மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு மீண்டும் 31,000 புள்ளிகள் அடைந்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
ஜிஎஸ்டி அமலாக்கத்திற்கு பின் முதல் வரத்தக நாளான இன்று முதலீட்டாளர்கள் நுகர்வோர் துறை சார்ந்த நிறுவனங்களில் அதிகளவிலான முதலீட்டை செய்தனர்.
காரணம் ஜிஎஸ்டி அமலாக்கத்திற்கு பின் பல முன்னணி நிறுவனங்கள் பொருட்களின் விலையை குறைத்துள்ளது, அதேபோல் நாடு முழுவதும் வர்த்தகம் செய்ய தற்போது ஜிஎஸ்டி வரி விதிப்புகள் ஏதுவாக இருக்கும் பட்சத்தில் இத்துறை சந்தை அடுத்த சில மாதங்களிலேயே மிகப்பெரிய வளர்ச்சி அடையும்.
அதுமட்டும் அல்லாமல் இன்றைய சந்தை உயர்விற்கு 5 முக்கிய காரணங்கள் உள்ளது. இதை தெரிந்துக்கொண்டால் அடுத்த சில நாட்களில் பங்குச்சந்தை முதலீட்டில் அதிக லாபத்தை அடையலாம். அதை படிக்க இதை கிளிக் செய்யவும்.
மும்பை பங்குச்சந்தை
இன்றைய வர்த்தகத்தில் ஜிஎஸ்டி அமலாக்கத்தின் தாக்கம் அதிகளவில் தெரிந்தது. ஜிஎஸ்டி மக்களிடம் இருந்து சில பொருட்களுக்கு அதிகளவிலான வரியை வசூலிக்கிறது என்றாலும் நிறுவனங்களின் வர்த்தக வளர்ச்சிக்கு மிகவும் ஏதுவாக உள்ளது.
சென்செக்ஸ்
காலை வர்த்தகம் துவக்கம் முதல் தொடர்ந்து உயர்வில் இருந்த சென்செக்ஸ் குறியீடு திங்கட்கிழமை வர்த்தக முடிவில் சுமார் 300.01 அதாவது கிட்டத்தட்ட 1 சதவீதம் (0.97%) வரை வளர்ச்சி அடைந்துள்ளது.
நிஃப்டி குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டை போல நிஃப்டி குறியீடும் இன்று தொடர் வளர்ச்சியில் சுமார் 94.10 புள்ளிகள் உயர்ந்து 9,614.00 புள்ளிகளை அடைந்தது.
முக்கிய நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் பார்தி இன்பராடெல் நிறுவனம் சுமார் 6 சதவீதம் வரை உயர்ந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் மூழ்கடித்தது. மேலும் வர்த்தக முடிவில் ஐடிசி நிறுவனம் சுமார் 5.70 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்திருந்தது.
அதைதொடர்ந்து ஐடிசி, ஹின்டால்கோ, எய்சர் மோட்டார்ஸ், வேதாந்தா ஆகிய நிறுவங்களும் அதிகளவிலான வளர்ச்சியை அடைந்தது.
2வது நாளில் அமர்க்களம்
ஒரு பார்வை
பெரிய தலை
ஜியோவின் ஜிஎஸ்டி சேவை


Click it and Unblock the Notifications