தங்கம் விலையில் திடீர் U-Trun.. ஓரே நாளில் ரூ.1480 உயர்வு.. அமெரிக்கா எடுத்த முடிவு, இனி தொடர் ஏறுமுகம் தான்

இந்திய மிடில் கிளாஸ் மக்களின் முக்கிய முதலீடாகத் திகழும் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இன்று புதிய திருப்பமாகத் தடாலடியாக உயர்ந்துள்ளது. இந்த தங்கம் விலையில் ஏற்பட்ட திடீர் U-Trun-க்கு முழுக்க முழுக்க காரணம் அமெரிக்க நிதியமைச்சர் வெளியிட்ட அந்து ஒரு அறிவிப்பு தான்.

இன்று சென்னை ரீடைல் வர்த்தகத்தில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 1480 ரூபாய் உயர்ந்து 1,26,560 ரூபாயாக உள்ளது, இதேபோல் ஒரு சவரன் தங்கம் விலை 1,080 ரூபாய் வரையில் உயர்ந்து 92,800 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் 175 ரூபாயக்கும், 1 கிலோ 1,75,000 ரூபாய் விலையிலும் வர்த்தகமாகியுள்ளது.

தங்கம் விலையில் திடீர் U-Trun.. ஓரே நாளில் ரூ.1480 உயர்வு..  அமெரிக்கா எடுத்த முடிவு, இனி தொடர் ஏறுமுகம் தான்

கடந்த ஒரு மாதமாக தங்கம் விலையில் ஏற்பட்ட மோசமான சரிவுக்கு அடிப்படை காரணமாக இருந்து அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித உயர்வு குறித்த எதிர்பார்ப்பு தான்.

டிரம்ப் அரசால் அமெரிக்காவில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில், அந்நாட்டின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் அமெரிக்கப் பொருளாதாரத்தை சீர்படுத்த வகையில் வட்டி விகிதம் உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது.

Also Read

ஆனால் தற்போது அமெரிக்க நிதியமைச்சரான ஸ்காட் பெசென்ட் வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டாம், அமெரிக்கப் பொருளாதாரம் பெரியளவிலான வீழ்ச்சியை அடையும் என எச்சரிக்கையை விடுத்து பெடரல் ரிசர்வ் தலைவரான கெவின் வார்ஷ்-க்கு வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டாம் என மறைமுக கோரிக்கை வைத்துள்ளார்.

ஸ்காட் பெசன்ட் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமெரிக்கப் பொருளாதாரமும், முதலீட்டுச் சந்தையும் மிகவும் முக்கியமான கட்டத்தில் உள்ளது.

அமெரிக்க நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்தில் அதிகப்படியான பணத்தை முதலீடு செய்து வரும் வேளையில், இந்த முதலீட்டின் மூலம் எதிர்பார்த்த லாபம் கிடைக்குமா என்ற சந்தேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஏஐ தொடர்புடைய அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் பெரும் சரிவை எதிர்கொண்டு வருகிறது.

இத்தகைய நிலையில் பெடரல் ரிசர்வ் நாட்டின் பணவீக்க புள்ளிகளை மட்டுமே பார்த்து வட்டி விகிதத்தை உயர்த்துவது என்பது அமெரிக்கா பொருளாதாரத்தையே பாதிக்கலாம் என ஸ்காட் பெசென்ட் எச்சரித்துள்ளார்.

இதோடு தற்போதைய சூழ்நிலையில் அமெரிக்க அரசுக்கும் சரி, நிறுவனங்களுக்கும் சரி வாங்கிய கடனுக்கான வட்டி செலவுகளைக் கூடுதலாக உயர்த்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே ஸ்காட் பெசென்ட்-ன் அடிப்படை கருத்தாக உள்ளது.

Recommended For You

அதாவது பெடரல் ரிசர்வ் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை உயர்த்தி கடன் சுமையை அதிகரிக்கக் கூடாது என்பதே அடிப்படை கருத்தாக உள்ளது. டிசம்பர் கூட்டத்தில் பெடரல் ரிசர்வ் குறைந்தபட்சம் 0.25 சதவீதம் அதிகப்படியாக 0.50 சதவீதம் வரையில் வட்டி விகிதம் உயர்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது ஸ்காட் பெசென்ட்டின் கருத்து மூலம் அமெரிக்க அரசு பத்திரங்களின் வட்டி வருமானம் குறைந்துள்ளது. உதாரணமாகக் குறுகிய கால பத்திரமான 2 ஆண்டு கால அமெரிக்கப் பத்திரங்களின் வருவாய் 0.12 சதவீதம் குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டை இடம்மாறியுள்ளனர்.

அதாவது வட்டி விகிதம் குறைக்காத பட்சத்தில் பத்திர சந்தையில் முதலீடு செய்வது அவசியமற்றது என்பதால் தங்கம் மீது முதலீடு செய்ய துவங்கியுள்ளனர்.

இதன் வெளிப்பாடாகச் சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2.02 சதவீதம் உயர்ந்துள்ளது, comex தங்கம் பியூச்சர்ஸ் விலை அதிரடியாக 2.71 சதவீதம் உயர்ந்து 3,610.90 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. மேலும் இது இந்திய சந்தையிலும் எதிரொலித்துள்ளது, எம்சிஎக்ஸ் சந்தையில் 2.52 சதவீதம் உயர்ந்து 1,24,850 ரூபாயாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+