அபோட் லேபாரட்டீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம் அபோட் இந்தியா. இந்நிறுவனம் அறிவியல் சார்ந்த ஊட்டச்சத்து பொருட்கள், நோயறிதல் கருவிகள்,பிராண்டட் ஜெனரிக் மருந்துகள், நீரிழிவு மற்றும் வாஸ்குலர் சாதனங்கள் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் தொடர்ந்து லாபம் ஈட்டி வருவதால் முதலீட்டாளர்கள் மத்தியில் இந்நிறுவன பங்குகளுக்கு எப்போதும் டிமாண்ட் இருந்து வருகிறது. பங்குச் சந்தையில் தற்போது இந்நிறுவனத்தின் டிவிடெண்ட் அறிவிப்புதான் பெரும் வைரலாகி வருகிறது.
நிதி நிலை முடிவுகள்
அபோட் இந்தியா நிறுவனம் தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2025 மார்ச் காலாண்டில் அபோட் இந்தியா நிறவனம் நிகர லாபமாக ரூ.367 கோடி ஈட்டியுள்ளது. இது 2024 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 27.9 சதவீதம் அதிகமாகும். ஆரோக்கியமான வருவாய் வளர்ச்சி மற்றும் வலுவான செயல்பாட்டு திறன் காரணமாக லாபம் அதிகரித்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் காலாண்டில் அபோட் இந்தியாவின் வருவாய் ரூ.1,604.6 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2024 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 11.5 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.1,438.6 கோடி ஈட்டியிருந்தது. அபோட் இந்தியா நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு டிவிடெண்டும் அறிவித்துள்ளது.
பொதுக்குழு கூட்டம்
அபோட் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, 2025 மார்ச் 31ம் தேதியுடன் கடந்த 2024-25ம் நிதியாண்டுக்கு, தனது பங்குதாரர்களுக்கு ரூ.10 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ.475 இறுதி டிவிடெண்டாக வழங்க பரிந்துரை செய்துள்ளது. எதிர்வரும் 81வது ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு இது உட்பட்டது என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிவிடெண்டு பெற உரிமையுள்ள பங்குதாரர்களின் தகுதியை உறுதி செய்வதற்கான பதிவு தேதி 2025 ஜூலை 25ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிவிடெண்ட் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டால், 2025 ஆகஸ்ட் 18ம் தேதிக்கு பிறகு வழங்கப்படும் என்று இந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
பங்கு விலை
மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில், அபோட் இந்தியா நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.07 சதவீதம் உயர்ந்து ரூ.30,371.20ஆக இருந்தது. 2025 ஜனவரி 29ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே அபோட் இந்தியா பங்கின் விலை புதிய 52 வார குறைந்தபட்சமான ரூ.25,260.20க்கு சென்றது. ஆனால் அதன் பிறகு இப்பங்கின் விலை மளமளவென ஏற்றம் கண்டது.
அடுத்த 35 நாட்களில் இப்பங்கின் விலை புதிய 52 வார உச்சத்தை எட்டியது. 2025 மார்ச் 3ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே அபோட் இந்தியா பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.31,900க்கு சென்றது.
இது கொஞ்சம் புதுசு..! டிவிடெண்டு வழங்கும் நஷ்டத்தை சந்தித்த நிறுவனம்.. எந்த கம்பெனி தெரியுமா..?
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications