முகப்பு  »  தங்கம் விலை  »  மும்பை

மும்பை தங்கம் விலை நிலவரம் (3rd October 2022)

Oct 3, 2022
4,650 /கிராம்(22ct)

தங்க இருப்பு அளவு மும்பையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இந்த நிலை மும்பையில் மட்டும் அல்லாமல் இந்தியாவின் அனைத்து வர்த்தக நகரங்களிலும் நிலவுகிறது. பெருவாரியாக மும்பையில் தங்கம் விலை பிற நகரங்களை விடவும் குறைவாக இருக்கும். வாசகர்களுக்கு பயனளிக்கும் வகையில் மும்பையில் நிலவும் இன்றைய தங்கம் விலையை அளித்துள்ளோம்.

மும்பை இன்றைய 22 கேரட் தங்க விலை நிலவரம் - ஒரு கிராம் தங்கம் விலை நிலவரம்(ரூ.)

கிராம் 22 கேரட் தங்கம்
இன்று
22 கேரட் தங்கம்
நேற்று
22 கேரட் தங்கத்தின்
தினசரி விலை மாற்றம்
1 கிராம் 4,650 4,650 0
8 கிராம் 37,200 37,200 0
10 கிராம் 46,500 46,500 0
100 கிராம் 4,65,000 4,65,000 0

மும்பை இன்றைய 24 கேரட் தங்க விலை நிலவரம் - ஒரு கிராம் தங்கம் விலை நிலவரம்(ரூ.)

கிராம் 24 கேரட் தங்கம்
இன்று
24 கேரட் தங்கம்
நேற்று
24 கேரட் தங்கத்தின்
தினசரி விலை மாற்றம்
1 கிராம் 5,073 5,073 0
8 கிராம் 40,584 40,584 0
10 கிராம் 50,730 50,730 0
100 கிராம் 5,07,300 5,07,300 0

கடந்த 10 நாட்களில் மும்பை தங்கம் விலை நிலவரம் (10 கிராம்)

தேதி 22 கேரட் 24 கேரட்
Oct 2, 2022 46,500 0 50,730 0
Oct 1, 2022 46,500 -150 50,730 -170
Sep 30, 2022 46,650 250 50,900 280
Sep 29, 2022 46,400 600 50,620 650
Sep 28, 2022 45,800 0 49,970 0
Sep 27, 2022 45,800 -200 49,970 -230
Sep 26, 2022 46,000 0 50,200 0
Sep 25, 2022 46,000 0 50,200 0
Sep 24, 2022 46,000 -500 50,200 -530
Sep 23, 2022 46,500 500 50,730 530

மும்பை தங்கம் விலைக்குறித்த வாரம் மற்றும் மாதாந்திர வரைபடம்

தங்க விலையின் வரலாறு மும்பை

 • தங்கம் விலை மாற்றங்கள் மும்பை, September 2022
 • தங்கம் விலை 22 கேரட் 24 கேரட்
  1 st September விலை Rs.46,500 Rs.50,730
  30th September விலை Rs.46,650 Rs.50,900
  உயர்ந்த விலை September Rs.46,900 on September 5 Rs.51,160 on September 5
  குறைவான விலை September Rs.45,800 on September 16 Rs.49,960 on September 16
  ஒட்டுமொத்த செயல் பாடு Rising Rising
  % மாற்றம் +0.32% +0.34%
 • தங்கம் விலை மாற்றங்கள் மும்பை, August 2022
 • தங்கம் விலை மாற்றங்கள் மும்பை, July 2022
 • தங்கம் விலை மாற்றங்கள் மும்பை, June 2022
 • தங்கம் விலை மாற்றங்கள் மும்பை, May 2022
 • தங்கம் விலை மாற்றங்கள் மும்பை, April 2022
 • தங்கம் விலை மாற்றங்கள் மும்பை, March 2022

எது சிறந்தது, தனிப்பட்ட கடனா அல்லது தங்க கடனா?

எந்தவொரு கடனை வாங்குவதற்கு முன்பும் சில அம்சங்களை நீங்கள் கவன‌த்தில் கொள்வது நல்லது. அந்த அம்சங்களின் அடிப்படையில், எந்தக் கடன் உங்களுக்குப் பொருத்தமாக இருக்கும் என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ள‌லாம். தனிநபர் கடனுக்கு உத்திரவாதம் அளிப்பதற்கு எந்தவிதமான பிணையத்தையும் அளிக்க‌ வேண்டிய அவசியம் இல்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இதுவே தங்கக் கடன் என்று வரும்போது, அடமானமாக தங்கத்தை அளித்தால் தான் கடன் கிடைக்கும். உங்கள் வங்கிக்கணக்கின் பணப்பரிமாற்றம் அல்லது கடன் வரலாற்றின் அடிப்படையில் தனிநபர் கடன்கள் வழங்கப்படும். ஆனால், அன்றைய நாளில் தங்கத்தின் விலை உள்ளிட்ட வேறு பல காரணங்களின் அடிப்படையில் தங்கத்தின் மீது கடன் பெற முடியும்.

