முகப்பு  »  தங்கம் விலை  »  பெங்களூர்

பெங்களூர் தங்கம் விலை நிலவரம் (15th August 2022)

Aug 15, 2022
4,820 /கிராம்(22ct)

இந்தியாவின் சிலிக்கான் வேலி எனப் போற்றப்படும் பெங்களூரில், இந்தியாவின் பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை அதிகமாகவே உள்ளது. நகைகளை வாங்கும் முன் இன்றைய தங்க விலையை அறித்தும், தங்கத்தின் தூய்மை, தர சான்றிதழ் போன்றவற்றை கண்டிறிந்து வாங்க வேண்டும். குட்ரிட்டன்ஸ் தளத்தின் வாசகர்களுக்கு பயனளிக்கும் வகையில் பெங்களூரில் நிலவும் தங்கம் விலை பற்றிய தகவல்களை இங்கு அளித்துள்ளது.

பெங்களூர் இன்றைய 22 கேரட் தங்க விலை நிலவரம் - ஒரு கிராம் தங்கம் விலை நிலவரம்(ரூ.)

கிராம் 22 கேரட் தங்கம்
இன்று
22 கேரட் தங்கம்
நேற்று
22 கேரட் தங்கத்தின்
தினசரி விலை மாற்றம்
1 கிராம் 4,820 4,820 0
8 கிராம் 38,560 38,560 0
10 கிராம் 48,200 48,200 0
100 கிராம் 4,82,000 4,82,000 0

பெங்களூர் இன்றைய 24 கேரட் தங்க விலை நிலவரம் - ஒரு கிராம் தங்கம் விலை நிலவரம்(ரூ.)

கிராம் 24 கேரட் தங்கம்
இன்று
24 கேரட் தங்கம்
நேற்று
24 கேரட் தங்கத்தின்
தினசரி விலை மாற்றம்
1 கிராம் 5,258 5,258 0
8 கிராம் 42,064 42,064 0
10 கிராம் 52,580 52,580 0
100 கிராம் 5,25,800 5,25,800 0

கடந்த 10 நாட்களில் பெங்களூர் தங்கம் விலை நிலவரம் (10 கிராம்)

தேதி 22 கேரட் 24 கேரட்
Aug 15, 2022 48,200 0 52,580 0
Aug 14, 2022 48,200 0 52,580 0
Aug 13, 2022 48,200 400 52,580 430
Aug 12, 2022 47,800 400 52,150 440
Aug 11, 2022 47,400 0 51,710 0
Aug 10, 2022 47,400 -600 51,710 -650
Aug 9, 2022 48,000 400 52,360 430
Aug 8, 2022 47,600 0 51,930 0
Aug 7, 2022 47,600 0 51,930 0
Aug 6, 2022 47,600 -100 51,930 -110

பெங்களூர் தங்கம் விலைக்குறித்த வாரம் மற்றும் மாதாந்திர வரைபடம்

தங்க விலையின் வரலாறு பெங்களூர்

 • தங்கம் விலை மாற்றங்கள் பெங்களூர், July 2022
 • தங்கம் விலை 22 கேரட் 24 கேரட்
  1 st July விலை Rs.47,900 Rs.52,250
  31st July விலை Rs.47,250 Rs.51,540
  உயர்ந்த விலை July Rs.48,130 on July 2 Rs.52,500 on July 2
  குறைவான விலை July Rs.46,070 on July 21 Rs.50,250 on July 21
  ஒட்டுமொத்த செயல் பாடு Falling Falling
  % மாற்றம் -1.36% -1.36%
 • தங்கம் விலை மாற்றங்கள் பெங்களூர், June 2022
 • தங்கம் விலை மாற்றங்கள் பெங்களூர், May 2022
 • தங்கம் விலை மாற்றங்கள் பெங்களூர், April 2022
 • தங்கம் விலை மாற்றங்கள் பெங்களூர், March 2022
 • தங்கம் விலை மாற்றங்கள் பெங்களூர், February 2022
 • தங்கம் விலை மாற்றங்கள் பெங்களூர், January 2022

ஆபரணங்களில் ரத்தினக் கற்களை தவிர்ப்பது நல்லது:

ஆபரணங்களை வாங்குவதாக இருந்தால், அத்துடன் ரத்தினக் கற்கள் அல்லது நீங்கள் கூறுவது போல விலை உயர்ந்த கற்களை வாங்குவதை தவிர்ப்பது நல்லது. ரத்தின கற்களை எப்படி மதிப்பிடுவது என்பது உங்களுக்கு தெரியாது என்பதால், அதை வாங்குவதை தவிர்க்க வேண்டும். ரத்தினக் கற்களின் மதிப்பை கணக்கிடும் முறை அபத்தமானது மட்டுமல்ல, கேலிக்குரியதாகும். நீங்கள் ஆபரணத்துடன் ரத்தினக் கற்களை வாங்கும்போது, பூமியில் கிடைக்கும் அரியப்பொருள் என்பது போல சித்தரித்து அதை நமக்கு பொற்கொல்லர்கள் விற்பார்கள். ஆனால், அதன் உண்மையான மதிப்பை நீங்கள் அறிந்தால், இது கேலிக்கூத்து என்பதை உணர்வீர்கள். எனவே, ரத்தினக் கற்களை தவிர்த்துவிட்டு தங்கத்தாலான ஆபரணங்களை மட்டும் வாங்குவது மிகச் சிறந்ததாகும். அப்போதுதான் நீங்கள் வாங்குவது என்ன என்பது உங்களுக்கு தெரியும்.

தங்கத்தை வாங்கும்போது, என்ன வாங்க வேண்டும் என்பதில் தெளிவு இருக்க வேண்டியது அவசியமாகும். அப்போதுதான், அடுத்த சில ஆண்டுகளில் எவ்வித வருவாயையும் ஈட்டாத ஒன்றில் கடின உழைப்பில் சம்பாதித்த பணத்தை தேவையில்லாமல் செலவழிப்பதை தவிர்க்க முடியும். எனவே, தங்க ஆபரணங்களாக விற்பதும், வாங்குவதும் தான் நல்ல யோசனையாக இருக்க முடியும்.

916 ஹால்மார்க் செய்யப்பட்ட 22 கேரட் தங்க ஆபரணத்தை எங்கு சோதிப்பது?

தங்க ஆபரணங்களை வாங்கும்போது 916 ஹால்மார்க் செய்யப்பட்டதை வாங்குங்கள் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். ஹால்மார்க் செய்யப்பட்ட தங்க ஆபரணங்களை விற்கும் ஹால்மார்க் செய்யப்பட்ட தங்க நகைக்கடைகள் சென்னையில் எங்குள்ளன? என்பது பலரின் கேள்வியாக இருக்கும். தங்க ஆபரணத்தை வாங்கியதும் அதன் மீது 916 முத்திரை இடப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பிஐஎஸ் ஹால்மார்க்(BIS Hallmark) சின்னத்தை பாருங்கள். இந்த சின்னம், நீங்கள் வாங்கும் தங்க ஆபரணத்தின் உள்பகுதி அல்லது பின்பகுதியில் ஹால்மார்க் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும். சின்னம் பொறிக்கப்பட்ட தேதி, ஆண்டு ஆகியவற்றையும் காணலாம். இவற்றை எல்லாம் கடைபிடித்தால், ஹால்மார்க் செய்யப்பட்ட தங்க ஆபரணத்தை வாங்கி விட்டதாக மகிழ்ச்சி அடையலாம். வேறு தங்க ஆபரணங்களை விட ஹால்மார்க் செய்யப்பட்ட தங்க ஆபரணங்களை விற்பனை மிகவும் எளிதாகும். ஆனால், எல்லா நகைக்கடைக்காரர்களும் ஹால்மார்க் செய்யப்பட்ட தங்க ஆபரணங்களை விற்பதில்லை. குறிப்பாக கிராமப்பகுதிகளில் இருக்கும் நகைக்கடைகளில் ஹால்மார்க் செய்யப்பட்ட தங்க ஆபரணங்கள் கிடைக்காது.

 916 தங்கத்தின் விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?

ஜிஆர்டி அல்லது லலிதா ஜுவெல்லரியில் தங்கத்தின் விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்பது குறித்து எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா? சென்னையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுவது நீங்கள் நினைப்பது போல எளிமையானது அல்ல. சென்னையில் 916 தங்கத்தின் விலையை நிர்ணயிக்க கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும் காரணங்களை அறியலாம். 22 கேரட் தங்கம் மட்டுமல்லாது, எல்லா வகையான தங்கத்தின் வகைகளின் விலையும் எப்படி நிர்ணயிக்கப்படுகிறது.

1) வட்டி விகிதங்கள்: விலை நிர்ணயிக்கும் முக்கியமான காரணங்களில் வட்டி விகிதம் ஒன்றாகும். வளர்ந்த நாடுகளில் வட்டி விகிதங்கள் உயரும்போது, முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்றுவிட்டு, நிலையான வருவாய் தரக்கூடிய பத்திரங்களை வாங்குவார்கள். இது சென்னையில், தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

2) தங்கத்திற்கான தேவை: தங்கத்தை வாங்குவதற்கான தேவை குறைந்துவிட்டால், இயல்பாகவே அதன் விலையும் சரிவை சந்திக்கும். சந்தையில் தேவை அதிகரிக்கும்போது தான் அதன் விலையும் உயரும் என்பது வணிகத்தில் வாடிக்கையானதாகும். இது தங்கத்திற்கும் பொருத்தமானதாகும்.

3) அரசின் கொள்கைகள்: தங்கம் போன்ற விலை மதிப்பில்லான உலோகங்களுக்கு சாதகமாக அரசின் கொள்கை இல்லாதபோது அதன் விலை உயர்வது இயல்பாகும். உதாரணமாக, தங்கத்தின் மீது வரி மற்றும் கட்டணங்களை விதிக்கும்போது, அதன் விலை தானாக சரியும். அண்மையில் சரக்கு மற்றும் சேவை வரி வரம்புக்குள் தங்கத்தை கொண்டு வந்திருப்பதால், சென்னையில் தங்கத்தின் விலையில் மாற்றங்களை காண முடிந்தது. அரசின் வரி வரம்புக்குள் கொண்டு வந்ததால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சென்னையில் தங்கத்தின் விலை உச்சம் அடைந்தது. ஒரு வகையில் தங்கத்தொழிலுக்கு அதிருஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும். அதனால் தங்கத்தின் மீதான செய்கூலி கணிசமாக குறைந்தது. எனினும், தற்போதைய தங்கத்தின் விலையை சரக்கு மற்றும் சேவை வரி விதிப்புக்கு முந்தைய காலக்கட்டத்தைய விலையுடன் ஒப்பிடுவது கடினமானதாகும்.

4) உள்ளூர் காரணங்கள்: உள்ளூர் அரசின் வரி மற்றும் கட்டண விதிப்புகள் போன்ற பல உள்ளூர் காரணங்களும் தங்கத்தின் விலையில் விளைவுகளை ஏற்படுத்தும். சென்னையில் இன்றைய‌ தங்கத்தின் விலையை முடிவு செய்வதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. தங்கத்தை வாங்குவதற்கு முன்பு விலையை அறிந்து கொள்வது நல்லதாகும். அவசியம் இல்லாத நிலையில், அதிக விலை கொடுத்து தங்கத்தை வாங்குவதை தவிர்க்க வேண்டும். விலை வீழ்ச்சி அடையும்போது தங்கம் வாங்குவதை ஒரு உத்தியாக பயன்படுத்தலாம். நீண்டகால முதலீடாக தங்கத்தை வாங்கினால், அதில் வருவாய் கிடைக்கும். அதற்கு மாறாக, குறுகிய கால முதலீடுகளுக்கு தங்கத்தை வாங்குவது எதிர்பார்த்த பலனை தராது. இந்த எல்லா காரணங்களும் சென்னையில் தங்கத்தின் இன்றைய விலையை முடிவு செய்வதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள்:

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் செய்யப்படும் இறக்குமதியின் மொத்த அளவில் தங்கத்தின் மதிப்பு 10-15 சதமாகும். கச்சா எண்ணெய்க்கு அடுத்தப்படியாக இறக்குமதி அதிகம் செய்யப்படும் பொருள் தங்கம். கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் தங்கத்தின் விலை ராக்கெட்டை போல மேல் நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறது. 1966-ஆம் ஆண்டு 83 ரூபாய்க்கு விற்கப்பட்ட 10 கிராம் தங்கம், ஒரு கட்டத்தில் 432 ரூபாயாக உயர்ந்தது. 10 ஆண்டு காலத்தில் தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு பை நிறைய 5 மடங்கு லாபம் கிடைத்தது. 1986-ஆம் ஆண்டு ரூ.2 ஆயிரம் ஆனது. அடுத்த 10 ஆண்டுகளில்(1996) ரூ.5600 ஆக உயர்ந்த தங்கம், 2006-ஆம் ஆண்டு வாக்கில் ரூ.8400 ஆக உயர்ந்து முதலீட்டாளர்களின் வயிற்றில் பால் வார்த்தது. லேமன் பிரதர்ஸ் பிரச்சனைக்கு பிறகு மேலே மேலே பறந்தவண்ணம் இருந்த தங்கத்தின் விலையை யாராலும் பிடிக்க முடியவில்லை. இந்தியாவில் இன்றைக்கு 10 கிராம் தங்கம் ரூ.45 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

தங்க நாணயங்களை வாங்கும் முறை:

இந்தியாவில் பல்வேறு கிராம்களில் தங்க நாணயங்களை வாங்கலாம். தங்க நாணயங்களை எல்லா எடைகளிலும் வாங்கலாம். 1 கிராம், 2 கிராம், 4 கிராம் மற்றும் 10 கிராம்களில் தங்கத்தை வாங்க முடியும். விலைமதிப்பற்ற தங்கத்தை வாங்க பல வழிகள் உள்ளன. வெவ்வேறு தெய்வங்களின் உருவங்கள் பொறித்த தங்கத்தை பெறலாம். தங்கத்தை வாங்கும் முன் அதன் தூய்மையை உறுதி செய்ய வேண்டும். இந்தியாவில் உள்ள சில பிரபலமான மையங்களில் தங்கத்தை வாங்கலாம். கிரெடிட் கார்டு மூலம் தங்கத்தை வாங்கினால், தங்க‌த்தின் மீது கூடுதலாக வரி செலுத்த நேரிடும். நாணயங்களாக தங்கத்தை வாங்க விரும்பினால், நாட்டிலுள்ள பிரபலமான நகைக்கடைகளில் வாங்குமாறு பரிந்துரைக்கிறோம். தங்கத்தை கட்டிகளாகவும் வாங்கலாம். ஆனால், அவற்றின் விலை கொஞ்சம் கூடுதலாக இருக்கும். தங்க நாணயங்களை வாங்குவதற்கு, சில வங்கிகளையும் அணுகலாம். வங்கிகளில் கிடைக்கும் ஒருசில தங்க நாணயங்கள் ஸ்விஸ் தங்க நாணயங்கள், அவற்றின் பேக்கிங் டேம்பர் ப்ரூப்-ஆக இருக்கும். தங்கத்தை பல இடங்களில் இருந்தும் வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. எல்லா சூழ்நிலைகளிலும் தங்கத்தின் தூய்மையை சரிபார்ப்பது முக்கியமாகும். தங்கத்தை வாங்கும் போது ரசீது வாங்க மறக்காதீர்கள். தங்க‌த்தை விற்கும்போது ரசீதுகள் உதவியாக இருக்கும். நீண்டகாலம் வைத்துக் கொள்வதற்காக தங்கத்தை வாங்குங்கள். தங்க நாணயங்கள், தங்க இ.டி.எஃப்.-கள், தங்கக் கட்டிகள், சவரன் தங்கப் பத்திரங்கள் போன்ற பல முறைகளில் தங்கத்தை வாங்கலாம். பெரும்பாலான வங்கிகள் டேம்பர் ப்ரூப் உள்ள ஸ்விஸ் தங்க நாணயங்களை விற்பதால், இந்தியாவில் உள்ள வங்கிகள் மூலம் தங்க நாணயங்களை வாங்கலாம்.

தங்கத்தின் தூய்மையை சோதிக்க காந்த சோதனை

இந்தியாவில் தங்கத்தின் தூய்மையை சோதிக்க ஏராளமான வழிமுறைகள் உள்ளன. இதில் மிகவும் பிரபலமான முறை என்றால், அது காந்த சோதனை முறையாகும். அமிலத்தின் மூலம் தங்கத்தின் தூய்மையை அறிந்துகொள்வதை காட்டிலும் காந்த சோதனை மூலம் அறிவது எளிதானதாகும். அமில சோதனைக்கு எப்போது அமிலத்தை உடன் வைத்திருக்க வேண்டும்.

எங்கு சென்றாலும் சட்டை பையில் சிறிய அளவிலான காந்த துண்டை வைத்துக்கொண்டு செல்ல முடியும் என்பதால் காந்த சோதனை முறை மிகவும் எளிமையானதாகும். இதை எளிதாக புரிந்து கொள்ள முடியும் என்பது, இந்த முறையில் காணப்படும் சிறப்பம்சமாகும். தங்கத்தில் வேறு உலோகங்கள் சேர்க்கப்பட்டிருந்தால், உடனடியாக தங்கம் காந்தத்தால் ஈர்க்கப்படும். இது தவிர, தோல் சோதனையும் மிகவும் பிரபலமானதாகும். தங்க ஆபரணங்களை உங்கள் கைகளில் வைத்திருந்தால், அது அசல் தங்கமாக இல்லாதிருந்தால் அதன் நிறம் மாறும். ஒரு வேளை அசல் தங்கமாக இருந்தால், அதன் நிறம் மாறாது. இதன் மூலம் தங்கத்தின் தூய்மையை உறுதி செய்யலாம். இந்தியாவில் தங்கம் வாங்கும்போது அதை ஆய்வுசெய்து, புரிந்து கொள்ள இவை எளிமையான வழிமுறையாகும்.

இந்தியாவில் தங்கத்தை யார் இறக்குமதி செய்கிறார்கள்?

இந்தியாவில் தங்கம், சுரங்கங்களில் இருந்து எடுக்கப்படுவதில்லை. ஒருகாலத்தில், கர்நாடகத்தில் உள்ள கோலாரில் வெட்டி எடுக்கப்பட்டு வந்த தங்கச்சுரங்கம் மூடப்பட்டுவிட்டது. இந்தியாவில் 22 கேரட் தங்கத்தின் விலையை நிர்ணயிக்க, இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் விலையை பயன்படுத்துகிறோம். இந்தியாவில் தங்கத்தை இறக்குமதி செய்வோர் ஏராளமாக உள்ளனர். தங்கத்தை இறக்குமதி செய்வோர் பட்டியலில், அரசின் முன்னணி வங்கிகள், தனியார் வங்கிகள், மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்கள் உள்ளன. கடந்தப‌ல ஆண்டுகளாக, தங்கம் இறக்குமதி செய்யும் தனியார் நிறுவனங்களின் பட்டியலின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. இந்தியாவில் மொத்த விற்பனை தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதிலும், சில்லரை விற்பனை தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கும் முக்கியமான தங்க இறக்குமதியாளர்களை காணலாம்.
1) ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
2) பேங்க் ஆஃப் பரோடா
3) யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா
4) பேங்க் ஆஃப் இந்தியா
5) பஞ்சாப் நேஷனல் பேங்க்
6) யெஸ் பேங்க்
7) மினரல்ஸ் அண்ட் மெட்டல் டிரேடிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா

இந்தியாவில் தங்கத்தை இறக்குமதி செய்வோரின் பட்டியலில் ஒரு சிறியபகுதி தான் இது.

பெங்களூருக்கு தங்கம் இறக்குமதி

தங்கம் பொதுவாக மிகப் பெரிய வங்கிகளால் இறக்குமதி செய்யப்படுகிறது.

அதன் பிறகு அவர்கள் அதை வணிகர்களுக்சுகு விற்கிறார்கள் அங்கிருந்து சில்லறை விற்பனை கடைகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. நகைகள் செய்யும் தேவைக்காக இவை பொதுவாக பெரிய தங்கக் கட்டிகளாக வழங்கப்படுகின்றன. சர்வதேச விலைகள் உயரும் போது தங்கத்தின் விலைகள் இறக்குமதி செய்வதற்கு விலை அதிகமானதாகிறது. விலை உயர்வு இந்த விலையுயர்ந்த உலோகத்தின் மீது பிரதிபலிக்கும் போது வெளிப்படையாக அது வாடிக்கையாளருக்கும் கடத்தப்படுகிறது. தங்கத்தின் விலைகள் முன்னிலையில் இருக்கும் பெங்களூரில் ஃப்யூச்சர்ஸ் மார்க்கெட்டில் வர்த்தகம் செய்வது உங்களுக்கு சிறந்த அறிகுறிகளை அளிக்கிறது.

உதாரணமாக, நகைக்கடைகளில் விரைவில் தொடங்கப்படுவதை விட ஃப்யூச்சர் மார்க்கெட்டில் வர்த்தகம் வெகு விரைவில் தொடங்கப்படுகிறது. எனவே நீங்கள் பெங்களூரில் தங்கத்தின் விலைகளை பற்றிய தெளிவான குறிப்புகளை வெகு நாட்களுக்கு முன்னதாகவே பெறலாம். எனவே வருங்கால பாணியை மனதில் கொண்டு நீங்கள் விலைகள் உயர்வதை சற்று முன்னதாகவே தீ்ர்மானிக்கலாம். அந்த நாட்களில் நீங்கள் தங்கம் வாங்குவதைத் தவிர்த்து விடலாம். அனைத்து காலங்களிலும் தங்க்ததின் விலைகளின் மீது ஒரு கண் வைத்திருப்பது அவசியம் என்பதை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம். ஏனென்றால் இந்த விலையுயர்ந்த உலோகம், இனிமேல் மலிவான வணிகப் பொருளாக இருக்கப் போவதில்லை. மற்றும் விலைகளில் மாறுபாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. விலைகள் தற்போது நிலைப்பெற்றிருப்பதாக நீங்கள் உணர்ந்தால் வாங்கும் முடிவுகளை எடுப்பதற்கு இது சிறந்த நேரமாகும். இருந்தாலும், விலைகள் அடிக்கடி மாறக்கூடிய தன்மை கொண்டதாக இருப்பதால் நீங்கள் பக்கவாட்டில் பார்வையாளராக கவனித்து காத்திருந்தால் சிறப்பாக செயல்பட முடியும். இந்த நாட்களில் தங்கத்தை இறக்குமதி செய்வதில் பயனில்லை தங்கம் வாங்க உள்ளூர் நகைக்கடைகளையே பயன்படுத்துவது நல்லது. பெங்களூரு கடைகளில் நாம் பெறும் தரம் மிகவும் அற்புதமானதாக உள்ளது எனவே அதைத் தாண்டி நாம் தேட வேண்டிய அவசியமில்லை.

தங்கத்தில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?

இந்த விலை மதிப்பற்ற உலோகத்தின் மதிப்பு காலப்போக்கில் மங்குவதில்லை. உதாரணமாக, ஒரு கால கட்டத்தில் கரன்சியின் மதிப்பு சரிந்தது. ஒரு உதாரணத்திற்கு 100 ரூபாய் நோட்டின் மதிப்பைச் சொல்லலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதன் மதிப்பை போலவே இப்போது இல்லை. ஆனால், தங்கத்தின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால், இது தங்கத்தை பணவீக்கத்திற்க்கெதிரான மிகச் சரியான காப்பு அரணாக மாற்றியுள்ளது. உதாரணமாக சில ஆண்டுகளுக்கு முன், லெஹ்மன் பிரதர்ஸ் நெருக்கடி நிலைக்கு முன்பு வரை, தங்கம் ரூ. 8,800 க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு அது கிட்டதட்ட 3 மடங்கு முன்னேறியது. இது ஒரு அற்புதமான அடிச்சுவடாகும். இதிலிருந்து காலப்போக்கில் இந்த விலை மதிப்பற்ற உலோகத்திற்கு தொடர்ந்து நல்ல மதிப்பிருக்கும் என்று தெரிகிறது. இந்த ஒரு காரணத்தால் தான் பல முதலீட்டாளர்கள் தங்கத்தில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறார்கள். இந்த விலை மதிப்பற்ற உலோகத்திற்கு முதலிட்டாளர்களிடம் தொடர்ந்து கிராக்கி அதிகரித்து வருவதைப் பார்க்க முடிகிறது. எடுத்துக்காட்டாக, நிதிகளால் செழித்திருக்கும் மிக அதிகப் பணத்தை தங்கத்தில் அடையாளப்படுத்தி ஒதுக்கீடு செய்யும் ஈடிஎஃப் தங்கத்தை தனிநபர்கள் நம்புகின்றனர்.

பெங்களூர் வாசிகளுக்கான தங்கத்தைப் பற்றிய சில சுவாரண்யமான உண்மைகள்

பெங்களூரில் தங்கம் வாங்கும் மக்களுக்கு உபயோகமாக இருக்க கூடிய சில சுவாரஸ்யமான உண்மைகள் இங்கே தரப்பட்டுள்ளன. தங்கம் நீங்கள் பிசையும் மாவைப் போல மிக மிக மென்மையானது, எனவே தூய்மையான தங்கத்தை நீங்கள் உங்கள் கைகளால் பிசையலாம். அது சில குறிப்பிட்ட உலோகங்களுடன் உலோகக் கலப்பு செய்யும் போது மிகவும் கடினமாகிறது. விண்வெளிப் பயணிகளின் தலைக்கவசம் தங்கத்தில் செய்யப்படுகிறது, எதனால் என்று நீங்கள் கேட்கலாம். ஏனென்றால் அது சூரிய ஒளியை உள்ளே அனுமதிக்கும் அதே சமயத்தில் தீங்கு விளைவிக்கும் அகச் சிவப்புக் கதிர்களை உட்புக விடாமல் தடுத்து பாதுகாக்கிறது. மேலும் அது தலையைக் குளிர்ச்சியாக வைப்பதற்கு உதவுவதாக நம்பப்படுகிறது.

பெங்களூரில் தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக ஒரு அணிவரிசையில் இருக்கின்றன, இந்த மாதம் தொடங்கியது முதற்கொண்டே இந்த போக்கு மாறக்கூடிய சாத்தியம் இருப்பதாகத் தெரியவில்லை. பெங்களூரில் மற்ற எல்லாவற்றையும் விட தங்கத்தின் விலைகள் நிலையாக இருப்பதைக் பெரும்பாலும் காண முடிகிறது. எனவே, பெங்களூரின் சுவாரஸ்யமான தகவல்களைப் பற்றி மறக்காமல் அந்த விலையுயர்ந்த உலோகத்தை இப்போதே வாங்க முற்படுங்கள்.

பெங்களூர்வாசிகளின் தங்கத்தின் மீதான ஆர்வம் அந்த நகரத்தைப் போலவே பழமையானது. எனவே நீங்கள் முதலீடு செய்யத் தேடுபராக இருந்தால் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் தங்கத்தை வாங்குங்கள்.

பெங்களுரில் தங்கம் மற்றும் தங்க நகைகளை வாங்குவது எப்படி?

இந்நகரத்தில் தங்க நகைகள் வாங்க ஜாய் அலுக்காஸ், மலபார், கல்யாண் ஜூவல்லர்ஸ் தனிஷ்க், பீமா ஜூவல்லர்ஸ் என பல நகை கடைகள் உள்ளது. நகைகள் வாங்கும் முன் இன்றைய தங்க விலையை அறித்து கடைகளில் சிறந்த சலுகையை பெறலாம். இந்தியாவில் பிற நகரங்களை ஒப்பிடுகையில் பெங்களூரில் தங்கம் விலை சற்று அதிகமாகவே இருக்கும்.

நிபந்தனை: இங்கு தரப்பட்டுள்ள தங்க விலை அனைத்தும் நகரத்தில் உள்ள பிரபலமான நகைகடைகளில் இருந்து பெறப்பட்டவை, குறிப்பிட்டுள்ள விலையில் வித்தியாசங்கள் இருக்கலாம். தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் மிக துல்லியமான தகவல்களை அளிக்க விழைந்துள்ளது. இந்த விலைகள் அனைத்தும் வாசகர்களின் தகவல்களுக்காக மட்டுமே அளிக்கப்படுகிறது. இங்கு குறிப்பிட்டுள்ள தகவல்கள் யாவும் கிரேனியம் இன்பர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் அதன் கிளை மற்றும் இணை நிறுவனங்களுக்கு சம்பந்தம் இல்லை. மேலும் குறிப்பிட்டுள்ள விலைகளை கொண்டு தங்கத்தை வாங்கவும், விற்கவும் அறிவுறுத்தப்படவில்லை. இதனால் ஏற்படும் வர்த்தகத்தில் கிடைக்கும் நஷ்டம் மற்றும் பாதிப்புக்கு நிறுவனம் பொறுப்பு இல்லை.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X