ஒடிசாவில் பெரும்பாலான மக்கள் தங்கத்தின் மீது ஆர்வம் கொண்டவர்களாவர். ஒடிசாவிலுள்ள அனைத்துப் பிரிவு மக்களும் தங்கம் வாங்குவதில் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றனர் மேலும் அவர்கள் தங்கத்தை அணிவதையும் எண்ணற்ற பண்டிகைகள், குடும்ப விழாக்கள் மற்றும் திருமணங்களில் பரிசாகத் தருவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். ஒடிசாவின் தலைநகரான புபனேஷ்வரில் நீங்கள் தங்கத்தின் விலையைச் சரிபார்த்து வாங்க வேண்டும். மற்ற நகரங்களை விட இந்த நகரத்தில் தங்கத்தின் விலைகள் சிறப்பாக இருக்கின்றது.
கிராம் | 22 கேரட் தங்கம் இன்று |
22 கேரட் தங்கம் நேற்று |
22 கேரட் தங்கத்தின் தினசரி விலை மாற்றம் |
1 கிராம் | ₹ 4,594 | ₹ 4,594 | ₹ 0 |
8 கிராம் | ₹ 36,752 | ₹ 36,752 | ₹ 0 |
10 கிராம் | ₹ 45,940 | ₹ 45,940 | ₹ 0 |
100 கிராம் | ₹ 4,59,400 | ₹ 4,59,400 | ₹ 0 |
கிராம் | 24 கேரட் தங்கம் இன்று |
24 கேரட் தங்கம் நேற்று |
24 கேரட் தங்கத்தின் தினசரி விலை மாற்றம் |
1 கிராம் | ₹ 5,012 | ₹ 5,012 | ₹ 0 |
8 கிராம் | ₹ 40,096 | ₹ 40,096 | ₹ 0 |
10 கிராம் | ₹ 50,120 | ₹ 50,120 | ₹ 0 |
100 கிராம் | ₹ 5,01,200 | ₹ 5,01,200 | ₹ 0 |
தேதி | 22 கேரட் | 24 கேரட் |
Jan 25, 2021 | ₹ 45,940 0 | ₹ 50,120 0 |
Jan 24, 2021 | ₹ 45,940 -10 | ₹ 50,120 -10 |
Jan 23, 2021 | ₹ 45,950 -150 | ₹ 50,130 -170 |
Jan 22, 2021 | ₹ 46,100 -150 | ₹ 50,300 -150 |
Jan 21, 2021 | ₹ 46,250 450 | ₹ 50,450 490 |
Jan 20, 2021 | ₹ 45,800 150 | ₹ 49,960 160 |
Jan 19, 2021 | ₹ 45,650 150 | ₹ 49,800 160 |
Jan 18, 2021 | ₹ 45,500 10 | ₹ 49,640 10 |
Jan 17, 2021 | ₹ 45,490 -10 | ₹ 49,630 -10 |
Jan 16, 2021 | ₹ 45,500 -500 | ₹ 49,640 -540 |
கோவில்களின் நகரமான புவனேஷ்வரில் அங்குக் கிடைக்கும் இயற்கை அழகு மற்றும் பிரகாசத்தைத் தனிச்சிறப்பாகக் கொண்ட தங்கத்திற்காக அதிகமாக விரும்பி வாங்கப்படுகிறது.
புவனேஷ்வரில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் தங்கம் அதன் இயற்கையான அழகு மற்றும் பிரகாசத்திற்காக உலகெங்கும் விரும்பப்படுகிறது. பல கலாச்சாரங்களில் தங்கம் சூரியனைப் பிரதிபலிப்பதாகப் பழங்கதைகள் உண்டு.
நாம் எல்லோரும் அறிந்தபடி பொதுவாகத் தங்கம் மிகவும் பிரசித்தி பெற்ற நிறமான மஞ்சள் நிறத்தைக் கொண்டுள்ளது. ஆனால், வெவ்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது. உலோக கலப்பு அல்லது இதர உலோகங்களைத் தங்கத்துடன் கலப்பதால் இந்த வண்ணங்கள் கிடைக்கிறது.
பொதுவாக 24 காரட் தங்கத்தில் வெவ்வேறு நிறங்களில் உருவாக்க முடியாது. எனவே விதவிதமான நிறங்களில் தங்கம் வாங்க விரும்புபவர்கள் 22 காரட் தங்கத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று வெள்ளைத் தங்கமாகும். இது தூய தங்கத்துடன் பல்லாடியம் அல்லது வெள்ளி போன்ற உலோகங்களைக் கலந்து உருவாக்கப்படுகிறது. சில சமயங்களில் அதிகப் பிரகாசமான மினுமினுப்புடன் கடினமான மேற்பரப்பை உருவாக்க ரோடியம் சேர்க்கப்படுகிறது. இன்றைய நாகரிக உலகில் உலகெங்கும் திருமண மோதிரங்கள் வெள்ளைத் தங்கத்தில் செய்வது நவ நாகரிக பாணியாக உள்ளது.
இன்றைய காலக் கட்டத்தில் மேலும் ரோஸ் தங்கம் அல்லது பிங்க் தங்கமும் மணமகளுக்கான நெக்லஸ் மற்றும் வளையல்கள் செய்யும் நாகரிக பாணியாக இருக்கிறது. இந்த நிறத்தைப் பெறுவதற்குத் தங்கத்துடன் தாமிரம் மற்றும் வெள்ளி உலோகக் கலப்புச் செய்யப்படுகிறது. இந்த நிறங்கள் மட்டுமல்ல பச்சை போன்ற வெகு சில நிறங்களிலும் தங்கம் இருக்கிறது. இவை அதிகப் பிரசித்தி பெற்றவை அல்ல. ஆனால் தங்கச் சந்தையில் கிடைக்கப்பெறுகிறது.
ஓடிஸா மாநிலத்தில் புகழ்பெற்று விளங்கும் தங்க நகை கடைகளில் ஒன்று கிம்ஜி ஜுவல்லர்ஸ். இந்தக் கம்பனிக்கான ஷோரூம்கள் புவனேஸ்வரில் மட்டுமின்றிக் கட்டக் மற்றும் ரூர்கேலாவிலும் உள்ளன. இந்தக் கடைகள், நெக்லேஸ் , மோதிரம், தங்கப் பதக்கம், கம்மல் போன்றவற்றை விற்பனைக்கும் வைத்து உள்ளன. 22 கேரட் அல்லது 24 கேரட் தங்கம் ஏதுவாக இருந்தாலும் புவனேஸ்வர் நகரில் கிடைக்கும். இந்த நிறுவனத்தின் ஷோரூம்கள் மூலம் தனிஷ்க் ன் தங்க விலையை அறிந்து கொள்ள முடியும். புவனேஸ்வரில் உள்ள லால்சந்த் ஜுவல்லர்ஸ் கடையிலும் நகரின் தங்க விலையை அறிந்து கொள்ள முடியும்.
தங்கம் பொதுவாக 22 கேரட் தங்கம் மற்றும் 24 கேரட் தங்கம் என்று இரண்டு வகைகளில் விற்கப்படுகின்றன. 24 கேரட் தங்கம் என்பது சுத்தமான தங்கம் ஆகும். 22 கேரட் தங்கம் என்பது சிறிதளவு வேறு உலோக கலவையுடன் இருக்கும் தங்கம் ஆகும். பொதுவாகத் தாமிரம் தங்கத்துடன் கலந்து விற்கப்படும். ஒடிசாவில் 22 காரட் அல்லது 24 காரட் தங்கம், இவற்றில் எதை வாங்க வேண்டும் என்பது கேள்விக்குரியது. உண்மையில், நீங்கள் இந்த இரண்டு விதமான தங்கத்தையும் வாங்க முடியும். எளிய விளக்கம் இதுதான்: நீங்கள் தங்க நாணயங்களை வாங்குகிறீர்களானால், புவனேஸ்வரில் 24 காரட் தங்கத்தில் வாங்கலாம். மறுபுறம், நீங்கள் 22 காரட் வாங்குகிறீர்களானால், நீங்கள் அதைத் தங்க நகையாக வாங்க வேண்டும். தங்கம் உடையும் தன்மை கொண்டது , நகையாகச் செய்யும்போது முழுக்க முழுக்கச் சுத்தமான தங்கத்தைக் கொண்டு செய்தால் உடைய நேரலாம். ஆகவே 22 கேரட், தங்கம் பயன்படுத்தி ஆறஅனங்கள் செய்யும்போது, தாமிரத்தைக் கலவையால், அந்த நகை கெட்டியாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே 22 கேரட் வாங்கும்போது நகையாக வாங்க வலியுறுத்தப்படுகிறது.