தங்க கடன் மீதான வட்டி, தனிநபர் வட்டியை காட்டிலும் கொஞ்சம் குறைவாக இருக்கும். தங்க கடன் அல்லது தனிநபர் கடன் இரண்டுக்கும் நிரந்த வட்டி நிர்ணயிக்கப்படுவதில்லை. மாறாக, இதன் வட்டிவிகிதம் வங்கிக்கு வங்கி மாறுபடும். குறித்த காலத்திற்கு முன்பாகவே கடனை அடைக்க விரும்பினால், தங்க கடனில் கூடுதல் கட்டணம் எதுவும் விதிக்கப்படுவதில்லை. தனிநபர் கடனை பொறுத்தவரை சில கட்டணங்கள் விதிக்கப்படும். தங்கத்தின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கும் தங்கக் கடனை அடைப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தங்கக் கடனை திருப்பி செலுத்தும்போது, தங்க விலையேற்றங்களுக்கு தகுந்தபடி கடன் தொகை அதிகமாக வசூலிக்கப்படாது. தங்கக் கடன் வாங்கும்போது மட்டும் தங்கத்தின் மீதான விலையை தெரிந்து கொள்வது நல்லதாகும்.

உயர்ந்து வரும் தங்கத்தின் நுகர்வு:

இந்தியாவில் தங்கத்தின் நுகர்வு நிலையாக உயர்ந்தவண்ணம் உள்ளது. 2009-ஆம் ஆண்டில் 442 மெட்ரிக் டன்னாக இருந்த தங்கத்தின் நுகர்வு, 2013-ஆம் ஆண்டில் 974 மெட்ரிக் டன்னாக உயர்ந்தது. தங்கத்தின் நுகர்வில் சீனாவை விஞ்ச முடியாத அளவிலுக்கு, ஒப்பீட்டளவில் இந்தியாவின் தங்கத்தின் நுகர்வு குறைவாக உள்ளது. சீனாவில் தங்கத்தின் நுகர்வு 1120 மெட்ரிக் டன்னாகும். இந்தியாவை காட்டிலும் சீனாவின் தங்கத்தின் நுகர்வு 10 சதம் அதிக‌மாக உள்ளது. இந்தியாவில் பெரும்பாலான தங்கத்தின் நுகர்வு ஆபரணங்களுக்கு சென்று விடுகிறது. ஆனால்,சீனாவில் பெரும்பாலான தங்கம், தங்கக்கட்டிகள், தங்க நாணயங்கள் வடிவில் முதலீடாக மாறி விடுகின்றன. உற்பத்திப்பொருட்களிலும் தங்கத்தை சீனா பயன்படுத்துகிறது. இருப்பதாக கூறப்படுவதை காட்டிலும், சீனாவிடம் இருப்பு இருக்கும் தங்கத்தின் அளவு குறைவாகவே இருப்பதாக‌ கூறப்படுகிறது. தங்க நுகர்வில் சீனா, இந்தியாவுக்கு அடுத்தப்படியாக மூன்றாவது இடத்தில் அமெரிக்க உள்ளது.

மேலும் கீழும் ஓடும் தங்கத்தின் விலை:

சர்வதேச சந்தையின் விலைக்கு தகுந்தபடி இந்தியாவில் இன்றைய தங்கத்தின் விலை முடிவு செய்யப்படுகிறது. வட்டி விகிதங்களில் ஏற்படும் மாற்றங்கள், பணவீக்கத்தின் போக்கு தவிர, இங்கும் அங்கும் செல்லும் செலாவணியின் போக்கின் அடிப்படையில் தான் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தங்கத்தை பொருளாக வாங்குவதை பொறுத்தும் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் காணப்படும். பணப்புழக்கம் அதிகம் இருந்தால் தங்கத்தின் விலை மேல் நோக்கி நகரும். தங்க மாற்று வர்த்தக நிதியம் போன்ற முதலீட்டு திட்டங்கள், பொருளாக தங்கம் வாங்கும் போக்கை துடைத்தெறியலாம்.

தங்கத்தை வாங்கி வைப்பதில் இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும் முயற்சிகளை பொருத்தும் தங்கம் விலை முடிவாகும். நமக்கெல்லாம் தெரிந்தது போல, அமெரிக்காவில் தான் தங்கத்தின் கையிருப்பு அதிகமாக இருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி போன்ற மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கினால், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் தங்கத்தின் விலையை அது பாதிக்கும். இந்த வங்கிகள் அரிதிலும் அரிதாக தான் தங்கத்தை விற்கின்றன. ஒரு வேளை இந்த வங்கிகள் தங்கத்தை விற்றாலும் தங்கத்தின் விலையில் மாற்றத்தை தவிர்க்க முடியாது.

இந்தியாவில் தங்கத்தின் தேவை:

