரன்ஸ்
இப்போது ஈரானும் சரி, இந்தியாவும் சரி கச்சா எண்ணெய் வியாபாரத்தில் ஈடுபடப் போவதை உறுதி செய்து விட்டார்கள். ஆனால் ஈரானில் இருந்து கடல் வழியாக இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய்க்கு இன்ஷூரன்ஸ் கொடுக்கத் தான் ஆள் இல்லாமல் இந்தியா அல்லாடிக் கொண்டிருக்கிறதாம். அமெரிக்காவின் பகை, சர்வதேச அழுத்தம், தீவிரவாத அச்சுறுத்தல் போன்ற காரணங்களால் எந்த இன்ஷூரன்ஸ் நிறுவனமும் இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் கப்பலுக்கு இன்ஷூரன்ஸ் கொடுக்க பயப்படுகிறார்களாம். ஈரானும், இன்ஷூரன்ஸ் எல்லாம் இந்தியாவின் பொறுப்பு என கைகழுவி விட்டார்களாம்.
இந்திய கச்சா எண்ணெய்
இந்தியா, தன் மொத்த கச்சா எண்ணெய்த் தேவையில் 80 சதவிகிதத்துக்கு மேல் இறக்குமதி தான் செய்கிறது. அதில் சவுதி அரேபியாவும், ஈராக்கும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துக் கொள்கின்றன. அதற்கு அடுத்து, இந்தியாவுக்கு, அதிக எண்ணெய் சப்ளை செய்யும் நாடு என்றால் அது ஈரான் தான். அதனால் தான் ஈரானிடம் இருந்து முழுமையாக கச்சா எண்ணெய் சப்ளையை நிறுத்திக் கொள்ள முடியாமல் தவிக்கிறது இந்தியா. அதோடு ஈரான் உடனான ராஜ தந்திர அரசியல் உறவுகளும் ஒரு முக்கிய காரணம் என்கிறார்கள் அதிகாரிகள்.
மோடி பேச்சு
கடந்த 2014-ல் பதவிக்கு வந்த மோடி, இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதித் தேவையை பெரிய அளவில் குறைப்பேன் எனச் சொல்லி இருந்தார். ஆனால் செய்ய முடியவில்லை. அதோடு உள் நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தியும் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இந்தியாவில் 2014 - 15 நிதி ஆண்டில் 37.5 மில்லியன் டன் உற்பத்தியான கச்சா எண்ணெய், 2017 - 18-ல் 35.7 மில்லியன் டன் மட்டுமே உற்பத்தியானது.
அதிகரித்த ஏற்றுமதி
இந்தியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்ததற்கு நேர் மாறாக, இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரித்திருக்கிறது. கடந்த 2015 - 16-ம் ஆண்டில் 202.85 மில்லியன் டன்னாக இருந்த கச்சா எண்ணெய் இறக்குமதி 2017 - 18-ல் 217.10 மில்லியன் டன்னாக அதிகரித்திருக்கிறது. இதை நாம் சொல்லவில்லை. மத்திய அரசின் பெட்ரோலிய அமைச்சகமே தன் அறிக்கையில் சொல்கிறது.
அமெரிக்க எதிரொலி
மோடியோ ஆமாங்க, இந்தியா, ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கத் தான் போகுது, என்ன இப்ப என அசால்டாகச் சொல்கிறார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும், "இந்தியா ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்கினால், இந்தியா மீதும் பொருளாதாரத் தடை விதிப்போம்" என கேசுவல் ஸ்டேட்மெண்ட் கொடுத்திருக்கிறார்.
எது எப்படியோ, பெரியண்ணன் அமெரிக்காவின் கோபத்துக்கு ஆளாகி இந்தியாவின் பொருளாதாரம், பெரிய அளவில் அடி வாங்காமல் எது செய்தாலும் நலமே. மோடிஜி கொஞ்சம் பாத்து பண்ணுங்க.
More From GoodReturns

ஈரான் போர்: மூக்கறுபட்ட பாகிஸ்தான்..!! அப்போ டிரம்ப் சொன்னது என்ன ஆச்சு?

ஈரான்-க்கு அமெரிக்கா, இஸ்ரேல் விட பெரிய ஆபத்து இதுதான்.. ஈரான் மக்கள் பரிதவிக்கும் நிலை வரலாம்..!!

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

இண்டர்நெட் முதல் சமையல் எண்ணெய் வரை: ஈரான் போரால் அடுத்தடுத்து கிளம்பும் பூதம்!!

திடீரென பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய Shell நிறுவனம்..!! வாகன ஓட்டிகளே கவனம்..!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

சிலிண்டர் விலை: 3 மாதங்களில் இல்லாத விலை உயர்வு..!! எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பால் அதிர்ச்சி..!!

மீண்டும் மண்ணெண்ணெய்..!! ஈரான் போர் நீடிப்பதால் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!!

மருந்து நிறுவனங்களுக்கு செக்.. உலோக இறக்குமதிக்கும் லாக்.. மீண்டும் டிரம்ப் ஆடுபுலி ஆட்டம்?

Fact check:மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா டிரம்ப்? #Trump Dead ஹேஷ்டேக் உருவானது எப்படி?

சீன CCTV கேமராக்களுக்கு மொத்தமாக செக்.. மத்திய அரசின் புதிய முடிவு..!!



Click it and Unblock the Notifications