ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரமும் மற்றும் அந்த மாநிலத்தின் மிகப் பெரிய நகரங்களில் ஒன்றாகும். இந்த நகரத்தில் தங்கத்திற்கு எப்போதும் மிகப் பெரிய கிராக்கி இருக்கிறது. உண்மையில், இந்த மாநில மக்களுக்குத் தங்கம் மற்றும் அதைப் போன்ற ஆபரணங்கள் மீது எப்பொழுதும் மோகம் இருக்கிறது. ஜெய்ப்பூரில் தங்கத்தின் விலைகள் உலகளாவிய தங்க விலைகளுடன் இணையாக இயங்கி வருகிறது.
நாட்டில் மற்ற நகரங்களோடு ஒப்பிடும் போது இந்த நகரத்தில் தங்கத்தின் விலைகள் ஏறத்தாழ இருக்கின்றன. இருப்பினும் இந்தியாவின் மேற்கு பகுதியில் உள்ள மற்ற நகரங்கள் மும்பை மற்றும் உள்பட நகரங்களோடு ஒப்பிடுகையில் விலைகள் லாப விளிம்பில் உயர்ந்தோ அல்லது குறைந்தோ இருக்கின்றன.
கிராம் | 22 கேரட் தங்கம் இன்று |
22 கேரட் தங்கம் நேற்று |
22 கேரட் தங்கத்தின் தினசரி விலை மாற்றம் |
1 கிராம் | ₹ 4,840 | ₹ 4,791 | ₹ 49 |
8 கிராம் | ₹ 38,720 | ₹ 38,328 | ₹ 392 |
10 கிராம் | ₹ 48,400 | ₹ 47,910 | ₹ 490 |
100 கிராம் | ₹ 4,84,000 | ₹ 4,79,100 | ₹ 4,900 |
கிராம் | 24 கேரட் தங்கம் இன்று |
24 கேரட் தங்கம் நேற்று |
24 கேரட் தங்கத்தின் தினசரி விலை மாற்றம் |
1 கிராம் | ₹ 5,280 | ₹ 5,226 | ₹ 54 |
8 கிராம் | ₹ 42,240 | ₹ 41,808 | ₹ 432 |
10 கிராம் | ₹ 52,800 | ₹ 52,260 | ₹ 540 |
100 கிராம் | ₹ 5,28,000 | ₹ 5,22,600 | ₹ 5,400 |
தேதி | 22 கேரட் | 24 கேரட் |
Jan 21, 2021 | ₹ 48,400 490 | ₹ 52,800 540 |
Jan 20, 2021 | ₹ 47,910 110 | ₹ 52,260 110 |
Jan 19, 2021 | ₹ 47,800 150 | ₹ 52,150 170 |
Jan 18, 2021 | ₹ 47,650 -480 | ₹ 51,980 480 |
Jan 17, 2021 | ₹ 48,130 -10 | ₹ 51,500 -1010 |
Jan 16, 2021 | ₹ 48,140 -10 | ₹ 52,510 -10 |
Jan 15, 2021 | ₹ 48,150 -200 | ₹ 52,520 -230 |
Jan 14, 2021 | ₹ 48,350 0 | ₹ 52,750 0 |
Jan 13, 2021 | ₹ 48,350 0 | ₹ 52,750 0 |
Jan 12, 2021 | ₹ 48,350 300 | ₹ 52,750 330 |
சர்வதேச தங்க விலை மதிப்பிற்கு ஏற்றார் போல், ஜெய்ப்பூர் நகரிலும் தங்கத்தின் விலை மாறுபாடு இருக்கும்.
இதற்குக் காரணம், இந்தியா தன்னுடைய தங்கத்திற்கான தேவைகளை இறக்குமதி செய்து பூர்த்திச் செய்து கொள்கின்றது . இவை சர்வதேச விலை மதிப்பில் வாங்கப் படுகின்றன. ஆகவே இதற்கான விலையில் சர்வதேச விலையுடன் சேர்த்து, இறக்குமதி வரி, மற்றும் இதர வரி விதிப்புகளுடன் நாணய பரிமாற்ற ஏற்ற இறக்கங்களும் சேர்த்து வைத்து விற்கப்படுகின்றன.
