மைசூரு தங்கத்தின் மீது அதிகளவில் நாட்டம் கொண்ட அரச நகரமாகும். முதலீட்டாளர்கள் இந்த விலையுயர்ந்த உலோகத்தை வாங்கத் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருவதால் கடந்த சில பத்தாண்டுகளாகவே மைசூரு தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது.
கிராம் | 22 கேரட் தங்கம் இன்று |
22 கேரட் தங்கம் நேற்று |
22 கேரட் தங்கத்தின் தினசரி விலை மாற்றம் |
1 கிராம் | ₹ 4,625 | ₹ 4,580 | ₹ 45 |
8 கிராம் | ₹ 37,000 | ₹ 36,640 | ₹ 360 |
10 கிராம் | ₹ 46,250 | ₹ 45,800 | ₹ 450 |
100 கிராம் | ₹ 4,62,500 | ₹ 4,58,000 | ₹ 4,500 |
கிராம் | 24 கேரட் தங்கம் இன்று |
24 கேரட் தங்கம் நேற்று |
24 கேரட் தங்கத்தின் தினசரி விலை மாற்றம் |
1 கிராம் | ₹ 5,045 | ₹ 4,996 | ₹ 49 |
8 கிராம் | ₹ 40,360 | ₹ 39,968 | ₹ 392 |
10 கிராம் | ₹ 50,450 | ₹ 49,960 | ₹ 490 |
100 கிராம் | ₹ 5,04,500 | ₹ 4,99,600 | ₹ 4,900 |
தேதி | 22 கேரட் | 24 கேரட் |
Jan 21, 2021 | ₹ 46,250 450 | ₹ 50,450 490 |
Jan 20, 2021 | ₹ 45,800 150 | ₹ 49,960 160 |
Jan 19, 2021 | ₹ 45,650 150 | ₹ 49,800 160 |
Jan 18, 2021 | ₹ 45,500 10 | ₹ 49,640 10 |
Jan 17, 2021 | ₹ 45,490 -10 | ₹ 49,630 -10 |
Jan 16, 2021 | ₹ 45,500 -500 | ₹ 49,640 -540 |
Jan 15, 2021 | ₹ 46,000 250 | ₹ 50,180 280 |
Jan 14, 2021 | ₹ 45,750 -450 | ₹ 49,900 -500 |
Jan 13, 2021 | ₹ 46,200 0 | ₹ 50,400 0 |
Jan 12, 2021 | ₹ 46,200 300 | ₹ 50,400 330 |
உலகளாவிய பங்குச் சந்தைகளின் பேரணியின் போது, தங்கத்தில் முதலீடு செய்வதில் முதலீட்டாளர்களிடையே ஆர்வம் குறைந்திருப்பதாக உணரப்பட்டதற்கிணங்க, தங்கத்தின் விலை சற்றே குறைந்துள்ளது.
சுமார் ஒன்பது மாதங்களாக இறங்குமுகத்தில் இருந்த டாலரின் விலை சற்றே அதிகரித்ததால் தங்கத்திற்கான மவுசு குறைந்துள்ளது. சர்வதேச சந்தைகளில் ஸ்பாட் கோல்டு சுமார் 0.3 சதவீதம் வரை சரிந்து அவுன்ஸ் ஒன்றிற்குச் சுமார் 1,238 டாலர் என்ற வீதத்தில் விற்றது. ஆகஸ்ட் மாத டெலிவரிக்கான அமெரிக்கத் தங்கம் சுமார் 0.4 சதவீதம் வரை சரிந்து அவுன்ஸ் ஒன்றிற்குச் சுமார் 1,237.70 டாலர் என்ற அளவில் விற்பனையாகிறது.
எம்ஸிஎக்ஸில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் ஒன்று சொன்னாற் போல் சரிந்துள்ளன. தங்கம் சுமார் 0.3 சதவீதம் சரிந்து, 28,353 ரூபாய்க்கும், வெள்ளி சுமார் 0.2 சதவீதம் வரை சரிந்து 38,250 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. உலகளவிலான பல்வேறு அசந்தர்ப்பமான சூழ்நிலைகளினால் மைசூரில் கடந்த ஒரு மாதமாகத் தங்கத்தின் விலை இறங்குமுகமாகவே உள்ளது. கடந்த மாதம் 22 காரட் மற்றும் 24 காரட் தங்கத்தின் விலைகள் சுமார் 0.36 சதவீதம் சரிந்துள்ளன. ஜூன் மாதத்தின் போது, மைசூரில் சுமார் 27,450 ரூபாயில் தொடங்கிய தங்கத்தின் விலை 27,300 ரூபாயில் முடிந்துள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை 29,900 ரூபாயில் தொடங்கி 29,750 ரூபாய் வரை சரிந்தது.
பெங்களூருவிற்கு மிக அருகில் அமைந்துள்ளதானால் பெங்களூரின் பிரபலமான நகைக்கடைகள் பலவும் மைசூரிலும் கிளை பரப்பியுள்ளன. உதாரணமாக, பெங்களூரு மட்டுமின்றி இந்தியாவெங்கிலும் பல்வேறு கிளைகள் உள்ள கல்யாண் ஜுவல்லர்ஸ் மைசூரிலும் உள்ளது. இது தவிர்த்து, மைசூரில் உள்ள மலபார் கோல்டு அண்ட் ஜுவல்லரியிலும் தங்க விலைகள் என்ன என்று நீங்கள் விசாரித்துத் தெரிந்து கொள்ளலாம். தங்கம் வாங்கலாம் என்று நீங்கள் நினைப்பதற்கு முன் மைசூருவில் உள்ள பல்வேறு கடைகளுக்கும் சென்று தங்க விலைகளைத் தீர விசாரித்துக் கொள்வது மிகவும் முக்கியம் என்பதே எமது பரிந்துரை.
விலைகள் மேலும் சரியலாம் என்று நீங்கள் நினைத்தால், சற்றே பொறுத்து, அவ்வாறு சரியும்போது தங்கம் வாங்குவதற்கான வழிமுறைகள் என்ன என்று அறிந்து கொண்டு வாங்குங்கள். மைசூர் மக்களுள் பெரும்பாலானோர் தங்கத்தை ஆபரணமாக வாங்குவதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். தங்க நாணயங்கள் மற்றும் தங்கக்கட்டிகளுக்கு மிகக்குறைந்த மவுசே காணப்படுகிறது. சொல்லப்போனால், இந்தியாவெங்கிலும் உள்ள பெரும்பான்மை மக்களின் மனநிலை இதுவே; இதற்கு மைசூரும் விதிவிலக்கல்ல.
கோல்டு இடிஎஃப்கள் போன்ற இதர வகையான முதலீடுகளைப் பற்றி இங்குள்ள நகைக்கடை அதிபர்களுக்கு இன்னும் அவ்வளவாகத் தெரியவில்லை. ஆன்லைன் மூலம் தங்கம் வாங்குவது உள்ளிட்ட இதர வாய்ப்புகளைப் பற்றியும் கூட நீங்கள் யோசிக்கலாம். ஆனால், எப்படி வாங்கினாலும், நீங்கள் வாங்குவது சுத்தமான தங்கம் தானா என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை என்பது தான் நிதர்சனம்.
சர்வதேச சந்தைகளில், ஸ்பாட் கோல்டு சுமார் 0.3 சதவீத வீழ்ச்சியுடன் அவுன்ஸ் ஒன்றுக்கு 1,262 டாலர் என்ற அளவில் விற்கப்படுகிறது. டாலரின் கை ஓங்கியதை அடுத்துத் தங்கத்தின் விலை வீழ்ந்துள்ளது. அமெரிக்கப் பொருளாதாரம் நிலையாக இருப்பதினால் செப்டம்பர் மாதத்தில் அதன் பாண்ட் ஹோல்டிங்குகளை ஃபெட் ரத்து செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பொருளாதாரத் தகவல் டாலருக்கு பெரிதும் உதவிகரமாக இருப்பதோடு அதற்கு வலு சேர்ப்பதாகவும் உள்ளது. என்றாலும், கடந்த மூன்று வாரங்களாக டாலரின் விலை தொடர்ந்து சரிந்து வந்ததினால், ஏராளமான முதலீட்டாளர்கள் தங்கத்தை நாட ஆரம்பித்தனர். இந்நிலையில் சீரான டாலர் விலை அவர்களைத் திரும்பி வர வைத்திருப்பதோடு, பாண்டுகளைத் தம்மோடு வைத்திருக்கவும் வழிவகைச் செய்துள்ளது.
மைசூரில் 26,800 ரூபாய்க்கு விற்கப்படும் 22 காரட் தங்கம் அதன் வழக்கமான விலையான 26,500 ரூபாயில் வெகு விரைவில் விற்பனைக்கு வந்து விடும். ஆனால் இன்று இதற்கும் கீழே அதன் விலை இறங்க வாய்ப்பில்லை. ஏனெனில் இன்று தங்க விலைகளில் பெரிய வீழ்ச்சி எதுவும் இருக்கப்போவதில்லை. சர்வதேச சந்தைகளில் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வந்தால் மைசூரில் தங்கம் அதன் வழக்கமான விலைக்கு விற்கப்படக்கூடும்.
கடந்த ஆறு வார காலத்துக்குப் பின் சர்வதேச சந்தைகளில் தற்போது தங்க விலை உயர்ந்திருப்பதால் மைசூரிலும் தங்கத்தின் விலை அதிகரிக்கக்கூடும். ஃபெட்டின் அறிக்கைக்குப் பின், இதர முக்கிய நாணயங்களுடன் ஒப்பிடுகையில் டாலர் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. சர்வதேசச் சந்தைகளில் தங்கம் மட்டுமின்றிப் பிற விலையுயர்ந்த உலோகங்களின் விலையும் அதிகரித்துள்ளது. ஸ்பாட் கோல்டு 0.3 சதவீதம் உயர்ந்து அவுன்ஸ் ஒன்று சுமார் 1,264 டாலர் என்ற அளவிலும், வெள்ளி சுமார் 0.6 சதவீதம் உயர்ந்து அவுன்ஸ் ஒன்று 16.73 டாலர் என்ற அளவிலும் விற்கப்படுகின்றன. ப்ளாட்டினம் 0.4 சதவீதம் உயர்ந்து, அவுன்ஸ் ஒன்று சுமார் 932.80 டாலர் என்ற வீதத்திலும், பல்லாடியம் சுமார் 0.1 சதவீதம் அதிகரித்து அவுன்ஸ் ஒன்று 866 டாலர் என்ற வீதத்திலும் விற்கப்படுகின்றன.
இந்த ஏறுமுகத்தை எம்ஸிஎக்ஸ் -இலும் காணலாம். எம்ஸிஎக்ஸில் தங்கம் சுமார் 0.56 சதவீதம் உயர்ந்து 28,543 ரூபாய் என்ற அளவிலும், வெள்ளி 1 சதவீதம் உயர்ந்து 38,473 ரூபாய் என்ற அளவிலும் விற்பனையாகின்றன. தங்கள் போர்ட்ஃபோலியோவில் தங்கத்தை இடம்பெறச் செய்துள்ள மைசூர் முதலீட்டாளர்களின் கவனத்திற்கு - சர்வதேச சந்தைகள் மற்றும் எம்ஸிஎக்ஸ் ஆகியவற்றில் ஏற்பட்டிருக்கும் உயர்வு, இன்று தங்கத்தின் விலை 27,000 ரூபாய் மைல்கல்லைத் தாண்டக்கூடும் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
நிபந்தனை: இங்கு தரப்பட்டுள்ள தங்க விலை அனைத்தும் நகரத்தில் உள்ள பிரபலமான நகைகடைகளில் இருந்து பெறப்பட்டவை, குறிப்பிட்டுள்ள விலையில் வித்தியாசங்கள் இருக்கலாம். தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் மிக துல்லியமான தகவல்களை அளிக்க விழைந்துள்ளது. இந்த விலைகள் அனைத்தும் வாசகர்களின் தகவல்களுக்காக மட்டுமே அளிக்கப்படுகிறது. இங்கு குறிப்பிட்டுள்ள தகவல்கள் யாவும் கிரேனியம் இன்பர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் அதன் கிளை மற்றும் இணை நிறுவனங்களுக்கு சம்பந்தம் இல்லை. மேலும் குறிப்பிட்டுள்ள விலைகளை கொண்டு தங்கத்தை வாங்கவும், விற்கவும் அறிவுறுத்தப்படவில்லை. இதனால் ஏற்படும் வர்த்தகத்தில் கிடைக்கும் நஷ்டம் மற்றும் பாதிப்புக்கு நிறுவனம் பொறுப்பு இல்லை.