சூரத் அதன் ஜவுளி மற்றும் வைரம் பட்டைத் தீட்டும் தொழில்களுக்காகப் புகழ்பெற்ற நகரமாகும். மேலும் வைரம் தங்கத்தின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக மாறியுள்ளது. சூரத்தில் தங்கத்தின் விலைகளைத் தெரிந்து கொள்ள நீங்கள் விரும்பினால் குட்ரிடர்ன்ஸ்.இன் உட்படப் பல்வேறு தளங்களுக்கு வருகை தாருங்கள்.
கிராம் | 22 கேரட் தங்கம் இன்று |
22 கேரட் தங்கம் நேற்று |
22 கேரட் தங்கத்தின் தினசரி விலை மாற்றம் |
1 கிராம் | ₹ 4,898 | ₹ 4,864 | ₹ 34 |
8 கிராம் | ₹ 39,184 | ₹ 38,912 | ₹ 272 |
10 கிராம் | ₹ 48,980 | ₹ 48,640 | ₹ 340 |
100 கிராம் | ₹ 4,89,800 | ₹ 4,86,400 | ₹ 3,400 |
கிராம் | 24 கேரட் தங்கம் இன்று |
24 கேரட் தங்கம் நேற்று |
24 கேரட் தங்கத்தின் தினசரி விலை மாற்றம் |
1 கிராம் | ₹ 5,098 | ₹ 5,064 | ₹ 34 |
8 கிராம் | ₹ 40,784 | ₹ 40,512 | ₹ 272 |
10 கிராம் | ₹ 50,980 | ₹ 50,640 | ₹ 340 |
100 கிராம் | ₹ 5,09,800 | ₹ 5,06,400 | ₹ 3,400 |
தேதி | 22 கேரட் | 24 கேரட் |
Jan 21, 2021 | ₹ 48,980 340 | ₹ 50,980 340 |
Jan 20, 2021 | ₹ 48,640 110 | ₹ 50,640 110 |
Jan 19, 2021 | ₹ 48,530 10 | ₹ 50,530 10 |
Jan 18, 2021 | ₹ 48,520 -60 | ₹ 50,520 -60 |
Jan 17, 2021 | ₹ 48,580 -1010 | ₹ 50,580 -10 |
Jan 16, 2021 | ₹ 49,590 1010 | ₹ 50,590 10 |
Jan 15, 2021 | ₹ 48,580 -10 | ₹ 50,580 -10 |
Jan 14, 2021 | ₹ 48,590 0 | ₹ 50,590 0 |
Jan 13, 2021 | ₹ 48,590 10 | ₹ 50,590 10 |
Jan 12, 2021 | ₹ 48,580 -490 | ₹ 50,580 -490 |
சூரத் நகர மக்களின் தங்கத்தின் மீதான மோகம் அந்த நகரத்தின் அளவுக்குப் பழமையானது.
உண்மையில், சூரத் தற்போது தங்கத்திற்கான தேவை வெகு விரைவாக அதிகரித்து வரும் முக்கிய வளரும் நகரங்களில் ஒன்றாக எழுச்சியடைந்துள்ளது. உண்மையில் சூரத் மக்கள் சில சிறந்த வடிவமைப்புக்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரசனையைக் கொண்டிருக்கிறார்கள். ஏன், சூரத் மட்டுமா, குஜராத் மாநிலம் முழுவதிலும் தங்கத்திற்கான தேவை விரைவாக அதிகரித்து வருகிறது.
தங்கத்தில் முதலீடு செய்வதற்கு முன்பாகத் தங்கத்தின் இயக்கத்தை நிர்ணயிக்கும் விலை நிலவரங்கள் மற்றும் இதர காரணிகளைப் பற்றி ஆய்வு செய்ய வேண்டியது முக்கியமாகும். ஆம், நிச்சயமாகத் தங்கத்தின விலை நகர்வுகளைத் துல்லியமாக முன்கூட்டி யாராலும் கணிக்க முடியாது. இருந்தாலும், நீங்கள் தங்கம் வாங்க முயற்சிக்கும் போது விலைகள் அதிகமாக இருந்தால், முறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டங்களின் வழியாகச் சிறிய அளவுகளில் வாங்குவது மிகச் சிறந்த வழியாகும்.
நீங்கள் கல்யாண் ஜுவல்லரியில் தங்கம் வாங்கலாம் மற்றும் தங்கத்தின் விலைகளைச் சரிபார்க்கலாம். இதைத் தவிரக் கலா மந்திர் ஜுவல்லர்ஸ் நீங்கள் தங்கம் வாங்கவும் தங்கத்தின் விலைகளைச் சரிபார்ப்பதற்கும் மற்றொரு இடமாகும். இந்த நகைக் கடைகளின் வழியாக நீங்கள் 22 காரட் தங்கத்தை இன்றைய விலைக்கு வாங்கவும் அத்துடன் 24 காரட் தங்கத்தின் விலைகளைச் சரிபார்க்கவும் தேர்வுகள் இருக்கின்றன. நிச்சயமாக விலைகளைச் சரிபார்ப்பது மட்டுமில்லாமல் நகைகளைத் தயாரிக்க ஆகும் கட்டணங்கள் அல்லது சுருக்கமாக நாம் செய்கூலி என்றழைக்கும் பொருந்தக்கூடிய கட்டணங்களையும் சரிபார்க்க வேண்டியது முக்கியமானதாகும். இருந்தாலும், நகை வாங்குவதற்கு முன் முக்கியமான சேவை அம்சங்களின் மீது கவனம் செலுத்துங்கள்.
நீங்கள் தங்க சந்தைகளில் தங்கம் வாங்கத் தேடுபவராக இருந்தால் சிறந்த வழி சூரத்தில் தங்க ஈடிஎஃப் களாக வாங்குவதேயாகும். இது நீங்கள் இந்த விலையுயர்ந்த உலோகத்தை வாங்கும் போது மிகவும் லாபகரமான முறையாகும். இதைக் கருத்தில் கொள்ளுங்கள்: ஒவ்வொரு முறையும் நீங்கள் திட வடிவத்தில் தங்கம் வாங்கும் போதெல்லாம் அதைப் பாதுகாத்து சேமித்து வைக்கும் வங்கியைத் தேடும் தேடுதல் வேட்டையில் ஈடுபடுவீர்கள். தங்க ஈடிஎஃப் இன் விஷயத்தில் இவ்வாறு நிகழ்வதில்லை. நீங்கள் உங்கள் தங்கத்தை எலக்ட்ரானிக் வடிவில் சேமிக்கிறீர்கள். இது ஒரு மிகப் பெரிய அனுகூலமாகும். இதில் முதலீடு செய்ய மற்றொரு காரணம் நீங்கள் திருட்டைப் பற்றிய பயமில்லாமல் இருக்கலாம். பெரும்பாலும் இதில் பூஜ்ஜிய அளவு கூடத் திருடு போவதற்கான சாத்தியங்கள் இல்லை, ஏனென்றால், இது எலக்ட்ரானிக் வடிவில் பாதுகாக்கப்படுகிறது.
சூரத்தில் தங்கம் வாங்கும் மற்றொரு வழிமுறை தங்க ஃப்யூச்சர் தொழில்நுட்ப வழியாக வாங்குவதாகும். சூரத்தில் நீங்கள் தங்கத்தைத் தங்க ஃப்யூச்சர் மார்க்கெட்டில் எப்படி வாங்குவீர்கள் என்பது மற்றொரு முக்கியமான கேள்வி? தங்க ஃப்யூச்சர் மார்க்கெட்டில் தங்கம் வாங்கும் ஒரு வழி ஒரு தரகரைத் தொடர்பு கொள்வதாகும். இந்தத் தங்கம் வாங்கும் முறை பங்குகள் மற்றும் சரக்கிருப்புகளை வாங்குவதைப் போன்ற அதே தொழில்நுட்ப முறையாகும். நீங்கள் ஒரு நீண்ட கால முதலீட்டாளராக இருந்தால் இந்த விலைமதிப்பற்ற உலோகத்தின் மீது ஒரு நிலைப்பாட்டை எடுப்பது புத்திசாலித்தனமாகும். நீங்கள் நல்ல கணிசமான பணம் ஈட்ட வேண்டுமென்றால் இந்த விலையுயர்ந்த உலோகத்தின் விலைகள் வீழ்ச்சியடையும் போது வாங்க வேண்டும் என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள். வாங்குவதற்கும் விற்பதற்கும் சிறந்த வழிமுறை விலை குறைவாக இருக்கும் போது வாங்கி விலை அதிகரிக்கும் போது விற்பதாகும். எனவே விலை வீழ்ச்சியடையும் போது வாங்கி விலை உயரும் போது விற்பதற்கான வாய்ப்புகளைத் தேடுங்கள்.
