தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்.. தங்கம் இப்போ வாங்கலாமா?- நிபுணர்கள் கருத்து

மஞ்சள் உலோகமான தங்கத்தின் விலை சிறிது குறைந்தாலும் வாங்கி விடுவோம் என்று சாமானிய மக்கள் காத்திருக்கின்றனர். ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பில்லை நான் மேல அதற்கும் மேல போவேன் என்று தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமே பல சர்வதேச நிலவரங்கள்தான். தொடர்ந்து 2வது நாளாக இன்றும் தங்கத்தின் விலை உயர்ந்தது. இன்று எம்சிஎக்ஸில் (ஏப்ரல் 4 கான்ராக்ட்) 10 கிராம் தங்கம் விலை 0.20 சதவீதம் உயர்ந்து இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.88,890ஆக அதிகரித்தது. இன்றைய தங்கம் விலை உயர்வுக்கும் சர்வதேச நிலவரம்தான் காரணம். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன போராளி குழுவான ஹமாஸூக்கும் இடையே நடந்து வரும் மோதல் புவிசார் அரசியல் அபாயங்களை அதிகரித்துள்ளது.

இதனால் பாதுகாப்பான சொத்தாக கருதப்படும் தங்கத்தை நோக்கி முதலீட்டாளர்கள் செல்கிறார்கள். தற்போதைய சூழலில் தங்கத்தை வாங்கலாமா அல்லது கையிலிருக்கும் தங்கத்தை விற்பனை செய்து லாபம் பார்க்கலாமா என்ற முதலீட்டாளர்கள் தீவிரமாக யோசனை செய்து வருகின்றனர். இந்நிலையில், இப்போது என்ன செய்யலாம் என்பது குறித்து முதலீட்டாளர்களுக்கு நிபுணர்கள் பரிந்துரை வழங்கி உள்ளனர்.பிரித்விஃபின்மார்ட் கமாடிட்டி ரிசர்ச்சின் மனோஜ் குமார் கூறுகையில், அமெரிக்க பெடரல் வங்கியின் ஓபன் மார்க்கெட் கமிட்டி கூட்டத்தின் முடிவுகளுக்கு முன்னதாக இன்றைய அமர்வில் தங்கம் மற்றும் வெள்ளியை விற்பனை செய்து லாபத்தை புக் செய்யலாம்.

தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்.. தங்கம் இப்போ வாங்கலாமா?- நிபுணர்கள் கருத்து

புதிய நீண்ட நிலைகளை தொடங்க சில சரியான சரிவுகளுக்காக காத்திருக்க பரிந்துரைக்கிறோம். தங்கத்தின் சப்போர்ட் விலை ரூ.88,400-88,080 ஆகவும், ரெசிஸ்டன்ஸ் விலை ரூ.89,000-89,360 ஆகவும் உள்ளது என்று தெரிவித்தார். மேத்தா ஈக்விட்டிஸ் லிமிடெட்டின் கமாடிட்டிஸ் துணை தலைவர் ராகுல் கலந்த்ரி கூறுகையில், போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் குறைந்தது 400 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலின் தாக்குதலை தொடர்ந்து மத்திய கிழக்கில் பதட்டங்கள் புதுப்பிக்கப்பட்டது.

இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டு புகலிட தேவை அதிகரித்தன் காரணமாக சர்வதேச சந்தைகளில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்ந்தது. கடந்த வார இறுதியில் ஹவுதிகள் மீதான அமெரிக்க தாக்குதல் பிராந்திய உறுதியற்ற தன்மையை மேலும் அதிகரித்தது, இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்தது. தங்கத்தின் சப்போர்ட் விலை ரூ.88,340-87,980 ஆகவும், ரெசிஸ்டன்ஸ் விலை ரூ.89,050-89,450 ஆகவும் உள்ளது. வெள்ளிக்கு சப்போர்ட் ரூ.99,850-98,950 ஆகவும், ரெசிஸ்டன்ஸ் விலை ரூ.1,01,920-ரூ.1,03,250 ஆகவும் உள்ளது என்று தெரிவித்தார். தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது விற்பனையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நகை வர்த்தகர்கள் கருதுகின்றனர்.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+