வாழ்க்கையில் ஒரு நாளாவது தாஜ் ஹோட்டலில் தங்க வேண்டும் என்று பலருக்கும் ஆசை இருக்கும். ஏன்னா இந்த ஹோட்டலில் இருக்கும் வசதிகள் மற்றும் குறை சொல்ல முடியாத சேவைகள் விருந்தினர்களுக்கு இனிமையான மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்கும்.
இந்திய விருந்தோம்பல் துறையின் அடையாளமாக தாஜ் ஹோட்டல் விளங்குகிறது. 1903ல் டாடா குழுமத்தின் நிறுவனர் ஜாம்செட்ஜி டாடா மும்பையில் உள்ள தாஜ் மஹால் பேலஸை திறந்தார். இந்த ஹோட்டல் விரைவில் அடையாளமாக மாறியது மற்றும் இந்திய விருந்தோம்பல் தரத்தின் அமைத்தது.

டாடா குழுமத்துக்கு சொந்தமான இந்நிறுவனம் உலகம் முழுவதுமாக 100 ஹோட்டல்களை நடத்தி வருகிறது. பாரம்பரிய இந்திய விருந்தோம்பல் மற்றும் சமகால ஆடம்பரத்தின் தனித்துவமான கலைவையை வழங்குகிறது.
தாஜ் ஹோட்டல் பங்குகளை வாங்க வேண்டும் அல்லது முதலீடு செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். ஆனால் பல கோடி கொடுத்தாலும் உங்களால் தாஜ் ஹோட்டல் பங்குகளை வாங்க முடியாது. ஏனென்றால் தாஜ் ஹோட்டல்ஸ் நிறுவனம் பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்படவில்லை.
ஆனால் நீங்கள் இந்தியன் ஹோட்டல் கம்பெனி பங்குகளை வாங்கலாம் அல்லது முதலீடு செய்யலாம். தாஜ் ஹோட்டல்ஸின் தாய் நிறுவனம் தான் இந்தியன் ஹோட்டல் கம்பெனி. இந்நிறுவனத்தின் நிதிச் செயல்திறன் தாஜ் ஹோட்டல்ஸின் செயல்திறனின் பிரதிபலிப்பாகும்.
ஏனெனில் இந்தியன் ஹோட்டல் கம்பெனியின் பிராண்ட்களில் இது முதன்மையான பிராண்டாகும். கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்திய ஹோட்டல் கம்பெனி நல்ல லாபம் ஈட்டியுள்ளது. அந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் 37 சதவீதம் உயர்ந்து ரூ.167 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்தியன் ஹோட்டல் கம்பெனி பங்குகளை வாங்கலாம் என்று பெரும்பாலான பங்கு தரகு நிறுவனங்கள் பரிந்துரை செய்துள்ளனர். மும்பை பங்குச் சந்தையில் நேற்று இந்நிறுவன பங்கின் விலை ரூ.411.15ஆக இருந்தது. மோதிலால் ஓஸ்வால் இப்பங்கினை வாங்கலாம் என்றும் இலக்கு விலையாக ரூ.480 நிர்ணயம் செய்துள்ளது.
ஐ.சி.ஐ.சி.ஐ. செக்யூரிட்டிஸ் இப்பங்கின் இலக்கு விலை ரூ.458ஆக மதிப்பிட்டுள்ளது மற்றும் இப்பங்கினை வாங்கலாம் என்று தெரிவித்துள்ளது. ஷேர்கான் நிறுவனம் இப்பங்கினை வாங்கலாம் என பரிந்துரை செய்ததோடு இப்பங்கின் இலக்கு விலையை ரூ.492ஆக நிர்ணயம் செய்துள்ளது. ஐ.டி.பி.ஐ. கேப்பிட்டல் இந்தியன் ஹோட்டல் கம்பெனி பங்குகளை வாங்கலாம் என்று மதிப்பீடு செய்து செய்துள்ளது மற்றும் பங்கு இலக்கு விலையை ரூ.450ஆக கணித்துள்ளது.


Click it and Unblock the Notifications