முதலீட்டாளர்கள் மத்தியில் அதிக விருப்பம் உடையை முதலீடாகத் திகழும் பிட்காயின் மதிப்பு, பல எதிர்ப்புகளைக் கடந்து 2017ஆம் ஆண்டில் மட்டும் 10 மடங்கு உயர்வைச் சந்தித்துள்ளது. அது மட்டுமல்லாமல் புதன்கிழமை வர்த்தகத்தில் புதிய உச்சத்தையும் அடைந்துள்ளது.
கிரிப்டோகரன்சி சந்தையில் பல நாணயங்கள் இருந்தாலும் பிரபலமாக இருப்பது பிட்காயின் தான். காரணம் எந்த ஒரு முதலீட்டுச் சந்தையும் அளிக்காத வளர்ச்சியைப் பிட்காயின் அளிக்கிறது.
5 சதவீத வளர்ச்சி
இன்றைய வர்த்தகத்தில் பிட்காயின் மதிப்பு 5 சதவீதம் வரையில் உயர்ந்து 10,743 டாலர் என்ற புதிய உச்சத்தை அடைந்து முதலீட்டாளர்களைக் குஷிப்படுத்தியுள்ளது.
மறுப்பு
பல நாடுகள் கிரிப்டோகரன்சியை ஏற்றுக்கொள்ளா விட்டாலும் இதன் மீதான வர்த்தகம் தொடர்ந்து உயர்வது மட்டுமல்லாமல் பணப் பரிமாற்றத்திற்குப் பெரிய அளவில் உதவி செய்கிறது.
இதனால் ஆரம்பம் முதலே பல தடைகளைத் தாண்டி தற்போது 10,743 டாலர் என்ற உச்சத்தை அடைந்துள்ளது.
40,000 டாலர்
உலகளவில் கிரிப்டோகரன்சி தற்போது வேகமாகப் பிரபலம் அடைந்து வரும் காரணத்தினால் அடுத்த ஒரு வருடம் அல்லது இரண்டு வருடத்தில் இதன் வளர்ச்சி புதிய உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்வம்
இதனால் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடனேயே முதலீடு..
இந்தியாவில் கிரிப்டோகரன்சி குறித்த பயம் அதிகளவில் இருக்கும் காரணத்தால் இதன் மீதான நாட்டம் மிகவும் குறைவாகவே உள்ளது. ஆனால் தொழில்நுட்ப துறை மற்றும் வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் அதிகளவிலான முதலீட்டை பிட்காயினில் முதலீடு செய்கின்றனர்.


Click it and Unblock the Notifications