புவிசார் அரசியல் பதட்டங்கள், அமெரிக்காவின் பொருளாதார குறித்த கவலை, உலக நாடுகளின் மைய வங்கிகள் தங்கத்தை வாங்கி குவித்தது, டிரம்பின் வரி விதிப்பு கவலைகள், சர்வதேச அளவில் வர்த்தக போர் வெடிக்கும் அச்சம் போன்ற காரணங்களால் 2024-25ம் நிதியாண்டில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. தங்கத்தின் விலை 32 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. எம்சிஎக்ஸில் 2024 மார்ச் 28ம் தேதியன்று 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.67,000 என்ற அளவில் இருந்தது. ஆனால் கடந்த 28ம் தேதியன்று 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.88,850ஆக உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை இப்படி உயர்ந்து கொண்டே போனால் விரைவில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1,00,000ஐ தாண்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நிபுணர்களும் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்தை தொடுவது சாத்தியமே என்று கூறுகின்றனர். தீவிரமான வர்த்தக போர், மத்திய கிழக்கு அல்லது ரஷ்யா-உக்ரைன் மோதலில் புதிய பதட்டங்கள் அதிகரிப்பு மற்றும் அமெரிக்காவின் முக்கிய பொருளாதார இன்டிகேட்டர்கள் தேக்கநிலையின் அறிகுறிகளை காட்டினால் அதாவது அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிப்பதுடன், பொருளாதார வளர்ச்சி தேக்கமடையும் என்பதை காட்டினால் மஞ்சள் உலோகம் அந்த விலையை எட்டக்கூடும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
தங்கத்தின் விலை உயர்வு தொடர்பாக ஆக்மாண்டின் ஆராய்ச்சி தலைவர் ரெனிஷா சைனானி கூறுகையில், புவிசார் பதட்டங்கள், உலக நாடுகளின் மைய வங்கிகள் கொள்முதல்கள் மற்றும் பணவியல் கொள்கை மாற்றங்கள் உள்ளிட்ட பல காரணிகளால் இந்த நிதியாண்டில் தங்கத்தின் விலை உயர்ந்தன. அதிகரித்து வரும் மோதல்கள் மற்றும் வர்த்தக நிச்சயமற்ற தன்மைகள் குறிப்பாக டிரம்பின் வரி விதிப்பு கொள்கைகள் உள்ளிட்டவை பாதுகாப்பான முதலீட்டு தேவையை தூண்டின.
அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் டாலரை பலவீனப்படுத்தி தங்கத்தை மேலும் கவர்ச்சிகரமானதாக மாற்றியது. தொடர்ச்சியான பணவீக்க கவலைகள் மற்றும் பொருளாதார மந்தநிலை குறித்த அச்சங்களும் தங்கத்துக்கான தேவையை தூண்டின. புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை, மத்திய வங்கிகளின் கொள்முதல் மற்றும் அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி குறைப்புகளால் உந்தப்பட்டு, 2025-26ம் நிதியாண்டுக்கான தங்கத்தின் எதிர்பார்ப்பு ஏற்றத்துடன் உள்ளது. குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளின் மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கத்தை வாங்கி சேமித்து வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விலைகள் உயருகின்றன.
இந்த சூழ்நிலையில், அமெரிக்க பெடரல் வங்கி குறைத்தால், பலவீனமான டாலர் தங்கத்தின் தேவையை அதிகரித்து விலை 3,200 டாலராக (ஒரு அவுன்ஸ்) உயர்த்தக்கூடும். மேற்கண்ட காரணங்கள் ஒரு ஏற்றமான போக்கை ஆதரிக்கும் அதே வேளையில், தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.1 லட்சம் என்ற அளவை எட்டுவதற்கு கூடுதல் வினையூக்கிகள் தேவைப்படும், அதாவது ரூபாய் மதிப்பு சரிவு அல்லது புவிசார் அரசியல் பதட்டங்கள் அதிகரிப்பது போன்ற தாக்கங்களால் தங்கத்தின் விலையில் கணிசமான உயர்வு எதிர்பார்க்கப்பட்டாலும், தற்போதைய கணிப்புகளின்கீழ், எதிர்வரும் 2025-26ம் நிதியாண்டில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.1,00,000-ஐ தாண்டும் வாய்ப்பு குறைவு என்று தெரிவித்தார்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

தங்கம் விலை உயர்வால் மதுரை மக்கள் சோகம். ஒரு பவுன் தங்கம் எவ்வளவு தெரியுமா..?

கோயம்புத்தூரில் தங்கம் விலை அதிரடி உயர்வு.. இனி தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

தங்க குழந்தையாக மாறிய சஞ்சு சாம்சன் – இது தான் 'கன்வெக்ஸ்' வெற்றியா? காத்திருந்து கிடைத்த பெரும் லாபம்!

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

தங்கம் விலை எங்கோ போகப்போகுது!16,000 கிலோ தங்கத்தை சொந்தமாக வைத்திருக்கும் ஜாம்பவானின் கணிப்பு!

தங்கம் விலை மதுரை: இன்று அதிரடி உயர்வு! நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்த சர்வதேச காரணங்கள்..!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று என்ன நிலவரம்? நிபுணர்கள் சொல்வது என்ன? இது தான் நல்ல சான்ஸ்..!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?



Click it and Unblock the Notifications