உலக தங்க கவுன்சிலின் தகவலின்படி, கடந்த ஆண்டு இந்தியாவில் தங்கத்திற்கான தேவை குறைந்துள்ளது. இருந்தபோதிலும், தங்கத்தின் பயன்பாட்டில் இந்தியா மீண்டும் சீனாவை முந்தியுள்ளது. உண்மையில், கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் தங்க ஆபரணங்களின் தேவை கணிசமாக உயர்ந்துள்ளது. இது தங்கத்தின் தேவையை அதிகரித்துள்ளது. உலோகமாக தங்கத்தை வாங்குவதற்கு மாற்றீடாக‌ இ-தங்கம் மற்றும் தங்க இ.டி.எஃப்.-கள் போன்றவை இருந்தபோதிலும், தங்கத்தை உலோகமாக வாங்குவதையே பெரும்பாலான முதலீட்டாளர்கள் விரும்புகிறார்கள். நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுப்படுத்துவதற்காக‌, கூடுதல் வரிகள் விதிப்பதன் மூலம் தங்கத்தின் இறக்குமதியை அரசு மட்டுப்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு, தங்கத்தின் இறக்குமதியைத் தடுக்கும் வகையில், தொடர்ச்சியான வரி உயர்வுகளை அரசு விதித்தது. கடந்த சில ஆண்டுகளாக‌ தங்கத்தின் விலை உயர்வு மந்தமாகவே காணப்படுகிறது. 2008-ஆம் ஆண்டில் இருந்து தங்கத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் உயர்ந்த படியே உள்ளது. இந்த போக்கு எத்தனை காலம் நீடிக்கும் என்பதை கூற முடியாது.

இந்தியாவில் தங்க விலைக்கான காரணங்கள்

இந்தியாவில் தங்கத்தின் விலையை நிர்ணப்பதில் ஏராளமான காரணங்கள் உள்ளன. முதல் காரணம், சர்வதேச காரணங்களாகும். இதற்கு ஏராளமான பல காரணங்கள் உள்ளன. இதில் முக்கியமானது, தங்கத்திற்கான தேவை மற்றும் வரத்து ஆகும். கோல்ட் எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட்ஸ் தவிர, நாட்டில் உள்ள மத்திய வங்கிகளில் இருந்தும் தங்கத்திற்கான தேவை உருவாகும். தங்கம் படிந்திருக்கும் இடங்கள் அதிகம் கண்டுபிடிக்கப்பட்டால், சுரங்கங்களில் அதிக தங்கம் வெட்டி எடுக்கப்பட்டால் சந்தையில் தங்கத்தின் வரத்து அதிகமாகும். அது தங்கத்தின் விற்பனை மீதான அழுத்தத்தை அதிகரிக்கும்.

இது, தங்கத்தின் விலை மீது பாதிப்பை ஏற்படுத்தும் வழக்கமான சர்வதேச காரணங்களில் ஒன்றாகும். இந்தியாவில் தங்கத்தின் விலையை கண்டு கவலை அடைவதற்கு மேலும் பல காரணங்கள் இருக்கின்றன. அரசு கொண்டு வரும் பல்வேறு கொள்கைகள், அடிக்கடி விதிக்கப்படும் இறக்குமதி வரி மற்றும் விற்பனை வரிகள் போன்றவையும் விலை மீது தாக்கத்தை ஏற்படுத்தும். தங்க விலைகளில் ஏற்படும் ஏற்றங்கள், முதலீட்டாளர்களுக்கு நல்ல ஈட்டுறுதியை தந்துள்ளன. எனவே, தங்கத்திற்கு தேவை இருக்கிறதா? இல்லையா? என்பது முக்கியமல்ல. நீண்டகாலத்தில் தங்கம் போதுமான சொத்துக்களை ஈட்டியுள்ளதோடு, குறுகியகாலத்தில் முதலீட்டாளர்கள் கூடுதல் பணத்தை பெறவும் உதவியுள்ளது.

எனவே, நீங்கள் நீண்டகால முதலீட்டாளராக இருந்தால், உங்களுக்கு கூடுதல் பணம் பார்க்க உதவும். அண்மையில் தங்கம் மீதான விலை வேகமாக உயர்ந்தது. அப்படியானால், எதிர்காலத்தில் அதிக வருவாய் கிடைக்கும் என்பதற்கான வாய்ப்பு குறைவே. ஆனால், தங்கம் விலை உயர்வதற்கான மேலும் காரணங்கள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. இதுவரை பேசிய காரணங்கள் தான் ஒன்றோடு ஒன்று கூட்டு சேர்ந்து தங்கத்தின் விலை மீது தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. அரசின் கொள்கை மாற்றங்களும் விலை ஏற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மத்திய பட்ஜெட்டுக்கு பிறகு கலால் வரி உள்ளிட்ட வரிவிதிப்பில் சில மாற்றங்கள் இருந்தன. இது அரசின் கொள்கை மாற்றத்திற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்வதற்கு இவைகள் முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. இது, இந்தியாவின் ஆபரண தங்க விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் இறுக்கமடைந்து வருவதாக நாம் எழுதினால், இந்தியாவில் தங்கத்தின் விலையில் அது தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, தங்க விலை உயர்வில் நீங்கள் கொஞ்சம் முன்னெச்சரிக்கை வகிப்பது நல்லது.

இந்தியாவில் 22 கேரட் தங்கத்தின் விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?

இந்த இறக்கும‌தியாளர்கள் தங்கத்தை இறக்குமதி செய்ததும், அதன் மீது இறக்குமதி வரி, மதிப்புக்கூட்டுவரி உள்ளிட்டவை விதிக்கப்படுகின்றன. இவை, நாட்டில் உள்ள மொத்த விற்பனையாளர்களுக்கு விற்கப்படுகிறது. அவை, சில்லரை விற்பனையாளர்களுக்கு விற்கப்படுகிறது. அப்படியானால், இந்தியாவில் தங்கத்தின் விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது. இந்த வேலை தங்க சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த அமைப்பு தான் மெய்நிகர்(லைவ்) தங்கத்தின் விலையை முடிவு செய்கின்றன. இந்தியாவில் மெய்நிகர் தங்கத்தின் விலை ஒரு நாளில் அடிக்கடிமாறுவதில்லை என்று கூறப்படுகிறது. இறக்குமதியின் தேவைகளுக்கு ஏற்பவே பெரும்பாலான தங்கத்தின் இறக்குமதிகள் நடக்கின்றன.

