மோடி திட்டத்தால் பலன் அடையும் 4 நிறுவனங்கள்.. முதலீடு செய்தால், லாபம் நிச்சயம்! மிஸ் பண்ணிடாதீங்க!

மத்திய அரசு இயற்கை எரிவாயு இறக்குமதி செலவினத்தை குறைக்கும் நோக்கில், இயற்கை எரிவாயு உடன் பயோகேஸ் கலப்பதை கட்டாயமாக்கியுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை ஒரே கல்லில் மூன்று மாங்காய் என்பது போன்றது.

பயோகேஸ் பயன்பாடு அதிகரிப்பு வேளாண் கழிவுகளை எரிப்பதற்கு பதிலாக அவை நல்ல பயன்பாட்டுக்கு கொண்டு வரும், கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றத்தை குறைக்கும் மற்றும் இயற்கை எரிவாயு இறக்குமதியும் குறையும்.

மோடி திட்டத்தால் பலன் அடையும் 4 நிறுவனங்கள்.. முதலீடு செய்தால், லாபம் நிச்சயம்! மிஸ் பண்ணிடாதீங்க!

மத்திய அரசின் அறிவிக்கையின்படி, 2025-26ம் நிதியாண்டு முதல் கம்பரஸ்டு பயோகேஸ் (CBO) கலப்பது கட்டாயமாகும். 2025-26, 2026-27, 2027-28ம் நிதியாண்டுகளில் மொத்த சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி நுகர்வில் முறையே 1 சதவீதம், 3 சதவீதம் மற்றும் 4 சதவீதம் சிபிஓ கலப்பது கட்டாயமாகும்.

2028-29ம் நிதியாண்டு முதல் சிபிஓ கலப்பு 5 சதவீதமாக இருக்கும். இயற்கை எரிவாயுடன் பயோகேஸ் கலப்பு நடவடிக்கையால் சில நிறுவனங்கள் பயன் அடையும். அதில் 4 நிறுவனங்கள் குறித்து பாா்ப்போம்.

கெயில் இந்தியா: மத்திய அரசுக்கு சொந்தமான இந்நிறுவனம் இயற்கை எரிவாயு பரிமாற்றம் உள்ள வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் கடந்த 2022-23ம் நிதியாண்டில் நிகர லாபமாக ரூ.5,301 கோடி ஈட்டியுள்ளது. மேலும் கடந்த ஜூன் மற்றும் செப்டம்பர் காலாண்டில் முறையே ரூ.1,412 கோடி மற்றும் ரூ.2,405 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.

இந்நிறுவனம் அடுத்த 3 ஆண்டுகளில் மூலதன செலவினங்களில் ரூ.30,000 கோடி முதலீடு செய்ய இலக்க நிர்ணயம் செய்துள்ளது. கடந்த 1ம் தேதியன்று இப்பங்கு புதிய 52 வார உச்சத்தை (ரூ.169.35) எட்டியது குறிப்பிடத்தக்கது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தில் முடிவில் இப்பங்கின் விலை ரூ.162.40ஆக இருந்தது. இந்நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.1.06 லட்சம் கோடியாக உள்ளது.

அதானி டோட்டல் கேஸ்: அதானி மற்றும் டோட்டல் எனர்ஜிஸ் எஸ்இ ஆகிய நிறுவனங்களின் கூட்டு வர்த்தக நிறுவனமான இந்நிறுவனம் எரிவாயு சப்ளை வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் சிபிஜி மற்றும் இவி சார்ஜிங் உள்ளிட்ட தனது கிளீன் எரிபொருள் உள்கட்டமைப்பை விரிவுப்படுத்தும் நோக்கில், அடுத்த 8-10 ஆண்டுகளில் ரூ.18,000 கோடி முதல் ரூ.20,000 கோடி வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

2023 அக்டோபர் 26ம் தேதியன்று இப்பங்கு 52 வார குறைவான ரூ.521.95க்கு சென்றது. அதன் பிறகு இப்பங்கின் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.1,058.50ல் நிறைவடைந்தது. இந்நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.1.16 லட்சம் கோடியாக உள்ளது.

மகாநகர் கேஸ் லிமிடெட்: இயற்கை எரிவாயு விநியோக வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் இந்நிறுவனம் கடந்த 2022-23ம் நிதியாண்டில் ரூ.700 கோடி முதல் ரூ.800 கோடி வரை மூலதன செலவு செய்ய திட்டமிட்டிருந்தது.

மேலும் நடப்பு நிதியாண்டில் 600 முதல் ரூ.800 கோடி வரை மூலதன செலவு செய்ய திட்டமிட்டுள்ளது. மூலதன செலவினங்களை தவிர்த்து, அடுத்த 1 முதல் 1.5 ஆண்டுகளில் மும்பையில் 4-5 என்என்ஜி விநியோக நிலையங்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 டன் திறன் கொண்ட சிபிஜி ஆலையை அமைக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கு புதிய 52 வார உச்சமான ரூ.1,271.50 விலையை எட்டியது. அன்று வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.1,264.70ல் முடிவுற்றது. இந்நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.12,492 கோடியாக உள்ளது.

குஜராத் கேஸ் லிமிடெட்: குஜராத் அரசுக்கு சொந்தமான இந்நிறுவனம் இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் எதிர்வரும் 2024-25ம் நிதியாண்டில் 1,000 முதல் ரூ.1,200 கோடி வரை மதிப்பிலான முதலீட்டு செலவினங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

மேலும், கடந்த காலாண்டில் இந்நிறுவனம் புதிதாக 53,000 வாடிக்கையாளர்களையும், 221 வணிக வாடிக்கையாளர்களையும் சேர்த்துள்ளது. 61 புதிய தொழில்துறை வாடிக்கையாளர்களையும் பணியமர்த்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.548.85ஐ எட்டியது. அன்று வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.534.50ல் முடிவுற்றது. இந்நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.36,794.45 கோடியாக உள்ளது.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+