முகப்பு  »  வெள்ளி விலை  »  பெங்களூர்

பெங்களூர் வெள்ளி விலை (28th September 2022)

Sep 28, 2022
60 /கிராம் -0.70

விலைமதிப்பற்ற உலோகங்களின் பெரும்பாலான விலைகள் கடந்த ஜனவரி தொடக்கத்தில் இருந்து உயர்ந்தன. பெங்களூரில் உள்ள வெள்ளி விலைகள் இதில் அடங்கும். வெள்ளி மற்றும் தங்கம் விலைகள் அதே திசையில் நகர முனைகின்றன. அவைகள் எதிர்காலத்தில் எவ்வாறு செல்லும் என்பது மிக முக்கியமான கேள்வி.

பெங்களூர் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்(ரூ.)

கிராம் வெள்ளி விலை
இன்று
வெள்ளி விலை
நேற்று
வெள்ளி விலையில்
தினசரி விலை மாற்றங்கள்
1 கிராம் 60 60.70 -0.70
8 கிராம் 480 485.60 -5.60
10 கிராம் 600 607 -7
100 கிராம் 6,000 6,070 -70
1 கிலோ 60,000 60,700 -700

பெங்களூர் கடந்த 10 நாட்களில் 1 கிலோ பார் வெள்ளியின் விலை நிலவரம்

தேதி 10 கிராம் 100 கிராம் 1 கிலோ
Sep 28, 2022 600.00 6,000.00 60000.00 -700
Sep 27, 2022 607.00 6,070.00 60700.00 0
Sep 26, 2022 607.00 6,070.00 60700.00 -800
Sep 25, 2022 615.00 6,150.00 61500.00 0
Sep 24, 2022 615.00 6,150.00 61500.00 -1000
Sep 23, 2022 625.00 6,250.00 62500.00 -500
Sep 22, 2022 630.00 6,300.00 63000.00 800
Sep 21, 2022 622.00 6,220.00 62200.00 400
Sep 20, 2022 618.00 6,180.00 61800.00 -200
Sep 19, 2022 620.00 6,200.00 62000.00 5300

இந்தியாவில் வெள்ளி விலைக்குறித்த வாரம் மற்றும் மாதாந்திர வரைபடம்

வெள்ளி விலையின் வரலாறு பெங்களூர்

 • தங்கம் விலை மாற்றங்கள் பெங்களூர், August 2022
 • வெள்ளி விலை 1 கிலோ
  1 st August விலை Rs.63,300
  31st August விலை Rs.50,800
  உயர்ந்த விலை August Rs.64,800 on August 13
  குறைவான விலை August Rs.50,800 on August 31
  ஒட்டுமொத்த செயல் பாடு Falling
  % மாற்றம் -19.75%
 • தங்கம் விலை மாற்றங்கள் பெங்களூர், July 2022
 • தங்கம் விலை மாற்றங்கள் பெங்களூர், June 2022
 • தங்கம் விலை மாற்றங்கள் பெங்களூர், May 2022
 • தங்கம் விலை மாற்றங்கள் பெங்களூர், April 2022
 • தங்கம் விலை மாற்றங்கள் பெங்களூர், March 2022

வெள்ளியில் முதலீடு:

தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவதற்கு பண்டிகை காலம் சிறந்தது என்று இந்திய மக்கள் கருதுகிறார்கள். இந்தியாவில் வெள்ளியில் முதலீடு செய்வதற்கு முன்பு சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். உலோகங்களில் முதலீடு செய்வது எப்போதும் சிக்கல் நிறைந்தது. பங்குகளை காட்டிலும் உலோகங்களை எளிதில் பணமாக்கி கொள்ளலாம் என்பதால், அதன் விலை ஊசலாட்டத்தில் இருந்து கொண்டே இருக்கும். வெள்ளியில் முதலீடு செய்வதற்கு முன்பு, அதில் உள்ள சிக்கல்களை அறிந்து கொள்வது அவசியமாகும். தங்கம், வெள்ளி போன்றவற்றுக்கு செலவு செய்ய மக்கள் ஆர்வமாக இருப்பது உண்மைதான். ஆனால், முதலீடு என்ற நோக்கத்தில் தங்கமும் வெள்ளியும் வெவ்வேறான தன்மைகளை கொண்டது என்பதை நினைவில் வையுங்கள். வெள்ளியை காட்டிலும் தங்கம் நிலையானதாகும். அவ்வளவு எளிதில் தங்க‌ விலையில் மாற்றங்களை காண முடியாது.

தங்கத்திற்கும் வெள்ளிக்கும் பலவற்றில் பொருந்தி வந்தாலும், தங்கத்தை காட்டிலும் வெள்ளிப்பொருட்களில் தேய்மானம் அதிகமாக இருக்கும். அதனால் தான் வெள்ளியில் முதலீடு செய்வது ஆபத்தானது என்கிறோம்.

வெள்ளியை வாங்குவதற்கு பல வாய்ப்புகள் உள்ளன. ஆபரணங்கள் விற்பனையாளர், வங்கிகள் உள்ளிட்ட பலவற்றில் வெள்ளியை வாங்கி கொள்ளலம. பாரம்பரிய முறையில் வெள்ளியில் முதலீடு செய்ய விரும்பினால், நல்ல விற்பனையாளரை தேடி பிடித்து முதலீடு செய்யலாம். வங்கியில் வெள்ளியை வாங்குவதும் சிறந்ததுதான். சீரான முறையில் வெள்ளியில் முதலீடு செய்வது நல்லது. எல்லா பணத்தையும் ஒரே சமயத்தில் வெள்ளியில் மட்டும் முதலீடு செய்துவிடாதீர்கள். மாதாமாதம் கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்தால், விலை மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து லாபத்தை பார்க்க முடியும்.

வெள்ளியை கண்டுபிடித்தவர் யார்?

வெள்ளி ஒரு விலைமதிப்பற்ற உலோகமாகக் கருதப்படுகிறது. மேலும் க‌னிமங்களின் வரலாற்றில் வெள்ளிக்கு அசைக்க முடியாத சிறப்பிடம் உள்ளது. மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்ட முதல் ஐந்து உலோகங்களில் இதுவும் ஒன்றாகும். மற்ற உலோகங்களாக‌ தங்கம், தாமிரம், ஈயம் மற்றும் இரும்பு ஆகியவை அடங்கும். வெள்ளி கண்டுபிடிக்கப்பட்டதற்கான ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்று குறிப்பிடுகள் எதுவும் இல்லை. பண்டைய காலங்களில் இருந்து அறியப்படும் உலோகமாக வெள்ளி உள்ளது. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே வெள்ளி பயன்பாட்டில் உள்ளது. பூர்வீக வெள்ளி உலோகக் கட்டிகள், கனிமங்களிலும், சில சமயங்களில் ஆறுகளிலும் காணப்படுகின்றன, ஆனால் அவை மிகவும் அரிதானவை.

பல ஆண்டுகளாக வெள்ளி பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆபரணங்கள், பாத்திரங்கள், வர்த்தகப்பொருட்க‌ளாக வெள்ளி பயன்படுத்தப்படுகிறது. பண முறையிலும் வெள்ளி பங்காற்றி வருகிறது. கிமு 3000-ஆம் ஆண்டிலேயே ஈயத்தில் இருந்து வெள்ளி பிரிக்கப்பட்டதற்கான‌ சான்றுகள் காண கிடைக்கின்றன. நீண்ட காலமாக, தங்கத்திற்கு அடுத்தப்படியாகவே விலைமதிப்பற்ற உலோகமாக வெள்ளி கருதப்படுகிற‌து. பெரு, மெக்சிகோ, அமெரிக்கா, போலந்து, செர்பியா, பொலிவியா, சிலி, சீனா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தாமிரம், ஈயம், ஈயம்-துத்தநாகம் மற்றும் தங்கம் ஆகியவற்றின் உலோகக்கலவைகளில் வெள்ளி காணப்படுகிறது.

வெள்ளியை வர்த்தகம் செய்வது எப்படி?

நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச்(NSEL)-இல் இ-சீரிஸ் பொருள்கள், குறிப்பாக இ-கோல்டு(தங்கம்), இ-சில்வர்(வெள்ளி) ஆகியவை உள்ளன. பங்குச்சந்தையை போலவே வெள்ளியைவைத்து வர்த்தகம் செய்யலாம் அல்லது முதலீடுகளில் மக்கள் ஈடுபடலாம். என்.எஸ்.இ.எல். சந்தையில் வர்த்தகம் செய்வதற்கான நேரம் காலை 10 மணி முதல் காலை 11.30 மணி வரை. 100 கிராம் வெள்ளி ஒரு அலகு வெள்ளி என்று கூறப்படுகிறது. முதலீட்டாளர்கள் குறைந்தது ஒரு அலகு வெள்ளியை வாங்கலாம். இதை டிமேட்(Demat) வடிவில் மெய்நிகர்(Real Time) நேரத்தில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் விலையில் வெள்ளியை வாங்கலாம். சர்வதேச தங்கம்/வெள்ளி விலையை கண்காணித்து நிர்ணயிக்கப்படும் விலையில் வெள்ளியை வாங்க வாய்ப்புள்ளது. என்.எஸ்.இ.எல். சந்தையில் வர்த்தகத்தில் ஈடுபடவேண்டுமானால், முதலீட்டாளர்கள் ஏதாவதொரு டெபாசிட்டரியில்(Depository) தனியாக டிமேட் கணக்கு தொடங்கவேண்டும். டெபாசிட்டரிகள் குறித்த விவரங்களை என்.எஸ்.இ.எல். இணையதளத்தில் காணலாம். டிமேட் கணக்கு தொடங்கப்பட்டவுடன், இணையதளத்தில் பொருளற்ற வடிவில் வெள்ளியை முதலீட்டாளர்கள் வாங்கலாம். மின் வடிவில் பொருளற்றதாக வாங்கப்படும் வெள்ளியை, என்.எஸ்.இ.எல். சந்தையில் வர்த்தகம் செய்வதன் மூலம் திடப்பொருள் வெள்ளியாகவும், ரொக்கமாவும் முதலீட்டாளர்கள் மாற்றிக்கொள்ளலாம்.

தங்கத்திற்குப் போட்டியாக வெள்ளி

வெள்ளி தங்கத்தை விடச் சிறந்த வர்த்தகப் பயன்பாட்டைக் கொண்டிருக்கிறது. வெள்ளி பல்வேறு தொழிற்துறை பயன்பாடுகளில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது மாறாகத் தங்கம் 12% மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. நாகரிக வாழ்க்கையில், உயிர்க்கொல்லிகள், மின்னணு பொருட்கள், சோலார் பேனல்கள், பேட்டரிகள் மற்றும் பற்பல இயந்திரங்களுக்கு வெள்ளி அத்தியாவசியமானது.

தங்கத்துடன் ஒப்பிடும் போது வெள்ளிக்குச் சந்தையில் தேவைக் குறைவாக உள்ளது. வெள்ளியின் மொத்த வருடாந்திர தேவை தங்கத்தை விடக் குறைவாக இருக்கிறது. வெள்ளியின் தொழிற்துறை சிறியது. வெள்ளியின் விலைகள் சீரற்றது. தங்கத்தின் மேலாதிக்கப் பயன்பாடு பணமாக உள்ளது, எனவே அந்த மஞ்சள் உலோகம் பொருளாதார மந்த நிலையால் குறைவாகப் பாதிக்கப்படுகிறது.

நுண்ணுயிர் கொல்லிகளான ஆன்டிபயாடிக்ஸ் போல நமது நோய் எதிர்ப்பு அமைப்பில் சமரசம் செய்து கொள்ளாமல், வெள்ளி பாதுகாப்பான மற்றும் சுத்தமான முறையில் பாக்டீரியா நோய் தொற்றுக்களைத் துடைத்தெறிகிறது.

நிபந்தனை: இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள வெள்ளியின் விலை அனைத்தும் நகரின் பெரிய நகைக்கடைகளில் இருந்து பெறப்பட்டவை. அதனால் விலையில் வித்தியாசம் இருக்கலாம். தமிழ் குட்ரிட்டர்ன்ஸ்.இன் இணையதளம் மிக துல்லியமான தகவல்களை அளிக்க அனைத்து முயற்சியையும் செய்கிறது. இங்கு குறிப்பிட்டுள்ள தகவல்களுக்கும் கிரேனியம் இன்பர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் அதன் கிளை மற்றும் இணை நிறுவனங்களுக்கு சம்பந்தம் இல்லை. மேலும் இங்குகுறிப்பிட்டுள்ள விலைகளை கொண்டு வெள்ளியை வாங்கவும், விற்கவும் அறிவுறுத்தப்படவில்லை. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வெள்ளி குறித்த தகவல்களை வைத்து வர்த்தகம் செய்து நஷ்டம் ஏற்பட்டால் நிறுவனம் பொறுப்பாகாது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X