லாபத்தை அள்ளித்தரும் 8 முதலீட்டுத் திட்டங்கள்..!

சென்னை: பொதுவாகச் சிக்கனமான முதலீட்டாளர்கள் பெரும்பாலும் முதலீட்டு வழிகள் வளர்ச்சியைக் கொண்டிருக்கிறதா என்பதைப் பார்க்கும் போது, அவை பாதுகாப்பானவையா என்பதையும் கவனிக்கின்றனர். இதனால் இவர்களது முதலீடு பாதுகாப்பாகவும், அதிக லாபம் ஈட்டித் தரக்கூடியதாகவும் இருக்கிறது.

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள்
டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

இப்படி நாம் அனைத்து இடங்களிலும் திட்டங்களையும் ஆராய்ந்து முதலீடு செய்ய முடியாது. எனவே இந்தியாவில் புழக்கத்தில் உள்ள அதிக லாபம் தரும் பாதுகாப்பான முதலீட்டு திட்டங்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படியுங்கள்..

பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்ட்

பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்ட்

பங்குகள் மற்றும் அவற்றைச் சார்ந்த பரஸ்பர நிதி போன்ற அபாயம் நிறைந்த முதலீடுகள் அதிக வருவாயைத் தரக்கூடியது போலத் தோன்றினாலும் அவை பாதுகாப்பான ஒன்று அல்ல என்பதை முதலீட்டாளர்கள் உணர வேண்டும்.

இது போன்ற முதலீடுகளைப் பரிசீலிக்கும் முன் நாம் கருத்தில் கொள்ளவேண்டிய சில விஷயங்கள் உங்களுக்காக இதோ:

 

முதலீட்டு வாய்ப்புக்கள்

முதலீட்டு வாய்ப்புக்கள்

முதலீடு செய்வதற்கு முன் ஒருவர், முதலீடு செய்வதற்கான பல தரப்பட்ட வாய்ப்புகளைக் கண்டறிய வேண்டும். அது முதலீட்டில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பெரும்பாலான முதலீட்டு வழிகளில் முதலீட்டு வருவாய் அந்த முதலீட்டுக் காலத்தைப் பொறுத்து அமைகிறது.

நெகிழ்வுத்தன்மை

நெகிழ்வுத்தன்மை

நம்முடைய முதலீடு நமக்குத் தேவையான தருணத்தில் அதை உடனடியாகப் பணமாக மாற்றக்கூடிய நெகிழ்வுத்தன்மை கொண்டதாக இருக்கவேண்டியது அவசியம்.

நீண்டகால முதலீட்டை விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இது முக்கியமான காரணியல்ல, ஆனால் முதலீட்டுக் காலம் குறைவாக உள்ள திட்டத்தை நீங்கள் தேர்ந்தெடுக்கும் போது நீங்கள் நெகிழ்வுத்தன்மையை (Liquidity) கண்டிப்பாகக் கவணிக்க வேண்டும்.

 

வரிச்சலுகைகள்

வரிச்சலுகைகள்

முதலீட்டாளர்கள் எப்போதும் ஒரு முதலீட்டைத் தேர்வு செய்யுமுன் அதன் மொத்த மற்றும் நிகர வருவாயினை நன்கு ஆராய்ந்து அதிலுள்ள வரி செலுத்தும் சூழல்களைக் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம்.

இப்படிப் பல தரப்பட்ட காரணிகளைக் கவணிக்க வேண்டி நிலையில் உள்ள உங்களுக்குப் பாதுகாப்பான மற்றும் அதிக லாபம் தருக்கூடிய சிறந்த முதலீட்டுத் திட்டங்களைப் பற்றிய விபரங்களைத் தொகுத்துள்ளோம்.

இதோ உங்களுக்கான எட்டு பாதுகாப்பான முதலீட்டு வழிமுறைகள்:

 

வங்கி நிரந்தர வைப்புகள்

வங்கி நிரந்தர வைப்புகள்

நிரந்தர வைப்புகள் பல்வேறு வங்கிகளைப் பொறுத்து 7.5 முதல் 9 சதவிகிதம் வரை வட்டி தருவதால் இவை பெரும்பாலானவர்களால் விரும்பப்படுகின்றன.