கடந்த காலங்களை போல அல்லாமல், அண்மைகாலமாக தங்கத்தின் இறக்குமதி அளவு உயர்ந்துள்ளது. தங்கத்தின் இறக்குமதியை குறைக்க அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும், இந்தியாவில் தங்கத்தின் மீதான கவர்ச்சி இன்னும் மங்காத காரணத்தால், தங்கத்தின் இறக்குமதியை தடுப்பது அரசுக்கு அவ்வளவு எளிதாக இல்லை. எனினும், 2017-ஆம் ஆண்டு தங்கத்தின் தேவை முழுமையாக சரிந்து விழுந்தது. அடுத்தசில வாரங்களில் நாம் எங்கு பயணிக்கப் போகிறோம் என்பது ஆர்வத்தை தூண்டக்கூடியதாகும். தங்கத்தின் பயன்பாட்டை குறைக்க நிலையான முயற்சிகள் நடந்து வருகின்றன. அந்த முயற்சிக்கு வெற்றி கிடைக்குமா? என்பதை எளிதில் கூறிவிட முடியாது. தற்போதைய நிலையில், நாட்டில் தங்கத்தின் பயன்பாட்டை குறைப்பதற்கு உதவியாக பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. பெரும்பாலான இத்திட்டங்களுக்கு அவற்றுக்கே உரிய சில சாதகங்களும், பாதகங்களும் உள்ளன.

மும்பையில் கேடிஎம் தங்கத்தைப் பற்றிப் புரிந்துக் கொள்ளுதல்

இதில் மற்ற எல்லாவற்றையும் விட வரலாற்றோடு பெருமளவில் தொடர்புடையது. கேடிஎம் தங்கம் கேட்மியத்தில் உருக்கப்பட்டதைக் குறிப்பிடுகிறது. இன்று கேடிஎம் பெரும்பாலும் நடைமுறையில் இல்லை நாம் மும்பையில் நகைக்கடைக்காரர்கள் கேடிஎம் நகைகள் விற்பதை பார்க்க முடிவதில்லை. இது பெருமளவில் ஏன் நடக்கிறது என்றால், கேடிஎம் மிகக் குறைந்த உருகு நிலைப் புள்ளியைக் கொண்டிருக்கிறது,ஈ தங்கத்தைப் பயன்படுத்துவதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகும். கேடிஎம் பயன்பாட்டை தொடராமல் விட்டதற்கு காரணம் அதிலிருந்து வரும் புகையாகும். கேடிஎம் புகை நச்சுத்தன்மை வாய்ந்ததென்று நம்பப்படுகிறது. எனவே அது சரும நோய்கள் மற்றும் பல்வேறு உபாதைகளை ஏற்படுத்துமென்று தெரிவிக்கப்படுகிறது.

இன்று தனிநபர்கள் மும்பையில் மற்ற எல்லாவற்றையும் விட ஹால் மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளையே வாங்க விரும்புகிறார்கள்.

எனவே, நீங்கள் தங்கம் வாங்க விரும்பினால், வழக்கமான ஹால் மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளைத் தாண்டி வேறெதைப் பற்றியும் யோசிக்காதீர்கள். இதில் உங்களுக்கு தங்கத்தின் தூய்மைக்கு உத்திரவாதமளிக்கப்படுவதால் அது உங்களுக்கு தூக்கமற்ற இரவுகளை வழங்காது. குறிப்பாக இது முற்றிலும் உண்மை ஏனென்றால் நீங்கள் தங்கம் வாங்க ஏராளமான பணத்தை செலவழிக்கிறீர்கள் பதிலுக்கு நீங்கள் தூய்மையான தங்கத்தைப் பெறவில்லை என்றால் செலவழிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது? நீங்கள் தங்கம் வாங்க அதிகப் பணம் செலவழிப்பவராக இருந்தால், நீங்கள் தூய்மையான தங்கத்தைப் பெறும் தகுதி உடையவராகிறீர்கள். எனவே, நீங்கள் அடுத்த முறை மும்பைக்கு வருகை தரும் போது நீங்கள் தூய்மையான ஹால் மார்க் தங்கத்தோடு ஊர் திரும்புவீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இருந்தாலும், நீங்கள் தங்கம் வாங்க விரும்பும் போது கேடிஎம் மட்டுமே ஒரே ஒரு தேர்வு அல்ல, இன்று மும்பை போன்ற பெருநகரங்களில் எளிதாக விற்பனை செய்யக்கூடிய ஹால் மார்க் முத்திரையிடப்பட்ட நகைகள் எளிதாகக் கிடைக்கப் பெறுகின்றன. இருந்தாலும், இந்த ஹால் மார்க் நகைகளை விற்கும் மையங்கள் விரைவில் விரிவுப்படுத்தப்பட வேண்டும் என்று ஒரு கருத்து நிலவுகிறது. முன்பே குறிப்பிட்டதைப் போல பெருமளவு தங்க வகைகளுக்கு அதிக கிராக்கி இல்லை. எனவே, எந்த ஒரு வகைக்கும் போட்டியான ஹால் மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளையே வாங்குவது சிறந்ததாகும். இனி வரவிருக்கும் நாட்களில் இது உங்களை முன்னிலையில் வைக்கும். கேடிஎம் தங்க நகைகளை வாங்குவதற்கு பதிலாக மும்பையில் ஹால் மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளை வாங்குவது நல்லது.

