இந்தியாவில் முன்னனி வர்த்தக குழுமங்களில் ஒன்றான டாடா குழுமத்தின் பங்குகள், நீண்டகால நோக்கில் லாபம் கொடுக்கலாம் என்ற பெரும் எதிர்பார்ப்புகள் முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்து வருகின்றது.
அப்படி நினைப்பவர்களுக்கு இது மிக நல்ல விஷயம் எனலாம். ஏனெனில் டாடா குழுமத்தினை சேர்ந்த டாடா ஸ்டீல் மற்றும் டைட்டன் நிறுவன பங்குகள் நீண்டகால நோக்கில் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக தரகு நிறுவனம் கணித்துள்ளது.
அதெல்லாம் சரி? ஏன் இவ்விரு பங்குகளை குறிப்பிட்டு ஏற்றம் காணலாம் என கூறியுள்ளது? இலக்கு விலை? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
டிவிடெண்ட் பரிந்துரை
சமீபத்திய வாரங்களாகவே பல நிறுவனங்கள் தங்களது கடைசி காலாண்டு முடிவுகள், நிதியாண்டு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. இதற்கிடையில் டிவிடெண்ட் பற்றிய அறிவிப்பினையும் கொடுத்து முதலீட்டாளர்களை குதூகலப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் டாடா ஸ்டீலும், டைட்டன் நிறுவனம் இரண்டுமே டிவிடெண்டினை பரிந்துரை செய்துள்ளன.
டாடா ஸ்டீல்
டாடா ஸ்டீல் நிறுவனம் 10 ரூபாய் முக மதிப்புள்ள பங்குகளுக்கு, ஒரு பங்கு 51 ரூபாய் டிவிடெண்டினை பரிந்துரை செய்துள்ளது. (இது 510 சதவீதம்)இந்த விகிதமானது அதன் வருடாந்திர கூட்டத்தில் இறுதி செய்யப்படவுள்ளது. அப்படி இறுதி செய்யப்பட்டால், அது ஜூன் 30. 2022 அன்று வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
டைட்டன்
ஜுவல்லரி நிறுவனமான டைட்டன் நிறுவனம் 2022ம் நிதியாண்டுக்கு ஒரு பங்குக்கு 7.50 ரூபாய் டிவிடெண்டினை கொடுக்கலாம் என அந்த நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. இதனை அதன் வருடாந்திர குழு கூட்டத்தில் இறுதி செய்யப்படவுள்ளது. ஆக அதன் பிறகு வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இலக்கு விலை
ஆக விரைவில் டிவிடெண்ட் வழங்கப்படலாம் என்ற நிலையில், இப்பங்குகள் நீண்டகால நோக்கில் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதில் டாடா ஸ்டீலின் பங்கு இலக்கானது 1700 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இதே டைட்டன் நிறுவன பங்கின இலக்கு விலையானது 2900 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விரிவாக்கம்
இது குறித்து ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் அறிக்கையில், இதன் உற்பத்தியினை மேம்படுத்த அடுத்தடுத்த நடவடிக்கையினை எடுத்து வரும் நிறுவனம், தொடர்ந்து விரிவாக்கம் செய்து வருகின்றது. இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் லாபம் 4வது காலாண்டில் 37% அதிகரித்து, 9835 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் வருவாய் விகிதமானது 69,615.70 கோடி ரூபாயாக உச்சம் தொட்டுள்ளது. இதற்கிடையில் இந்த நிறுவனத்தன் இயக்குனர் குழு பங்குகளை ஸ்பிளிட் செய்யவும் பரிந்துரை செய்துள்ளது.
ஷேர்கானின் பரிந்துரை
இதே ஷேர்கான் நிறுவனம் டைட்டன் நிறுவனத்தினை வாங்க பரிந்துரை செய்துள்ளது. டைட்டன் நிறுவனம் மார்ச் காலாண்டில் அதன் லாபம் 7.18% குறைந்து, 491 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இதன் வருவாயும் 3.46% குறைந்து, 6749 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.
ஏன் லாபம் வீழ்ச்சி
இது சர்வதேச அளவில் நிலவி வரும் நெருக்கடி நிலைக்கு மத்தியில், தங்கம் விலையில் அதிக ஏற்ற இறக்கம் காணப்பட்டது. இதற்கிடையில் தான் அதன் வருவாய் விகிதம் சரிவினைக் கண்டுள்ளது. விலை அதிகரிப்பின் காரணமாக விற்பனை சரிவினைக் கண்டுள்ளது. அதே சமயம் விளம்பரங்களுக்கான செலவினங்கள் அதிகரித்துள்ளது.
ஏன் வாங்கலாம்?
எனினும் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் தேவையும் மீண்டு வந்துள்ளது. ஆக இது வருவாய் வளர்ச்சிக்கு வழிவகுக்கலாம். குறிப்பாக வரவிருக்கும் திருமண பருவத்தில் தேவையானது இன்னும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதன் காரணமாக வரவிருக்கும் காலாண்டுகளில் நிறுவனத்தின் விற்பனை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் நீண்டகால நோக்கில் பங்கு விலை அதிகரிக்க காரணமாக அமையலாம்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications