பங்குச் சந்தையில் எப்போது ஒரு பங்கின் விலை உயரும், குறையும் என்று யாராலயும் உறுதியாக கணிக்க முடியாது. சில சமயங்களில் புளூ சிப் பங்குகளை காட்டிலும் பென்னி பங்குகள் முதலீட்டாளர்களுக்க மல்டிபேக்கர் லாபத்தை கொடுத்துள்ளன. அந்த வகையில், கடந்த 12 மாதங்களில் 3 மல்டிபேக்கர் பென்னி பங்குகள் முதலீட்டாளர்களுக்கு 200 சதவீதத்துக்கு மேல் லாபத்தை கொடுத்துள்ளன. இந்த 3 நிறுவனங்களும் கடன் இல்லாத நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பங்குகள் குறித்து சுருக்கமாக பார்ப்போம்.
1. காஷ்யப் டெலி மெடிசின் லிமிடெட்
1976ல் தொடங்கப்பட்ட காஷ்யப் டெலி மெடிசின் லிமிடெட் நிறுவனம், சாப்ட்வேர் மற்றும் சேவைகள் துறையில் ஈடுபட்டு வருகிறது. சாப்ட்வேர் விற்பனை, பராமரிப்பு மற்றும் சேவைகளில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.39.3 கோடிதான். இந்நிறுவன பங்கு கண்காணிப்பு வளையத்தில் இருந்தாலும், கடந்த ஆண்டில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது.

கடந்த 12 மாதத்தில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 280 சதவீதத்துக்கு மேல் வருமானத்தை கொடுத்துள்ளது. இந்நிறுவனத்துக்கு கடன் கிடையாது என்பதுதான் இதன் பெரிய பலம். மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று வர்த்தகம் நிறைவடைந்த போது, காஷ்யப் டெலி மெடிசின் லிமிடெட் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.98 சதவீதம் உயர்ந்து ரூ.8.24 ஆக இருந்தது.
2. நிபே ஆர்ட்னன்ஸ் அண்ட் மரைடைம் லிமிடெட்
1984ல் ஆரம்பிக்கப்பட்ட நிபே ஆர்ட்னன்ஸ் அண்ட் மரைடைம் லிமிடெட், ஆயுத பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. ஜவுளி ஆடைகள் மற்றும் துணைக்கருவிகளை சேர்ந்தது. இந்நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.0.8 கோடி என்ற அளவில் மிகக்குறைவாக இருந்தபோதிலும், அதன் சிறப்பு உற்பத்தி பிரிவு மற்றும் கடன் இல்லாத நிலை காரணமாக இந்த பங்கு முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த ஒரு ஆண்டில் நிபே ஆர்ட்னன்ஸ் அண்ட் மரைடைம் லிமிடெட் பங்கு முதலீட்டாளர்களின் செல்வத்தை 264 சதவீதம் பெருக்கியுள்ளது. கடந்த வெள்ளக்கிழமையன்று, மும்பை பங்குச் சந்தையில் இந்நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.95 சதவீதம் உயர்ந்து ரூ.5.24ஆக இருந்தது.
3. ஜி டெக் இன்ஃபோ டிரெய்னிங் லிமிடெட்
1994ல் நிறுவப்பட்ட மைக்ரோ கேப் நிறுவனம் ஜி டெக் இன்ஃபோ டிரெய்னிங் லிமிடெட். இந்நிறுவனம் சாப்ட்வேர் மற்றும் சேவைகள் துறையில் செயல்படுகிறது, கணினி பயிற்சி மற்றும் கேபிஓ/பிபிஓ அவுட்சோர்சிங் சேவைகளை வழங்குகிறது. பென்னி ஸ்டாக்கான இந்நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.1.7 கோடியாக உள்ளது. டிஜிட்டல்மயமாக்கல் போக்குகள் மற்றும் சேவை ஏற்றுமதிகளில் கவனம் செலுத்துவதன் மூலம் பயனடைந்துள்ளது.
6ஜி தொழில்நுட்ப விதிமுறைகள் வடிவமைப்பில் இந்தியா.. ஜோதிராதித்ய சிந்தியா பெருமிதம்
மும்பை பங்குச் சந்தையில் இந்நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 5 சதவீதம் உயர்ந்து ரூ.4.97ஆக இருந்தது. கடந்த ஓராண்டில் இந்நிறுவன பங்கின் விலை 210 சதவீதம் உயர்ந்துள்ளது.
சில வணிக தவறுகளை செய்தோம்.. உண்மையை ஒப்புக் கொண்ட பைஜூ ரவீந்திரன்..
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications