முகப்பு  »  வெள்ளி விலை  »  மும்பை

மும்பை வெள்ளி விலை (28th September 2022)

Sep 28, 2022
55 /கிராம் -0.40

மும்பையில் வெள்ளி விலைகள் கடந்த சில ஆண்டுகளில் மந்த நிலையில் உள்ளது. லெஹ்மென் பிரதர்ஸ் நெருக்கடி வெடித்ததில் இருந்து 2008 ஆம் ஆண்டிற்குப் பிறகு வெள்ளி விலை ஏறியது மற்றும் ஒரு தொடர்ச்சியான நிலையில் உள்ளது. இருப்பினும், கடந்த சில ஆண்டுகளில் விலை எங்கும் நகரவில்லை. முதலீட்டாளர்கள் பங்குகளில் முதலீடு செய்துள்ளனர். பங்குகளை புதிய உயரங்களுக்கு 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளிலிருந்து உயர்த்தியுள்ளனர். இருப்பினும், 2016 ஆம் ஆண்டில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்றம் ஏற்பட்டது. முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று தங்கம் மற்றும் வெள்ளி வாங்கினர்.

மும்பை இன்றைய வெள்ளி விலை நிலவரம் - ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்(ரூ.)

கிராம் வெள்ளி விலை
இன்று
வெள்ளி விலை
நேற்று
வெள்ளி விலையில்
தினசரி விலை மாற்றங்கள்
1 கிராம் 55 55.40 -0.40
8 கிராம் 440 443.20 -3.20
10 கிராம் 550 554 -4
100 கிராம் 5,500 5,540 -40
1 கிலோ 55,000 55,400 -400

மும்பை கடந்த 10 நாட்களில் 1 கிலோ பார் வெள்ளியின் விலை நிலவரம்

தேதி 10 கிராம் 100 கிராம் 1 கிலோ
Sep 28, 2022 550.00 5,500.00 55000.00 -400
Sep 27, 2022 554.00 5,540.00 55400.00 -900
Sep 26, 2022 563.00 5,630.00 56300.00 0
Sep 25, 2022 563.00 5,630.00 56300.00 0
Sep 24, 2022 563.00 5,630.00 56300.00 -500
Sep 23, 2022 568.00 5,680.00 56800.00 -1200
Sep 22, 2022 580.00 5,800.00 58000.00 600
Sep 21, 2022 574.00 5,740.00 57400.00 200
Sep 20, 2022 572.00 5,720.00 57200.00 500
Sep 19, 2022 567.00 5,670.00 56700.00 0

இந்தியாவில் வெள்ளி விலைக்குறித்த வாரம் மற்றும் மாதாந்திர வரைபடம்

வெள்ளி விலையின் வரலாறு மும்பை

 • தங்கம் விலை மாற்றங்கள் மும்பை, August 2022
 • வெள்ளி விலை 1 கிலோ
  1 st August விலை Rs.58,000
  31st August விலை Rs.50,800
  உயர்ந்த விலை August Rs.59,300 on August 13
  குறைவான விலை August Rs.50,800 on August 31
  ஒட்டுமொத்த செயல் பாடு Falling
  % மாற்றம் -12.41%
 • தங்கம் விலை மாற்றங்கள் மும்பை, July 2022
 • தங்கம் விலை மாற்றங்கள் மும்பை, June 2022
 • தங்கம் விலை மாற்றங்கள் மும்பை, May 2022
 • தங்கம் விலை மாற்றங்கள் மும்பை, April 2022
 • தங்கம் விலை மாற்றங்கள் மும்பை, March 2022

வெள்ளி ரகசியங்கள்:

மனித சமூகம் முதன்முதலில் கண்டுபிடித்த முதல் ஐந்து உலோகங்களில் வெள்ளியும் ஒன்று. சில காலத்திற்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட வெள்ளிப்பொருட்கள், கி.பி. 4000-ஆம் ஆண்டுக்கு முந்தையதாக உள்ளன. பண்டைய எகிப்தியர்கள் காலத்தில் செலாவணியாக வெள்ளி பயன்படுத்தியுள்ளது. ஒரு காலத்தில் தங்கத்தைவிட வெள்ளியின் விலை கூடுதலாக இருந்தது ஆச்சரியமான தகவலாகும். வெள்ளி உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. வெள்ளிக் கரண்டியுடன் பிறந்தவர்(பார்ன் வித் சில்வர் ஸ்பூன்) என்று கூறுவதை பலரும் கேட்டிருக்கலாம். பணக்கார‌ வசதி வாய்ப்புகளுடன் குழந்தை வளர்ந்து வருவதை தான் அப்படி கூறுவார்கள்.

