பிஎஸ்இ லிமிடெட் ஆசியாவின் மிகவும் பழமையான மற்றும் உலகின் பெரிய பங்குச் சந்தைகளில் ஒன்றாக விளங்குகிறது. தொடர்ந்து லாபம் ஈட்டி வரும் நிறுவனங்களில் பிஎஸ்இ நிறுவனமும் ஒன்று. மேலும் இந்நிறுவன பங்கும் முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் லாபத்தை கொடுத்து வருவதால், பங்குச் சந்தையில் இந்நிறுவன பங்குக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் பெரிய கிரேஸ் உள்ளது. இந்நிறுவனம் கடந்த வாரம் தனது கடந்த வாரம் தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டது.
2025 மார்ச் காலாண்டில் பிஎஸ்இ நிறுவனம் நிகர லாபம் 365 சதவீதம் அதிகரித்து ரூ.494 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் அதே காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் 75 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.846.6 கோடியாக உயர்ந்துள்ளது. பிஎஸ்இ நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இருந்ததால், முடிவுகள் வெளியானது முதல் இந்நிறுவன பங்கின் விலை சுமார் 13 சதவீதம் அதிகரித்துள்ளது.

தேசிய பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் இடையே பிஎஸ்இ பங்கின் விலை புதிய 52 வார உச்சவிலையான ரூ.7,047ஐ எட்டியது. வர்த்தகத்தின் முடிவில், இந்நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 5.98 சதவீதம் உயர்ந்து ரூ.6,965.00ல் நிலை கொண்டது. பிஎஸ்இ பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு சுமார் ரூ.94,290 கோடியாக உள்ளது.
நீண்ட கால அடிப்படையில் பிஎஸ்இ பங்கு முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் லாபத்தை கொடுத்துள்ளது. கடந்த 6 மாதத்தில் பிஎஸ்இ பங்கு விலை 50 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 175 சதவீதம் லாபத்தை கொடுத்துள்ளது. அதேசமயம், கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களின் செல்வத்தை சுமார் 5,000 சதவீதம் பெருக்கியுள்ளது.
பிஎஸ்இ நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு தனது பங்குதாரர்களுக்கு ரூ.2 முக மதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ.23 டிவிடெண்டு (1,150 சதவீதம்) வழங்க பரிந்துரை செய்துள்ளது. இதில், பங்கு ஒன்றுக்கு இறுதி டிவிடெண்டு ரூ.9ம் (450 சதவீதம்), சிறப்பு டிவிடெண்டு ரூ.5ம் (250 சதவீதம்) அடங்கும். டிவிடெண்ட் பெற உரிமையுள்ள பங்குதாரர்களின் தகுதியை உறுதி செய்வதற்கான பதிவு தேதி மே 14ம் தேதி (புதன்கிழமை) ஆகும். செப்டம்பர் 18ம் தேதிக்கு முன்பு பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் வழங்கப்படும்.
பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளர் முகுல் மகாவீர் அகர்வால், பிஎஸ்இ நிறுவனத்தில் 1.18 சதவீத பங்குகளை வைத்துள்ளார். தற்போது பிஎஸ்இ டிவிடெண்ட் அறிவித்துள்ளதால் அவருக்கு டிவிடெண்ட் வருவாயாக மட்டுமே சில கோடிகள் கிடைக்கும். 2025 மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, முகுல் மகாவீர் அகர்வால் வசம் பிஎஸ்இ நிறுவனத்தின் 16 லட்சம் பங்குகள் இருந்தன. இதன்படி, பார்த்தால் இந்நிறுவனத்திடமிருந்து ரூ.3.68 கோடியை டிவிடெண்டாக பெறுவார் என தகவல்.
மோதிலால் ஓஸ்வால் பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம், பிஎஸ்இ நிறுவனம் குறித்த தனது மதிப்பீட்டை தொடர்ந்து "வாங்கலாம்" என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது. பங்கின் இலக்கு விலையை ரூ.7,600ஆக நிர்ணயம் செய்துள்ளது. மேலும், பிஎஸ்இ நிறுவனத்தின் 2025-26 மற்றும் 2026-27ம் நிதியாண்டுகளுக்கான வருவாய் வளர்ச்சி கணிப்பை முறையே 9 சதவீதம் மற்றும் 13 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
மீண்டும் ஜோடி சேர்ந்த அமெரிக்கா-சீனா.. பங்குச் சந்தையை கலக்கிய மெட்டல் பங்குகள்
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications