விஜயவாடா ஆந்திர பிரதேசத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றாகும். மேலும் அந்த மாநிலத்தில் இந்நகரம் தங்கம் வாங்கவும் மற்றும் விற்கவும் ஒரு முக்கிய இலக்காகவும் திகழ்கிறது. இந்த நகரத்தின் நகைக் கடைக்காரர்கள் இந்தியா முழுவதற்குமான மிகச் சிறந்த மாதிரிகள் மற்றும் டிசைன்களை வழங்குகின்றனர்.
கிராம் | 22 கேரட் தங்கம் இன்று |
22 கேரட் தங்கம் நேற்று |
22 கேரட் தங்கத்தின் தினசரி விலை மாற்றம் |
1 கிராம் | ₹ 4,625 | ₹ 4,580 | ₹ 45 |
8 கிராம் | ₹ 37,000 | ₹ 36,640 | ₹ 360 |
10 கிராம் | ₹ 46,250 | ₹ 45,800 | ₹ 450 |
100 கிராம் | ₹ 4,62,500 | ₹ 4,58,000 | ₹ 4,500 |
கிராம் | 24 கேரட் தங்கம் இன்று |
24 கேரட் தங்கம் நேற்று |
24 கேரட் தங்கத்தின் தினசரி விலை மாற்றம் |
1 கிராம் | ₹ 5,045 | ₹ 4,996 | ₹ 49 |
8 கிராம் | ₹ 40,360 | ₹ 39,968 | ₹ 392 |
10 கிராம் | ₹ 50,450 | ₹ 49,960 | ₹ 490 |
100 கிராம் | ₹ 5,04,500 | ₹ 4,99,600 | ₹ 4,900 |
தேதி | 22 கேரட் | 24 கேரட் |
Jan 21, 2021 | ₹ 46,250 450 | ₹ 50,450 490 |
Jan 20, 2021 | ₹ 45,800 150 | ₹ 49,960 160 |
Jan 19, 2021 | ₹ 45,650 150 | ₹ 49,800 160 |
Jan 18, 2021 | ₹ 45,500 10 | ₹ 49,640 10 |
Jan 17, 2021 | ₹ 45,490 -10 | ₹ 49,630 -10 |
Jan 16, 2021 | ₹ 45,500 -500 | ₹ 49,640 -540 |
Jan 15, 2021 | ₹ 46,000 250 | ₹ 50,180 280 |
Jan 14, 2021 | ₹ 45,750 -450 | ₹ 49,900 -500 |
Jan 13, 2021 | ₹ 46,200 0 | ₹ 50,400 0 |
Jan 12, 2021 | ₹ 46,200 300 | ₹ 50,400 330 |
விஜயவாடாவில் தங்கம் வாங்க ஏராளமான இடங்கள் இருக்கின்றன.
உதாரணமாக, விஜயவாடா நகரத்தில் பிரசித்தி பெற்ற மலபார் ஜுவல்லரியின் கிளைகள் இருக்கின்றன. இந்த நகரத்தில் விலையுயர்ந்த இந்த உலோகத்தை வாங்கத் தாயகமாக விளங்கும் மற்றுமொரு இடம் ஆஞ்சநேய் ஜுவல்லரி. இந்தப் பொன் வியாபாரிகள் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக விஜயவாடாவில் கோலோச்சி இருக்கிறார்கள், அவர்களுடைய தரம் மற்றும் சேவையின் மூலம் நற்பெயரை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும் இந்த நகரத்தில் எம்ஜி ரோட்டில் தனிஷ்க் மற்றும் கஜானா ஜுவல்லரி போன்ற நகை கடைகளின் அணிவகுப்பு இருக்கின்றது. அங்கே பல உள்ளூர் நகை கடைகளும் பல ஆண்டுகளாக வியாபாரம் நடத்தி வருகின்றன. இருந்தாலும், தங்கம் வாங்குவதை மட்டும் கருதக்கூடாது. தங்கம் வாங்குவதற்கு முன் அதன் விலையோடு மற்றும் சேவை போன்ற பல்வேறு இதர அம்சங்களையும் பார்வையிட வேண்டும்.
நீங்கள் விஜயவாடாவில் தங்கம் வாங்க விரும்பினால் 916 ஹால் மார்க் முத்திரையிடப்பட்ட தங்கத்தையே வாங்க வேண்டும். ஏனென்றால் இது தான் 22 காரட் மற்றும் 91.6 தூய்மை கொண்ட தங்கமுமாகும். நீங்கள் 24 காரட் தங்கத்தை வாங்க முடியாது ஏனென்றால் நகையாகச் செய்வதற்கு முன் தங்கத்துடன் இதர உலோகக் கலவைகள் கலக்கப்படுகின்றன. ஏனென்றால் தூய தங்கம் உடையும் தன்மை கொண்டது எனவே அதை நகையாகச் செய்ய முடியாது. எனவே விஜயவாடாவில் தங்கம் வாங்கும் போது 916 வடிவத்தில் வாங்குவதே சிறந்த யோசனையாகும்.
