பீகார் மாநிலத்தின் தலைநகரமான பாட்னா ஒரு முக்கிய மையமாகும். இங்கிருந்து இந்த விலையுயர்ந்த உலோகத்திற்கு நல்ல தேவை அதிகரித்துள்ளது. இந்த நகரத்தில் தங்கம் வாங்குவதற்கு முன் 22 காரட் தங்கத்தின் விலை நிலவரத்தை பாட்னாவில் சரிபார்த்து விடுவது சிறந்த யோசனையாகும்.
கிராம் | 22 கேரட் தங்கம் இன்று |
22 கேரட் தங்கம் நேற்று |
22 கேரட் தங்கத்தின் தினசரி விலை மாற்றம் |
1 கிராம் | ₹ 4,860 | ₹ 4,810 | ₹ 50 |
8 கிராம் | ₹ 38,880 | ₹ 38,480 | ₹ 400 |
10 கிராம் | ₹ 48,600 | ₹ 48,100 | ₹ 500 |
100 கிராம் | ₹ 4,86,000 | ₹ 4,81,000 | ₹ 5,000 |
கிராம் | 24 கேரட் தங்கம் இன்று |
24 கேரட் தங்கம் நேற்று |
24 கேரட் தங்கத்தின் தினசரி விலை மாற்றம் |
1 கிராம் | ₹ 4,960 | ₹ 4,910 | ₹ 50 |
8 கிராம் | ₹ 39,680 | ₹ 39,280 | ₹ 400 |
10 கிராம் | ₹ 49,600 | ₹ 49,100 | ₹ 500 |
100 கிராம் | ₹ 4,96,000 | ₹ 4,91,000 | ₹ 5,000 |
தேதி | 22 கேரட் | 24 கேரட் |
Jan 21, 2021 | ₹ 48,600 500 | ₹ 49,600 500 |
Jan 20, 2021 | ₹ 48,100 100 | ₹ 49,100 100 |
Jan 19, 2021 | ₹ 48,000 40 | ₹ 49,000 40 |
Jan 18, 2021 | ₹ 47,960 60 | ₹ 48,960 60 |
Jan 17, 2021 | ₹ 47,900 -10 | ₹ 48,900 -10 |
Jan 16, 2021 | ₹ 47,910 -540 | ₹ 48,910 -540 |
Jan 15, 2021 | ₹ 48,450 20 | ₹ 49,450 20 |
Jan 14, 2021 | ₹ 48,430 -30 | ₹ 49,430 -30 |
Jan 13, 2021 | ₹ 48,460 -120 | ₹ 49,460 -120 |
Jan 12, 2021 | ₹ 48,580 270 | ₹ 49,580 270 |
பொதுவாக இந்திய மக்கள் தங்கத்தைப் பண்டிகைக் காலங்கள் அல்லது திருமண விழாக்கள் அல்லது சிறப்பான தருணங்களில் உற்றார் உறவினர்களுக்குத் தரும் பரிசுத் தேர்வுகளாக வாங்குகிறார்கள்.
பாட்னா நகர மக்கள் வட மற்றும் மேற்கு இந்திய கலாச்சாரத்தால் தாக்கம் ஏற்பட்டு அதனால் பொதுவாகத் தங்கத்தைப் பரிசளிக்கும் தேர்வாக வாங்குகிறார்கள். பாட்னா மக்கள் தங்கத்தை ஆபரணங்கள் மற்றும் நகைகளின் வடிவில் நுகர்கிறார்கள். அவர்கள் தங்கம் வாங்க உள்ளூர் நகைக்கடைகளில் கிடைக்கப்பெறும் சிறிய மற்றும் பெரிய வியாபாரிகளைச் சார்ந்திருக்கிறார்கள். இன்றைய நாட்களில் பாட்னாவில் தங்கத்திற்கான தேவை புதிய உயரங்களைத் தொட்டுக் கொண்டிருக்கிறது.
மக்கள் தங்கத்தின் மீது ஒரு முதலீட்டு வடிவத்திலும் அத்துடன் ஆபரணங்கள் மற்றும் நகை வடிவத்திலும் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். பண்டிகைக் காலங்களில் பாட்னாவில் தங்கத்திற்கான தேவை உச்சத்தைத் தொடுகிறது. தங்கத்தில் முதலீடு செய்யப் பத்திரங்கள், தங்க ஈடிஎஃப் கள், ஈ – கோல்ட், போன்ற பல்வேறு வழிகள் இருந்த போதிலும் மக்கள் பெரும்பாலும் திட வடிவத் தங்கத்திலேயே முதலீடு செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் திட வடிவத் தங்கமே தங்கத்தில் முதலீடு செய்யப் பாதுகாப்பான வழி என்று கருதுகிறார்கள். அரசாங்கம் மக்கள் இறக்குமதி செய்யப்பட்ட தங்கம் வாங்குவதைக் குறைக்கக் கடுமையான வரிகளை விதித்தல் போன்ற பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்தி வருகிறது. ஆனால், அது பாட்னாவில் தங்கத்திற்கு இருக்கும் கிராக்கியை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. பல்வேறு வெளிப்புறக் காரணிகளால் எப்போதெல்லாம் தங்கத்தின் விலைகள் சரிகிறதோ அப்போது பாட்னாவில் தங்கத்தின் தேவை அதிகரிப்பதை ஒருவர் கண்கூடாகக் காணலாம்.
பாட்னாவில் தங்கத்தில் முதலீடு செய்யப் பல்வேறு தேர்வுகள் இருக்கின்றன. அவற்றில் சில பின்வருமாறு:
மிகப் புகழ்பெற்ற வழிகளாவன:
1. தங்கத்தை நேரடியாக நாணயங்கள் மற்றும் கட்டிகளின் வடிவில் வாங்குதல்.
2. தங்கத்தை உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனத்தில் தங்கம் வாங்குதல் அல்லது பங்குகளில் முதலீடு செய்தல்.
3. தங்க ஃப்யூச்சர்கள் மற்றும் இதர தேர்வுகளில் முதலீடு செய்தல்.
4. தங்க ஈடிஎஃப் களில் முதலீடு செய்தல்.
தங்கத்தை நேரடியாகக் கட்டிகள் அல்லது நாணயங்களின் வடிவில் வாங்குவது தங்கத்தில் முதலீடு செய்யும் பிரசித்தி பெற்ற வழிகளில் ஒன்றாகும். பொதுவாகத் தனிநபர்கள் திட வடிவத் தங்கத்தில் முதலீடு செய்வதையே விரும்புகிறார்கள் ஏனென்றால் திட வடிவத் தங்கத்திற்கு எதிராக வங்கிகள் அத்துடன் என்பிஎஃப்சி (வங்கியல்லாத நிதியியல் சேவைகள்) போன்ற நிறுவனங்களில் கடன் பெறலாம்.
ஒரு நிறுவனத்தின் தங்கப் பங்குகளை வாங்குதல் அல்லது அதில் முதலீடு செய்தல் சாமர்த்தியமான முதலீட்டு முறையாகும். ஒருவர் பார்ரிக் கோல்டு, நியுமான்ட் மைனிங், ஆங்லோ கோலட் அஷாந்தி போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்யலாம். லாபமும் நஷ்டமும் முழுமையாகத் தங்க விலைகளின் மாற்றத்தைப் பொறுத்து அமைகிறது. எனவே இந்த நிறுவனங்களில் முதலீடு செய்வதென்றால் தங்கத்தில் முதலீடு செய்வதாகவே பொருள்.
தங்க ஃப்யூச்சர்களில் மற்றும் தேர்வுகளில் முதலீடு செய்வது தங்கத்தில் முதலீடு செய்யும் வழிகளில் ஒன்றாகும். திட வடிவத் தங்கத்தைத் தவிர்த்து, மீதமிருக்கும் தங்கத்தில் முதலீடு செய்யும் அனைத்து முறைகளும் எலக்ட்ரானிக் வடிவில் செய்யப்படுபவையாகும். இதில் தங்க ஈடிஎஃப் களும் அடங்கும்.
பாட்னாவில் தங்கத்தின் நேரடி விலைகளின் இயக்கம் ஒரு தொகுப்பான பல காரணிகளைச் சார்ந்துள்ளது. இவற்றில் மிகப் பெரியதாக இருப்பது சர்வதேச தங்க விலைகள். இது டாலர் ரூபாய் மதிப்புக்கு எதிராக எப்படி நகர்கிறது, பணவீக்க விகிதங்கள் மற்றும் வட்டி விகித இயக்கங்களைப் பொறுத்தது. இருந்தாலும், பாட்னாவில் தங்கம் வாங்குபவர்களுக்குச் சார்ந்திருக்க வேண்டிய முக்கியக் காரணிகளில் ஒன்று தங்கத்தின் விலையோடு இணைந்த செய்கூலி போன்ற இதர விஷயங்களாகும்.
இன்று, தங்கத்தின் மதிப்பைப் போல 10 சதவீதம் செய்கூலியும் அதிகரித்துள்ளது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, இந்த விலையுயர்ந்த உலோகத்தை வாங்குவதற்கு முன் பாட்னாவில் தங்கத்தின் விலையோடு செய்கூலிகளையும் சரிபார்க்க வேண்டியது அவசியமாகிறது. நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியக் காரணி தங்கம் வாங்கும் போது நீங்கள் வாங்கும் தங்கத்திற்கு ரசீதைப் பெற்றுக் கொள்வதாகும். நீங்கள் மாற்ற வேண்டிய நிலை வரும் போது தங்கத்தைப் பரிமாற்றம் செய்து கொள்ள விரும்பினால், இந்த ரசீது உங்களை நல்ல முன்னிலையில் வைக்கும்.
பாட்னாவில் தங்கம் வாங்க ஏராளமான இடங்கள் இருக்கின்றன. உதாரணமாக, அங்கே பிரபலமான தனிஷ்க் ஷோரூம்கள் உள்ளன. இங்கே நீங்கள் இந்த விலையுயர்ந்த உலோகத்தை வாங்கி மகிழலாம். பி.சி ஜுவல்லர்ஸ் என்னும் பிரசித்தி பெற்ற நகைக் கடையின் கிளை பாட்னாவில் போரிங் சாலையில் இருக்கிறது. உண்மையில் போரிங் சாலையில் ஏராளமான நகை கடை இருக்கின்றன. இங்கே நீங்கள் தங்க நகைகளை வாங்கிக் கொள்ளலாம். சுவாரஸ்யமாக, இந்த நகரத்தின் பெரும்பாலான நகை கடை 22 காரட் ஹால் மார்க் முத்திரையிடப்பட்ட தங்கத்தையே விற்பனை செய்கின்றன. நாங்கள் ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளை வாங்குவதன் அவசியத்தை அதிகமாக வலியுறுத்துகிறோம், ஏனென்றால் அவை எப்பொழுதும் தூய தங்கமாகக் கருதப்படுகிறது.
தங்கத்தின் மீது சில மறைமுகக் கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன, எனவே உங்களுக்குப் பாட்னாவில் தங்கம் வாங்கும் திட்டங்கள் இருந்தால் இந்தக் கட்டணங்களைப் பற்றித் தெரிந்து கொள்வது நல்லது, இவை செய்கூலி கட்டணங்கள், கழிவுக் கட்டணங்கள் என்று அழைக்கப்படுகின்றன. எனவே நகைக்கடைகாரர்கள் நம்மை ஏமாளிகளாக்க அனுமதிக்காமல் இருப்பதற்கு அத்தகைய கட்டணங்களைப் பற்றி நல்ல புரிதலைக் கொண்டிருப்பது சிறந்ததாகும்.
பாட்னாவில் வெகு சில நகை கடை கழிவுக் கட்டணங்களைச் சேர்ப்பதில்லை ஆனால் எந்தவித அறிவிப்புமின்றி அவர்கள் நகையைப் பொறுத்து செய்கூலியை 20% முதல் 30% வரை அதிகரித்து விடுகிறார்கள்.
பெரும்பாலும் பாட்னாவில் தனிநபர்கள் அவர்களுடைய பூர்வீக நகைகளை அல்லது புதிய வடிவமைப்புகளில் நகைகள் செய்து கொள்வதற்காகப் பழைய மாதிரி நகைகளை விற்று விடுகிறார்கள். அத்தகைய சமயங்களில் பொற்கொல்லர்களிடம் செல்வதை விட ஏதாவது பிரபல நகைக்கடை அல்லது நகை வியாபாரிகளிடம் செல்வது சிறந்ததாகும். பிரபல நகை கடை பூஜ்ஜிய செய்கூலி மற்றும் கழிவுக் கட்டணங்கள் போன்ற சலுகைகளை வழங்குகின்றன. அனைத்தையும் விட மிக முக்கியமாக அவர்கள் ஒரு விரிவான ரசீதை வழங்குவார்கள்.
பெரும்பாலான பிரபலமான நகை கடை பாட்னாவில் தங்கத்தின் விலைகளை நிர்ணயிக்கும் வாரியத்தில் உறுப்பினர்களாக இருப்பார்கள். பிரபலமான நகைக்கடைகளில் கணினி மயமாக்கப்பட்ட தரப் பரிசோதனைகள் செய்யப்படுகிறது. இதன் காரணமாகச் சோதிப்பதற்காக உங்கள் நகைகள் உருக்கப்படுவதில்லை மற்றும் அவர்கள் சிறந்த சலுகைகளை வழங்குவதன் காரணமாக நீங்கள் உங்களுடைய பழைய அல்லது பூர்வீக நகைகளை மாற்றிக் கொள்ளும் போது திருப்திகரமான பரிமாற்றத்தை மேற்கொள்ளலாம். விற்பதற்கும் வாங்குவதற்கும் முன்னால் பாட்னாவில் தங்கத்தின் விலை என்ன என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது கட்டாயமாகும். பாட்னாவில் சிறந்த தங்க விலைகளைச் சரிபார்த்துக் கொள்ளக் குட் ரிட்டர்ன்ஸ் இணையதளத்திற்கு வருகை தாருங்கள்.
ஒவ்வொரு நகரத்திலும் தங்கத்தின் விலைகள் ஒரு தங்கச் சங்கத்தினரால் தீர்மானிக்கப்படுகின்றன. பெரும்பாலும் அவை அந்தக் குறிப்பிட்ட நகரத்திலுள்ள முதன்மையான நகைக்கடைகளாக இருக்கும் அவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து விதமான சங்கங்களையும் அறிமுகப்படுத்தி உதவி செய்ய முனைகிறார்கள். அவர்கள் தினமும் தங்கத்தின் விலைகளை இணைந்து நிர்ணயிக்கிறார்கள். அத்துடன் பாட்னாவில் தங்கத்தின் விலைகளை நிர்ணயிக்கும் ஒரு சங்கமும் இருக்கிறது.
பாட்னாவில் தங்கத்தின் விலைகளைத் தீர்மானிக்கும் காரணிகள் உள்ளூர் நிலைகளும் அத்துடன் சில உலகளாவிய நிலைகளும் ஆகும். உள்ளூர் நிலைகள் என்பவை உள்ளூர் வரிவிதிப்புகள், போக்குவரத்துக் கட்டணங்கள் மற்றும் இதர வரிகளாகும். ஒவ்வொரு நகரத்திலும் இவை மாறுபட்ட கட்டணங்களாக இருக்கின்றன. இவை தான் தங்கத்தின் விலைகள் நகரத்திற்கு நகரம் மாறுபடக் காரணமாக இருக்கின்றன, மேலும் இது தான் ஒவ்வொரு நகரத்திலும் ஒரு இறுதியான விலையைத் தீர்மானிக்கத் தங்கச் சங்கங்களை வலியுறுத்துகின்றன.
பாட்னாவில் தங்கத்தின் விலைகளைப் பாதிக்கும் உண்மையான விஷயங்கள் மற்றும் தினத்திற்குத் தங்கத்தின் விலைகளில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் காரணிகள் உலகளாவிய நிலைகளாகும். மேலும் தங்கத்தின் விலைகள் எம்சிஎக்ஸ் ஃப்யூச்சர்ஸை (பல்வகை வணிகப் பொருட்களின் பரிமாற்ற இந்திய கட்டுப்பாட்டு நிறுவனம்) மற்றும் இதர கரன்சி இயக்கங்களை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படுகின்றன. எம்சிஎக்ஸ் என்பது இன்டியை அடிப்படையாகக் கொண்ட தனிப்பட்ட வர்த்தகப் பொருட்களின் பரிமாற்றகமாகும். இது ஃப்யூச்சர்களில் தங்கம், இரும்பு சேர்க்காத உலோகங்கள், ஆற்றல் மற்றும் ஏராளமான விவசாய வர்த்தகப் பொருட்களை வழங்குகிறது. அந்த எண்ணிக்கையின் அடிப்படையில் தங்கத்தின் விலைகளில் ஏராளமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. மேலும் உலகெங்கும் கரன்சியின் செயல்பாடும் பாட்னாவில் தங்கத்தின் விலையைப் பாதிக்கிறது.
நிபந்தனை: இங்கு தரப்பட்டுள்ள தங்க விலை அனைத்தும் நகரத்தில் உள்ள பிரபலமான நகைகடைகளில் இருந்து பெறப்பட்டவை, குறிப்பிட்டுள்ள விலையில் வித்தியாசங்கள் இருக்கலாம். தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் மிக துல்லியமான தகவல்களை அளிக்க விழைந்துள்ளது. இந்த விலைகள் அனைத்தும் வாசகர்களின் தகவல்களுக்காக மட்டுமே அளிக்கப்படுகிறது. இங்கு குறிப்பிட்டுள்ள தகவல்கள் யாவும் கிரேனியம் இன்பர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் அதன் கிளை மற்றும் இணை நிறுவனங்களுக்கு சம்பந்தம் இல்லை. மேலும் குறிப்பிட்டுள்ள விலைகளை கொண்டு தங்கத்தை வாங்கவும், விற்கவும் அறிவுறுத்தப்படவில்லை. இதனால் ஏற்படும் வர்த்தகத்தில் கிடைக்கும் நஷ்டம் மற்றும் பாதிப்புக்கு நிறுவனம் பொறுப்பு இல்லை.