இவற்றில் வரும் வருவாய் ஒருவருடைய தனிப்பட்ட வரி விதிப்பு நிலைகளைப் பொறுத்து வரிகளுக்குட்பட்டது. அதாவது பத்தாயிரம் ரூபாய்க்கும் அதிகமான வங்கி வட்டி வருவாயானது வரிவிதிப்பிற்குட்பட்டது.

வரி செலுத்தத் தேவையில்லாதவர்கள் படிவம் 15G அல்லது H -ஐ கொடுப்பதன் மூலம் வருவாய் மூல வரி பிடித்தம்செய்யப்படும்.

 

தொடர் வைப்பு

தொடர் வைப்பு

ஆர் டி எனப்படும் தொடர் வைப்புக்களில் நீங்கள் ஒவ்வொரு மாதமும்ஒரு தொகையை முதலீடு செய்யமுடியும். இதன் மூலம் முதிர்வு காலத்தில் ஒரு பெரிய தொகையைத் திரட்டி வைக்க இயலும்.

பொது வைப்பு நிதி

பொது வைப்பு நிதி

பிபிஎப் எனப்படும் பொது வைப்பு நிதி மாத வருவாய் பெரும் ஒருவருக்கு மிகவும் பொருத்தமான ஒன்று. நம் நாட்டில் உள்ள முதலீட்டு வழிகளில் வரிச்சலுகைகளில் 80-C பிரிவின் கீழ் சலுகைகளும் இதில் கிடைக்கும் வட்டிக்கும் வரிச்சலுகையும் தரும் வெகு சில வழிகளில் இதுவும் ஒன்று.

மாதாந்திர வருவாய்த் திட்டம்

மாதாந்திர வருவாய்த் திட்டம்

அஞ்சலக மாதாந்திர வருவாய்த் திட்டம் முதலீட்டு ஆபாயங்களைக் குறைத்துக்கொள்ளவும் பாதுகாப்பான ஓரளவுக்கு நல்ல வருவாத் தரக்கூடிய முதலீடுகளைச் செய்யவும் விரும்புபவர்களுக்கு ஏற்ற ஒன்று.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்

இந்திய அரசு பல துறைகளில் மூத்த குடிமக்களுக்கான பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது.

மூத்த குடிமக்கள் சேமிப்புத்திட்டம் அதில் ஒன்று. இதில் வரும் வட்டி விகிதத்தை அரசு ஒவ்வொரு ஆண்டும் நிர்ணயிக்கிறது.

 

சுகன்ய சம்ரிதி திட்டம்

சுகன்ய சம்ரிதி திட்டம்

சுகன்ய சம்ரிதி திட்டம் பெண் குழந்தைக்கான கல்விக்கு உதவிட மட்டும் பிரத்தியேகமாக அறிவிக்கப்பட்டது. அஞ்சலகம் மற்றும் வங்கிகளில் இதனைத் திறக்கும் வசதி உண்டு. பெரும்பாலான வணிக வங்கிகள் மற்றும் அரசு வங்கிகள் இந்த வசதியைத் தருகின்றன.

கடன் பரஸ்பர நிதிகள் (Debt Funds)

கடன் பரஸ்பர நிதிகள் (Debt Funds)

இவை பங்குகளில் முதலீடு செய்யப்படுவதால் வைப்புக்களைக் காட்டிலும் நல்ல வருவாயைத் தரக்கூடியவை .

வரிச்சலுகை வைப்பு நிதிகள்

வரிச்சலுகை வைப்பு நிதிகள்

வரிச்சலுகை தரும் இந்த வைப்பு நிதிகள் 80-C பிரிவின் கீழ் சலுகைகளை வழங்குகின்றன. நீங்கள் முதலீடு செய்யும் தொகையை உங்கள் மொத்த வரி வருமானத்திலிருந்து கழித்துக்கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் வரி மிச்சமாகும்.

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+