இதில் நாணய பரிமாற்ற ஏற்ற இறக்கம் என்பது தங்க விலையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த கூடிய முக்கிய அம்சமாகும். உதாரணத்திற்கு, 1 டாலருக்கு இணையான இந்திய மதிப்பு 66 ஆக இருக்கும்போது, திடீரென்று 67 ஆக மாறும்போது, தங்கத்தின் இறக்குமதி விலை அதிகரிக்கிறது. இதன் மூலம் நமக்குத் தெரிவது என்ன வென்றால், இப்படி நாணய பரிமாற்றத்தில் ஏற்ற இறக்கம் ஏற்படும்போது , ஜெய்ப்பூரில் தங்கத்தின் விலை அதிகமாக இருக்கும் என்பதே.
ஜெய்ப்பூரில் தங்கம் வாங்குவதற்குப் பல்வேறு வழிகள் உள்ளன. இவற்றுள் மிகவும் பழமையான மற்றும் பாரம்பரியமான முறை என்பது தங்க நாணயம் மற்றும் தங்க கட்டிகள் வாங்குவது தான். இது தவிர, எலக்ட்ரோனிக் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியும் சில வழி முறைகள் இன்று நடைமுறையில் உள்ளன. இது கோல்டு எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட்ஸ் மூலம் நடைபெறுவதாகும். இந்தத் திட்டம், மியூச்சுவல் பன்ட் போல் செயல்படுவதாகும். இந்த முறையில் தங்கம் வாங்குவதில் சில நன்மைகள் உண்டு. அவற்றுள் ஒன்று, இதன் மூலம் தங்கத்தின் விலையைக் கணக்கெடுக்க முடியும். இதன் மூலம் தங்கத்தின் உண்மையான மதிப்பு தெரிய வருகிறது. மின்னணு தொழில்நுட்பம் என்பதால் திருடு போவது பற்றிய பயம் இல்லை. மேலும், இதற்கு எந்த ஒரு சேமிப்பு கட்டணமும் கிடையாது. எனவே, ஜெய்ப்பூரில் தங்க விகிதங்களைப் பரிசீலித்த பிறகு, இன்றைய தேதியில் கிடைக்கப்பெறும் தங்க கொள்முதல் விருப்பங்களை ஆலோசித்து நீங்கள் தங்கத்திற்கான முதலீட்டு முறையைத் தேர்வு செய்து கொள்ளலாம்.
தங்கம் வாங்குவது அல்லது விற்பனை செய்வதற்கு முன், ஜெய்ப்பூரில் தங்கத்தின் விலையைப் பற்றி அறிந்து கொள்வது நல்லது. ஜெய்ப்பூரில் 916 தங்கம் எனப்படுவது 22 கேரட் தங்கமாகும்.
விலை உயர்ந்த ஒரு உலோகமாகிய தங்கத்தை வாங்கும்போது ஹால்மார்க் தங்கத்தைத் தாண்டி வேறு எதையும் வாங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். இத்தகைய விலை உயர்ந்த தங்கத்தை வாங்க இங்குப் பல முக்கிய இடங்கள் உண்டு. தங்க நகையாக வாங்கும் போது, ஒரு முக்கிய விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும். நகையில் பதிக்கப்பட்டுள்ள கற்களுக்கும் சேர்த்து மொத்த விலை என்ன என்பதை அறிந்து கொண்டு, பின்பு அதனை வாங்க வேண்டும். விலை உயர்ந்த கற்கள் பதிக்கப்படும் போது, மொத்த நகையின் விலை, தங்கத்தின் விலையை விட 4 மடங்கு அதிக விலையைக் கொண்டிருக்கும் வாய்ப்புகள் உண்டு. ஆகவே இதில் கவனம் மிக அவசியம்
தனக்கென ஒரு வரலாறும், பாரம்பரியமும் கொண்ட நகை கடைகளைப் பார்த்துச் சென்று நகை வாங்குவது நல்லது. தங்கம் வாங்குவதற்கு முன், அது சுத்தமான தங்கம் தான் என்பதைப் பரிசோதித்து வாங்குவது நல்லது. ஜெய்ப்பூர் மாநிலம், தங்க விற்பனைக்கும் மட்டுமல்ல, வெள்ளி விற்பனைக்கும் பெயர் போன மாநிலம் ஆகும். தங்கத்தின் விலை, ஒவ்வொரு கடைக்கும் வேறுபடும். ஆகவே தங்கம் வாங்குவதற்கு முன், சில கடைகளில் அதன் விலையைப் பற்றித் தெரிந்து கொண்டு பின்பு விலை குறைவாக இருக்கும் கடையில் வாங்குவது நல்லது. மற்றொரு முக்கியமான விஷயம், செய்கூலி, செய்கூலி அதிகமாக இருக்கும்போது, அதனைக் குறைக்கச் சொல்லி பேசிப் பார்க்கலாம். அப்படியும் விலையைக் குறைக்கவில்லை என்றால், வேறு கடைகளை நாடலாம். சில கடைகளில் சில தள்ளுபடியும் கிடைக்கும்.
ஜெய்ப்பூர் மத்திய சந்தை ஏராளமான கடைகளுடன் அணிவகுப்பதால் சந்தோஷமாக ஷாப்பிங் செய்ய உகந்த இடமாகும். நீங்கள் ஜெய்ப்பூரில் ஏராளமான இடங்களில் தங்கம் வாங்கலாம். உதாரணமாகத் தங்க நகைகளை வாங்க மிகச்சிறந்த இடமாக அழைக்கப்படும் மிர்ஜா இஸ்மாயில் ரோடு அல்லது எம்ஐ ரோடில் வாங்கலாம். இதைத் தவிர இந்த நகரத்தில் ஏராளமான ரெடிமேட் ஆடைகளும் கிடைக்கின்றன.
இந்தச் சாலை அதிகமான வளைவுகளைக் கொண்டது மேலும் பழமையான மிக நுணுக்கமான கட்டடக்கலையைக் கொண்ட கடைகளைக் கொண்டது. இது சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வரும் இடமாகும். டெல்லியிலுள்ள கான்னவுட் என்ற இடத்திற்குச் சமமானது ஜெய்ப்பூர் ஆகும். இருந்தாலும் ஜெய்ப்பூரில் எந்த இடத்திலும் தங்கம் வாங்குவதற்கு முன் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியது, இந்த நகரத்தில் சிறந்த விலையைப் பெற கடுமையாகப் பேரம் பேச வேண்டும். இந்த நகரத்தில் தங்கத்தின் விலைகள் மாறுபடலாம் அல்லது படாமல் இருக்கலாம். ஆனால் சிறந்த விலையில் தங்கம் வாங்க நீங்கள் உள்ளூர் நகை கடைகளில் உங்களால் முடிந்த வரை நன்கு விசாரித்துப் பேரம் பேசி வாங்க வேண்டும். மேலும் இதர உள்ளூர் நகை கடைகளிலும் விலைகளைச் சரிபார்க்க வேண்டியது கட்டாயமாகும்.
ஜெய்ப்பூரில் தங்கம் வாங்க ஒரே வழி பாரம்பரியமான 22 காரட் மற்றும் 24 காரட் தங்கமே என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் மிகப் பெரிய தவறு செய்கிறீர்கள். இன்று ஜெய்ப்பூர் நகரம் சக்தி வாய்ந்ததாகத் திகழ்வதால் இங்குத் தங்கம் வாங்க அளவுக்கு அதிகமான தேர்வுகள் இருக்கின்றன. இவற்றில் அதிகப் பிரசித்தி பெறாத தங்க பரிமாற்ற வணிக நிதிகள் அல்லது ஈடிஎஃப்எஸ் களும் அடங்கும். தங்க ஈடிஎஃப் களை வாங்குவதிலுள்ள பிரச்சனை என்னவென்றால் உங்களுக்கு அதில் நிபுணத்துவம் இருக்க வேண்டும். மேலும் நீங்கள் ஈடிஎஃப் தங்கத்தை வாங்கி வியாபாரம் செய்வதற்கு முன் தங்கத்தின் விலைகள் எப்பொழுது முன்னிலையில் இருக்கும் என்று முன்கூட்டி கணிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
ஆனால் நீங்கள் ஜெய்ப்பூரில் வசிக்கும் போது இதற்கு முன் எப்போதும் தங்க ஈடிஎஃப் களை வாங்கியதில்லை என்றால் வாங்குவதற்கு முன் ஒன்றுக்கு இரண்டு முறை நன்றாக யோசிக்க வேண்டும். தங்க ஈடிஎஃப் கள் அற்புதமான முதலீட்டுத் தேர்வுகளாகும். இதிலுள்ள மிகப்பெரிய அனுகூலம் என்னவென்றால் உங்கள் தங்க நகைகளை யாராவது திருடன் வந்து திருடிக்கொண்டு போய்விடுவான் என்று நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. எனவே எப்போது வேண்டுமானாலும் திருடு போகும் சாத்தியங்களுள்ள திட வடிவ தங்கத்தைப் போல் அல்லாமல், இதில் உங்கள் தங்க முதலீடு பாதுகாப்பாக இருக்கும். எனவே நீங்கள் மீண்டும் எப்போதாவது தங்கத்தில் முதலீடு செய்ய நினைத்தால் இந்தத் தேர்வை பயன்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் உங்கள் தங்கத்தை லாக்கரில் இருந்து வெளியே எடுக்க நீங்கள் தினமும் வங்கிக்கு செல்ல வேண்டுமே என்று கவலைப்படத் தேவையில்லை.
ஜெய்ப்பூரில் இன்று தங்கத்தின் விலைகள் பெருமளவில் சர்வதேச மேம்பாட்டுத் தாக்கங்களைக் கொண்டு இருக்கிறது, குறிப்பாக டாலர் இந்திய ரூபாய் மதிப்புக்கு எதிராக எப்படி இயங்குகிறது என்பதைப் பொறுத்து இருக்கிறது. அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு சரியும் போது ஜெய்ப்பூரில் தொடர்ந்து தங்கத்தின் விலைகள் அதிகரிக்கிறது. சமீபத்தில், ரூபாய் மதிப்பு 66 லிருந்து 67.50 ஆகச் சரிந்துள்ளது. இது தங்கத்தின் விலைகளை அதிகரிக்கச் செய்துள்ளது. எனவே நீங்கள் ஜெய்ப்பூரில் தங்கம் வாங்குவதாக இருந்தால் தங்கத்தின் நேரலை விலை நிலவரங்களைக் கவனிப்பது சிறந்த யோசனை ஆகும்.
நாங்கள் உங்களுக்குப் புதுப்பிக்கப்பட்ட தங்க விலைகளை வழங்குகிறோம். நீண்ட கால வரையறையில் தங்கம் முதலீட்டாளர்களுக்கு நல்ல வருவாயைத் திருப்பித் தருகிறது. உதாரணமாக 2000 மாவது ஆண்டுகளின் தொடக்கத்தில் தங்கத்தின் விலை வெறும் ரூ. 2,000 மாக இருந்தது. ஆனால் இன்று ரூ. 26,000 விலையில் முன்னிலையில் இருக்கிறது. இந்த 15 வருடங்களில் இந்தப் பணத்தை நீங்கள் 10 மடங்காகப் பெருக்க முடியாது. இது ஜெய்ப்பூரில் ஒரு சிறந்த பந்தயத்தை உருவாக்குகிறது. உங்களிடம் பணம் இருந்தால் நீங்கள் இந்தத் தேர்வை தேர்ந்தெடுங்கள். நீண்ட கால வரையறையில் அதிலிருந்து லாபங்களைப் பெறலாம். ஜெய்ப்பூரில் வாங்கும் தங்கத்தைச் சில வருடங்களுக்கு அப்படியே முதலீட்டில் வைத்திருந்தால் அது உங்களுக்கு நல்ல லாபங்களைத் தரும்.
இந்தியாவின் பிங்க் நகரமான ஜெய்ப்பூரில் வண்ணவண்ண தங்க நகைகள் புகழ் பெற்றவை ஆகும். இவற்றில் மஞ்சள் தங்கம், வெள்ளைத் தங்கம், ரோஸ் தங்கம் மற்றும் பச்சை தங்கம் உள்ளிட்டவையும் அடங்கும். நமக்கெல்லாம் ஏற்கனவே தெரிந்தபடி, தங்க நகைகள் தங்கத்தின் தூய வடிவமல்ல, தங்கத்தின் காரட்டுகளைப் பொறுத்து அது இதர உலோகங்களுடன் கலக்கப்படுகிறது. இந்த நிறங்கள் வெள்ளி, தாமிரம், துத்தநாகம், பல்லாடியம் மற்றும் நிக்கல் போன்ற இதர உலோகங்களைக் கலப்பதால் கிடைக்கிறது.
தங்கத்தின் பொதுவான நிறமான மஞ்சள் நிறம் தூய தங்கத்துடன் வெள்ளி, தாமிரம் மற்றும் துத்தநாகத்தைக் கலப்பதால் வருகிறது.
வெள்ளைத் தங்கம் தூய தங்கத்துடன் பிளாட்டினம், பல்லாடியம், நிக்கல் மற்றும் துத்தநாகம் ஆகியவற்றின் கலவையாகும். வெள்ளைத் தங்கத்தின் தனிச் சிறப்பு என்னவென்றால் இது மஞ்சள் தங்கத்தை விட நீண்ட வாழ்நாளைக் கொண்டது மற்றும் விரைவில் கீறல்கள் ஏற்படாது.
ரோஸ் தங்கம் அல்லது பிங்க் தங்கம் என்பது தூய தங்கத்துடன் தாமிரம் மற்றும் வெள்ளியின் கலவையாகும். ரோஸ் தங்கம் தங்கத்தின் இதர நிறங்களிலும் வருகிறது. இந்த ரோஸ் நிற தங்கத்தைப் பெறுவதற்குத் தூய தங்கத்துடன் விலை மலிவான தாமிரம் அதிகமாகக் கலக்கப்படுகிறது.
எலக்ட்ரம் என்று அழைக்கப்படும் பச்சை தங்கம் தூய தங்கத்துடன் வெள்ளி மற்றும் தாமிரத்தின் கலவையாகும்.
பெரும்பாலான தனி நபர்கள் மஞ்சள் தங்கத்தையே வாங்க விரும்புகிறார்கள். வெள்ளை, பச்சை, பிங்க் போன்ற தங்கம் பெரும்பாலும் திருமண மோதிரங்கள் மற்றும் காதணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
நீங்கள் எந்த நிறத்தில் தங்கம் வாங்க விரும்பினாலும் வாங்குவதற்கு முன் ஜெய்ப்பூரில் தங்கத்தின் விலை நிலவரங்களைச் சரிபார்ப்பது நல்லதென்று அறிவுறுத்தப்படுகிறது.
நிபந்தனை: இங்கு தரப்பட்டுள்ள தங்க விலை அனைத்தும் நகரத்தில் உள்ள பிரபலமான நகைகடைகளில் இருந்து பெறப்பட்டவை, குறிப்பிட்டுள்ள விலையில் வித்தியாசங்கள் இருக்கலாம். தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் மிக துல்லியமான தகவல்களை அளிக்க விழைந்துள்ளது. இந்த விலைகள் அனைத்தும் வாசகர்களின் தகவல்களுக்காக மட்டுமே அளிக்கப்படுகிறது. இங்கு குறிப்பிட்டுள்ள தகவல்கள் யாவும் கிரேனியம் இன்பர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் அதன் கிளை மற்றும் இணை நிறுவனங்களுக்கு சம்பந்தம் இல்லை. மேலும் குறிப்பிட்டுள்ள விலைகளை கொண்டு தங்கத்தை வாங்கவும், விற்கவும் அறிவுறுத்தப்படவில்லை. இதனால் ஏற்படும் வர்த்தகத்தில் கிடைக்கும் நஷ்டம் மற்றும் பாதிப்புக்கு நிறுவனம் பொறுப்பு இல்லை.