இது தவிர, புவனேஸ்வரில் தங்கம் வாங்குவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இதில் பிரபலமான தங்க நாணயங்கள் அடங்கும். மேலும், நம் வாசகர்களுக்கு ஒரு விஷயத்தை வலியுறுத்த விரும்புகிறோம். நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்ய நினைக்கும்போது , நீங்கள் தங்க நகைகளின் மீது முதலீடு செய்ய வேண்டாம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால், இவற்றை விற்க முயற்சிக்கும்போது நகையாக இருந்தால், செய்கூலி, சேதாரம் என்று இதன் விலையில் வீழ்ச்சி ஏற்படலாம். தங்க நாணயமாக இருக்கும்போது இதனை விற்பது எளிது. அது 22 கேரட் அல்லது 24 கேரட் , இவற்றில் எதை வாங்க வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்யுங்கள்.
மாதாந்திர தங்க முதலீட்டுத் திட்டங்கள் புவனேஸ்வரில் நகைக் கடைகளால் நடத்தப்படும் பொதுவான திட்டங்களில் ஒன்றாகும். இந்தத் திட்டங்களில், முதலீட்டின் முடிவில், பெரும்பாலான நகை கடைகள், உங்கள் பங்களிப்பை விட 8% அதிகத் தங்கம் கொடுக்கும் விதமாக அமைந்துள்ளன.
புவனேஸ்வரில் தினசரி தங்க நகை விலையில் மாற்றம் ஏற்படுவதால், மக்களுக்கு இது ஒரு நல்ல திட்டமாகவே உள்ளது. இருந்தாலும் சில திட்டத்தில் சேருவதற்கு முன் ஆலோசனை செய்து பின்பு சேரலாம்.
மாதாந்திர தங்க முதலீடு திட்டத்தைச் செயல்படுத்தும் நிறுவனங்கள் பல்வேறு விதிமுறைகளை வைத்திருப்பர். அவற்றைச் சரியாய் படித்துப் புரிந்து கொண்டு பின்பு இத்திட்டத்தில் சேர விருப்பம் தெரிவிக்க வேண்டும். இதனால் உங்கள் பணத்தை இழக்க நேரிடாது.
உதாரணத்திற்கு, ஒரு வருடத்திற்கான தங்க முதலீட்டுத் திட்டத்தில் நீங்கள் உறுப்பினராக இருக்கிறீர்கள். இதில் பிரதி மாதம் ரூபாய் 2000 கட்ட வேண்டும். இதில் தொடர்ந்து 6 மாதங்கள் குறிப்பிட்ட தேதியில் பணத்தைச் செலுத்தி வந்திருக்கின்றீர்கள் . 7 வது மாதம் உங்களால் பணத்தைச் செலுத்த முடியவில்லை. அந்த நிறுவனத்தின் விதிப்படி, அப்போது, உங்கள் முதலீடு காலாவதியாகி, நீங்கள் இதுவரை கட்டிய மொத்த பணமும் உங்களுக்குத் திரும்பக் கிடைக்காமல் போகும். இப்படியும் நடக்கலாம்.
இப்படி, எல்லா நிறுவனமும் ஒரே மாதிரி விதிகளைக் கொண்டிருப்பதில்லை. அதனால், திட்டத்தில் சேருவதற்கு முன்னர், அதன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றி ஒன்று இரண்டு தடவை முழுதும் தெரிந்து கொண்டு பின்னர்ச் சேரலாம். சில நிறுவனங்கள், உங்கள் மொத்த தவணைகளையும் எடுத்துக் கொண்டு காணாமல் போகலாம். அதனால் நம்பகமான நிறுவனங்களை நம்பி முதலீடு செய்யுங்கள்.
புவனேஸ்வரில் தங்கம் வாங்குவதற்கு முன்னர்ச் சில விஷயங்களை நினைவில் கொள்வது அவசியம். புவனேஸ்வரில், நீங்கள் தங்கம் வாங்க முடிவு செய்தவுடன் தங்க விலையைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொள்வது முக்கியம். தங்கத்தின் விலை எல்லாக் கடைகளிலும் ஒரே விலையாக இருக்கும் என்றால், அடுத்தது செய்கூலி பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். இது ஒவ்வொரு கடையிலும் வித்தியாசப்படும். இந்த விலை சரியானதாக இருந்தால், தொடர்ந்து வாங்கத் துணியலாம். செய்கூலி என்பது, உங்கள் மொத்த விலையில் ஒரு பெரும்பகுதியை தீர்மானிக்கும் என்பதால் அதில் அதிகக் கவனம் கொள்வது அவசியம். அதன் பிறகு தங்கத்திற்கான மதிப்பைப் பற்றித் தெரிந்து கொள்ளுதல் அவசியம். பெரும்பாலும், ஹால்மார்க் தங்கத்தை வாங்குவது நல்லது.இந்த முறைகளை நீங்கள் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் தரமான தங்க நகைகளை மட்டுமே வாங்குவீர்கள் !
தங்கத்தில் வணிகம் செய்து பணம் சம்பாதிக்கும் சில தனிநபர்கள் இருக்கிறார்கள். நம்மில் பலருக்குத் தங்கத்தை எங்கே வாங்க வேண்டும் மற்றும் தங்கம் எங்கே கிடைக்கும் என்கிற விவரங்கள் தெரியும். வங்கிகளில் கூட டெபாசிட்டுகளுக்கு எதிராகத் தங்க நாணயங்களையும் மற்றும் தங்கக் கட்டிகளையும் ஒருவர் பெறலாம். நீங்கள் திட வடிவத் தங்கத்தை முதலீடாகவோ அல்லது வணிக நோக்கத்திற்காகவோ வாங்குவதாக இருந்தால் அதற்கு முன் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பொதுவாக வெகு சில சாமர்த்தியமான முதலீட்டாளர்கள் தங்கத்தில் எளிதாக வியாபாரம் செய்வதற்குத் தங்க ஈடிஎஃப் களில் முதலீடு செய்கிறார்கள். ஆனால் இதர சிலர் திட வடிவத் தங்கத்தில் முதலீடு செய்தால் அதைக் கொண்டு கடன் பெறும் நன்மை இருக்கிறது ஆனால் தங்க ஈடிஎஃப் களில் அது சாத்தியமில்லை என்பதை மனதில் கொண்டு திடத் தங்கத்தை வாங்குகிறார்கள். எனவே, திட வடிவத் தங்கத்தில் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்கள் அந்தத் தங்கத்தை எங்கே விற்கலாம் என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.
திட வடிவத் தங்கத்தை விற்கவிருக்கும் தனிநபர்கள் ஒரு குறிப்பிட்ட நாளில் புவனேஷ்வரில் தங்கத்தின் விலைகள் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும், இல்லையென்றால் சந்தை விலையை விடக் குறைவான விலைக்கு உங்கள் தங்கத்தை விற்க நேரிடும். நீங்கள் புவனேஷ்வரில் புதுப்பிக்கப்பட்ட தங்கத்தின் விலைகளை எங்கே தெரிந்து கொள்ளலாம் என்று சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. அந்த விவரங்களை நீங்கள் குட்ரிட்டர்ன்ஸ்.இன் இல் பெறலாம்.
புவனேஷ்வரில் தங்கத்தை விற்க வேண்டுமென்றால் நீங்கள் தங்கம் வாங்கும் போதே திரும்பவும் தங்கத்தை அவர்களிடமே விற்றால் வாங்கிக் கொள்ளக்கூடிய நகைக்கடைகளில் வாங்குவது சிறந்தது அல்லது பிரசித்தி பெற்ற நகைக் கடைகளான சின்டிகேட் ஜுவல்லர்ஸ் அல்லது கிம்ஜி ஜுவல்லர்ஸ் போன்ற நகைக் கடைகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
தங்கத்தின் மீதான வரிகளைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்பாக வரிகள் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். வரிகள் என்பது நமது மாநிலத்தின் வருவாய்க்காக மக்களால் அரசாங்கத்திற்குச் செய்யப்படும் பங்களிப்பு ஆகும். சில விஷயங்களைப் பொறுத்து அதைச் செலுத்த வேண்டி இருக்கும்.
சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு அவர்கள் ஈட்டும் வருமானத்தைப் பொறுத்து அதற்கு ஒரு வரிவிதிப்புப் படிநிலைகள் இருக்கும். இது எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. இது அவரவர் வாங்கும் சம்பளத்தைப் பொறுத்து அமையும். இந்த வரிவிதிப்புப் படிகள் வருடத்திற்கு வருடம் மாறுபடுகிறது.
வியாபாரம் அல்லது தொழில் செய்யும் இந்தியக் குடிமகன்கள் அவர்கள் செய்யும் வியாபாரத்திலிருந்து கிடைக்கும் லாபத்திற்கு வரிகள் செலுத்த வேண்டியிருக்கும் அல்லது சில சரக்குகள், சேவைகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகளுடன் வரிகள் சேர்க்கப்படுகிறது.
எளிமையான வார்த்தைகளில் சொல்வதானால் வரி என்பது ஒருவர் அவருடைய வருமானத்தைப் பொறுத்து அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய கட்டாய முதலீடு ஆகும். மேலும் வரிகள் முக்கியமாக இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:
1) நேர்முக வரி
2) மறைமுக வரி
1) சொத்து வரி
2) மூலதன ஆதாய வரி
சொத்து வரி – சொத்து வரி என்பது ரூ. 30 இலட்சத்திற்கும் அதிகமான மதிப்பில் சொந்தமாகத் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு விதிக்கப்படும். இது 30 இலட்சத்திற்கும் குறைவான மதிப்பில் தங்கம் வைத்திருப்பவர்களுக்குப் பொருந்தாது. புவனேஷ்வரில் தங்கத்தின் விலைகள் மாறிக் கொண்டே இருப்பதால் புவனேஷ்வரில் தங்கத்தின் விலைகளைத் தினமும் கண்காணிப்பது சிறந்தது.
மூலதன ஆதாய வரி – இது தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் மற்றும் தங்க நகைக்கடைக்காரர்களுக்கானது, ஏனெனில் அவர்கள் தங்கத்தில் வணிகம் செய்து அதிலிருந்து பணம் சம்பாதிக்கிறார்கள்.
நிபந்தனை: இங்கு தரப்பட்டுள்ள தங்க விலை அனைத்தும் நகரத்தில் உள்ள பிரபலமான நகைகடைகளில் இருந்து பெறப்பட்டவை, குறிப்பிட்டுள்ள விலையில் வித்தியாசங்கள் இருக்கலாம். தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் மிக துல்லியமான தகவல்களை அளிக்க விழைந்துள்ளது. இந்த விலைகள் அனைத்தும் வாசகர்களின் தகவல்களுக்காக மட்டுமே அளிக்கப்படுகிறது. இங்கு குறிப்பிட்டுள்ள தகவல்கள் யாவும் கிரேனியம் இன்பர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் அதன் கிளை மற்றும் இணை நிறுவனங்களுக்கு சம்பந்தம் இல்லை. மேலும் குறிப்பிட்டுள்ள விலைகளை கொண்டு தங்கத்தை வாங்கவும், விற்கவும் அறிவுறுத்தப்படவில்லை. இதனால் ஏற்படும் வர்த்தகத்தில் கிடைக்கும் நஷ்டம் மற்றும் பாதிப்புக்கு நிறுவனம் பொறுப்பு இல்லை.