முன்பு பரோடா என்றழைக்கப்பட்ட இன்றைய வடோதரா நகரம் குஜராத் மாநிலத்தின் முக்கிய மூன்று நகரங்களில் ஒன்றாகும். இந்த நகரத்தில் தங்கம் உற்சாகமாக வாங்கவும் மற்றும் விற்கவும் படுகிறது. இந்த நகரக் குடிமக்கள் தங்கம் மற்றும் தங்க நகைகளை வாங்க எப்பொழுதும் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள். வதோதராவில் தங்க விலைகள் தினமும் இரண்டு முறை மாறுகின்றன. எனவே இந்த நகரத்தில் தங்கம் வாங்க விரும்புபவர்கள் வாங்குவதற்கு முன் விலையைச் சரிபார்க்க வேண்டும்.
கிராம் | 22 கேரட் தங்கம் இன்று |
22 கேரட் தங்கம் நேற்று |
22 கேரட் தங்கத்தின் தினசரி விலை மாற்றம் |
1 கிராம் | ₹ 4,898 | ₹ 4,864 | ₹ 34 |
8 கிராம் | ₹ 39,184 | ₹ 38,912 | ₹ 272 |
10 கிராம் | ₹ 48,980 | ₹ 48,640 | ₹ 340 |
100 கிராம் | ₹ 4,89,800 | ₹ 4,86,400 | ₹ 3,400 |
கிராம் | 24 கேரட் தங்கம் இன்று |
24 கேரட் தங்கம் நேற்று |
24 கேரட் தங்கத்தின் தினசரி விலை மாற்றம் |
1 கிராம் | ₹ 5,098 | ₹ 5,064 | ₹ 34 |
8 கிராம் | ₹ 40,784 | ₹ 40,512 | ₹ 272 |
10 கிராம் | ₹ 50,980 | ₹ 50,640 | ₹ 340 |
100 கிராம் | ₹ 5,09,800 | ₹ 5,06,400 | ₹ 3,400 |
தேதி | 22 கேரட் | 24 கேரட் |
Jan 21, 2021 | ₹ 48,980 340 | ₹ 50,980 340 |
Jan 20, 2021 | ₹ 48,640 110 | ₹ 50,640 110 |
Jan 19, 2021 | ₹ 48,530 10 | ₹ 50,530 10 |
Jan 18, 2021 | ₹ 48,520 -60 | ₹ 50,520 -60 |
Jan 17, 2021 | ₹ 48,580 -10 | ₹ 50,580 -10 |
Jan 16, 2021 | ₹ 48,590 10 | ₹ 50,590 10 |
Jan 15, 2021 | ₹ 48,580 -10 | ₹ 50,580 -10 |
Jan 14, 2021 | ₹ 48,590 0 | ₹ 50,590 0 |
Jan 13, 2021 | ₹ 48,590 10 | ₹ 50,590 10 |
Jan 12, 2021 | ₹ 48,580 -490 | ₹ 50,580 -490 |
விலையுயர்ந்த உலோகம் வாங்குவதற்கென ஏராளமான இடங்கள் உள்ளன.
வதோதரா நகரில் தங்கத்திற்கு மட்டுமின்றி வெள்ளிக்கெனவும் நல்ல மவுசு உள்ளது. அல்காபூரில் உள்ள ஆர்.ஸி.தத் சாலையில் ஏராளமான நகைக்கடைகள் அமைந்துள்ளன. மேலும் ரேஸ் கோர்ஸ் சாலையிலும் பல கடைகள் காணப்படுகின்றன. கல்யாண் ஜுவல்லர்ஸ் போன்ற பிரபலமான பெரிய நகைக்கடைகளும் இந்நகரில் காணப்படுகின்றன.
நகைக்கடைகளுக்குத் தொடர்ந்து ஆதரவளித்துவரும் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும் இந்நகரில் நகைக்கடைகளுக்குப் பஞ்சமில்லை. வதோதரா நகரில் தங்கம் வாங்குவதற்கு முன் தங்க விலைகளைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை மறவாதீர்கள்.
வதோதராவில் தங்கம் வாங்கும் முன், நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளன. சிறிய அளவிலான நகைக்கடைக்குச் செல்கிறீர்களானால், தங்கத்தின் சுத்தத்தைச் சோதித்துப் பார்க்க வேண்டும். ஹால்மார்க் தங்க நகைகளை மட்டுமே வாங்குவதன் மூலம் இதனை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், நீங்கள் வாங்கும் தங்கம் 18 காரட்டா, 22 காரட்டா அல்லது 24 காரட்டா என்று அதன் தரத்தையும் சோதித்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
பொதுவாக, விலையுயர்ந்த உலோகத்தின் விலைகள் சர்வதேச விலைகளை ஒட்டியே இருக்கும். உலகளவில், தங்கத்தின் விலை உயரும்போது, இந்நகரத்திலும் அதன் விலை உயரும். அதனால், சர்வதேச தங்க விலைகளைத் தொடர்ந்து நீங்கள் கண்காணித்து வந்தால், வதோதராவில் தங்க விலைகளில் ஏற்படக்கூடிய ஏற்ற இறக்கங்களையும் எளிதாக உங்களால் கணிக்க இயலும்.
இது போக, அரசு அவ்வப்போது விதிக்கும் வரிகளைப் பொறுத்து தங்க விலைகள் மாறுபடும் என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். 2017-18 ஆம் ஆண்டிற்கான யூனியன் பட்ஜெட்டில், அரசு தங்கத்தின் மீதான வரியை உயர்த்தியது. வதோதராவின் உள்ளூர் சந்தையில் தங்க விலைகளின் மாறுபாட்டிற்கான காரணங்களுள் இதுவும் ஒன்று.
குஜராத்தின் மூன்றாவது பெரிய நகரமாக விளங்கும் வதோதரா, அதன் கலாச்சாரத் தலைநகராகத் திகழ்கிறது. நீங்கள் வரிவிதிப்பிற்குட்பட்டவராக இருந்தாலும் கூட, வதோதராவில் தங்கம் வாங்கும்போது, கண்டிப்பாகப் பில் வாங்க வேண்டியது மிகவும் முக்கியம்.
பில் வாங்கினால் சொத்து வரி உள்ளிட்ட பல வரிகளை நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும் என்பது உண்மை தான். நீங்கள் சுமார் 50,000 ரூபாய்க்கு மேற்பட்ட அளவு தங்க நகைகள் வாங்கினாலும் கூட, உங்கள் பான் கார்டு எண்ணை வழங்க வேண்டியிருக்கும். எனவே, பில் வாங்கிக் கொள்வது உங்களுக்கும் நன்மை பயக்கக்கூடியதே.
பில் வாங்கி வைத்துக்கொள்வது நீங்கள் தங்கத்தை மாற்ற நினைக்கையில் உங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். நகைக்கடை மற்றும் வங்கியில் கட்டாயம் பில் கேட்பர். எனவே எப்போதும் தவறாமல் பில் வாங்கிக் கொள்ளுங்கள். வதோதராவில் தங்கம் வாங்குவதற்கு அல்லது விற்பதற்கு முன் தங்க விலைகளைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
நிபந்தனை: இங்கு தரப்பட்டுள்ள தங்க விலை அனைத்தும் நகரத்தில் உள்ள பிரபலமான நகைகடைகளில் இருந்து பெறப்பட்டவை, குறிப்பிட்டுள்ள விலையில் வித்தியாசங்கள் இருக்கலாம். தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் மிக துல்லியமான தகவல்களை அளிக்க விழைந்துள்ளது. இந்த விலைகள் அனைத்தும் வாசகர்களின் தகவல்களுக்காக மட்டுமே அளிக்கப்படுகிறது. இங்கு குறிப்பிட்டுள்ள தகவல்கள் யாவும் கிரேனியம் இன்பர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் அதன் கிளை மற்றும் இணை நிறுவனங்களுக்கு சம்பந்தம் இல்லை. மேலும் குறிப்பிட்டுள்ள விலைகளை கொண்டு தங்கத்தை வாங்கவும், விற்கவும் அறிவுறுத்தப்படவில்லை. இதனால் ஏற்படும் வர்த்தகத்தில் கிடைக்கும் நஷ்டம் மற்றும் பாதிப்புக்கு நிறுவனம் பொறுப்பு இல்லை.