நம் நாட்டில் மின்சார வாகனங்கள் பயன்பாடு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் டாடா மற்றும் மகிந்திரா போன்ற நிறுவனங்கள் தற்போது மின்சார கார்கள் தயாரிப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க தொடங்கி விட்டன. வாகன துறையை பொறுத்தவரை இனி மின்சார வாகனங்கள்தான் எதிர்காலம் என்று நிலை உருவாகி விட்டது. இதனால் பங்குச் சந்தையில் மின்சார வாகன துறையை சேர்ந்த பங்குகளில் முதலீட்டாளர்கள் ஆர்வமுடன் முதலீடு செய்ய தொடங்கி விட்டனர். டாடா, மகிந்திரா போன்ற பெரிய நிறுவன பங்குகளில் முதலீட்டாளர்கள் ஆர்வமுடன் முதலீடு செய்கின்றனர்.
அதேசமயம், மின்சார வாகன துறையில் சில பென்னி பங்குகள் அதிக கவனிக்கப்படாமல் உள்ளது. சந்தை பங்களிப்பு குறைவாக இருப்பது, திரைக்கு பின்னால் வேலை செய்வது மற்றும் பங்கின் விலை மிக குறைவாக இருப்பது போன்ற காரணங்களால் இந்த பென்னி பங்குகள் முதலீட்டாளர்களால் அதிகம் கவனிக்கப்படாமல் உள்ளது. அந்த வகையில், எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சி காண மற்றும் லாபம் ஈட்ட வாய்ப்புள்ள சில மின்சார வாகன துறையை சேர்ந்த 4 பென்னி பங்குகளை நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ரத்தன் இந்தியா எண்டர்பிரைசஸ்
நாட்டின் மிகப்பெரிய தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகவும், பாரம்பரியமாக மின் உற்பத்தி வணிகத்திற்கு பெயர் நிறுவனமாகவும் விளங்குகிறது ரத்தன் இந்தியா எண்டர்பிரைசஸ். இந்நிறுவனம் 2023 ஜனவரியில் இந்தியாவின் முதல் மோட்டார்சைக்கிள் பிராண்டான ரிவோல்ட் மோட்டார்ஸை கையகப்படுத்தியதன் மூலம் மின்சார வாகனங்கள் தயாரிப்பில் களம் இறங்கியது.
கடந்த டிசம்பர் காலாண்டில் ரத்தன் இந்தியா எண்டர்பிரைசஸ் நிறுவனம் ரூ.170 கோடி நஷ்டத்தை சந்தித்தது. இந்நிறுவன பங்கின் விலை தற்போது ரூ.41 என்ற அளவில் உள்ளது. கடந்த ஓராண்டில் இந்நிறுவன பங்கின் விலை 40 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.
ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி
2017ல் தொடங்கப்பட்ட ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் மின்சார வாகனங்கள், பேட்டரி பேக்குகள், மோட்டார்கள் மற்றும் வாகன பிரேம்கள் உள்ளிட்ட மின்சார வாகனங்களுக்கு தேவையான உதிரி பாகங்களை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற ஒரு மின்சார வாகன நிறுவனமாகும். இந்நிறுவனம் தற்போது இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களின் மிகப்பெரிய உற்பத்தியாளராக உள்ளது. இரு சக்கர மின்சார வாகன சந்தையில் 31 சதவீத பங்களிப்பை ஓலா எலக்ட்ரிக் கொண்டுள்ளது.
ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் புதுமையான இவி தயாரிப்புகளை உருவாக்குவதிலும், பேட்டரி பேக்குகள், மோட்டார்கள் மற்றும் பிரேம்கள் போன்ற முக்கிய உதிரிபாகங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. 2024 ஆகஸ்டில் இந்நிறுவன பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 20ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவன பங்கின் விலை புதிய உச்சமான ரூ.157.53ஐ எட்டியது. ஆனால் அதன் பிறகு இப்பங்கின் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. தற்போது இப்பங்கின் விலை ரூ.47 என்ற அளவில் உள்ளது.
வார்டுவிசார்டு இன்னோவேஷன்ஸ் அண்ட் மொபிலிட்டி
வார்டுவிசார்டு இன்னோவேஷன்ஸ் அண்ட் மொபிலிட்டி நிறுவனம் மின்சார வாகன உற்பத்தி பிரிவில் இந்தியாவின் முதல் பிஎஸ்இ பட்டியலிடப்பட்ட நிறுவனமாகும். இந்நிறுவனம் அதிவேக மற்றும் குறைந்தவேக மின்சார இரு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் பிரிவுகளில் 10க்கும் மேற்பட்ட மாடல்களை வழங்குகிறது. 2024-25ம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் ரூ.302 கோடியாக உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, வார்டுவிசார்டு நிறுவனம் 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 400 நகரங்களில் 750 டீலர்களை கொண்டுள்ளது. 60,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்கிறது.
இந்நிறுவனம் தற்போது பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய ஆன்லைன் வர்த்தக தளங்களில் தனது ஜாய் இ பைக் மின்சார ஸ்கூட்டர்களை வாங்க வாடிக்கையாளர்களை அனுமதிக்கிறது. வார்டுவிசார்டு நிறுவனம் தனது நெட்வொர்க்கை கணிசமாக விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது. 2,000 டீலர்கள் மற்றும் 250 மாவட்ட அளவிலான ஷோரூம்களை அடையும் நோக்கத்துடன் தனது சந்தை இருப்பு மற்றும் சேவை வலையமைப்பை இந்நிறுவனம் மேலும் வலுப்படுத்துகிறது. தற்போது வார்டுவிசார்டு நிறுவன பங்கின் விலை ரூ19 என்ற அளவில் உள்ளது.
உர்ஜா குளோபல்
1992ல் தொடங்கப்பட்ட உர்ஜா குளோபல் நிறுவனம், சோலார் பவர், எனர்ஜி சிஸ்டம்ஸ், பேட்டரிகள் மற்றும் மின்சார வாகனங்கள் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் E-Life, E-Zess, Rudra, மற்றும் Chetna போன்ற பிராண்ட் பெயர்களில் மின்சார ஸ்கூட்டர்களையும், உர்ஜா பிராண்டின் கீழ் இ ரிக்ஷாக்கள் மற்றும் சரக்கு வாகனங்களையும் உற்பத்தி செய்கிறது. வலுவான தயாரிப்பு போர்ட்ஃபோலியோ இருந்தபோதிலும், கடந்த 5 ஆண்டுகளாக இந்நிறுவனம் தனது செயல்திறனில் சவால்களை எதிா்கொண்டுள்ளது.
பணிந்த பாகிஸ்தான்.. மீண்டும் பங்குச் சந்தையில் காளையின் ஆட்டம்.. சென்செக்ஸ் 2,000 புள்ளிகள் உயர்வு..
இந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் நிகர லாபம் ஆகிய இரண்டும் சரிவின் பாதையில் உள்ளது. 2023 மார்ச்சில் நிதி அறிக்கையிடல் தொடர்பான நிறுவனத்தின் உள் நிதி கட்டுப்பாடுகள் குறித்து தணிக்கையாளர்கள் கவலைகளை எழுப்பியது குறிப்பிடத்தக்கது. உர்ஜா குளோபல் பங்கு விலை தற்போது ரூ.13.5 என்ற அளவில் உள்ளது.
பக்காவா ஸ்கெட்ச் போட்ட சாந்தி ஸ்பின்டெக்ஸ்... நான்கே நாளில் மொத்தமாக கைமாறும் நிறுவனம்..
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications