நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்டிஎஃப்சி வங்கி தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. மேலும் நிறுவன பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் வழங்க நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.. 2025 மார்ச் காலாண்டில் எச்டிஎஃப்சி வங்கியின் நிகர லாபம் 6.7 சதவீதம் உயர்ந்து ரூ.17,616 கோடியாக அதிகரித்துள்ளது. இதே காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர வட்டி வருவாய் 10.3 சதவீதம் அதிகரித்து ரூ.32,070 கோடியாக உயர்ந்துள்ளது.
எச்டிஎஃப்சி வங்கியின் இயக்குனர்கள் குழு நிறுவன பங்குதாரர்களுக்கு பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.22 இறுதி டிவிடெண்ட் வழங்க பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாக எச்டிஎஃப்சி வங்கி பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில், நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, 2024-25ம் நிதியாண்டுக்கு நிறுவன பங்குதாரர்களுக்கு ரூ.1 முக மதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ.22 டிவிடெண்டாக வழங்க பரிந்துரை செய்துள்ளது. இது பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டது.

இறுதி டிவிடெண்ட் பெற உரிமையுள்ள பங்குதாரர்களின் தகுதியை தீர்மானிப்பதற்கு 2025 ஜூன் 27ம் தேதியை பதிவு தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பங்குச் சந்தைகளில் பின்பற்றப்படும் T+1 settlement சுழற்சியின்கீழ், முதலீட்டாளர்கள் டிவிடெண்ட் பெற வேண்டுமானால் ex-dividend தேதிக்கு முன்னால் எச்டிஎஃப்சி பங்குகளை வாங்க வேண்டும். 2025 ஜூன் 26 அன்று ex-dividend தேதி வருகிறது.
மும்பை பங்குச் சந்தையில் கடந்த வியாழக்கிழமையன்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது, எச்டிஎஃப்சி வங்கி பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.53 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.1,906.55ஆக இருந்தது.
நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கியும் தனது பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் காலாண்டில் ஐசிஐசிஐ வங்கியின் லாப வளர்ச்சி சிறப்பாக இருந்ததை இதற்கு முக்கிய காரணம். 2025 மார்ச் காலாண்டில் ஐசிஐசிஐ வங்கி தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.12,630 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 18 சதவீதம் அதிகமாகும். 2024 மார்ச் காலாண்டில் ஐசிஐசிஐ வங்கி நிகர லாபமாக ரூ.10,708 கோடி ஈட்டியுள்ளது.
ஐசிஐசிஐ வங்கியின் இயக்குனர்கள் குழு, 2024-25ம் நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.11 டிவிடெண்ட் வழங்க பரிந்துரை செய்துள்ளது.மும்பை பங்குச் சந்தையில் கடந்த வியாழக்கிழமையன்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது, ஐசிஐசிஐ பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 3.68 சதவீதம் உயர்ந்து ரூ.1,406.65ஆக இருந்தது.
விசா ஸ்டீல் உள்ளிட்ட இந்த 3 பங்குகளை நாளை மிஸ் பண்ணிடாதீங்க- சுமீத் பகாடியா
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications