இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள், அமெரிக்கச் சந்தை மோசமாக இருக்கும் காரணத்தால் இன்றும் சிறப்பான வர்த்தகத்தைப் பதிவு செய்யும் என பெரும் நம்பிக்கையில் இன்றைய வர்த்தகத்தைத் துவங்கினர். எதிர்பார்த்தபடியே 500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. ஆனால் 9.45 மணிக்குத் துவங்கிய சரிவ கிட்டத்தட்ட 1950 புள்ளிகள் வரையில் சரிந்து சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான சந்தை மதிப்பீட்டு இழப்பை உருவாக்கியுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் ஐடி சேவை துறையை மட்டும் எக்கேபாகி அனைத்து துறைகளையும், குறியீடுகளையும் சரிவு பாதைக்குத் தள்ளியுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 84,662.96 புள்ளிகளைத் தொட்ட நிலையில், தடாலடியான சரிவு மூலம் 1900 புள்ளிகளுக்கும் அதிகமாகச் சரிந்து 82,593.40 புள்ளிகளைத் தொட்டது. தற்போது இந்த பெரும் சரிவில் இருந்து மீண்டு 82,748.64 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

சென்செக்ஸ் குறியீட்டின் 30 நிறுவனங்களில் டிசிஎஸ், டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக், டைட்டன், ஐடிசி, இன்போசிஸ், மாருதி சுசூகி, அதானி போர்ட்ஸ், எட்டர்னல் ஆகியவை மட்டுமே உயர்வில் உள்ளது. டாடா ஸ்டீல் அதிகப்படியாக 8.27 சதவீதம் சரிந்துள்ளது. இன்று வங்கி மற்றும் உலோக நிறுவன பங்குகள் அதிகமாக சரிவை சந்தித்துள்ளது.
சென்செக்ஸ் போலவே நிஃப்டி குறியீடு அதிரடியாகச் சரிவைப் பதிவு செய்து 500 புள்ளிகளுக்கு மேல் இழந்து 25,401.20 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய மோசமான சரிவுக்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் வட்டி விகித உயர்வு குறித்தும், அமெரிக்கப் பொருளாதாரம் குறித்தும் பேசியது முதலீட்டுச் சந்தையில் பெரும் தாக்கத்தை உருவாக்கியுள்ளது.
அமெரிக்கச் சந்தையில் எப்படி முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டை விற்பனை செய்துவிட்டு பணமாக வைத்திருக்கிறார்களோ அதேபோல் இந்திய சந்தையில் கடந்த 2 வாரமாகச் செய்யப்பட்ட முதலீடுகளை லாப நோக்கம் காரணமாக விற்பனை செய்துவிட்டு பணத்தை வெளியேறியுள்ளனர்.
இன்றைய மோசமான சரிவுக்கு FII முதலீட்டாளர்களின் ப்ராபிட் புக்கிங் அடிப்படை காரணமாக அமைந்துள்ளது. அமெரிக்க மிட்டேர்ம் தேர்தலுக்கு பின்பு இந்திய சந்தைக்கு வந்த பெரும்பகுதி FII முதலீடுகள் லார்ஜ் கேப் பங்குகளில் மட்டுமே குவிந்தது, இதேபோல் இன்றும் பெரும் சரிவைச் சந்தித்ததும் லார்ஜ் கேப் பங்குகள் தான்.
இதேபோல் அமெரிக்க மத்திய வங்கி பணவீக்க உயர்வை மிகப்பெரிய அச்சுறுத்தலாகப் பார்த்து வரும் வேளையில் வட்டி விகிதம் உயர்த்துவதற்கான வாய்ப்புகள் 93 சதவீதமாக இருக்கும் காரணத்தால் முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டை பாதுக்காக்க முடிவு செய்துள்ளதன் விளைவே சென்செக்ஸ் குறியீடுன் 1900 புள்ளிகள் சரிவு.


Click it and Unblock the Notifications
