முகப்பு  »  வெள்ளி விலை  »  சென்னை

சென்னை வெள்ளி விலை (3rd October 2022)

Oct 3, 2022
62 /கிராம்

சென்னையில் வெள்ளியின் விலை பல காரணிகளைச் சார்ந்தது. உதாரணமாக, சமீபத்தில் அரசாங்கம் தங்கம் மீதான சுங்க வரியை உயர்த்தியது. இது வெள்ளி விலைகளை உயர்த்தியது. தங்கம் விலை உயரும் போது கிராமப்புற முதலீட்டாளர்கள் வெள்ளியில் முதலீடு செய்வார்கள். சர்வதேச சந்தைகளில் வெள்ளி விலைகள் அவுன்ஸ் ஒன்றுக்கு 15 டாலர்களை நெருங்கியது. காரணம் அதன் தேவை அதிகரித்து வருகிறது.

சென்னை இன்றைய வெள்ளி விலை நிலவரம் - ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்(ரூ.)

கிராம் வெள்ளி விலை
இன்று
வெள்ளி விலை
நேற்று
வெள்ளி விலையில்
தினசரி விலை மாற்றங்கள்
1 கிராம் 62 62 0
8 கிராம் 496 496 0
10 கிராம் 620 620 0
100 கிராம் 6,200 6,200 0
1 கிலோ 62,000 62,000 0

சென்னை கடந்த 10 நாட்களில் 1 கிலோ பார் வெள்ளியின் விலை நிலவரம்

தேதி 10 கிராம் 100 கிராம் 1 கிலோ
Oct 2, 2022 620.00 6,200.00 62000.00 0
Oct 1, 2022 620.00 6,200.00 62000.00 0
Sep 30, 2022 620.00 6,200.00 62000.00 500
Sep 29, 2022 615.00 6,150.00 61500.00 1500
Sep 28, 2022 600.00 6,000.00 60000.00 -700
Sep 27, 2022 607.00 6,070.00 60700.00 0
Sep 26, 2022 607.00 6,070.00 60700.00 -800
Sep 25, 2022 615.00 6,150.00 61500.00 0
Sep 24, 2022 615.00 6,150.00 61500.00 -1000
Sep 23, 2022 625.00 6,250.00 62500.00 -500

இந்தியாவில் வெள்ளி விலைக்குறித்த வாரம் மற்றும் மாதாந்திர வரைபடம்

வெள்ளி விலையின் வரலாறு சென்னை

 • தங்கம் விலை மாற்றங்கள் சென்னை, September 2022
 • வெள்ளி விலை 1 கிலோ
  1 st September விலை Rs.58,000
  30th September விலை Rs.62,000
  உயர்ந்த விலை September Rs.63,000 on September 22
  குறைவான விலை September Rs.58,000 on September 1
  ஒட்டுமொத்த செயல் பாடு Rising
  % மாற்றம் +6.90%
 • தங்கம் விலை மாற்றங்கள் சென்னை, August 2022
 • தங்கம் விலை மாற்றங்கள் சென்னை, July 2022
 • தங்கம் விலை மாற்றங்கள் சென்னை, June 2022
 • தங்கம் விலை மாற்றங்கள் சென்னை, May 2022
 • தங்கம் விலை மாற்றங்கள் சென்னை, April 2022

வெள்ளியை பற்றிய சுவையான தகவல்கள்

ஆபரணங்கள் என்றதும் எல்லோருக்கும் தங்கம் தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு தங்க ஆபரணங்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றன. எனினும், வரலாற்றின் பக்கங்களை புரட்டினால் தங்கத்தை போலவே வெள்ளிக்கும் முக்கிய பங்கு இருந்திருப்பதை காணலாம். ஆபரணங்களாக மட்டுமல்லாது மருந்து, புகைப்படம் போன்ற பலவற்றில் வெள்ளி பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இப்படி, தங்கம் பற்றிய சில சுவையான தகவல்களை இங்கே காண‌லாம்.

மெருகூட்டினால் வெற்றி பளபளப்பாக காட்சி அளிக்கும். மெருகூட்டப்பட்ட வெள்ளி உலோகத்தின் மீது விழும் கண்ணுக்கு புலப்படும் ஒளிக்கீற்றுகளில் 95 சதத்தை ஒளிக்கற்றைகளாக(ஸ்பெக்ட்ரம்) பிரதிபலிக்கும். அதனால் தான் வெள்ளியை சிறந்த பிரதிபலிப்பு உலோகமாக கருதுகிறார்கள். அதிக அளவிலான ஒளிக்கீற்றுகளை பிரதிபலிப்பதால், கண்ணாடிகளின் தயாரிப்பில் வெள்ளி பயன்படுத்தப்படுகிறது. பிரதிபலிப்புத் திறன் காரணமாக, நுண்ணோக்கி (மைக்ரோஸ்கோப்), தொலைநோக்கி (டெலஸ்கோப்), சூரியஒளி தகடுகள் உள்ளிட்ட பலவற்றில் வெள்ளி பயன்படுத்தப்படுகிறது.

ஆங்கிலோ-சாக்சன் மொழியில் சியோல்ஃபர் (Seolfor) என்ற வார்த்தையில் இருந்து தான் Silver (வெள்ளி) என்ற வார்த்தை வந்துள்ளது. ஆங்கிலத்தில் Silver என்ற சொல்லை எதுகை மோனையுடன் கூறுவதற்கு நிகரான சொல் எதுவுமில்லை. 14-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெள்ளிக்கும் பணத்திற்கும் ஒரே பெயர் தான் பயன்படுத்தப்படுகிறது.

மனித சமூகம் முதன்முதலில் கண்டுபிடித்த முதல் ஐந்து உலோகங்களில் வெள்ளியும் ஒன்று. சில காலத்திற்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட வெள்ளிப்பொருட்கள், கி.பி. 4000-ஆம் ஆண்டுக்கு முந்தையதாக உள்ளன. பண்டைய எகிப்தியர்கள் காலத்தில் செலாவணியாக வெள்ளி பயன்படுத்தியுள்ளது. ஒரு காலத்தில் தங்கத்தைவிட வெள்ளியின் விலை கூடுதலாக இருந்தது ஆச்சரியமான தகவலாகும்.

வெள்ளி உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. வெள்ளிக் கரண்டியுடன் பிறந்தவர்(பார்ன் வித் சில்வர் ஸ்பூன்) என்று கூறுவதை பலரும் கேட்டிருக்கலாம். பணக்கார‌ வசதி வாய்ப்புகளுடன் குழந்தை வளர்ந்து வருவதை தான் அப்படி கூறுவார்கள். கிருமி கொல்லியாக இருப்பதால், பணக்கார குடும்பங்களில் இன்றைக்கும் குழந்தைகளுக்கு சோறு ஊட்ட வெள்ளிக் கரண்டி அல்லது கிண்ணங்கள் பயன்படுத்தப்படுவதை எல்லோரும் பார்த்திருக்கலாம்.

செலாவணியாக வெள்ளி அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. முந்தைய நூற்றாண்டில் செலாவணியாக பளபளக்கும் வெள்ளி இருந்துள்ளது. 1794-ஆம் ஆண்டில், முதன்முறையாக அமெரிக்கா டாலர் நாணயம் வார்க்கப்பட்டுள்ளது. உலகில் தயாரிக்கப்பட்ட முதல் வெள்ளி நாணயமாகவும் அது கருதப்படுகிறது. இதற்கு உலக அளவில் நல்ல வரவேற்பு கிடைத்ததால், பல்வேறு நாடுகளில் வெள்ளி நாணயங்கள் புழக்கத்திற்கு வந்தன.

2015-ஆம் ஆண்டில் பழைய வெள்ளி நாணயம் ஒன்று 5 மில்லியன் டாலருக்கு ஏலம் விடப்பட்டது. 1965-ஆம் ஆண்டுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட வெள்ளி நாணயங்களில் 90% வெள்ளி இருந்துள்ளது. 1965-66-ஆம் ஆண்டில் ஜான் கென்னடி காலத்தில் தயாரிக்கப்பட்ட வெள்ளி நாணயத்தில் 40% வெள்ளி இருந்துள்ளது.

வெள்ளிப்பொருட்கள் நல்ல வெப்பக்கடத்தி ஆகும். தனிம அட்டவணையில் (Periodic table) இடம்பெற்றிருக்கும் உலோகங்களில் வெள்ளி சிறந்த மின் கடத்தியாக குறிக்கப்பட்டுள்ளது. முதல் 100 வேதிப்பொருட்களுடன் ஒப்பிடுகையில், சிறந்த வெப்ப கடத்திகளின் வரிசையில் வெள்ளி, 100-ஆவது இடத்தில் உள்ளது. இந்த வரிசையில் தங்கம் 76, தாமிரம் 97-ஆவது இடத்தில் உள்ளன.

செயற்கை மழைக்கு(Cloud Seeding) சில்வர் ஐயோடைட்(Silver Iodide) பயன்படுத்தப்படுகிறது. மேகத்தில் சில்வர் ஐயோடைட் வேதிப்பொருளை தெளித்தால் மழை பொழியும். மேலும் இந்த வேதிப்பொருள் சூறாவளியையும் தடுக்க உதவும்.

உலகில் வெள்ளியை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு மெக்சிகோ. 2017-ஆம் ஆண்டில் மெக்சிகோவில் 5600 மெட்ரிக் டன் வெள்ளி உற்பத்தி செய்யப்பட்டது. சீனாவுக்கு அடுத்தப்படியாக வெள்ளியை தயாரிக்கும் இரண்டாவது பெரிய நாடு பெரு ஆகும்.

தங்கத்தை விட வெள்ளி ஆபரணங்கள் சிறந்ததா?

இந்தியாவில் ஆபரணம் என்று காதில் விழுந்ததும் மக்களின் நினைவுக்கு வருவது தங்கம் தான், அதன் பிறகு தான் வெள்ளியை பற்றி யோசிப்பார்கள். இந்தியாவில் தங்க ஆபரணங்கள் மீது அந்த அளவுக்கு மோகம் இருக்கிறது. ஆனாலும், வெள்ளி கொலுசுகள், வெள்ளி மோதிரங்கள் அணியும் பழக்கம் இந்தியர்களின் பாரம்பரியம் மற்றும் சடங்குகளில் அடங்கியுள்ளது.

தங்க ஆபரணங்களை காட்டிலும் வெள்ளி ஆபரணங்களால் ஏராளமான நன்மைகள் உள்ளன. வெள்ளி இலகுவான உலோகமாகும். நகைகளாக நீண்டகாலம் அணிந்துகொள்வதற்கு எளிதானது மற்றும் வசதியானது. எந்த நிறத்தில் அமைந்த உடையாக இருந்தாலும், அத்துடன் வெள்ளி ஆபரணங்கள் கனகச்சிதமாக பொருந்தி,அழகாக காட்சி அளிக்கும். தங்க ஆபரணங்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பதால், அது எல்லா உடைகளுக்கும் அழகாக காட்சி அளிப்பதில்லை. பெரும்பாலான மக்கள் வெள்ளி சங்கிலிகள், தோடுகள் அணிவதை பெரிதும் விரும்புகிறார்கள். தங்கமோ வெள்ளியோ தினமும் ஆபரணங்களை பயன்படுத்தினால் அது உலோகத்தில் தேய்மானத்தை உருவாக்கும். தங்கம் மென்மையானது என்பதால் அது எளிதில் பழுதடையும். திடமாக இருப்பதால் வெள்ளி ஆபரணங்களின் தேய்மானம் அவ்வளவு எளிதில் நடப்பதில்லை.

தங்க ஆபரணங்கள் எளிதில் வளையும் அல்லது கோணலாகும் வாய்ப்புள்ளது. வெள்ளியுடன் ஆபரண கற்களை பொருத்தினால், அழகில் மனதை அள்ளும். வைரம், மாணிக்கம், மரகதம், நீலக்கல் போன்ற விலை உயர்ந்த கற்களோடும் வெள்ளி ஆபரணங்கள் அழகில் மின்னும். இது போன்ற கற்களுடன் வெள்ளியை பயன்படுத்தி ஆபரணங்களை வடிவமைப்பதையே பலரும் விரும்புகிறார்கள். வைரத்துடன் வெள்ளி ஆபரணங்களை செய்வது சாதாரணமாகி விட்டது.

தங்கத்தின் விலைக்காக தங்க ஆபரணங்களை அணிந்தால் சமுதாயத்தில் மதிப்பு கிடைக்கலாம்.

தங்கத்தை விட வெள்ளியால் செய்யப்படும் ஆபரணங்கள் எல்லா அணிகலங்களுடனும் கன‌ கச்சிதமாக கண்களை ஈர்க்கும். வெள்ளி ஆபரணங்களை அணிவது அழகை கூட்டுவதோடு, உடல் ஆரோக்கியத்திற்கும் உதவும். வெள்ளி ஆபரணங்களை அணிவதால் உடலின் உறுப்புகளை சமநிலையில் வைத்திருக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். ரத்த நாளங்களை நெகிழ்வாக வைப்பதற்கும் வெள்ளி கைகொடுக்கிறது.

தங்க நகைகளை விட வெள்ளி நகைகள் குளிர்ச்சியானதா?

ஒப்பீட்டளவில் தங்கத்திற்கு அடுத்தப்படியாக தான் வெள்ளி மக்களால் அதிகம் விரும்பப்படுகிறது. குறைந்த விருப்பமான உலோகங்களில் ஒன்றாகும். ஆனால், அண்மைகாலமாக ஆபரணச்சந்தையில் தங்கத்தைவிட வெள்ளி டிரெண்டாக உள்ளது. வாழ்க்கையில் வெள்ளி மற்றும் தங்கம் ஆகிய இரண்டும் அடையாள குறியீடாகவும், முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் உள்ளன. வெள்ளி அழகானது மட்டுமல்ல, மலிவானதும், ஆரோக்கிய நன்மைகளை கொண்டதாகும். நம் உடலில் உறுப்புகளை சமநிலைப்படுத்த வெள்ளி முக்கிய பங்காற்றி வந்துள்ளன.

இது நமது இரத்த நாளங்களை மீள்தன்மையுடன் வைத்திருக்க உதவுகிறது. எலும்பு மற்றும் தோல் உருவாக்கத்திலும், குணமாவதிலும் வெள்ளி முக்கிய பங்காற்றி வருகிறது. வெள்ளி தோல் வழியாக உடலுக்குள் உறிஞ்சப்படுவதோடு, அது வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது. பளபளப்புத்தன்மை மற்றும் நிறத்திற்காகவும் பலரும் வெள்ளி நகைகளை விரும்புகிறார்கள். ஆனாலும், வெள்ளியை வாங்குவதற்கு முன், இந்தியாவில் அதன் விலையை சரிபார்ப்பது அவசியம் ஆகும்.

இந்தியாவில் வெள்ளி விலையை பாதிக்கும் காரணிகள்:

தங்கம் விலை: வெள்ளி விலையில் தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. தங்கத்தின் தேவை அதிகரிப்ப‌தால், அதன் விலை அதிகரிக்கிறது. அதன் தொடர்ச்சியாக, வெள்ளியின் விலையும் உயரும்.

தொழில்துறை தேவை: தொழில்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் வெள்ளியின் தேவை அதிகமுள்ளது. கணினிகள், தொலைக்காட்சிகள், பதக்கங்கள், நாணயங்கள் மற்றும் ஆபரணங்க‌ள் உட்பட பல்வேறு பொருட்களின் உற்பத்தியில் வெள்ளி பயன்படுத்துகின்றது. தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள், தினந்தோறும் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துகின்றன. இது வெள்ளிக்கான தேவையை அதிகரிக்கச் செய்கிறது. இதன் விளைவாக வெள்ளி விலை உயர்வது இயல்பாகும்.

மொத்த கொள்முதல்: வெள்ளி சந்தையை பெரிய வர்த்தகம் மற்றும் கொள்முதல் மூலம் வளைப்பது மிகவும் எளிதாகும். மொத்தமாக வெள்ளியை கொள்முதல் செய்வதன் மூலம் வெள்ளியின் விலையில் பெரிய மற்றும் தனியார் நிறுவன முதலீட்டாளர்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றனர்.

பணவீக்கம்: அமெரிக்க டாலரின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற பணவீக்கம், பணவாட்டம் மற்றும் பணமதிப்பிழப்பு போக்குகளைப் பொறுத்து வெள்ளி விலையில் மாற்றம் காணப்படும். அமெரிக்க டாலரின் மதிப்பு குறையும் போது, வெள்ளியின் விலை அதிகரிக்கிறது.

சுரங்கச் செலவு: வெள்ளியை பிரித்தெடுக்கும் சுரங்க செலவும் அதன் விலையை பாதிக்கிறது. விலை அதிகமாக இருக்கும்போது, சுரங்கத்தில் இருந்து வெள்ளியை பிரித்தெடுப்பது குறைந்து, அது வெள்ளியின் சந்தை வரத்தை குறைக்கிறது. வெள்ளியின் நிகர கையிருப்பு குறைவதால், அதன் விலை அதிகரிக்கிறது.

வெள்ளியின் ஆரோக்கிய நன்மைகள்:

நமது கண்களை கவர்வதோடு மட்டுமல்லாமல், ஒரு நபரின் ஆரோக்கியத்திற்கும் வெள்ளி உதவுகிறது. உங்கள் அடக்க விலைக்குள் வாங்கலாம் என்பதால், வெள்ளியில் முதலீடு செய்வது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். பழங்காலத்தில் இருந்தே தங்கம் மற்றும் வெள்ளியை இந்தியர்கள் அதிகம் விரும்பி வந்துள்ளனர். தங்கத்தை போல‌ வெள்ளியின் விலை உயர்வானதல்ல. ஆனால் வெள்ளி நகைகளை அணிவதால் பல நன்மைகள் இருப்பதாக மக்கள் நம்புகிறார்கள். வெள்ளி ஒரு சக்திவாய்ந்த நுண்ணுயிர் கொல்லியாக கருதப்படுகிறது. நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராட வெள்ளி உதவுகிறது.

வெள்ளி ஆபரணங்களை அணிவது குளிர்காலத்தில் உடலை சீராக வைத்திருக்க உதவும். மேலும் இது காய்ச்சலை தடுப்பதற்கு, காயத்தை குணப்படுத்துவதற்கு உதவுகிறது. வெள்ளி ஆபரணங்களை அணியும் போது பலர் நன்றாக தூங்குவதாக தெரிய வந்துள்ளது. வெள்ளியின் குளிர்த் தன்மையால் கண்மாஸ்காக அது பயன்படுத்துகிறது. வெள்ளி ஆபரணங்களை அணிந்த பிறகு பலரின் உற்சாகத்தின் அளவு முன்னேற்றம் அடைந்திருப்பதாக தெரிவிக்கின்றனர். உடலின் வெப்பத்தை சீராக்குவதற்கும், சுழற்சி செய்வதற்கும் வெள்ளி உதவுகிறது.

வெள்ளியின் பயன்பாடுகள்:

தனித்துவமான இயல்புகளால் தொழில்துறை மற்றும் மின்பயன்பாடுகளில் வெள்ளி உச்ச இடத்தை பிடித்துள்ளது. வெள்ளியின் அறியப்படாத பயன்பாடுகள் பின்வருமாறு:

1. உலக சுகாதார நிறுவனத்தின்(WHO) அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில், தொற்று எதிர்ப்பு மருந்தாக வெள்ளி உள்ளது. சிறுநீர் குழாய் தொற்றை தடுக்க வெள்ளியில் தயாரிக்கும் ஃபோலே வடிகுழாய் பயன்படுத்தப்படுகிறது.

2. கதிரியக்கத்தில் வெள்ளி பயன்படுத்தப்படுகிறது. அறுவை சிகிச்சையில் காயங்களை தைப்பதற்கு அறுவைசி கிச்சை நிபுணர்கள் பயன்படுத்தும் ஊசிகள் வெள்ளியால் தயாரிக்கப்பட்டது. வெள்ளி பேரிங் பூச்சுகள் தொற்றுகளை தடுக்கிறது.

3. வெள்ளி, புகைப்படத்தில் பயன்படுத்தப்படுகிறது. வண்ணத் திரைப்படப் புகைப்படத்திலும் வெள்ளி பயன்படுத்தப்படுகிறது. இதற்கு வெள்ளியின் ஒளி-உணர்திறன் அம்சம் தான் காரணம்.

4. கண்ணாடிகளில் வெள்ளி பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளிக்கு பிரதிபலிப்புத்தன்மை உள்ளது. கண்ணாடியில் ஆப்டிகல் கோட்டாக வெள்ளி பயன்படுத்தும்போது, 95% - 99% வரை ஒளி பிரதிபலிக்கப்படுகிறது.

5.

வெள்ளி நகைகள் மிகவும் பிரபலமானது. கடந்த காலத்திலிருந்தே, இந்தியர்கள் வெள்ளி ஆபரணங்களை மிகவும் விரும்பி அணிந்து வருகிறார்கள். மோதிரங்கள், நெக்லஸ்கள், வளையல்கள், கைக்கடிகாரங்கள், காதணிகள், தொங்கட்டான்கள் போன்ற நகைகள் தயாரிக்க வெள்ளி பயன்படுத்தப்படுகிறது.

வெள்ளி ஏன் மோசமான முதலீடு?

வெள்ளி ஒரு நல்ல முதலீடாக பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனாலும், வெள்ளியில் முதலீடு செய்வதில் பல குறைபாடுகள் உள்ளன. இதற்கு முக்கிய காரணம், வெள்ளியின் தொழில்துறை தன்மை ஆகும். உலக அளவிலான‌ வெள்ளி தேவையின் பாதி அளவு தொழில்துறை பயன்பாட்டிலிருந்து உருவாகிறது. எனவே, இது பங்குகளுடன் இணைந்து செயல்படுவதால், கடினமான காலக்கட்டத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டதாகும்.. வெள்ளியில் முதலீடு செய்வதன் மிக‌ முக்கியமான‌ குறைபாடு இதுவாகும்.

இந்தியாவில் இன்றைக்கு ஒருகிராம் வெள்ளி விலையை நிர்ணயிக்கும் காரணங்கள் என்ன?

இந்தியாவில் தங்கத்திற்கு அடுத்தபடியாக வெகுமக்களால் பயன்படுத்தப்படும் உலோகம் வெள்ளி. தங்கத்தை வாங்க முடியாத பலர் வெள்ளியில் திருப்திப்பட்டுக்கொள்வதும் நடக்கிறது. முதலீட்டுச் சாதனமாகத் தங்கம் பட்டையைக் கிளப்பினாலும், வெள்ளிக்கு மவுசு குறையவில்லை என்பதை வெள்ளிச்சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னணியில் வெளிச்சந்தையில் ஒளிந்திருக்கும் சில ரகசியங்களை அறிந்துகொள்வோம்.

இந்தியாவில் வெள்ளியின் விலையை நிர்ணயிப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. இவற்றில் சர்வதேச வெள்ளி விலை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் நிர்ணயிக்கப்படும் வெள்ளி விலை, சர்வதேச சந்தையின் போக்குக்கு உட்பட்டதாக இருக்கிறது. விலை உயர்வில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் ஒரேமாதிரியான போக்கை கடைப்பிடிக்கின்றன‌. அதாவது, தங்கம் விலை உயர்ந்தால், வெள்ளியின் விலையும் உயரும். அதேபோல, வெள்ளி விலை உயர்ந்தால், தங்கத்தின் விலையும் உயரும். இவை எல்லாவற்றுடன், இந்தியாவில் ஒருகிராம் வெள்ளியின் விலை நிர்ணயத்தில் வேறுபல காரணங்களும் அடங்கியிருக்கின்றன. இதில் நாட்டில் நிலவும் வட்டிவிகித ஏற்ற இறக்கக்கள், விலைவாசி உயர்வு போன்றவையும் அடக்கம்.

வெள்ளி விலைகளை பாதிக்கும் காரணிகள்

அமெரிக்க டாலர் நிலைத்தன்மை வெள்ளியின் விலையை பாதிக்கும். டாலர் வலுவாக இருந்தால் வெள்ளி சந்தையில் அதன் விலை குறைவாக இருக்கும். டாலர் பலவீனமாக இருந்தால் வெள்ளி விலை உயரும்.

வெள்ளியின் தொழில்துறை தேவை விலைகளை பாதிக்கிறது. அலைபேசிகள், கணிணிகள் மற்றும் டிஜிட்டல் தொலைக்காட்சிகளில் உலோகம் அதிகரித்து வருகிறது. வெள்ளி மின்சாரம் கடத்தும் பொருள் ஆகும். எனவே மின்சார சந்தையில் விரிவாக பயன்படுத்தப்படுகிறது. வெள்ளிக்கான தொழில்துறை கோரிக்கைகளும் விலைகள் அதிகரிப்புக்கு காரணம்.

உலகளாவிய உற்பத்தி எண்கள் விலைகளை பாதிக்கும். வெள்ளி ஒரு விலையுயர்ந்த உலோகமாக இருப்பதால் விலை சந்தையில் அதன் கிடைக்கும் தன்மையை சார்ந்துள்ளது. தேவை மற்றும் கோரிக்கை வெள்ளியின் விலை சந்தை குறியீடுகள் ஆகும். பணவீக்கம் அதிகமாக இருந்தால் மக்கள் பொதுவாக தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்வார்கள்.

தேவை அதிகரிக்கும்போது தேவைகளுடன் சேர்த்து விலை உயரும். வெள்ளியின் விலை தங்க விலைக்கு தொடர்புடையது. தங்கம் உயர்வு மற்றும் குறைவு போன்று வெள்ளியும் உயர்வு மற்றும் குறைவு ஏற்படும் போக்கு காணப்படுகிறது.

இந்தியாவில் வெள்ளியின் மீது ஏன் முதலீடு செய்யவேண்டும்?

தேவை

வெள்ளிக்கு எப்போதும் இந்தியாவில் ஒரு நல்ல தேவை உள்ளது. நகைத்துறை மற்றும் தொழில்துறைகளால் இந்த கோரிக்கை உருவாக்கப்படுகிறது.
தேவை மற்றும் கோரிக்கை: இந்தியாவிலும் சீனாவிலும் வெள்ளியின் தேவை அதிகரித்து வருகிறது. ஆனால் வெள்ளி கிடைப்பது குறைவாகவும் கோரிக்கைகளின் தேவை அதிகமாகிறது. எதிர்காலத்தில், வெள்ளி கிடைப்பது கடினமாக மாறும். அதனால் விலை மிகவும் நல்ல நிதி நிலையில் இருப்பதால் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு ஏற்றது.

சாதாரண மனிதனின் தங்கம்

வெள்ளி சாதாரண மனிதனின் தங்கமாகக் கருதப்படுகிறது. தங்கத்துடன் ஒப்பிடும்போது வெள்ளி கொள்முதல் மிகவும் எளிதானது. வெள்ளி விலைகள் தொடர்ந்து உயருவதால் முதலீட்டாளர்களுக்கு பத்திரங்கள், வீட்டுமனைகளில் முதலீடு செய்வதை விட வெள்ளி சிறந்த தேர்வாகும்.

சந்தைகளை உற்று நோக்குதல்

வெள்ளி சந்தைகள் முன்னறிவிக்கப்படக்கூடிய ஒரு வழி உள்ளது. சந்தை நேரம் என்பது திருமண காலங்களும் மற்றும் பண்டிகைக்கு வரும் காலங்களும் ஆகும். தங்கத்திற்கும் வெள்ளிக்கும் தேவை அதிகரிக்கிறது.

வங்கி கணக்குகள் இல்லை

இந்தியாவில், மக்கள் தொகையில் பெரும்பகுதி வங்கி மற்றும் வரிவிதிப்பு பற்றிய பரிச்சயம் இல்லாதவர்கள். எனவே அவர்களுக்கு நிறைய சாதனங்களில் முதலீடு செய்ய கடினமாக உள்ளது. அவர்களுக்கு வெள்ளி முதலீடு செய்ய சிறந்த இடங்களில் ஒன்றாகும்.

சேமிக்க எளிதாகும்

தங்கத்துடன் ஒப்பிடும்போது வெள்ளி சேமிக்க எளிதானது. என்எஸ்ஈஎல் இல் வர்த்தகம் செய்யக்கூடிய பல மின்-வெள்ளி பொருட்கள் உள்ளன. அவர்கள் உலோகத்தை சேமிப்பதைப் பற்றி கவலைப்படாமல் வெள்ளியில் முதலீடு செய்ய அனுமதிக்கிறார்கள்.

நீர்மை நிறை

அவசரகால சூழ்நிலைகளில் வெள்ளி உலோகம் முதலீட்டாளர்களுக்கு உதவ முடியும். தனிப்பட்ட அவசரகாலங்களில் வெள்ளி எளிதில் பணமாக மாற்றக்கூடியது. நாணயம் மதிப்பு இழந்தாலும் வெள்ளி மதிப்பு இழக்காது.

இந்தியாவில் வெள்ளி மீதான முதலீடு - ஒர் பார்வை

இந்தியாவில் மக்கள் பண்டிகை காலங்களில் விலைமதிப்பற்ற உலோகங்களில் முதலீடு செய்யச் சிறந்த நேரம் என்று நினைக்கிறார்கள். இந்தியாவில் வெள்ளி முதலீடு செய்வதற்கு முன் சில விஷயங்கள் இங்கே பரிசீலிக்கப்படுகின்றன.

பொருட்களில் (commodities) முதலீடு செய்வது எப்போதும் ஆபத்தானது.

பொருட்களின் விலை ஏற்ற இறக்கம் பங்குகளை விட இன்னும் அதிகமானதாக இருக்கக்கூடும். வெள்ளியில் முதலீடு செய்வதற்கு முன், நீங்கள் முதலீட்டுக்குத் தொடர்புடைய அபாயத்தை அறிந்து கொள்ள வேண்டும்.

வெள்ளி மற்றும் தங்கம் ஆகிய இரண்டு உலோகங்களில் மக்கள் பணம் முதலீடு செய்ய விரும்புகின்றனர். ஆனால் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். தங்க முதலீட்டுடன் வெள்ளி முதலீட்டை ஒப்பிடக் கூடாது. தங்கம் வெள்ளியை விட நிலையானது. இரண்டு உலோகங்கள் இடையே ஒரு தொடர்பு உள்ளது. ஆனாலும் கூட வெள்ளியின் மதிப்பிறக்கம் அதிகமாக இருக்கும். எனவே, இது ஆபத்தான முதலீடு.

வெள்ளி வாங்கப் பல தேர்வுகள் உள்ளன. நீங்கள் அதை நகைக்கடையில் அல்லது வங்கியில் வாங்கலாம். பாரம்பரிய வழிகளில் வெள்ளியை முதலீடு செய்வதில் ஆர்வம் இருந்தால், நம்பகமான விற்பனையாளர்களிடம் செல்லுங்கள். வங்கிகளிடமிருந்து வெள்ளி வாங்க முடியுமானால் பிரச்சனை இல்லை.

வெள்ளி முதலீடு ஒரு முறையான வழியில் செய்யப்பட வேண்டும். உங்கள் எல்லாப் பணத்தையும் இந்த உலோகத்தில் செலவிட வேண்டாம். ஒவ்வொரு மாதமும் சேமித்து வைக்கும் ஒரு பகுதியை முதலீடு செய்யுங்கள். இதனால் விலை ஏற்ற இறக்கம் பெருமளவில் பாதிக்காது.

நிபந்தனை: இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள வெள்ளியின் விலை அனைத்தும் நகரின் பெரிய நகைக்கடைகளில் இருந்து பெறப்பட்டவை. அதனால் விலையில் வித்தியாசம் இருக்கலாம். தமிழ் குட்ரிட்டர்ன்ஸ்.இன் இணையதளம் மிக துல்லியமான தகவல்களை அளிக்க அனைத்து முயற்சியையும் செய்கிறது. இங்கு குறிப்பிட்டுள்ள தகவல்களுக்கும் கிரேனியம் இன்பர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் அதன் கிளை மற்றும் இணை நிறுவனங்களுக்கு சம்பந்தம் இல்லை. மேலும் இங்குகுறிப்பிட்டுள்ள விலைகளை கொண்டு வெள்ளியை வாங்கவும், விற்கவும் அறிவுறுத்தப்படவில்லை. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வெள்ளி குறித்த தகவல்களை வைத்து வர்த்தகம் செய்து நஷ்டம் ஏற்பட்டால் நிறுவனம் பொறுப்பாகாது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X