மும்பையில் தங்கத்தை எங்கே வாங்குவது?

மும்பையில் ஜவாரி பஜார் பக்கம் சென்றால் தெரியும், மும்பை மக்கள் தங்கத்தின் மீது எவ்வளவு ஆர்வம் கொண்டுள்ளார்கள் என்று. வார இறுதியில் இப்பகுதியில் இருக்கும் அனைத்த நகை கடைகளும் மக்களால் நிரம்பி வழியும். இந்நிலை மும்பையில் மட்டும்அல்ல பெரு நகரங்களில் உள்ள அனைத்து கடைகளிலும் இதே நிலை தான். திரிபோவனாஸ் பீம்ஜி ஜவாரி நிறுவனம் இந்தியாவின் மகப்பெரிய நகைக்கடைகளில் ஒன்று. இக்கடை இப்பகுதியில் 1864ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. வேர்ல்டு கோல்டு கவுன்சிலின் தகவல் படி 2014ஆம் நிதியாண்டின் ஜூலை -செப்டம்பர் காலகட்டத்தில் தங்க தேவையின் அளவு 161.6 டன்னாக இருந்தது.

2018 ஆம் ஆண்டு மும்பையில் தங்கத்தின் போக்கு

இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே மும்பை நகரத்தில் தங்கத்தின் விலைகள் அற்புதமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. இது ஆண்டின் தொடக்கத்திலிருந்தே உலகளாவிய சந்தைகளில் பெருமளவில் நாம் பார்த்த நட்சத்திர விலைகளாகும். மத்திய வங்கிகள் நடைமுறைகளை எளிதாக்கியுள்ளதால் உலகளாவிய சந்தைகள் பணப்புழக்கத்தால் நிறைந்துள்ளது. இந்த பணமயமாக்கலானது தங்கத்துடன் சேர்த்து அனைத்து சொத்துப் பிரிவுகளிலும் அதன் வழியைக் கண்டறிந்து உள் நுழைந்துள்ளது.

இருப்பினும் ஆய்வாளர்கள் தங்கத்தின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளது என்று எச்சரிப்பதோடு, தங்கத்தை வாங்குவதற்கு முன்பு சில முன்னெச்சரிக்கைகளை அறிவுறுத்துகிறார்கள்.
எனவே, தற்போது தங்கத்தை வாங்குவதற்கு முன், சில கோணங்களில் பகுத்தாய்ந்து சமயோசிதமாக முடிவெடுக்க வேண்டியது அவசியம் என்று நாங்களும் கூட பரிந்துரைக்கிறோம்.

நீங்கள் தங்க முதலீட்டில் ஒரு நீண்ட காலத்திற்கான ஆட்டக்காரராக இருந்தால் நல்லது, ஆனால் குறுகிய கால ஆட்டக்காரர்கள் இந்த விலையுயர்ந்த உலோகத்திலிருந்து மிக அதிக விலை இயக்கத்தை எதிர்பார்க்கக்கூடாது.

 மும்பையில் ஹால்மார்க் தங்கத்தைப் பரிசோதிப்பது எப்படி?

இந்தியாவில் தர அடையாளமிடப்பட்ட தங்கத்தையே எப்பொழுதும் வாங்குவது சிறந்த பந்தயமாக இருக்கும். ஹால் மார்க் நகைகளை விற்கும் ஏராளமான கடைகள் அங்கே இருக்கின்றன. இந்தியாவில் தங்கத்திற்கு தர அடையாளக் குறியிடும் பணியை இந்தியத் தர நிர்ணய அமைப்பு கட்டுப்படுத்துகிறது. அவர்களிடம் பல்வேறு விதமான சோதனை மற்றும் பகுப்பாய்வு மையங்கள் இருக்கின்றன. அங்கே நீங்கள் தங்கத்தின் தரத்தைப் பரிசோதித்துக் கொள்ளலாம். நுகர்வோர் தங்கம் வாங்கும் போது சில விஷயங்களைப் பரிசோதிக்க வேண்டியது அவசியமாகும். முதலில் தங்கம் எங்கே பரிசோதிக்கப்பட்டது மற்றும் பகுப்பாய்வு செய்யப்பட்டதோ அந்த மையத்தின் அடையாளச் சின்னத்தை சரிபாருங்கள். நீங்கள் வாங்கும் தங்க நகைகள் லோகோவைத் தெளிவாகக் குறிக்க வேண்டும். அடையாளக் குறியிடப்பட்ட ஆண்டைக் குறிப்பிடும் ஒரு எழுத்து அதன் மீது இருக்கும். உதாரணமாக, பி என்ற எழுத்து 2011 ஆம் ஆண்டைக் குறிக்கிறது, சி என்ற எழுத்து 2003 ஆம் ஆண்டைக் குறிக்கிறது. அதே போல அடுத்தடுத்த எழுத்துக்கள் மேற்கொண்டு ஆண்டுகளைக் குறிக்கும். இது தவிர நகைக் கடைக்காரர்களின் அடையாளக் குறியீடும் அத்துடன் இருக்கும்.

மும்பையில் தங்கம் அல்லது அசையா சொத்து.. எந்த முதலீடு சிறந்தது?

தங்கத்தில் அல்லது அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்வது சிறந்தத் தேர்வாகும். ஆனால் அதற்கு முன்பாக சந்தை நிலவரம், வாய்ப்பு போன்ற சில விஷயங்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

முதலாவதாக, நாம் மும்பையில் தங்கத்தின் விலைகள் மற்றும் அத்துடன் அசையாச் சொத்துக்களின் மதிப்பை சரிபார்க்க வேண்டி இருப்பதால் சந்தை நிலவரத்தை பார்க்க வேண்டியது அவசியமாகும். மும்பையில் தங்கத்தின் விலைகள் உயரும் போது ரியல் எஸ்டேட் விலைகள் சரியும், உங்கள் திட்டம் நீண்ட கால வரையறை கொண்டதாக இருந்தால் நீங்கள் ரியல் எஸ்டேட்டை தேர்ந்தெடுக்கலாம். உங்கள் திட்டம் வரையறுக்கப்பட்டதாக இருந்தால் மற்றும் நீங்கள் ஒரு சொத்தை அல்லது தங்கத்தை ஒரு வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் விற்க விரும்பினால் தங்கத்தை தேர்ந்தெடுக்குமாறு அதிக அளவில் பரிந்துரைக்கப்படுகிறது. தங்கத்தோடு ஒப்பிடும் போது ரியல் எஸ்டேட் மதிப்பு உயர்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. தங்கம் என்கிற விஷயத்திற்கு வரும் போது, மும்பையில் தங்கத்தின் விலைகள் பல்வேறு காரணிகளை சார்ந்திருப்பதால் மும்பையில் எப்பொழுதும் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும்.

நீங்கள் ஒரு குறுகிய காலத்திலேயே நல்ல விலை ஏற்றத்தையும் இறக்கத்தையும் காணலாம்.
தங்கத்தைப் பற்றிக் கருத்தில் கொள்ள வேண்டிய வேறு சில விஷயங்களும் இருக்கின்றன. தங்கம் ஒரு உலகளாவிய சொத்தாகும். நீங்கள் தங்கத்தை உலகில் எங்கு வேண்டுமானாலும் வாங்கி விற்றாலும் நீங்கள் அதற்கான விலையை பெறலாம், நீங்கள் மும்பையைப் போல அதே விலையை பெறவில்லை என்றாலும் நீங்கள் நல்லதொரு விலையைப் பெறலாம்.

மும்பையில் எலக்ட்ரானிக் துறையில் தங்கம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது?

பூமியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்படும் அனைத்து உலோகங்களிலும் தங்கம் அதிகப் பயன் தரக்கூடியது மற்றும் மிகவும் விலையுயர்ந்த உலோகமுமாகும். இந்த உலோகம் பல்வேறு மூலக்கூறுகளை கொண்டுள்ளது. எனவே, இந்த உலோகம் உலகெங்கும் வெவ்வேறு தயாரிப்புத் துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. தங்கம் ஒரு சிறந்த மின்கடத்தியாகும். இது தாங்குதிறனை மங்கச் செய்யும்; அதை கம்பிகளாக இழுக்கலாம், மெல்லியத் தகடுகளாக அடிக்கலாம். இதில் வேலை செய்வது மிகவும் சுலபமாகும், இது பல்வேறு தேவைகளுக்காக இதர உலோகங்களுடன் உலோகக் கலப்பு செய்யப்படுகிறது, இதை வெவ்வேறு வடிவங்களில் வடிவமைக்கலாம், இது அற்புதமான பிரகாசத்தைக் கொண்டுள்ளது மேலும் அழகிய வண்ணத்தைக் கொண்டிருக்கிறது.

தங்கம் உலகெங்கிலும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் பயன்படுத்தப்படுகிறது. திட நிலை எல்க்ட்ரானிக் சாதனங்கள் குறைவான வோல்டேஜ் மற்றும் மின்சாரத்தை பயன்படுத்துகிறது அது தொடர்புப் புள்ளியில் விரைவாக அரிப்பினால் குறுக்கிடப்படுகிறது. தங்கம் எளிதாக குறைவான வோல்டேஜ் மின்சாரத்தை சுமக்கும் மற்றும் அரிப்பிலிருந்து விடுதலை பெற்றது என்பதால் இது ஒரு சிறந்த மின்கடத்தியாகும். தங்கத்தில் செய்யப்பட்ட எந்த வகை எலக்ட்ரானிக் சாதனமாக இருந்தாலும் அது அதிக நம்பகத்தன்மை கொண்டது மேலும் அதன் நீண்ட வாழ்நாள் அற்புதமானது. தங்கம் ஸ்விட்சுகள், பற்ற வைக்கப்பட்ட இணைப்புகள், இணைப்பான்கள், ரிலே தொடர்புகள், இணைப்பு கம்பிகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது. தங்கத்தின் ஒரு சிறிய பகுதி புவிக்கோள இருப்பிடமறியும் அமைப்பு (ஜிபிஎஸ்), கால்குலேட்டர்கள், செல் போன்கள், தொலைக்காட்சி பெட்டிகள் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களில் பயன்படுத்தப்படுகிறது. தங்கம் மேலும் கணினிகளில் துல்லியமான மற்றும் விரைவான டிஜிட்டல் தகவல் பரிமாற்றப் பயன்படுத்தப்படுவதைக் காணலாம்.