இந்தியா தங்கம் உற்பத்தி செய்யும் நாடு அல்ல, எனவே நாம் பெரிய அளவில் சுரங்க வணிகம் செய்வதில்லை. இந்தியாவில் மூன்று சுரங்கங்கள் மட்டுமே சிறந்த தங்க உற்பத்தி ஆதாரங்களாக இருக்கின்றன. அவற்றில் இரண்டு கர்நாடகாவிலும் ஒன்று ஜார்கண்ட்டிலும் இருக்கிறது. கர்நாடகாவில் இருக்கும் இரண்டு சுரங்கங்கள் ஹுட்டி மற்றும் ஒட்டி என்றழைக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று ராய்ச்சூர் மாவட்டத்திலும் மற்றொன்று சித்ர துர்க்கிலும் இருக்கிறது. ஜார்கண்ட்டில் உள்ள தங்கச் சுரங்கம் ஹிராபுத்தினி என்றழைக்கப்படுகிறது. இந்தச் சுரங்கள் நாட்டின் ஆண்டுத் தங்க நுகர்வில் சுமார் 0.5 சதவிகிதத்தை உற்பத்தி செய்கின்றன. இந்தக் காரணத்தால் இந்தியா ஏராளமான தங்கத்தை இதர நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது.
எல்லோரும் அறிந்தபடி சூரத்தில் தங்கத்திற்கான உள்ளூர் கிராக்கி ஒருபோதும் குறைவதில்லை. அந்த நாட்களில் சூரத்தில் தங்கத்தின் விலையைப் பற்றிப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு பண்டிகை மற்றும் திருமண விழாக்காலங்களில் மக்கள் ஏராளமான நகைகள் வாங்குகிறார்கள்.
பொருளாதாரச் சரிவுகள் இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும் தங்கத்தில் ஏராளமாக முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் இருக்கிறார்கள். பணவீக்கம், பங்குச் சந்தை சரிவு போன்ற சில சூழ்நிலைகள் தங்கத்தை நோக்கி அதிக முதலீட்டாளர்களை ஈர்க்கிறது.
எனவே ஆர்பிஐ உலகின் மிகப்பெரிய விற்பனைக்கூடமாகவும் மற்றும் இந்தியா அதிக அளவு தங்க நுகர்வோரைக் கொண்டு முதலிடத்தில் நிற்பதும் பெரிய ஆச்சரியமில்லை.
பல்லாண்டுகளாகப் பல நாடுகள் பண முறை அமைப்பின் ஒரு பகுதியாகத் தங்கத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களின் நாடுகளின் கரன்சி மதிப்பு நேரடியாகத் தங்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த முறை இப்போது பயன்பாட்டில் இல்லாத போதும், தங்கம் ஒருபோதும் அதன் மதிப்பை இழப்பதில்லை. அது இன்று வரை முன்பிருந்ததைப் போலவே விலையுயர்ந்த உலோகமாகத் திகழ்கிறது.
ஒரு சாதாரண மனிதனின் கண்ணோட்டத்தில், சூரத்தில் தங்கம் எப்பொழுதும் மக்களின் வகுப்புப் பிரிவுகளைப் பொருட்படுத்தாமல் விலையுயர்ந்த உலோகமாகக் கருதப்பட்டு வருகிறது. அளவும் மற்றும் காரட்டும் மாறுபடும் ஆனால் தங்கத்திற்கான நேசம் ஒருபோதும் மாறாது. அதனால் தான் சூரத்தில் தங்கத்தின் விலைகள் சரிவதைப் பற்றிக் கவலைப்படுவதில் அர்த்தமில்லை. சூரத்தில் தங்கத்தின் விலைகளில் இதர வியாபாரப் பொருட்களைப் போலவே ஏற்ற இறக்கங்கள் இருக்கும் ஆனால் தங்கம் ஒருபோதும் அதன் மதிப்பை இழப்பதில்லை.
தங்கம் திட வடிவத்தில் அதீத அளவில் பணமாக்கும் தன்மை கொண்ட சொத்தாக இருப்பதால் அது நாணயங்கள், தங்கக்கட்டிகள் அல்லது நகைகளாகச் சேமிக்கப்படலாம். இன்றைய நாட்களில் தங்கத்தில் சொக்கத்தங்கக் கட்டிகள் முதல் ஈடிஎஃப் வரை ஏராளமான வழிகளில் முதலீடு செய்யலாம். தங்கம் இதர பங்குகள் அல்லது பத்திரங்கள் போல மாதாந்திர அல்லது வருடாந்திர பங்கு ஆதாயங்களை வழங்குவதில்லை.
பாதுகாப்பு மற்றும் நெகிழ்வுத்தன்மை போன்றவை தங்கத்தில் முதலீடு செய்வதில் உள்ள சில அனுகூலங்களாகும். இவற்றை வேறு ஏதேனும் சொத்துக்களில் முதலீடு செய்யும் போது பெற முடியாது. எனவே தங்கத்தில் முதலீடு செய்வதே அவர்களுக்குச் சிறந்தது.
சூரத் குஜராத்தின் பொருளாதாரத் தலைநகரமும் மற்றும் குஜராத்தின் முன்னாள் ஆடம்பர நகரமுமாகும். சூரத்தில் போலி நகைகளை வாங்குபவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள் ஆனால் அது தங்கம் அல்ல. போலி நகை என்றால் அத பார்ப்பதற்கு உண்மையானதைப் போலவே தோற்றமளிக்கும் ஆனால் அசல் அல்ல. போலி நகைகள் என்பன இதர மலிவான உலோகங்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது மேலும் தங்கம் வெள்ளி போன்ற சில விலையுயர்ந்த உலோகங்களால் மேற்பூச்சுப் பூசப்படுகிறது.
போலி நகைகள் சந்தையில் கிடைக்கும் அசல் நகைகளை விடப் பல மடங்கு விலை மலிவானவை. பெங்களூரைச் சேர்ந்த தனி நபர்கள் இது மலிவாகக் கிடைக்கக்கூடியது என்று மேலும் அவர்களின் பணப்பைக்கு உற்ற நட்பான தேர்வு என்றும் கருதுகிறார்கள். மேலும் இது தங்க மின் முலாம் பூசப்பட்ட நகைகள் என்றும் அழைக்கப்படுகிறது. ஏனென்றால் இதன் தங்கப் பூச்சு மிகவும் இயற்கையாக அசல் நகையைப் போலவே தோற்றமளிக்கிறது.
இவற்றில் நாள்தோறும் பல்வேறு நவநாகரிக மாதிரிகள் வந்து கொண்டிருக்கின்றன, மேலும் இந்த நகைகள் திருடு போகும் என்கிற பயமும் தேவையில்லை. எனவே பெரும்பாலான இளைஞர்கள் இதை விரும்புகிறார்கள்.
இந்தப் போலி நகைகள் சாதாரண நகைக் கடைகளில் கிடைப்பதில்லை. ஒரு கிராம் தங்க நகைகள் மற்றும் தங்க மேற்பூச்சுச் செய்யப்பட்ட நகைகளை விற்பனை செய்யும் வெகு சில நகைக் கடைகள் இருக்கின்றன.
ஆனால் தங்கத்தை ஒரு சொத்தாக வாங்கும் முதலீட்டாளர்களோ அல்லது தனி நபர்களோ இந்த வகை நகைகளை வாங்க விரும்புவதில்லை. இந்த நகைகளுக்கு எந்தவொரு மறுவிற்பனை மதிப்பும் இல்லை. சூரத்தில் தங்கத்தின் விலைகளில் எந்த மாற்றம் ஏற்பட்டாலும் அது இந்தப் போலி நகைகளைப் பாதிப்பதில்லை.
நிபந்தனை: இங்கு தரப்பட்டுள்ள தங்க விலை அனைத்தும் நகரத்தில் உள்ள பிரபலமான நகைகடைகளில் இருந்து பெறப்பட்டவை, குறிப்பிட்டுள்ள விலையில் வித்தியாசங்கள் இருக்கலாம். தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் மிக துல்லியமான தகவல்களை அளிக்க விழைந்துள்ளது. இந்த விலைகள் அனைத்தும் வாசகர்களின் தகவல்களுக்காக மட்டுமே அளிக்கப்படுகிறது. இங்கு குறிப்பிட்டுள்ள தகவல்கள் யாவும் கிரேனியம் இன்பர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் அதன் கிளை மற்றும் இணை நிறுவனங்களுக்கு சம்பந்தம் இல்லை. மேலும் குறிப்பிட்டுள்ள விலைகளை கொண்டு தங்கத்தை வாங்கவும், விற்கவும் அறிவுறுத்தப்படவில்லை. இதனால் ஏற்படும் வர்த்தகத்தில் கிடைக்கும் நஷ்டம் மற்றும் பாதிப்புக்கு நிறுவனம் பொறுப்பு இல்லை.