தமிழ்நாட்டைப் போன்ற தென்னிந்திய மாநிலத்தில் ஒரு வர்த்தக மற்றும் முதலீட்டு வியாபாரப் பொருளாக வெள்ளியை வாங்கும் யோசனை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மதுரை போன்ற பெருநகரங்களில் வெள்ளியில் முதலீடு செய்தல் அதிக வருமானத்தையும் லாபத்தையும் பெற்றுத் தரும் என்பதை அந்நகர மக்கள் ஏற்கனவே உணர்ந்திருக்கிறார்கள். மதுரையில் வெள்ளி விலை நிலவரங்களில் எவ்வளவு ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன என்பது அவர்களுக்கு முக்கியமில்லை.
கிராம் | வெள்ளி விலை இன்று |
வெள்ளி விலை நேற்று |
வெள்ளி விலையில் தினசரி விலை மாற்றங்கள் |
1 கிராம் | ₹ 71.30 | ₹ 71.30 | ₹ 0 |
8 கிராம் | ₹ 570.40 | ₹ 570.40 | ₹ 0 |
10 கிராம் | ₹ 713 | ₹ 713 | ₹ 0 |
100 கிராம் | ₹ 7,130 | ₹ 7,130 | ₹ 0 |
1 கிலோ | ₹ 71,300 | ₹ 71,300 | ₹ 0 |
தேதி | 10 கிராம் | 100 கிராம் | 1 கிலோ |
Jan 25, 2021 | ₹ 713.00 | ₹ 7,130.00 | ₹ 71300.00 0 |
Jan 24, 2021 | ₹ 713.00 | ₹ 7,130.00 | ₹ 71300.00 -50 |
Jan 23, 2021 | ₹ 713.50 | ₹ 7,135.00 | ₹ 71350.00 -50 |
Jan 22, 2021 | ₹ 714.00 | ₹ 7,140.00 | ₹ 71400.00 -1100 |
Jan 21, 2021 | ₹ 725.00 | ₹ 7,250.00 | ₹ 72500.00 1200 |
Jan 20, 2021 | ₹ 713.00 | ₹ 7,130.00 | ₹ 71300.00 600 |
Jan 19, 2021 | ₹ 707.00 | ₹ 7,070.00 | ₹ 70700.00 700 |
Jan 18, 2021 | ₹ 700.00 | ₹ 7,000.00 | ₹ 70000.00 300 |
Jan 17, 2021 | ₹ 697.00 | ₹ 6,970.00 | ₹ 69700.00 0 |
Jan 16, 2021 | ₹ 697.00 | ₹ 6,970.00 | ₹ 69700.00 -900 |
இந்தியர்களிடையே வெள்ளி நகைகள் மிகவும் முக்கியமானவை.
குறிப்பாகக் கொலுசுகள் மிகவும் சாதாரணமானது. வெள்ளிக் கொலுசுகள் திருமணங்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளில் மட்டும் அணியப்படுவதில்லை ஆனால் தினசரி வாழ்க்கையில் அன்றாடம் இந்தியப் பெண்களால் அணியப்படுகிறது. பிறந்த குழந்தை முதல் நடுத்தர வயது பெண்கள் வரை இந்தியாவில் வெள்ளிக் கொலுசுகளை அணிகின்றனர்.
வெள்ளி ஆபரணங்கள் அணிவது அழகு சேர்க்கிறது. பெண்களின் பாதங்களுக்கு அழகை மேம்படுத்துவதைத் தவிர்த்து வெள்ளிக் கொலுசுகளை அணிவதில் பல அனுகூலங்கள் தொடர்புப்படுத்தப்பட்டுள்ளது.
வெள்ளி ஆபரணங்களைக் கால்களில் அணிவதால் கால் வலி மற்றும் உடல் பலவீனத்திலிருந்து யிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. வெள்ளிக் கொலுசுகள் இரத்த சுழற்சியை ஒழுங்குபடுத்துகிறது. வெள்ளிக் கொலுசுகள் அணிவதன் மூலம் குதிகால் வீக்கத்தைத் தவிர்க்கலாம்.
வெள்ளியின் ஆரோக்கிய மூலக்கூறுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மேலும் நிணநீர் சுரப்பிகளைச் செயல்படத் தூண்டி நோய்களை எதிர்த்துப் போராடும் உங்கள் உடல் திறனை அதிகரிக்கும்.
இந்தியாவில் அணியும் கொலுசுகளின் வகைகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. ராஜஸ்தான் பெண்கள் கனமான வெள்ளிக் கொலுசுகளை அணிகின்றனர். ஒடிசாவில் பொதுவாகப் பாரம்பரிய கொலுசுகள் அணியப்படுகிறது. நவநாகரிக வெள்ளிக் கொலுசுகள் பல்வேறு பாணிகள் மற்றும் வடிவமைப்புகளில் பரந்த அணிவரிசையில் கிடைக்கிறது. நீங்கள் உங்கள் ரசனை மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப பொருத்தமான ஒன்றை எளிதாகக் கண்டறியலாம்.
நிபந்தனை: இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள வெள்ளியின் விலை அனைத்தும் நகரின் பெரிய நகைக்கடைகளில் இருந்து பெறப்பட்டவை. அதனால் விலையில் வித்தியாசம் இருக்கலாம். தமிழ் குட்ரிட்டர்ன்ஸ்.இன் இணையதளம் மிக துல்லியமான தகவல்களை அளிக்க அனைத்து முயற்சியையும் செய்கிறது. இங்கு குறிப்பிட்டுள்ள தகவல்களுக்கும் கிரேனியம் இன்பர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் அதன் கிளை மற்றும் இணை நிறுவனங்களுக்கு சம்பந்தம் இல்லை. மேலும் இங்குகுறிப்பிட்டுள்ள விலைகளை கொண்டு வெள்ளியை வாங்கவும், விற்கவும் அறிவுறுத்தப்படவில்லை. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வெள்ளி குறித்த தகவல்களை வைத்து வர்த்தகம் செய்து நஷ்டம் ஏற்பட்டால் நிறுவனம் பொறுப்பாகாது.