மும்பையில் தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா?

யாருக்காக இருந்தாலும் முதன்மையான கவனம் பணத்தை எப்படிப் பாதுகாப்பது என்பதில் தான் இருக்கிறது. முதலீட்டாளர்கள் பெரும்பாலும் அவர்களுடைய சொத்தை பாதுகாப்பாக வைக்க நினைகிறார்கள். ஆனால் இன்றைய நாட்களில் அவர்களுக்கு நிறையத் தேர்வுகள் கிடைக்கின்றன. அவர்களுடைய பணத்தை எங்கே திறம்பட வைப்பது என்று சிந்திப்பது மிகவும் கடினமானது. இப்போது முதலீட்டாளர்கள் சிறந்த வருவாயையும் மற்றும் பாதுகாப்பையும் பெற விரும்பினால் அவர்களுடைய பணத்தைத் தங்கத்தில் சந்தோஷமாக முதலீடு செய்யலாம்.

பல ஆண்டுகளாகத் தொடங்கித் தற்சமயம் வரை தங்கம் பல முதலீட்டாளர்களுக்குப் பாதுகாப்பான புகலிடமாக நிரூபணமாகியுள்ளது. உலகளாவிய சந்தை வீழ்ச்சியடையும் போது இந்தத் தங்கம் நன்கு செயல்பட்டு முன்னுரிமை பெறுவதாக முதலீட்டாளர்கள் நம்புகிறார்கள். இந்தியாவில், தங்கத்தில் முதலீடு செய்வது உணர்ச்சிகரமானதாகக் கருதப்படுகிறது ஏனெனில் அதன் பயன்பாடு பெருமளவில் நகைகளில் இருக்கிறது. தகவல்களின் படி இந்தியாலுள்ள மொத்த தங்கம் தோராயமாக 22,000 டன்னாகும். இது ஆண்டுக்கு ஆண்டு நிலையான விகிதத்தில் அதிகரித்து வருகிறது.

எனவே பல முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். ஏனெனில் அது விரைவாக மீள்கிறது மேலும் கடினமான சூழ்நிலைகளில் அதன் செயல்பாடும் சிறப்பாக இருக்கிறது. தங்கம் ஒரு அசலான உலோகமாகும். அது மற்ற உலோகங்களைப் போல அழிவதில்லை அல்லது சேதமடைவதில்லை. தங்கத்திற்கு நீண்ட வாழ்நாள் உள்ளது மேலும் இதைக் கரன்சியாகவும் மற்றும் நகையாகவும் செய்யலாம். மேலும் அதற்குக் குறைவான விநியோகமே உள்ளது என்பதால் சந்தையில் அதிகத் தேவை இருக்கிறது. உலகளாவிய சந்தைகள் சரியும் போது மக்கள் தங்கத்தை நோக்கி நகர்கிறார்கள் ஏனெனில் இது முதலீட்டாளர்களை இழப்பிலிருந்து காக்கும் ஒரு முறையாகும்

மும்பையில் கேடிஎம் தங்கத்தைப் பற்றிப் புரிந்துக் கொள்ளுதல்

இதில் மற்ற எல்லாவற்றையும் விட வரலாற்றோடு பெருமளவில் தொடர்புடையது.

கேடிஎம் தங்கம் கேட்மியத்தில் உருக்கப்பட்டதைக் குறிப்பிடுகிறது. இன்று கேடிஎம் பெரும்பாலும் நடைமுறையில் இல்லை நாம் மும்பையில் நகைக்கடைக்காரர்கள் கேடிஎம் நகைகள் விற்பதை பார்க்க முடிவதில்லை. இது பெருமளவில் ஏன் நடக்கிறது என்றால், கேடிஎம் மிகக் குறைந்த உருகு நிலைப் புள்ளியைக் கொண்டிருக்கிறது,ஈ தங்கத்தைப் பயன்படுத்துவதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகும். கேடிஎம் பயன்பாட்டை தொடராமல் விட்டதற்கு காரணம் அதிலிருந்து வரும் புகையாகும். கேடிஎம் புகை நச்சுத்தன்மை வாய்ந்ததென்று நம்பப்படுகிறது. எனவே அது சரும நோய்கள் மற்றும் பல்வேறு உபாதைகளை ஏற்படுத்துமென்று தெரிவிக்கப்படுகிறது.

இன்று தனிநபர்கள் மும்பையில் மற்ற எல்லாவற்றையும் விட ஹால் மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளையே வாங்க விரும்புகிறார்கள். எனவே, நீங்கள் தங்கம் வாங்க விரும்பினால், வழக்கமான ஹால் மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளைத் தாண்டி வேறெதைப் பற்றியும் யோசிக்காதீர்கள். இதில் உங்களுக்கு தங்கத்தின் தூய்மைக்கு உத்திரவாதமளிக்கப்படுவதால் அது உங்களுக்கு தூக்கமற்ற இரவுகளை வழங்காது. குறிப்பாக இது முற்றிலும் உண்மை ஏனென்றால் நீங்கள் தங்கம் வாங்க ஏராளமான பணத்தை செலவழிக்கிறீர்கள் பதிலுக்கு நீங்கள் தூய்மையான தங்கத்தைப் பெறவில்லை என்றால் செலவழிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது? நீங்கள் தங்கம் வாங்க அதிகப் பணம் செலவழிப்பவராக இருந்தால், நீங்கள் தூய்மையான தங்கத்தைப் பெறும் தகுதி உடையவராகிறீர்கள். எனவே, நீங்கள் அடுத்த முறை மும்பைக்கு வருகை தரும் போது நீங்கள் தூய்மையான ஹால் மார்க் தங்கத்தோடு ஊர் திரும்புவீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இருந்தாலும், நீங்கள் தங்கம் வாங்க விரும்பும் போது கேடிஎம் மட்டுமே ஒரே ஒரு தேர்வு அல்ல, இன்று மும்பை போன்ற பெருநகரங்களில் எளிதாக விற்பனை செய்யக்கூடிய ஹால் மார்க் முத்திரையிடப்பட்ட நகைகள் எளிதாகக் கிடைக்கப் பெறுகின்றன. இருந்தாலும், இந்த ஹால் மார்க் நகைகளை விற்கும் மையங்கள் விரைவில் விரிவுப்படுத்தப்பட வேண்டும் என்று ஒரு கருத்து நிலவுகிறது. முன்பே குறிப்பிட்டதைப் போல பெருமளவு தங்க வகைகளுக்கு அதிக கிராக்கி இல்லை. எனவே, எந்த ஒரு வகைக்கும் போட்டியான ஹால் மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளையே வாங்குவது சிறந்ததாகும். இனி வரவிருக்கும் நாட்களில் இது உங்களை முன்னிலையில் வைக்கும். கேடிஎம் தங்க நகைகளை வாங்குவதற்கு பதிலாக மும்பையில் ஹால் மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளை வாங்குவது நல்லது.

மும்பையில் ஃப்யூச்சர் மார்க்கெட்டில் தங்கம் வாங்குதல்

நீங்கள் மும்பையில் தங்கம் வாங்க விரும்பினால் இருக்கும் ஒரு தேர்வு ஃப்யூச்சர் மார்க்கெட்டாகும். இருப்பினும், இதிலுள்ள பிரச்சனை என்னவென்றால் உங்கள் திட்டத்தின் படி அதைப் பல வருடங்களுக்கு வைத்திருக்க முடியாது. ஃப்யூச்சர் மார்க்கெட்டில் இதன் அர்த்தம் என்னவென்றால் அதன் ஒப்பந்தம் காலாவதியான பிறகு ஒரு பரிவர்த்தனையைக் கணக்கிட வேண்டியது அவசியமாகும். ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம் வாருங்கள். நீங்கள் தங்க ஃப்யூச்சர் மார்க்கெட்டில் பிப்ரவரி டெலிவரி மற்றும் மார்ச்சில் காலாவதியாகும் ஒரு தங்க இதழை வாங்குகிறீர்கள் ஏனெனில் நீங்கள் வாங்கியிருப்பது மார்ச் ஒப்பந்தம். அத்தகைய சந்தர்ப்பத்தில் நீங்கள் பொருளை மார்ச்சில் விற்பதன் மூலம் கொள்முதலை ஒருங்கிணைக்க வேண்டும். தங்க முதலீடு சாதாரணப் பாங்கில் இருக்கும் போது நீங்கள் வாங்கி வைத்துக் கொள்ளலாம் என்பதால் கணக்கிடுவதைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. இது தங்க ஃப்யூச்சர்களில் நிகழ்வதில்லை. நீங்கள் ஒப்பந்தத்தின் காலாவதியை கணக்கிட வேண்டும்.

ஆனால் இந்தியாவில் தங்க ஃப்யூச்சர் மார்க்கெட்டில் முதலீடு செய்யும் முன்பு அதிக ரிஸ்க் உள்ளதால் வல்லுநர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

நிபந்தனை: இங்கு தரப்பட்டுள்ள தங்க விலை அனைத்தும் நகரத்தில் உள்ள பிரபலமான நகைகடைகளில் இருந்து பெறப்பட்டவை, குறிப்பிட்டுள்ள விலையில் வித்தியாசங்கள் இருக்கலாம். தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் மிக துல்லியமான தகவல்களை அளிக்க விழைந்துள்ளது. இந்த விலைகள் அனைத்தும் வாசகர்களின் தகவல்களுக்காக மட்டுமே அளிக்கப்படுகிறது. இங்கு குறிப்பிட்டுள்ள தகவல்கள் யாவும் கிரேனியம் இன்பர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் அதன் கிளை மற்றும் இணை நிறுவனங்களுக்கு சம்பந்தம் இல்லை. மேலும் குறிப்பிட்டுள்ள விலைகளை கொண்டு தங்கத்தை வாங்கவும், விற்கவும் அறிவுறுத்தப்படவில்லை. இதனால் ஏற்படும் வர்த்தகத்தில் கிடைக்கும் நஷ்டம் மற்றும் பாதிப்புக்கு நிறுவனம் பொறுப்பு இல்லை.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X