இருந்தாலும், நீங்கள் தூய்மையைப் பரிசோதித்து விட்டீர்களா மற்றும் இந்த நகரத்தில் ஹால் மார்க் தங்கம் விற்கும் நகைக் கடைகளில் மட்டுமே வாங்குகிறீர்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லையென்றால் நீங்கள் தூய்மையற்ற தங்கத்தை வாங்க நேரிட்டு வருந்தும் அபாயம் இருக்கிறது. மொத்தத்தில் தங்கம் கொள்முதல் செய்வதற்கு முன் நீங்கள் சற்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியமாகும். நீங்கள் இந்தியாவில் தங்கம் வாங்கும் போது ஹால் மார்க் முத்திரையிடப்பட்ட தங்கத்தை மட்டுமே வாங்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏனென்றால், இது நீங்கள் வாங்கும் தங்கத்தின் தூய்மையை உறுதி செய்து கொள்ள உதவும்.
நீங்கள் விஜயவாடாவில் தங்கம் வாங்குவதற்கு முன் 22 காரட் தங்கத்தின் நேரலை விலைகளைச் சரிபார்க்க வேண்டுமென்று வலியுறுத்தப்படுகிறது. இல்லையென்றால் இறுதியில் நீங்கள் நஷ்டப்பட நேரிடும். பொதுவாக, தங்கத்தின் விலைகள் குறிப்பாக ஒரு நகரத்தில் மட்டும் மாறுவதில்லை. இருந்தாலும், எப்பொழுதும் சில மாற்றங்களும் இருக்கும்.
விஜயவாடாவில் 22 காரட் தங்கம் வாங்கும் போது விலைகளைத் தவிர்த்து நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம் செய்கூலி ஆகும். இதிலும் மீண்டும் பல்வேறு வித்தியாசங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக, தங்கத்திற்கான செய்கூலி 5 சதவிகிதம் முதல் அதிகரித்து மாறுபடலாம். விஜயவாடாவில் நீங்கள் 10 கிராம் தங்கம் வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் 100 ரூபாய் விலை வித்தியாசம் இருந்தால் கூட நீங்கள் இறுதியில் அதிகப் பணத்தை இழக்க நேரிடும்.
நீங்கள் தங்க நகைகள் வாங்கும் போது முதலில் பார்க்க வேண்டிய விஷயம் குறியீடுகளாகும். நீங்கள் முதலில் பார்க்க வேண்டிய குறியீடு ஹால் மார்க் முத்திரையாகும். அதற்கடுத்தபடியாக 10கே, 14கே, 18கே, 22கே போன்ற தூய்மை முத்திரைகளைப் பார்க்க வேண்டும். இது தான் தங்கம் எத்தனை காரட் என்பதை விளக்குகிறது. விஜயவாடாவில் பெரும்பாலான நகை கடைக்காரர்கள் ஹால் மார்க் நகைகளையே விற்கிறார்கள், இருந்தாலும் நீங்கள் தங்கம் வாங்கப் பிரசித்தி பெற்ற நகை கடைகளையே நாடுவதும் தங்கம் வாங்குவதற்கு முன் விலைகளைச் சரிபார்ப்பதும் சிறந்ததாகும். நீங்கள் தங்கத்தை முதலீட்டிற்காக வாங்குவதாக இருந்தால், நகைகளாக வாங்குவதை விடத் தங்க நாணயங்களாக வாங்குவது சிறந்தது.விஜயவாடாவில் அதிகரித்து வரும் விலைகள் மாறிக் கொண்டே இருப்பதால் விலைகள் அதிகரிப்பதற்கு முன் இப்போதே வாங்குவது சிறந்தது.
நிபந்தனை: இங்கு தரப்பட்டுள்ள தங்க விலை அனைத்தும் நகரத்தில் உள்ள பிரபலமான நகைகடைகளில் இருந்து பெறப்பட்டவை, குறிப்பிட்டுள்ள விலையில் வித்தியாசங்கள் இருக்கலாம். தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் மிக துல்லியமான தகவல்களை அளிக்க விழைந்துள்ளது. இந்த விலைகள் அனைத்தும் வாசகர்களின் தகவல்களுக்காக மட்டுமே அளிக்கப்படுகிறது. இங்கு குறிப்பிட்டுள்ள தகவல்கள் யாவும் கிரேனியம் இன்பர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் அதன் கிளை மற்றும் இணை நிறுவனங்களுக்கு சம்பந்தம் இல்லை. மேலும் குறிப்பிட்டுள்ள விலைகளை கொண்டு தங்கத்தை வாங்கவும், விற்கவும் அறிவுறுத்தப்படவில்லை. இதனால் ஏற்படும் வர்த்தகத்தில் கிடைக்கும் நஷ்டம் மற்றும் பாதிப்புக்கு நிறுவனம் பொறுப்பு இல்லை.