கிருமி கொல்லியாக இருப்பதால், பணக்கார குடும்பங்களில் இன்றைக்கும் குழந்தைகளுக்கு சோறு ஊட்ட வெள்ளிக் கரண்டி அல்லது கிண்ணங்கள் பயன்படுத்தப்படுவதை எல்லோரும் பார்த்திருக்கலாம். ஆங்கிலோ-சாக்சன் மொழியில் சியோல்ஃபர்(Seolfor) என்ற வார்த்தையில் இருந்து தான் Silver(வெள்ளி) என்ற வார்த்தை வந்துள்ளது. ஆங்கிலத்தில் Silver என்ற சொல்லை எதுகை மோனையுடன் கூறுவதற்கு நிகரான சொல் இல்லை. 14-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெள்ளிக்கும் பணத்திற்கும் ஒரே பெயர் தான் பயன்படுத்தப்படுகிறது.

மெருகூட்டினால் வெள்ளி பளபளப்பாக மின்னும். மெருகூட்டப்பட்ட வெள்ளிப்பொருட்கள் மீது விழும் 95% ஒளிக்கீற்றுகள் பிரதிபலிக்கின்றன. பிரதிபலிக்கும் இயல்பால் கண்ணாடிகளில் வெள்ளி பயன்படுத்தப்படுவது சாதாரணம். நுண்ணோக்கி(மைக்ரோஸ்கோப்), தொலைநோக்கி(டெலஸ்கோப்), சூரிய தகடுகள்(சோலார் பேனல்) போன்ற கருவிகளிலும் வெள்ளி பயன்படுத்தப்படுகிறது.

உலகில் வெள்ளியை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு மெக்சிகோ. 2017-ஆம் ஆண்டில் மெக்சிகோவில் 5600 மெட்ரிக் டன் வெள்ளி உற்பத்தி செய்யப்பட்டது. சீனாவுக்கு அடுத்தப்படியாக வெள்ளியை தயாரிக்கும் இரண்டாவது பெரிய நாடு பெரு.

வெள்ளி, செலாவணியில் பயன்படுத்தப்படுகிறது. முந்தைய நூற்றாண்டில் செலாவணியாக பளபளக்கும் வெள்ளி இருந்துள்ளது. 1794-ஆம் ஆண்டில், முதன்முறையாக அமெரிக்கா டாலர் நாணயம் வார்க்கப்பட்டுள்ளது. உலகில் தயாரிக்கப்பட்ட முதல் வெள்ளி நாணயமாகவும் அது கருதப்படுகிறது. இதற்கு உலக அளவில் நல்ல வரவேற்பு கிடைத்ததால், பல்வேறு நாடுகளில் வெள்ளி நாணயங்கள் புழக்கத்திற்கு வந்தன. 2005-ஆம் ஆண்டில் பழைய வெள்ளி நாணயம் ஒன்று 5 மில்லியன் டாலருக்கு ஏலம் விடப்பட்டது. 1965-ஆம் ஆண்டுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட வெள்ளி நாணயங்களில் 90% வெள்ளி இருந்துள்ளது. 1965-66-ஆம் ஆண்டில் ஜான் கென்னடி காலத்தில் தயாரிக்கப்பட்ட வெள்ளி நாணயத்தில் 40% வெள்ளி இருந்துள்ளது. செயற்கை மழைக்கு(Cloud Seeding) சில்வர் ஐயோடைட்(Silver Iodide) பயன்படுத்தப்படுகிறது.

மேகத்தில் சில்வர் ஐயோடைட் வேதிப்பொருளை தெளித்தால் மழை பொழியும். மேலும் இந்த வேதிப்பொருள் சூறாவளியையும் தடுக்க உதவும். வெள்ளிப்பொருட்கள் நல்ல வெப்பக்கடத்தி ஆகும். தனிம அட்டவணையில்(Periodic table) இடம்பெற்றிருக்கும் உலோகங்களில் வெள்ளி சிறந்த மின் கடத்தியாகும். முதல் 100 வேதிப்பொருட்களுடன் ஒப்பிடுகையில், சிறந்த வெப்ப கடத்திகளின் வரிசையில் வெள்ளி 100-ஆவது இடத்தில் உள்ளது. இந்த வரிசையில் தங்கம் 76, தாமிரம் 97-ஆவது இடத்தில் உள்ளன.

தங்க நகைகளை விட வெள்ளி நகைகள் குளிர்ச்சியானதா?

ஒப்பீட்டளவில் தங்கத்திற்கு அடுத்தப்படியாக தான் வெள்ளி மக்களால் அதிகம் விரும்பப்படுகிறது. குறைந்த விருப்பமான உலோகங்களில் ஒன்றாகும். ஆனால், அண்மைகாலமாக ஆபரணச்சந்தையில் தங்கத்தைவிட வெள்ளி டிரெண்டாக உள்ளது. வாழ்க்கையில் வெள்ளி மற்றும் தங்கம் ஆகிய இரண்டும் அடையாள குறியீடாகவும், முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் உள்ளன. வெள்ளி அழகானது மட்டுமல்ல, மலிவானதும், ஆரோக்கிய நன்மைகளை கொண்டதாகும். நம் உடலில் உறுப்புகளை சமநிலைப்படுத்த வெள்ளி முக்கிய பங்காற்றி வந்துள்ளன.

இது நமது இரத்த நாளங்களை மீள்தன்மையுடன் வைத்திருக்க உதவுகிறது. எலும்பு மற்றும் தோல் உருவாக்கத்திலும், குணமாவதிலும் வெள்ளி முக்கிய பங்காற்றி வருகிறது. வெள்ளி தோல் வழியாக உடலுக்குள் உறிஞ்சப்படுவதோடு, அது வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது. பளபளப்புத்தன்மை மற்றும் நிறத்திற்காகவும் பலரும் வெள்ளி நகைகளை விரும்புகிறார்கள். ஆனாலும், வெள்ளியை வாங்குவதற்கு முன், இந்தியாவில் அதன் விலையை சரிபார்ப்பது அவசியம் ஆகும்.

வெள்ளி இ.டி.எஃப்

தங்க பரிமாற்ற-வர்த்தக - நிதி அல்லது கோல்டு எக்ஸ்சேஞ்ச் டிரேடெட் பண்ட் (கோல்டி இ.டி.எஃப்.) எல்லோரும் அறிந்தது. அதுபோல, இந்தியாவில் வெள்ளி பரிமாற்ற-வர்த்தக நிதி (exchange-traded fund -ETF) என்று ஒன்றில்லை. நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச்-இல் மின்னணு ஸ்பாட் சந்தையில் வெள்ளியை வாங்குவதற்கான வாய்ப்பு இல்லை. அப்படியானால், வெள்ளியில் முதலீடு செய்வதற்கு,அமெரிக்கச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள‌ வெள்ளி இ.டி.எஃப்-களை வாங்க வேண்டும். அதற்கு, பங்குச்சந்தை தரகரிடம் முதலில் கணக்கு தொடங்க வேண்டும். உலக பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை அளிக்க வல்லவரா? என்பதை உறுதி செய்துகொண்டு தரகரை முடிவுசெய்யலாம். வெள்ளி இ.டி.எஃப். ஒப்பந்தங்களைத் தொடர்ச்சியாக வாங்கலாம். அதன்பிறகு லாபம் கிடைத்தால், அவற்றை விற்கலாம். எனினும், முன்பேர சந்தையில் வர்த்தகத்தில் ஈடுபடுவது ஆபத்து மிகுந்தது. எனவே, மிகுந்த எச்சரிக்கை உடன் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும்.

ஆபரண வெள்ளி

வெள்ளி அதன் தூய வடிவத்தில் நகைகள் செய்யப் பயன்படுத்தப்படுவதில்லை. நகைக்கடைக்காரர்கள் பொதுவாக நாணய வெள்ளியைப் பயன்படுத்துகின்றனர். அதில் 92.5% வெள்ளியும் மற்றும் 7.5% இதர உலோகங்களும் அடங்கியிருக்கிறது. வழக்கமாகத் தாமிரம் பயன்படுத்தப்படுகிறது ஏனென்றால் அது வெள்ளிக்கு நீண்ட வாழ்நாளைத் தருகிறது.

சவாலான பொருளாதாரச் சூழ்நிலைகளில் நாணய வெள்ளி வெள்ளைத் தங்கத்திற்கு மாற்றாகக் கருதப்படுகிறது.

நாணய வெள்ளியை வாங்குவதற்கு முன் நகைக்கடைக்காரரை அல்லது விற்பனையாளரை நீங்கள் வாங்க ஆர்வமாக இருக்கும் நாணய வெள்ளி நகையைப் பற்றி அவர் அல்லது அவள் துல்லியமான தகவல்களைக் கொண்டிருக்கிறாரா என்று கேட்கவும். நாணய வெள்ளி நகைகளின் மதிப்பு அந்தப் பொருளின் விவரங்கள் மற்றும் வடிவமைப்பைப் பொறுத்து அமைகிறது.

நிபந்தனை: இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள வெள்ளியின் விலை அனைத்தும் நகரின் பெரிய நகைக்கடைகளில் இருந்து பெறப்பட்டவை. அதனால் விலையில் வித்தியாசம் இருக்கலாம். தமிழ் குட்ரிட்டர்ன்ஸ்.இன் இணையதளம் மிக துல்லியமான தகவல்களை அளிக்க அனைத்து முயற்சியையும் செய்கிறது. இங்கு குறிப்பிட்டுள்ள தகவல்களுக்கும் கிரேனியம் இன்பர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் அதன் கிளை மற்றும் இணை நிறுவனங்களுக்கு சம்பந்தம் இல்லை. மேலும் இங்குகுறிப்பிட்டுள்ள விலைகளை கொண்டு வெள்ளியை வாங்கவும், விற்கவும் அறிவுறுத்தப்படவில்லை. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வெள்ளி குறித்த தகவல்களை வைத்து வர்த்தகம் செய்து நஷ்டம் ஏற்பட்டால் நிறுவனம் பொறுப்பாகாது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X